கடந்த பன்னிரண்டு ஆண்டு
ஒரு மின்னல் வெட்டைப் போல, ஒரு குதிரையின் பாய்ச்சலைப் போல, ஒரு குழந்தையின் முறுவலைப் போல, ஒரு ஞானியின் சுடர்விழியைப் போல, சந்தியா காலவேளையில் மலரும் சேடல் மலரின் மணம் போல… கிருபாவின் கவிதை வரிகள் என்னை ஒருவித இரசவாத உணர்வுகளுக்குள் இட்டுச்செல்வதனால் அவரது கவிதை
“அதிகாலையில் விழுந்த நாவற்பழம் இரவின் துளி” என்ற பிரான்சிஸ் கிருபாவின் வரியினைப் படித்தபோது அந்த வரி ஒரு சித்திர
“கொடியில் தொங்கும் திராட்சை ஒரு கூட்டுக் கனவு” …..
“பகலில் எரியும்
மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து
சுருள் சுருளாய் விரிகிறது
இருள்.”
“விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.”
போன்ற கிருபாவின் கவிதை வரிகளில் உள்ள படிமங்கள், உருவகங்கள், வெகு கச்சித
விருந்துக்கு வந்தவனை
கூலிக்குப் பேசி
வேலைக்கி அமர்த்தும்
இந்த வாழ்க்கையோடு
இன்னும் விவாதித்து
விசனப்பட்டுக் கொண்டிராமல்
ஒரு பூஞ்செடியை நட்டு
அதன் வேர்களில் என்னுயிரூற்றைப்
பின்னி
விட்டு போகவே விரும்புகிறேன் என்னைவிட்டு!
பொய்மையைப் பெருக்கி பொழுதினைச் சுருக்கும் தந்திரம் நிறைந்த லெளகீக நடைமுறை
“கணங்கள்தோறும் என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது, ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக் கூடாது…” என்கிற கிருபாவின் கவிதையானது தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணியில் இடம்பெற்றுள்ள “எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி, ஏழைநெஞ்சு புண்ணாகச் செய்தது இனிபோதும் பராபரமே” என்கிற பாடலின் ஆன்ம விடுதலை உணர்வுநிலையியோடு பொருந்தி ஒளிப்பதாக உணர்ந்தேன். அவரது அகத்தேடலை அறிந்து

“முதலில் அண்ணன்கள் கைவிட்டார்கள், பிறகு காதலிகள் கைவிட்டார்கள்…” என்ற கவிதை
கன்னி …. கிருபாவின் முதல் நாவல் எனச் சொல்லப்
ஒரு நாவலைக் கவிதை
“வானத்தில் ஏழுவகை மேகங்கள் ஒரே நேரத்தில் சுற்றிச் சூழ்ந்து நேருக்கு நேர் மோதி பெரும் முழக்கம் உண்டானது. மின்னல் கொடிகள் கொதிநிலையில் நெளிந்து மறைந்தன. ஒளியும் இருளும் விரிந்தும் சுருங்கியும் பிரிவதும் சேர்வது
வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மனம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”
கிருபாவை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணம் அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவரது இயல்பும் எனக்குப் பிடித்திருந்தது. ஆக்டோபஸ்சின் நீண்ட கரங்களாக மனிதர்களைச் சுருட்டி நெரித்து வீழ்த்தும் காரணிகளான கடும்பற்று, பொருட்பித்து, புகழ் மயக்கம், அதிகாரத் துய்ப்புணர்வு, சூழ்ச்சிகள் நிறைந்த தந்திர சிந்தனைகள் ஆகியவற்றினால் கிருபா பீடிக்கப்படாமல் எப்போதும் விலகியே இருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எதனையும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளாமல் வாழ்வதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. குருவின் அருட்பார்வைக்கு ஏங்கும் சீடனைப் போலவும், தனது காதலியின் அன்பு முத்தத்தைப் பெற ஆசையுற்ற காதலனைப் போலவும் தனக்கு மிக நெருக்க
விவிலியத்திலே ஒரு வசனம் உண்டு…
“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்
இந்த ஆகாயத்துப் பட்சிகளைப் போலவே பிரான்சிஸ் கிருபா வாழ்ந்தார். ஓரிடத்தில் இருப்புகொள்ளாமல் அலைந்து திரிந்தார். துறவிக்கும் பறவைக்கும் ஓரிடம் கிடையாது என்ற வாக்கியத்தின் வடிவாகக் கிருபா இருந்தார். திக்குத் தெரியாத காட்டில் நித்தியத்தைத் தேடி உடல் இளைத்தார். சித்தனைப் போல அலைந்தார். இறுதியாக எண்ணத்தைத் துரத்தியோடும் யுத்தத்திலிருந்து விடுதலை பெற்று கர்த்தருக்குள் நித்திரை கொண்டிருக்கும் கிருபா, காலம் உள்ளவரை கவிதை
