ஜெ.பிரான்சிஸ் கிருபா: பரிசுத்தத்தைத் தேடியலைந்த நவயுகப் பாணன்
ஆகஸ்ட் 8ம் தேதி, 2008ம் ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னதால், “கன்னி” நாவலை வாங்கிச்சென்று அன்றிரவே படிக்க ஆரம்பித்தேன். ஏலான் ஆசாரியின் மரணத்தைச் சத்ராதிகள் செய்தனவா அல்லது அறிவியல் தர்க்கமுறைப்படி இதய அடைப்பால் ஏற்பட்டதா எனத் தீர்மானமாக முடிவெடுக்க முடியாதவாறு இரு பக்கங்களையும் திறந்து வைத்திருந்த எழுத்து உத்தி என்னை உள்ளீர்த்தது. அதன்பின் சித்தப்பிரமை அடைந்துள்ள பாண்டி, கடலை ஒரு பெரும் படிமமாகவும் தேவமைந்தனை ஒரு ஆட்டிடைக் கிழவனாகவும் பார்த்த விவரிப்பு, மனக்கிலேசமடைந்தவனின் […]
