Category: எழுத்து

எழுத்து

இரண்டு திருமணங்களும் ஒரு விவாகரத்தும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

எஸ்.கயல் · 27.02.21

செருப்பு தைக்கிறவனிடம் எடுபிடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவனுக்கு ஒரு சமையல்காரியோடு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால் அவளோ மனைவியை இழந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்த துரோகத்தால் மனமுடைந்த அவன் இலையுதிர் கால நாளொன்றில் க்ரோச்மல்ணா சாலையில் தற்கொலை செய்துகொண்டான். க்ரோச்மல்ணா சாலை முழுதும் இதே பேச்சாக இருந்தது. யூதச்சமய மக்கள்கூட ராட்ஜிமினர் பாடசாலையில் இது குறித்து விவாதித்தனர். ஒவ்வொரு மாதத்திலும் இரு வாரங்களுக்கு இயல்பான மனநிலையிலும் மீதமுள்ள இரு வாரங்களுக்கு மனம் பிறழ்ந்தும் காணப்படும் திருநங்கையான மெயர், ட்ரகோமா […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 3)

மானசீகன் · 27.02.21

கு.அழகிரிசாமி காமத்தை அதிகம் சித்தரித்தவரில்லை என்று பொது வாசக மனம் நம்பியதற்கு சில காரணங்கள் உண்டு. அவர் காமம் சார்ந்து மனித மனங்களின் மீதான அறுவை சிகிச்சையில் ஈடுபடுவதில்லை. காமத்தின் விசித்திரங்களைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து கடந்துவர துறவியைப் போல் வழிகாட்டுவதில்லை. காமத்தை சாக்காக வைத்துக்கொண்டு கடவுள், தத்துவம் என்று உபதேசம் செய்வதில்லை. காமம் சார்ந்த உணர்ச்சிகரமான சித்தரிப்புகளையோ நாடகீயமான தருணங்களையோ வலிந்து உருவாக்குவதில்லை. காமத்தின் இயக்கம் பெரிய அளவில் காட்சிச் சித்தரிப்பாகக்கூட நிகழ அனுமதிப்பதில்லை. காமத்தைப் பேசுகிற பாவனையில் […]

எழுத்து

பூடபெஸ்டை அடைதல் – நோவயலட் புலவாயோ

சசிகலா பாபு · 27.02.21

நாங்கள் பூடபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம் – பாஸ்டர்ட், சிபோ, காட்நோஸ், ஸ்போ, ஸ்டினா, நான். மிட்சிலிகாஸி சாலையைக் கடக்க எங்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ்டர்ட் தனது குட்டித்தங்கை பிராக்‌ஷனை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது, நாங்கள் செல்வது தெரிந்தால் என் தாய் என்னைக் கொன்றேவிடுவார், இவற்றையெல்லாம் மீறி நாங்கள் பூடபெஸ்ட் செல்கிறோம். அங்கு சென்றே தீருவோம். நாங்கள் திருடி உண்ண பூடபெஸ்டில் நிறைய கொய்யாக்கள் உள்ளன. இப்போதைக்கு அந்த கொய்யாக்களுக்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். காலையில் […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 7): ராஜாவின் பாடல்கள்

ஆத்மார்த்தி · 27.02.21

இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை, இருப்பு மற்றும் நீக்கம் ஆகிய இரட்டைத் தன்மைக்குள் குரல்களின் இயங்குமுறை எனப் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்கேற்ப மாறிவருகிறது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னுமாய்த் திரை இசையை இரண்டாய்ப் பகுத்துப்பார்க்கும் போது அவருடைய முதலிசைக் காலமாக 1990ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சொல்லமுடியும். அதன் பின்னர் இளையராஜாவின் அடுத்தகால இசையை நோக்கிய தேடல் காலமாகக் கொள்ளலாம். அந்த […]

எழுத்து

தலைமைக் காவலரின் மனைவி – பால்சாக்

இல. சுபத்ரா · 27.02.21

அர்மனாக்கின் தலைமைக் காவலதிகாரி தான் விரும்பியது போன்ற வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு கோமாட்டி ‘பான்’-ஐ மணம் முடித்தார். அப்பெண்ணோ, அதற்கு முன்பே, மன்னர் ஆறாம் சார்லஸின் அரண்மனை காரியஸ்தருடைய மகனாகிய இளைய சர்வஸியிடம் தன் மனதைப் பறிகொடுத்திருந்தார். தீரமிக்கப் போர்வீரனான தலைமைக் காவலதிகாரி அழகற்றவராகவும் கடுமையானவராகவும் அடர் தாடியுடனும் எப்போது பார்த்தாலும் சினத்தில் வார்த்தைகளை உமிழ்பவராகவும் தூக்கிலிடுவதையே தொழிலாய்க் கொண்டிருப்பவராகவும் போர்க்களச் சிந்தையிலோ அல்லது காதல் தவிர்த்த பிற விஷயங்களிலோ மூழ்கியிருப்பவராகவும் இருந்தார். திருமண வாழ்வின் இனிமையை […]

எழுத்து

திரிபுகால ஞானி

போகன் சங்கர் · 27.02.21

தவறாகக் கால் வைத்துவிட்டோமோ என்று பதறி ஒரு கட்டம் பின்வாங்குகிறேன் நான். “சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது” என்று நகைக்கிறாள் ராணி. * ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் பொருள் தரும் ஒரு உறவில் இருந்த வரை இரவுக்குப் பிறகு பகல் வந்தது. கடிகாரத்தின் முகம் வட்டமாய் இருந்தது. இப்போது எல்லாம் குழப்பம். எவ்வளவு பேசியும் எதையும் பேசவில்லை என்ற உணர்வு. எதையும் பேசாவிட்டாலும் எதையோ சொல்லிவிட்டாற்போல் ஒரு களிப்பு. நிலவென்றோ […]

எழுத்து

யானை போம் வழியில் வாலும் போம்!

நாஞ்சில் நாடன் · 27.02.21

எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன் திடீரென அலைபேசியில் கேட்டார்- ஓர்மை எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று. அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கணிதம் பயிற்றியவர். எல்லா அர்த்தத்திலும் பாண்டிச்சேரியில் எமக்கொரு சரணாலயம். செம்மூதாய் கி.ரா., ஃபிரெஞ்சுப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோரது நண்பர். சிறந்த நவீன […]

எழுத்து

டீ-ஷர்ட்

பா.திருச்செந்தாழை · 27.02.21

அவன் எதிர்பாராத வினாடியில் அவர்கள் மூவரும் அவனை மறித்து நிறுத்தியபோது, அவனது கையில் ஒரு கறுப்பு கேரிபேக்கில் சுற்றப்பட்ட நாப்கினும் பிரெட் பாக்கெட்டும் இருந்தன. சடுதியில் அவன் சுதாரித்து நழுவ முயலுகையில் தங்கவேலு ஓங்கி ஓர் அறைவிட்டார். அதிகாலை பஜாரின் ஆட்கள் சட்டென கவனிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தபடி, தங்கவேலுவின் கைகள் தன்னிச்சையாக பின்பக்க பெல்ட்டில் சொருகி வைக்கப்பட்ட வாக்கி-டாக்கியின் பட்டனை ஆன் செய்தது. வாக்கி டாக்கியின் இரைச்சலும் அதிகாரமுமிக்க ஆணியால் கிறுக்குவதைப் போன்ற ஒலிக்குறிப்புகள் அங்கே நின்று […]

எழுத்து

மார்கு வீதி கொலைகள் – எட்கர் ஆலன் போ

கோ.கமலக்கண்ணன் · 27.02.21

பகுப்பாய்விற்கு உகந்த உளவியல் கருவிகள் என்று அறியப்படுபன அனைத்தும் சற்று பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டியவையே. விளைவுகளை வைத்தே அவற்றை நாம் புரிந்துகொள்கிறோம். பகுப்பாய்வாளர்கள் அர்ப்பணிப்புடன் அப்பணியால் ஆட்கொள்ளப்படுகையில் பெருமகிழ்வில் இருப்பதாக உணர்கின்றனர். உடல்வலிமை மிக்கோர் கடும் உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டி தசையாற்றலின் வல்லமையைப் பிரகடனப்படுத்திக்கொள்வதைப் போல சிக்கல்களை அவிழ்க்கும் தார்மீகச் செயல்பாட்டைச் செய்து காண்பிப்பதில் பகுப்பாய்வாளர்கள் அளவற்ற பெருமிதமடைகிறார்கள். அற்பமான செய்திகளைக்கூட கவனித்து தனது ஆய்விற்குப் பயன்படுத்திக்கொள்வதன் வழியாக அவர் பேருவகை கொள்கிறார். இயற்கைக்கு மீறியவை என்று கருதப்படும் […]

எழுத்து

மகுடேசுவரன் கவிதைகள்

மகுடேசுவரன் · 27.02.21

ஆண் என்பவனைஎப்படி வரையறுப்பது ?அவன் நூறு நிலங்களின்முட்கள் ஏறியகாலடிகளால் ஆனவன்.அவன் நூறு நோக்கங்களின்எடைதாளாதுஎப்போது வேண்டுமானாலும்அச்சு இறும் நெஞ்சினன்.அவன் நூறு கனவுகளின் வானத்தில்தனது நீலத்தைப் பிழிந்துகுடிக்க முடியாதஉவர்த்த வாயினன்.அவன் நூறு துன்பங்களின்தூண்மண்டபத்திடையேசாய்ந்தமர முடியாத நெரிசலில்சிக்கிக்கொண்டு தவிப்பவன்.அவன் நூறு வாய்ப்புகளைத்துரத்திச் சென்றும்ஒன்றும் கிட்டாத தளர்ச்சியைவெளிக்காட்டாமல் முகங்கழுவுபவன்.அவன் நூறு விழுப்புண்களின்தழும்புகளோடுவலிதாங்கிக்கொண்டேவாளாவிருக்க முயன்றுகண்ணீர் அடக்குபவன்.அவன்நூறன்றுஒரே ஒரு பெண்பாலின்தூய அன்பினாலன்றிவேறெதனாலும்உயிர்ப்படையத் தெரியாதமெல்லுயிரன். * எழுதியெழுதி நிகழ்த்தப்படும்காதல் உரையாடல்களில்ஒருவரையொருவர்சொற்களால்தெரிவித்துக்கொள்கின்றனர்.அங்கே சிந்தப்படும்நூற்றுக்கணக்கான மகரமெய்களில் (ம்ம்)ஈக்கள் மொய்க்கின்றன.திட்டல்களில் தீஞ்சாறு வடிகிறது.முதலில் ஒருவர்பன்மையைவிட்டு இறங்கிஒருமைக்குள்அடியெடுத்து வைக்கையில்எதிர்த்தரப்பின் நெஞ்சில்மதுச்சிதறல்.ஒரு முடிவினைஅடையக்கூடாது என்றுஆயிரம் […]

எழுத்து

ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே

வி.அமலன் ஸ்டேன்லி · 27.02.21

வெகு அண்மையில் எதிரே கண்பார்வையில் கடல். பக்கத்து வீட்டுக்காரர் அவ்வப்போது மரத்தில் தங்கும் கொக்குகளைச் சுட்டுவிடுவார். எத்தனையோ தரம் சொல்லியும் கேட்காது துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அலைவார். ‘பியூடி வித்தவுட் குருவெல்டி’ சுவரொட்டிகளையும் ஸ்டிக்கர்களையும் அவரது வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்தேன். கோபமடைந்தார். புறநகர்ப் பகுதிகளின் நீர்த்தேக்கங்களில் காடை கௌதாரி கொக்குகளென கைத்துப்பாக்கியால் சுட்டுத் தின்னும் குறவர்களை சில சமயம் போலீஸ் பிடித்து மிரட்டும். உணவுக்கென்பதால் அவர்களைத் தண்டிப்பது நியாயமாகப்படாது. ஆனால் இதுபோன்றவர்களை என்ன செய்வது? எஸ்பிசிஏ எனும் விலங்குகளுக்கெதிரான கொடுமைகளைத் தடுக்கும் மையத்தின் மூலம் […]

எழுத்து

இந்திய எண்ணெய் வித்துகள் உற்பத்தி: தன்னிறைவைத் தாரைவார்த்த கதை – பி.எம். வியாஸ், மனு கௌஷிக்

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 27.02.21

கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் சூழல் உலகமயமாதலுக்குக் குந்தகமாக அமைந்து பாதுகாப்புக்கான கூக்குரல் எழக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய வியூகமும் இந்தப் போக்கிலேயே எழுந்து, “சுயசார்பு”, “உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்போம்” என முழக்கங்கள் எழுகின்றன. விடுதலை பெறுவதற்கு முன்பு இந்தியா சமையல் எண்ணெயை ஏற்றுமதி செய்துவந்தது. விடுதலைக்குப் பின் அது சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1970களின் தொடக்கம்வரை இந்த நிலை தொடர்ந்தது. 70களிலும் 80களிலும் ஏற்பட்ட தடுமாற்றங்களிலிருந்து மீண்டு 90களின் தொடக்கத்தில் மீண்டும் தன்னிறைவு பெற்றது […]