போர் – லூயிஜி பிராண்டெல்லோ
அதிவிரைவு வண்டியொன்றில் ரோமைவிட்டுக் கிளம்பிய பயணிகள், சுலோமனாவுக்குச் செல்லும் சிறிய புராதான உள்ளூர் ரயிலுக்காக, ஃபேப்ரியோனாவின் சிறிய புகைவண்டி நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. முந்தைய இரவு அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஐந்து பேர் தங்கியிருந்தனர். அது இப்போது புழுக்கத்துடனும் புகைமூட்டத்துடனும் இருந்தது. கோணல்மாணலாக மூட்டையைப் போலிருந்த, துயரார்ந்த முகத்துடனிருந்த பருமனான ஒரு பெண்மணி அதில் இப்போது ஏறினாள். வாயிலிருந்து புகையை வெளியேற்றியபடி, அழுக்கான மெலிந்த உடலும் பலவீனமான தோற்றமும் கொண்ட அவளுடைய கணவன் அவளைப் […]
