Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

நீண்ட காத்திருப்பு – லேவ் தல்ஸ்தோய்

ஜான்ஸி ராணி · 18.11.20

இவான் டிமிட்ரிச் அக்சியோனோவ் என்ற இளம் வணிகன் விளாடிமிர் நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரு கடைகளும் ஒரு வீடும் சொந்தமாக இருந்தது. அக்சியோனோவ் வெளிர்நிற சுருண்ட தலைமுடியுடன் அழகாக இருந்தான். பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவனாகவும் கொண்டாட்டம் நிரம்பியவனாகவும் இருந்தான். இளவயதில் குடிப்பழக்கமுடையவனாக, அதீதமாக குடித்தால் கலகம் செய்பவனாக இருந்தபோதிலும், திருமணமான பின் எப்போதாவது ஒருமுறை குடிப்பதைத் தவிர்த்து குடிப்பழக்கத்தை கைவிட்டிருந்தான். அப்போது கோடைகாலம். நீஜ்னி பொருட்காட்சிக்குப் புறப்பட்டுச் செல்வதற்காக தன் குடும்பத்தினரிடம் விடைபெறும் சமயம், “இவான் […]

எழுத்து

கலை என்றால் என்ன? – லேவ் தல்ஸ்தோய்

அருண் நரசிம்மன் · 18.11.20

தல்ஸ்தோய் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் ‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பில் ஒரு ஆக்கத்தை வழங்கினார். எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து, பதினைந்து வருடங்கள் பல வடிவங்களில் எழுதி, இறுதியிலும் முடிவான வடிவமென்று தனக்கு முழுவதும் திருப்தியில்லாத ஒன்றையே அளித்தார். அவ்வாக்கத்திற்கு இன்றளவில் இரண்டு ஆங்கில வடிவங்கள் உள்ளன. இவற்றை வாசித்ததும் புரிபடுவது – எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து எவையெல்லாம் நல்ல கலைகளல்ல என்பதையே தல்ஸ்தோய் தன் பார்வையில் […]

எழுத்து

குற்றவாளி என்று எவருமே இல்லை – லேவ் தல்ஸ்தோய்

கார்குழலி · 18.11.20

1 என்னைச் சேர்ந்தவர்கள் விந்தையானவர்கள், அதிசயமானவர்கள்! பணக்காரர்களின் ஆடம்பரத்தினாலும் அடக்குமுறையினாலும் கஷ்டப்படும் பாவப்பட்ட ஏழைகளில் ஒருவருக்குக்கூட தங்களின்மீது தொடுக்கப்படும் அடக்குமுறையும் காட்டப்படும் வெறுப்பும் அநீதியானது, கொடூரமானது, திகிலூட்டுவது என்பது என் அளவுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றைத் தயாரிக்கும் உழைப்பாளர்களில் பெரும்பாலானவர்களைச் சூழும் அவமானத்தையோ துயரத்தையோ கூட அவர்கள் புரிந்துகொள்வது இல்லை. இதை வெகுகாலமாக உணர்ந்திருக்கிறேன். வருடங்கள் செல்லச் செல்ல, இந்த உணர்ச்சியும் படிப்படியாக வளர்ந்து அண்மையில் உச்சத்தை எட்டியது. இப்படி எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்தாலும் […]

எழுத்து

ஏன் டென்னிஸை ஏற்றுக்கொண்டார் தல்ஸ்தோய்? – ஜெரால்ட் மார்ஸொராட்டி

இல. சுபத்ரா · 18.11.20

நம் எழுத்தாளர் தனது நாற்பதுகளில் இந்த விளையாட்டை ஒரு தற்காலிக டாம்பீகம் எனக் கருதினார். ஆனால் பிற்காலத்தில் அதில் மகிழ்ச்சியும் திருப்தியும் கண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது அறுபதுகளில், தீவிர முதியோர்- டென்னிஸ் ஆட்டக்காரனாக மாற முயல்வது குறித்த ஒரு புத்தகத்திற்காக நான் ஆய்வு செய்துகொண்டிருந்த போது ’த மில்லியன்ஸ்’ இலக்கிய இணைய தளத்தின் பதிவுகள் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைக் காண நேர்ந்தது. அதில் பிரதானமாக ஒரு வயதான ஆள் தனது வலது கையால் மரத்தாலான […]

எழுத்து

தாழப் பறக்கும் கழுகுகள் – ஹெலோன் ஹபிலா – தமிழாக்கம்: லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம் · 25.09.20

அஜேகுன்லே சேரிப் பகுதிக்குள் நுழைய இரண்டு வழிகள் உள்ளன. பரபரப்பான போக்குவரத்துக்கிடையே அமைந்திருக்கும் சந்தடி மிகுந்த அங்காடித் தெருவில், ஆயத்த ஆடைகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் காட்சிப்படுத்தி வைத்திருக்கும் சிறு கடைகளைத் தாண்டி நடந்தால் அங்கிருந்து செல்லக்கூடிய முன்பக்கப் பாதை ஒன்று அல்லது அப்பாப்பா துறைமுகத் தொழிற்பேட்டையையும், சேரியையும் பிரிக்கும் அழுக்கும் கசடுகளும் தேங்கிய மலம் மிதக்கும் காயல் வழியே படகுப் பயணமாகப் பின்பக்க வழியாகவும் செல்லலாம். நீர் வழித்தடத்தில் செல்வதையே தேர்ந்தெடுத்தேன். நான் பணிபுரியும் ’வேன்கார்ட்’ […]

எழுத்து

கடைசியாக எப்படியோ அப்பா தப்பியோடிவிட்டார் – புரூனோ ஷூல்ஸ் – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்

கால.சுப்ரமணியம் · 25.09.20

இது நடந்தது, எங்களுடைய வியாபாரம் நொடித்துப்போன நேரத்தில், இறுதியும் கையறுநிலையும் கொண்ட ஒரு பரிபூரண தகர்ப்புக் காலத்தில். எங்கள் கடையின் மேலிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, பாதியளவு கீழிறக்கப்பட்ட ஷட்டர்களுடன், எஞ்சியிருந்த பொருட்களை வைத்து, யாருமறியாமல் கடையின் உள்ளேயிருந்தபடி, வியாபாரத்தை நடத்திவந்தாள் என் அம்மா. அடெலா அமெரிக்காவுக்குப் போனாள். அவள் பயணித்த படகு மூழ்கிவிட்டதாகவும், பயணிகள் எல்லோருமே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வதந்தியை விசாரித்து உண்மையை அறிய எங்களால் முடியவில்லை. ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றிய அனைத்து தடையங்களும் […]

எழுத்து

மிலன் குந்தேரா: நாவல்களைப் பற்றின உரையாடல் – தமிழாக்கம் – ராம் முரளி

ராம் முரளி · 25.09.20

இந்த நேர்காணல், 1983ஆம் வருடத்தின் இலையுதிர் காலத்தில், பாரீசில், மிலன் குந்தேராவுடனான தொடர்ச்சியான சந்திப்புகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மாண்ட்பமாஸுக்கு அருகே இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் மேல்தளத்தில் வசிக்கும் அவரது வீட்டில்தான், மிலன் குந்தேரா தனது அலுவலகமாக பயன்படுத்தும் மிகச் சிறிய அறையில், இந்தச் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரின் அறையைப் போலல்லாமல், ஒரு மாணவனின் அறையைப் போல மேசை நாற்காலிகளுடனும், தத்துவப் புத்தகங்களுடைய அலமாரியுடனும், பழைய பாணியிலான தட்டச்சு பொறியுடனும், இசை ஆல்பங்களுடன் இருந்ததாக நேர்காணல் […]

எழுத்து

இனிமை – டோனி மோரிசன் – தமிழாக்கம்: கார்குழலி

கார்குழலி · 25.09.20

அது என்னுடைய தவறில்லை. அதனால் நீங்கள் என்னைக் குற்றம்சாட்ட முடியாது. நான் அதைச் செய்யவில்லை, அது எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை. என்னுடைய கால்களுக்கு இடையே இருந்து அவளை எடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்துகொண்டு விட்டேன். உண்மையாகவே சரியில்லை. எனக்கு அச்சமேற்படும் அளவுக்கு கறுப்பாக இருந்தாள். நடுநிசியின் கறுப்பு, சூடானின் கறுப்பு. நான் மாநிறமாக நல்ல தலைமுடியுடன் இருந்தேன். அடர் மஞ்சள் என்று சொல்லும் நிறம், அதே போலத்தான் இருந்தான் லூலா […]

எழுத்து

யெஹூதா அமிகாய் கவிதைகள்

சசிகலா பாபு · 25.09.20

இஸ்ரேலைச் சேர்ந்த யெஹூதா அமிகாய் (Yehuda Amichai: மே 3, 1924 – செப்டம்பர்  22, 2000) கவிதையுலகில் தனித்துவமான புகழ்பெற்றவர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இவருடைய கவிதைகள் 40 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1924இல் ஜெர்மனியில் பிறந்தார் அமிகாய். அவருக்கு பனிரெண்டு வயதானபோது ஹிட்லரின் கொடூர ஆட்சிக்கு அஞ்சி அமிகாயின் குடும்பம் ஜெர்மனியை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்தில் குடியேறியது. அமிகாயின் முக்கிய மொழியாக ஜெர்மன் இருந்தபோதும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்வதற்கு முன்னதாகவே அவர் ஹீப்ரூ மொழியையும் […]

எழுத்து

விழிப்புணர்வின் பாதை

வி.அமலன் ஸ்டேன்லி · 25.09.20

சித்தார்த்தருக்கு உணவை எடுத்து வந்தாள் சுஜாதா. அரசமரத்தடியில் அவர் இளங்காலைப் பொழுதில் எழிலார்ந்து அமர்ந்திருந்தார். அவரின் உடலும் முகமும் சாந்தத்தையும், உவப்பையும், உள்ளச் சமநிலையையும் காட்டின. கம்பீரமும் ஆழமைதியும் கொண்ட அவரை அரச மரத்தடியில் பலமுறை அவள் கண்டிருந்தபோதும் அன்றைய நாள் அவர் வெகுசிறப்புடன் காணப்பட்டார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவளது துயரமும் வருத்தமும் ஒழிந்துபோயின. இளந்தென்றலென மகிழ்ச்சி அவள் இதயத்தை நிறைத்தது. இப்பூமியில் தனக்கு வேறெதுவும் தேவையாயிருக்கவில்லை என்றுணர்ந்தாள். இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் நன்றெனவும் உதவிகரமாக இருப்பதாகவும், […]

எழுத்து

என் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு

சசிகலா பாபு · 24.08.20

1 மே மாதத்தின் பிற்பகுதியில்தான் என் மனைவியின் உடலில் இருந்த அந்தக் காயங்களை முதன்முதலாகக் கண்டேன். வாயிற்காப்பாளரின் அறையினருகே இருந்த இளஞ்சிவப்பு வண்ண லிலாக் மலர்ப்படுகையில் இருந்து துண்டிக்கப்பட்ட நாக்குகள் போலப் பூவிதழ்கள் கொட்டிக்கிடந்த நாளொன்றில், மூத்த குடிமக்கள் மையத்தின் வாயிலில் போடப்பட்டிருந்த நடைபாதைப் பலகங்களின் மீது நடந்துசெல்வோரின் காலடிகளில் நசுங்கி வெண்ணிற மலர்கள் அழுகிப்போயிருந்த நாளொன்றில்தான் அவளுடைய காயங்களை நான் கண்டேன். அச்சமயம் சூரியன் உச்சத்தில் இருந்தது. எண்ணிறந்த அளவில் தூசுத்துளிகளையும் மகரந்தத்துகள்களையும் அள்ளி இறைத்தபடியே, […]

எழுத்து

நிலவின் மகள்கள் – இடாலோ கால்வினோ

எஸ்.கயல் · 24.08.20

காற்றின் மேற்படலம் பாதுகாப்புக் கவசமாகச் செயலாற்ற மறுத்து வந்ததால் ஆதியில் இருந்தே விண்கற்களின் தொடர் தாக்குதல்களுக்கும் சூரியக் கதிர்களின் சிதைக்கவல்ல செயல்களுக்கும் உள்ளாகி வந்திருக்கிறது நிலா. கோர்ணல் பல்கலையின் தாமஸ் கோல்டைப் பொருத்தவரை விண்கற்களின் தொடர் தாக்குதல்களால் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறைகள் பொடிப் பொடியாகிவிட்டன. நிலவின் வெப்பம் நிறைந்த பாறைக் குழம்பில் இருந்து வெளியேறிய வாயுக்கள் செயற்கைக்கோளுக்கு ஒரு ஒளியை, நுண்துளைகள் கொண்ட பியூமிஸ் கல்லின் திண்மையைத் தந்திருக்கலாம் என்பது சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஜெரார்ட் கியூப்பரின் […]