Category: எழுத்து

எழுத்து

லலிதாம்பிகை

சரவணன் சந்திரன் · 29.08.21

பெசண்ட் நகர் மின் மயானத்தில் பார்த்த சிலைதான் அதுவென்பது அம்மோன நிலையிலும் எனக்குத் துலக்கமாக நினைவில் இருந்தது. பாதித் தூக்கத்திலும் இருந்தேன் அப்போது. அதற்கு முன் இந்தப் பெயரை அந்த நிறத்தில் யோசித்ததே இல்லை. கன்னங்கரிய மார்பிள் கல்லில் செதுக்கப்பட்ட பூரணமான சிலை. கையில் குழந்தையொன்றை ஏந்தியிருந்தது. கழுத்தில் மட்டரகமான பச்சை நிறத்தில் பாசி மணிமாலை தவழ்ந்தது. நெற்றியில் நாணயம் அளவிற்குச் சிவந்த பொட்டு.  கையில் இருக்கிற குழந்தையின் முகத்தில் புன்னகை தென்பட்டது. லலிதாம்பிகையின் முகத்தை நெருக்கத்தில் […]

எழுத்து

அந்தரிப்பு

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 29.08.21

‘க்ளிங்’ என்ற ஓசையெழ வந்து நின்ற மின்னஞ்சலைத் திறந்து பார்த்த மீராவுக்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. படம் ஓடிக்கொண்டிருக்க கிடைத்த சின்ன இடைவெளியில் மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது இது வழக்கமாகிவிட்டது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வாட்ஸப்பிலோ பேஸ்புக்கிலோ ஏதாவது புதிய செய்தியோ பதிவோ வந்திருக்கிறதா என்று பார்ப்பது ஓர் அனிச்சைச் செயலைப் போல் நிகழ்கிறது. சனிக்கிழமை மதியப் பொழுது ஏதாவது படம் பார்க்கலாம் என்று பரத் வம்படியாய் இழுத்து உட்கார வைத்துவிட்டான். அச்சுக்குட்டியும் இம்முறை […]

எழுத்து

நுண்

சி.சரவணகார்த்திகேயன் · 29.08.21

1 அலுவலகக் கொண்டாட்டத்தில் மீதமாகி அந்தக் கடைநிலை ஊழியன் வீடு கொணர்ந்த பீட்ஸா பெட்டியை அவன் மனைவி பிரிக்கையில் அதில் இரண்டு துண்டங்களிருந்தன.  பீட்ஸா அந்த வீட்டிற்கு மிகப்புதிது. இந்த இரண்டை மூன்றாய்க் கூறுபோட வேண்டும். எப்போதும் இதேதான். யாரும் விட்டுத்தர மாட்டார்கள். பற்றாக்குறைப் பட்டுவாடாதான். முதலில் பெண். அடுத்ததாய் ஓர் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட, இரண்டாய்ப் பிறந்தது. கிட்டிய கொடை அவர்கள் சக்திக்கு மீறியது. எல்லாவற்றிலும் சமரசம் தேவைப்பட்டது. இத்தனைக்கும் அவளும் புருஷனும் தமக்கேதும் வேண்டாமெனத் […]

எழுத்து

சுஜாதாவை என்னதான் செய்வது?

எம்.கோபாலகிருஷ்ணன் · 29.08.21

தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்த காலத்தில் முதன்முதலாகக் கற்றுக்கொண்ட ஒன்று, யாரிடமும் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லக்கூடாது என்பதுதான். சுஜாதா என்ற பெயரே உச்சரிக்கக் கூடாத ஒன்று என்பது அப்போது மட்டுமல்ல, இப்போதும்தான்.  சுஜாதா ஒரு வெகுஜன எழுத்தாளர். வணிகப் பத்திரிகையில் மலினமான யுத்திகளுக்காகவும் வியாபாரப் பெருக்கத்துக்காகவும் எழுதிக் குவிப்பவர் என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் அவர் எழுதுவதெல்லாம் அவரது மேதைமையைக் காட்டுவதற்காகவே ஒழிய உண்மையில் இலக்கியத்தின்பால் அவருக்கு அக்கறை இல்லை என்று […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 2): வி.குமார்

ஆத்மார்த்தி · 29.08.21

இசை பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மாவையும், மனதிற்குச் சிறகுகளையும், கற்பனைக்கு விமானத்தையும், எல்லாவற்றிற்கும் வாழ்வையும் தருகிறது என்பது ப்ளேட்டோவின் கூற்று. இசை நம்மை உணர்வுப்பூர்வமாகத் தொடுகிறது. வார்த்தைகளால் அது முடியாது என்றார் ஜானி டிப். மொஸாட்டின் பார்வை நூதனமானது. இசை என்பது இசைக்குறிப்புகளில் இருப்பதல்ல. மாறாக இருபுறமும் அணைக்கும் நிசப்தத்தில் இருப்பது என்கிறார். தல்ஸ்தோய் சொன்னது எனக்கு மிகவும் உவப்பான இசைமொழி. “இசை என்பது உணர்வுகளின் சுருக்கெழுத்து”. என்ன அற்புதமான சொல்லாடல்? ஜிமி ஹென்றிக்ஸ் சொல்வதுதான் சரி. இசை […]

எழுத்து

சவச்சீலை – முன்ஷி பிரேம்சந்த்

கோ.கமலக்கண்ணன் · 29.08.21

குடிசைக்கு வெளியே அணைந்து போன தீக்குழிக்கு முன்பாக தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். உள்ளே பேறுவலி கண்ட மகனின் இளம் மனைவி, புத்யா அவ்வப்போது இதயத்தைக் கிழிக்கும் கூரிய ஓலங்களை அவர்களுக்கு அனுப்பித் துணுக்குற வைத்தாள். அவள் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வோலமே அறிவித்தது. கடுமையான குளிர் இரவு. எங்கும் உறைவு நீக்கமற நிறைந்திருந்தது. அந்தக் கிராமத்தை இருள் மெல்ல மெல்ல மொத்தமாக விழுங்கியிருந்தது. ‘இவள் உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை’ என்றார் கிஷு. ’இந்த நீண்ட நாள் முழுவதும் […]

எழுத்து

சிறுகோட்டுப் பெரும்பழம்

மானசீகன் · 29.08.21

பாலத்தில் நின்றபடி ஆர்த்தி காவிரியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கும்பகோணத்துக் காவிரி குறும்புகள் நிறைந்த பெண். அதே காவிரி திருச்சியில் சலனங்களில்லாத துறவியைப் போல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குத் தகுந்தாற் போல் நதியின் குணம் மாறுமா? ஒரு தண்ணீர்ப் பாம்பு தலையை மட்டும் தூக்கியபடி மிதந்துகொண்டிருந்தது. மாலைப்பொழுது மெல்ல மசங்கி இருட்டின் ஆதிக்கம் ஆரம்பித்திருந்தது. இரவு ஒரு போர்வையைப் போல் நீண்டு மனிதர்களை மூடிக்கொள்வதாக ஆர்த்திக்குத் தோன்றியது. உண்மையில் இரவென்பதே கண்ணாடி பார்த்தல்தான். பகல் பொழுதில் அவரவர் போட்டுக்கொண்ட வேஷங்களை இரவுதானே […]

எழுத்து

அறம்பிறழ்ந்தோரிற் கடையோன்

த. கண்ணன் · 29.08.21

Operation Finale என்றொரு படம் நெட்பிளிக்சில் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். சுமாரான நாஜி வேட்டைப் படம்தான். யூதர்களை அழித்தொழிக்கும் இறுதித் தீர்வை வடிவமைப்பதில் முதன்மையானதொரு பங்காற்றிய அடால்ஃப் ஐக்மேன் (Adolf Eichmann) அர்ஜெண்டினாவில் குடும்பத்தோடு மறைந்து வாழ்ந்துகொண்டிருந்தார். மொசாடைச் சேர்ந்த யூத உளவாளிகள் அவரைக் கைப்பற்றி இசுரேலுக்குக் கடத்தி வருவதுதான் படம். மூன்று காரணங்களுக்காக அப்படம் மனதில் நின்றது. முதல் காரணம், ஐக்மேன் அவ்வளவு பெரிய அழித்தொழிப்பு குறித்த குற்றவுணர்வு அற்றவராகவே பெரும்பாலும் வருவார். தன்னைச் […]

எழுத்து

பின்லாந்தின் நாட்டுப்புறக் காவியக் கதைப்பாடல் கலேவலா: அஸ்கோ பார்பொலா

கால.சுப்ரமணியம் · 29.08.21

நாட்டுப்புறவியல் துறை உயர்நிலையை அடைந்த நாடுகளில் பின்லாந்து முதன்மையானது. இந்த உச்சத்தை அந்த நாட்டு ஆய்வாளர்கள் தம் தேசியக் கதைப்பாடலான ‘கலேவலா ’ (Kalevala) என்ற வாய்மொழிக் காவியத்தைத் திரட்டிச் செம்மைப்படுத்தி வெளியிட்டதன் மூலம்தான் அடைந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். தம் தேசியக் காவியத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காக நிறைய முயற்சியும் மானிய நிதியுதவிகளும் செய்துள்ளார்கள். அப்படித் தமிழிலும் மிக அட்டகாசமாக அதன் தமிழ் வடிவம் வெளிவந்து எல்லோருக்கும் பெரும்பாலும் இலவசமாக அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. ஆனால் என்ன துரதிர்ஷடம் என்றால் […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 4): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 29.08.21

நல்ல விஷயங்களைப் பார்த்தால் சிலருக்குச் சும்மா இருக்க முடியாது. அதை நாசம் செய்துவிட்டுத்தான் அடங்குவார்கள் என்கிற பொருளில் வருகிற ஒரு வசனம் உண்டு. சதயம் படத்துக்காக எம்.டி.வாசுதேவன் அதை எழுதினார். ‘கோலங்கள்‘ (1981) என்கிற இந்தப் படத்தின் அடிப்படை அம்சம் இதுதான்.  மனிதன் எப்படியிருப்பான் என்பதைக் கணிக்க முடியாது. அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கைச் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவனை என்னவாக உருட்டித் திரட்டி கூட்டத்தில் தூக்கி எறிந்திருக்கிறது என்பதைப் பிறர் அறிய மாட்டார்கள். அப்படி நூறு பக்கத்தில் […]

எழுத்து

தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள் – எட்கர் கீரத்

செங்கதிர் · 29.08.21

ஒரு காலத்தில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் பெரும் செல்வந்தன். அளவுக்கு மீறி பணம் வைத்திருப்பதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு அவன் எதையோ புதிதாகக் கண்டுபிடித்திருந்தான் அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்திருந்ததைக் களவாடியிருந்தான். அது நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டதால் என்ன நடந்ததென்று அவனுக்கே ஞாபகமில்லை. அந்தக் கண்டுபிடிப்பைப் பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஏராளமான தொகைக்கு விற்றுவிட்டான். கிடைத்த பணம் மொத்தத்தையும் நிலத்திலும் நீரிலும் முதலீடு செய்தான். வாங்கிய நிலத்தில் சிறு சிறு கான்கிரீட் […]

எழுத்து

அழுமூஞ்சிப் பொட்டணத்தை எள்ளல் கைகொண்டு பிரிப்பவன்: இசையின் கவிதைகளை முன்வைத்து

மனோஜ் பாலசுப்ரமணியன் · 29.08.21

ஒரு முறை சத்தியமூர்த்தி (aka) கவிஞர் இசை சொன்னார், “விழுகுற அன்பு வந்து விழுந்தா போதும் நண்பா”. நான் துணுக்குற்றேன். அந்தச் சொல்லிணைவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அன்பை ஏன் விழுதலுடன் இணைத்துச் சொன்னார்? அன்பை மழை என்று சொல்கிறாரா அல்லது மழைதான் அன்பா? தனித்தனியாக இயங்கும் போது சாதாரணமாக இருக்கும் சொற்கள், விசித்திரமான இணைவில் மிக அசாதாரணமான ஒன்றாக எழுகின்றன. “கவிதையின் அடிப்படை அலகு சொல்” – என்பதை இசையின் கவிதைகளில் அழுத்தமாகக் காணலாம். சென்ற […]