Category: எழுத்து

எழுத்து

தீர்க்கதரிசி – கலீல் கிப்ரான்

கோ.கமலக்கண்ணன் · 30.01.23

மக்களின் அன்புக்குப் பாத்திரமான, தனக்குத்தானே விடிவெள்ளியான திருத்தூதர் அல்முஸ்தஃபா, தான் பிறந்த தீவுக்குத் தன்னை மீள அழைத்துச் செல்ல வரும் நாவாயை எதிர்நோக்கி ஆர்பலீஸ் நகரத்தில் பன்னிரு ஆண்டுகளாகக் காத்திருந்தார். பன்னிரண்டாவது ஆண்டில் அறுவடைப் பருவமான ஈலூல் திங்கள் ஏழாம் நாளில் நகரின் புற மதில்களுக்கு அப்பால் இருந்த குன்றின் மீதேறி நின்றபடி, ஆழியில் மூடுபனியின் ஊடாக அசைந்து வரும் நாவாயைக் கண்டார் அவர். அவரது அகக்கதவுகள் திறந்துகொண்டன. உவகையூற்று கடற்திசையை நோக்கிப் பெருக்கெடுத்தது. விழிமூடி மோனத்தில் […]

எழுத்து

தமிழினியின் புதிய வெளியீடுகள் 2024

கோகுல் பிரசாத் · 17.01.23

நாவல்கள்: * சிறுகதைத் தொகுப்புகள்: * தன் வரலாறு: * கட்டுரைத் தொகுப்புகள்: * நாடகங்கள்: * கவிதைகள்: * மொழியாக்கங்கள்: * ஆங்கில நூல்கள்:

எழுத்து

அகிலம்

வண்ணதாசன் · 27.12.22

தவமணிக்கு இப்படித்தான் ஆகிவிடுகிறது. மனதுக்குச் சரியில்லாமல் என்னமோ மாதிரி இருக்கிறது, நல்ல வெயில் அடித்தாலும் வீடு முழுவதும் இருட்டில் மிதக்கிறது, அவள் என்ன இது என்ன மாதம், இன்றைக்கு என்ன கிழமை, போன வருஷம் இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நினைத்துக்கொண்டா இருக்கிறாள்? ஆனால் வேண்டாதது எல்லாம் ஞாபகம் வந்து இம்சை பண்ணுகிறது. செல்வமணி இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு +1 படித்துக்கொண்டு இருப்பான். அவனுக்குப் பின்னால் பிறந்த செல்வராணியே இப்போது எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். எந்த நேரத்திலும் அவள் […]

எழுத்து

கூன்வண்டு

சரவணன் சந்திரன் · 27.12.22

படுக்கையில் என் மார்பு மீது கையை ஊன்றி அதில் தலையைச் சாய்த்து, மேல்நோக்கி விழிகளை உயர்த்தி, “ஹேப்பியா இருக்கீயாடா?” என்றாள் புனிதா. நானும் உடனடியாக, “ஏன்.. நல்லாத்தான் இருக்கேன்” எனப் பொய் சொல்லிவிட்டேன். அவளோடு இருக்கையில் இப்படிப் பொய் பேச வேண்டியிருக்கிறது. மனதில் இருந்ததை அப்படியே அவளிடம் கொட்டிவிட முடியாது என்பதால், என் வார்த்தைகளைத் தணிக்கை செய்தபடியே இருப்பேன். கையில் ஜெபமாலையை வைத்து மெதுவாக ஒவ்வொன்றாய் உருட்டுவதைப் போல வார்த்தைகளைப் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் தடவித் தள்ளுவேன். […]

எழுத்து

சுடர்த்தொடி கேளாய்!

மானசீகன் · 27.12.22

“ஃபௌசி.. இன்னிக்கு நா சி.எல் இல்லடி. ஸ்கூலுக்கு திரும்ப வந்துட்டிருக்கேன்.” “அச்சோ.. ஒங்க பண்டல் மச்சானோட படத்துக்குப் போகலையா?” “இல்ல.. அவருக்கு திடீர்னு கம்பெனில வேல வந்திருச்சாம்.” “……………” “வந்து சொல்றேன். நீ முதல்ல ஆஃபிஸ்க்கு போயி லீவ் லெட்டர திரும்ப வாங்கிடு.” ஃபௌசி அயர்ச்சியாகத் தொலைபேசியை வைத்தாள். மகாவை நினைத்தால் பாவமாயிருந்தது. திருமணமாகி ஆறே மாதத்தில் அவர்கள் சேர்ந்து கிளம்புவதாகத் திட்டமிடும் ஒவ்வொரு முறையும் இதே மாதிரிதான். இறுதிக்காட்சி மட்டும் மாறாமல் உறைந்துவிட்ட ஒரே நாடகத்தின் […]

எழுத்து

கன்னிகை

சுஷில் குமார் · 27.12.22

“எத்தான், நீங்க எதுக்கு ரொம்ப யோசிக்கியோ? ஒரே ஒரு தடவதான? போனா கெடைக்க பைசால கொஞ்ச நாள கழிக்கலாம்லா?”  “நிறுத்துட்டி, என்ன கையாலாகாத்தவன்னு சொல்லுக என்னா? ஊர்ல எல்லாவனும் என்னப் பாத்து என்ன கேப்பான்? பிள்ளைய கோயிலுக்கு அனுப்பிப் பொழைக்கான்னு சொல்ல மாட்டானுவளா? அதுவும் பொம்பளப் புள்ளக்கிப் பதிலாட்டு. சீ.. ஊர்ல நா மொகங்காட்டி நடக்கது ஒனக்குக் கொள்ளலையா?” “இல்லத்தான், நீங்க எதுக்கு அப்பிடிலாம் யோசிக்கியோ? நம்ம மட்டுமா பண்ணுகோம்? எல்லாருந்தான் பிள்ளேல அனுப்புகா? கொஞ்சம் மனசிலாக்குங்கோப்பா. […]

எழுத்து

வீரத் திருமகன்கள் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 27.12.22

பீட்டும் (Pete) நானும் முதியவர் கில்லேக்ரூவின் வீட்டுக்கு வானொலி செய்திகளைக் கேட்கப் போவோம். இரவு உணவு முடிந்து இருட்டு விழுந்த பிறகு அவர் வீட்டு முன்னறை ஜன்னலுக்கு வெளியே நின்றுகொள்வோம். கில்லேக்ரூவின் மனைவிக்குக் காது கேட்காது என்பதால் வானொலியின் சத்தத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூட்டி வைப்பார். அதனால் அவர் மனைவிக்கு எவ்வளவு தெளிவாகக் கேட்குமோ அவ்வளவு தெளிவாக ஜன்னலுக்கு வெளியே நிற்கும் எங்களுக்கும் கேட்கும். “என்னது? ஜப்பானியர்களா? பேர்ல் ஹார்பர் என்றால் என்ன?” என்று இரவு […]

எழுத்து

வேங்கை வனம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.22

ஜுன், 2003.    கோடையின் கோரத் தாண்டவத்துக்குக் காடு பலியாகியிருந்தது. எங்கும் வறட்சி. பெயருக்குக்கூடப் பச்சையைப் பார்க்க முடியவில்லை. இலைகளின்றி வெறும் கூடுகளைப்போல் காய்ந்த கிளைகளும் சுள்ளிகளுமாய் நின்ற மரங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. சோர்வை விதைக்கும் சாம்பல் நிறத்தில் பரிதாபமாய் நின்றது காடு. மழையைக் கண்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ரந்தம்பூரின் தடாகங்கள் பலவும் நீரின்றிப் பாளம்பாளமாக வெடித்துக் கிடந்தன. கரையில் நின்ற புற்கள் காய்ந்து மடிந்தன. ஈரமற்ற நிலத்தில் எதுவும் நிலைக்கவில்லை. நூற்றுக்கணக்கான மான்கள் திரிந்திருக்கும் தடாகங்களில் […]

எழுத்து

வாரிசு அரசியல் ஏன் ஆபத்தானது?

சி.சரவணகார்த்திகேயன் · 27.12.22

(இக்கட்டுரையை ஒரு கட்சிக்கு எதிரான பரப்புரையாகவோ, ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை உத்தேசித்த‌ எதிர்ப்பாகவோ காணுதல் குறைபார்வை மட்டுமே. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் வாரிசு அரசியலைச் சிறிதும் பெரிதுமாக மேற்கொண்டுதான் வருகின்றன. அப்படியான‌ அனைத்துக் கட்சிகளையும் தலைவர்களையும் நோக்கிய ஒரு குரல்தான் இது. ஒருவேளை, உங்கள் கட்சியையோ தலைவர்களையோ இது குறிப்பதாகக் குத்தினால் நிச்சயம் உங்களுக்குமானதே!) * இந்திய அரசியலையும் வாரிசு அரசியலையும் பிரிக்கவே முடியாது. அரசியல் சாசனச் சட்டப்படி இந்தியாவில் நடப்பது […]

எழுத்து

மொழியாலானது இவ்வுலகம் அல்லது ‘விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி’

நம்பி கிருஷ்ணன் · 27.12.22

“சந்தேகத்திற்கு இடமின்றி இவை எல்லாம் மனதைக் குழப்பும் வேலைக்காகாத புதிர்மைகளே. இருப்பினும், வேலைக்காகாத புதிர்மைகளே இருப்பின் அடிப்படை மனநிலையாக இருக்கக்கூடுமோ என்று நாம் மீண்டும் மீண்டும் சந்தேகிக்கிறோம். எவரோ ஒருமுறை கூறியது போல் அல்லது கண்டிப்பாகக் கூறியிருக்க வேண்டியது போல், பதற்றம் என்பது இருப்பின் அடிப்படை மனநிலை.“ – விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி, டேவிட் மார்க்சன். இது விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகியைப் பற்றிய அறிமுகமல்ல. எனக்குத் தனிப்பட்ட முறையில் விட்கன்ஷ்டைனையோ அவரது ஆசைநாயகியையோ தெரியாது. ஏனெனில் விட்கன்ஷ்டைன் 1951இலேயே இறந்துவிட்டார் […]

எழுத்து

அரும்பு

கமல தேவி · 27.12.22

சாயங்கால வெயில் தணிந்திருந்தது. எங்கள் சுற்றுக்குள் உள்ள நான்கு வீடுகளிலும் மதிய உறக்கம் முடித்த அம்மாக்களின் நடமாட்டம் தொடங்கியது. நான்கு வீடுகள் சுற்றியிருக்க, வீடுகளுக்கு நடுவில் உள்ள சிமெண்ட் தளம் இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சிக்களம் அளவுக்கு மேல் இருக்கும். தெற்கு ஓரத்தில் பழைய கிணறு ஒன்று. அதன் முடிவில் கிழக்கு பார்த்த சுற்றுச்சுவரில் பெரிய இரும்புக் கதவுகளின் முன்னே வண்டி வந்து நின்றது. சனிக்கிழமை என்பதால் வங்கியிலிருந்து சீக்கிரமே அப்பா வந்துவிட்டார். நான் அவருக்குக் கை காட்டிவிட்டு […]

எழுத்து

சாத்தானின் வாரிசு – பால்சாக்

எஸ்.கயல் · 27.12.22

பாரீசின் புகழ்பெற்ற நாட்ரே டேம் தலைமைத் தேவாலயத்தின் மதகுரு ஒருவர் புனித பியர் ஆக்ஸ் பஃப் அருகே தன் சொந்த வீட்டில் வசித்தார். அவர் பாரீசுக்கு வந்தபோது உறையில்லா வாளைப் போல ஏதிலியாக வந்தார். வசீகரத் தோற்றமும் பொருள் வளமும் இருந்ததாலும் பலரது வேலையைத் தனி ஒருவராகத் தானே செய்ததாலும் நல்ல மதிப்பு பெற்று உயர்ந்தவர், அதிக உடலுழைப்பு தேவைப்படாத, பெண்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கும் பணியை ஏற்றார். துயரத்தில் இருந்தவர்களை அதிலிருந்து மென்மையாக விடுவித்தும் நோயுற்றவர்களுக்குத் தன் வசமிருந்த ஆறுதல் […]