இரு சிலுவைகளின் உலகம் – தஸ்தாயேவ்ஸ்கியின் ‘அசடன்’ குறித்து
முதல்முறையாக உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு தமிழ் வாசகன் சந்திக்க நேரும் முதல் பெயராக தஸ்தாயேவ்ஸ்கி இருக்கக்கூடும். எந்தவொரு தமிழ் எழுத்தாளரின் படைப்புகளுக்கு இணையாகவும் அவர் படைப்புகளைப் பற்றி இங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணங்களில்லாமல் இல்லை. அவர் இங்கு பரவலாக அறிமுகம் செய்யப்பட்ட காலம் என்பது நவீனத்துவம் மேலோங்கி இருந்த காலம். அசோகமித்திரனும், ஜி.நாகராஜனும், ஆதவனும் செல்வாக்கு செலுத்திய காலம். இயல்பாக அவர்கள் முன்வைத்த உலகிற்கு நெருக்கமாக இருந்தது தஸ்தாயேவ்ஸ்கியின் உலகம். நற்குணங்கள் அற்றவர்களை கதைமாந்தர்களாகக் கொண்டவை அவரது […]
