தாரிணியின் சொற்கள்
என்னிடம் உள்ள மிருக குணத்தை என் குருவோ அவரின் மனைவியோ அறியமாட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. குரு என்றால் வயதானவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு நாற்பது வயதும் அவர் மனைவிக்கு முப்பத்து ஐந்து வயதும் இருக்கலாம்.
என் தந்தை என் சிறுவயதிலேயே இறந்து
என் குருவின் குரல் மயக்கம் தருவது. கர்நாடக சங்கீதத்திற்கே உரிய குரல். அவருடைய மனைவி மேடைகளில் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தவர் என்று சொல்வார்கள். அவள் பெயர் தாரிணி. அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள் என்றும் சொல்வார்கள். என் குருவின் முதல் மனைவி ஊரில் இருக்
மாலை நேரம். நான் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். அடைக்கப்பட்ட வீட்டின் அறையில் பாட்டுச் சத்தம் கேட்டது. என் குரு பாடிக்
‘புஜமிரண்டும் ஊஞ்சல்
தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடனே
வளையுமே கெஞ்சி
அதிக தன்மை
யில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது
நாட்டைக் குறிஞ்சி’
இந்தப் பாட்டுக்குத் தாரிணி எப்படி நடனம் ஆடுவாள் என்று நான் கற்பனை செய்து
பாட்டு நின்றது. நான் மாடிப்படியில் ஏறி என் அறைக்குச் சென்றேன். அந்தப் பாட்டை முணுமுணுத்துக்
வழக்க
குருவிடம் பாட்டு கற்றுக்கொண்டிருக்கும்போது அங்கும் இங்குமாகச் செல்லும் தாரிணி என் கண்களில் படுவாள். சரியாகக் கவனிக்க முடியாது. வீட்டிற்குத் தேவையான பொருட்
குரு வீட்டில் இல்லை. தாரிணி என்னை அழைத்தாள். நான் சென்றேன். சில பலசரக்குப் பொருட்
“எப்போது பாட்டு கற்றுக்கொள்வது முடியும்?” என்றாள்.
“தெரியாது” என்றேன்.
“நீ வீட்டிலிருந்து சென்றுவிடு. ஏதாவது காரணத்தைச் சொல்லி இங்கிருந்து சென்றுவிடு.”
“சரி” என்றேன்.
நான் குருவிடம் காரணம் ஏதும் சொல்ல
*
மகத்தான சக்தி
இளங்கோவைக் கொன்றுவிடுவது என்று நான் முடிவுசெய்திருந்தேன். சுகுமார் அறைக்குள் வந்து, என்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாகக் கூறினான். என்னை எதற்காக ஒரு பெண் பார்க்க வந்திருக்
“வயதானவரா?” என்று கேட்டேன்.
“கொஞ்ச வயசு
மேசையிலிருந்த டிராயரை இலேசாகத் திறந்தேன். துப்பாக்கி இருந்தது. கூர்மை

“சரி. அந்தப் பொண்ணை வரச்சொல்லு” என்றேன்.
சுகுமார் அந்தப் பெண்ணுடன் அறையில் நுழைந்
உட்காரச் சொல்லி, “என்ன விஷயம்?” என்று அவளிடம் கேட்டன்.
“நான் இளங்கோவின் மனைவி. அவரைவிட உங்களுக்கு ஆள் பலமும் பண பலமும் ஜாஸ்தி. அவரை ஒன்னும் செஞ்சுராதிங்க. எனக்குத் தாலிப்பிச்சை கொடுங்க” என்று தாலியை வெளியே எடுத்துக் காண்பித்தாள்.
நான் “உள்ளே போடு” என்று அதட்டலாகக் கூறினேன். அவள் சேலைக்குள் திரும்பப் போட்டுக்
“நான் இளங்கோவையும் அவன் மனைவியையும் ஒரு கல்யாண வீட்லே பாத்துருக்கேன். ஏங்கிட்டே பொய் சொல்லாதே.”
“நானும் அவர் மனைவி
“நாலாவது மனைவியா? எனக்கு ரெண்டு மனைவி
“நீங்க நெனைச்சா அஞ்சு, ஆறு பேரைக்கூட கலியாணம் பண்ணிக்கிடலாம்” என்றாள்.
இப்படிப் பேசும் பெண்களிடம் ஆண்கள் கவிழ்ந்துவிடு
“இளங்கோ
“மன்னிச்சு விட்ருங்க. அவர் ரொம்ப பீல் பண்றாரு. உங்கள தேவையில்லாம பகைச்சுக்கிட்டேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாரு. நான் போய் பேசிப் பார்க்கவான்னு கேட்டேன். யோசிச்சிட்டு சரி போய் பாத்துட்டு வா, சமாதானமா போயிருவோம், நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுன்னு எங்கிட்டே சொல்லி அனுப்பி வச்சார்.”
“உன்னை எப்படி அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்?”
“சார்… என் அப்பா எனக்கு சின்ன வயசிலேயே இறந்துபோயிட்டார். எனக்குக் கீழே ரெண்டு தம்பிக. அம்மா நோயாளி. பல வீட்லே வேலை பாத்து எங்களைக் காப்பாத்துச்சு. நான் ஒரு ஜவுளிக்கடையிலே வேலை பாத்தேன். ஒரு புரோக்கர் மூலமா அமைஞ்சுது. எங்களுக்குச் செலவே இல்லை சார்… எல்லாத்தையும் அவரே பாத்துக்கிட்டாரு. எங்களுக்கு பெரிய வீடு பாத்துக் கொடுத்து நான், அம்மா, தம்பிக அந்த வீட்லே
“இது ஒரு பக்கம் இருக்கட்டும். அவன் ஏன் நாலு கலியாணம் பண்றான்?”
“சார்… ஒரு சாமியாரு அவர்கிட்டே சொன்னாராம். நாலு கலியாணம் பண்ணிக்க, நாலாவது பெண்டாட்டி மூலம் உனக்கு அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு எல்லாம் உச்சத்துக்குப் போகும்ன்னு. அதனாலே என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டாரு சார். குறை ஒன்னும் இல்லை சார். அவரை ஏதாவது பண்ணிராதிங்க சார். அதுக்காகத்
“சரி. நாலாவதா கலியாணம் பண்ணிக்கிட்டான். வாழ்க்கையிலே உச்சத்துக்குப் போயிட்டானா?”
“கலியாணம் பண்ணி கொஞ்ச காலந்தானே ஆச்சு. இனி கொஞ்சம் கொஞ்சமாத்தானே சார் உச்சத்துக்குப் போவாரு.”
எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்து
நான், “காபி குடிக்கிறியா?” என்றேன். அவள் தலையாட்டினாள். நான் காபி கொண்டுவரச் சொன்னேன்.
எனக்கு அவளைக் கட்டி அணைத்துக்கொள்ளலாம் என்று தோன்றி, அந்த எண்ணத்தை அடக்கிக்
“சார், உங்களைப் பாத்தா நல்லவராத் தெரியுது. அவரை ஒன்னும் செஞ்சுராதிங்க” என்றாள்.
“சரி. என் வழிக்கு வரக்கூடாதுன்னு அவன்கிட்டே சொல்லு.”
“சொல்றேன் சார்.”
“சரி. நீ போகலாம். எனக்கு வேற வேலை இருக்கு.”
அவள் எழுந்து கையை ஆட்டி விடைபெற்றுக்
பெண் மகத்தான சக்தி என்று எனக்குத் தோன்றியது. இளங்கோவை நான் கொல்லப்போவதில்லை என்று முடிவெடுத்தேன்.
