எமிலிக்காக ஒரு ரோஜா – வில்லியம் ஃபாக்னர்
1 செல்வி எமிலி கிரியர்சன் இறந்தபோது ஊர் முழுமையும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. விழுந்துவிட்ட நினைவுச் சின்னம் ஒன்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்கள் சென்றார்கள். வீட்டுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகப் பெண்கள் சென்றார்கள். தோட்டக்காரன், சமையல்காரன் என இரண்டு வேலைகளையும் செய்துவந்த வயதான ஆண் வேலைக்காரனைத் தவிர கடந்த பத்து வருடத்தில் யாருமே அந்த வீட்டின் உட்புறத்தைப் பார்த்ததில்லை. அது ஒரு பெரிய சதுரச் சட்டகம் போன்ற அமைப்பைக்கொண்ட வீடு. ஒரு காலத்தில் வெண்ணிறமாக […]
