மேகலை

மேகலை

2026

காதல், காமம், உறவுகள், ஏமாற்றங்கள், மன்னிப்பு — மனித வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளைப் பெண்களின் அனுபவங்களின் வழியாக ஆராயும் நாவல் மேகலை. மேகலையையும் அவளைச் சுற்றியிருக்கும் பெண்களையும் மையமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தமக்கென நேரும் உறவுச் சிக்கல்கள், ஆசைகள், மனப்போராட்டங்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை மானசீகன் நெருக்கமாகப் பதிவு செய்கிறார்.
மனதுக்கும் உடலுக்கும் இடையிலான ஈர்ப்பு, அன்புக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான உறவு, காயங்களுக்குப் பிறகான மீட்சியின் சாத்தியம் ஆகியவை நாவலின் மையச் சிந்தனைகளாகின்றன. குறிப்பாக, மன்னிப்பை பிறருக்கான சலுகையாக அல்லாமல், தன்னுடைய அக விடுதலையாகப் பார்க்கும் இடத்தில்தான் மேகலை தனது தனித்துவமான பார்வையை அடைகிறது.
மனிதர்களை நல்லவர்–கெட்டவர் என்று எளிதில் பிரிக்காமல், அவர்களின் பலவீனங்களையும் தவறுகளையும் கனிவுடன் அணுகும் நாவல் இது

நூலை வாங்க