Category: எழுத்து

எழுத்து

கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு

விக்னேஷ்வரி சுரேஷ் · 14.04.20

இன்றளவும் குழந்தைகளின் அக – புற உலகை கு.அழகிரிசாமி போல யதார்த்ததிலிருந்து நூலிழை கூட விலகாமல் யாரும் கதை எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அனேக இலக்கியத்தில் குழந்தைகள் என்றால், கடவுள்கள். மிச்சத்தில் அவை சாத்தான்கள். ஆனால், அழகிரிசாமி கதைகளில் மட்டும் அவை கவித்துவ வர்ணனைகளின் சுமையின்றி குழந்தைகளாகவே திரிகின்றன. என் பாலர் பள்ளி ஆசிரியை அனுபவத்தில், நம்மை விட கூடுதல் கருணை, ஈகோ, சாந்தம், குரோதம், மகிழ்ச்சி என்பதாக உணர்வென்னும் கோப்பை தளும்ப நடமாடும் குழந்தைகளைக் காண்கிறேன். […]

எழுத்து

ஃபயஸ் அகமது ஃபயஸ் கவிதைகள்

எஸ்.கயல் · 14.04.20

பேசு! ஏனெனில் உன்னிரு உதடுகள் சுதந்திரமாயுள்ளன. பேசு! உன் நாக்கு இன்னும் உன்னுடையதே. இந்த நிமிர்ந்த உடல் இன்னும் உன்னுடையது தான். உன் வாழ்க்கை இன்னும் உன்னுடையதே. கொல்லனின் சுடுகலனில் தழல் உயர்ந்தெழ இரும்பு சிவந்து ஒளிர பூட்டுகள் தங்கள் தாடையை அகலத் திறக்க, ஒவ்வொரு சங்கிலியும் எப்படி விடுதலையைத் தழுவுகிறது என்று பார். * அடர்வனத்துள் வசந்தத்தின் ரகசிய வருகையாக, பாலை மணற்துகளில் மென் தென்றலின் அடிச்சுவடுகளாக, நோய்மை ஒருவருக்கு எப்படியாகிலும் தரும் மன அமைதியைப் […]

எழுத்து

ஐ-பில்

மயிலன் ஜி சின்னப்பன் · 24.02.20

டாக்ஸிக்கான செயலியில் ஓட்டுநரின் அலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் வாகனம் வந்துவிடும் என்பது உப தகவல். தூரத்தில் தெரியும் சிவப்பு சிக்னல் வரை, தான் நிற்குமிடத்திலிருந்து நீண்டிருக்கும் கார்களும் பேருந்துகளும் அநாவசியமாக ஒலி பெருக்கிக்கொண்டிருந்தன. மனப்புழுக்கம் காதுகளை அடைத்திருந்ததால் பாரதியின் கவனத்தை அவை இம்மியளவும் கோரவில்லை. உடலில் ஆங்காங்கே இன்னதென்று வகைப்படுத்த முடியாத புதுப் புது தினவுகள். டிசம்பர் இரவிற்குப் பொருத்தமற்ற வெப்பம், ஆடை மறைத்திருக்கும் சருமப் பகுதிகளில் ஊர்ந்து கொண்டிருந்தது. சம்பந்தமேயில்லாமல் அவளுக்கு […]

எழுத்து

நல்லவனைக் காண்பது அரிது: A Good Man is Hard to Find – Flannery O’Connor

எஸ்.கயல் · 24.02.20

தன் ஒரே மகன் பெய்லியுடன் வாழ்ந்து வரும் பாட்டியம்மாளுக்கு ஊருக்குச் செல்ல விருப்பமே இல்லை. டென்னஸியில் இருக்கும் தனக்குத் தெரிந்த சிலரைச் சந்திக்கவே அவள் விரும்பினாள். பெய்லியின் மனதை மாற்றுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தாள். நாற்காலியின் நுனியில் அமர்ந்து மேசையின் மேலே செய்தித்தாளில் விளையாட்டுப் பகுதியை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே சென்று தன் இடுப்பின் மீது ஒரு கையை வைத்தபடி இன்னொரு கையில் வைத்திருந்த சுருட்டப்பட்டிருந்த செய்தித்தாளால் அவனுடைய வழுக்கைத் தலையின் மீது […]

எழுத்து

அன்னையிட்டத் தீ! – க. மோகனரங்கன்

க. மோகனரங்கன் · 24.02.20

ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான். பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் […]

எழுத்து

இவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி! – மானசீகன்

மானசீகன் · 24.02.20

பாரதிய ஜனதா பிடுங்குகிற எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிடுங்கியிருப்பது ஆணியல்ல. நெடுநாட்களாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த மிக நீண்ட துளையை! அதன் வழியாய் நடந்து வரப்போவது டயனோசராகக் கூட இருக்கலாம். யார் கண்டது? பாஜக இப்போது மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. முதல் தடவை வாஜ்பாய் ஆட்சி நடத்திய போது அது சர்க்கஸ் புலியாகத் தான் நடந்து கொண்டது. அவ்வப்போது உறுமும்‌. முறைத்துப் பார்க்கும். பிறகு மாட்டுக்கறிக்கும் சங்கிலிக்கும் கட்டுப்பட்டு […]

எழுத்து

உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் : ‘திருக்கார்த்தியல்’ – ராம் தங்கம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.20

குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப் பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என தமிழின் சிறுகதை முன்னோடிகள் பலரும் குழந்தைகளின் உலகை கதைகளில் எழுதிக் காட்டியுள்ளனர். அதிலும் கு.அழகிரிசாமியின் கதைகள் நமக்குக் காட்டும் சிறுவர்களின் உலகம் உயிர்ப்புமிக்கது. ‘உழைக்கும் சிறுவர்கள்’ தமிழ் இலக்கியத்துக்கு புதியவர்கள் இல்லை. தி.ஜாவின் ‘சிலிர்ப்பு’ கதையின் காமாட்சியையும், ‘சாப்பாடு போட்டு பத்து ரூபாய்’ கதையின் அக்கணாகுட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். இதன் தொடர்ச்சியாக அண்மையில் நம்பிக்கை […]

எழுத்து

தாமரைக்குள ஞாபகங்கள்

ப.தெய்வீகன் · 24.02.20

சிவபெருமான் வீட்டுச் சிக்கல் கயிலாயத்துக்கு போன வாரம் போய் வந்தது அருமையானதொரு அனுபவமாக அமைந்தது. சிவபெருமான் தனது வீட்டில் நிற்கவேணும் என்று போன தடவை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முறை இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். பயங்கர பிஸியான ஆளென்றாலும் வீட்டுச் சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது என்று உமாதேவி அக்காவை இருத்தி எழுப்புறார். “லண்டன் – கனடா பக்கமிருக்கிற பெண்ணியவாதிகள் இதையெல்லாம் கண்டால் உங்களை துலைச்சுப்போடுவினம் தெரியுமோ?” – என்று கேட்க அவர் […]

எழுத்து

ஆஸ்கார் 2020 : சில அவதானிப்புகள்

கோ.கமலக்கண்ணன் · 24.02.20

1985-ஆம் ஆண்டு ’அமேடியஸ்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. அதை மேடையில் அறிவித்த லாரன்ஸ் ஆலிவர் அவசரத்தில் நாமினிகளைக் குறிப்பிட மறந்து விட்டிருந்தார். ஒவ்வொரு பிரிவிலும் விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அப்பிரிவில் இருக்கும் பரிந்துரைகளைக் குறிப்பிட வேண்டுமென்பது ஆஸ்காரின் மரபு. அதைச் சொல்ல விட்டு விட்டோமே, சொல்லியாக வேண்டுமே என்ற புரிதலுக்குச் சென்று மீளும் முன்னரே அமேடியஸ் குழு முண்டியடித்து மேடைக்கு வந்துவிட்டிருந்தது. இதை ஒரு தனி நபரின் தடுமாற்றம் எனக் கொள்ளலாம். வெகு சமீபத்தில் […]

எழுத்து

கன்பூசியஸ் – டாக்டர் ஜீவானந்தம்

கோகுல் பிரசாத் · 24.02.20

கன்பூசியஸ் என்ற பெயர் கொங் புஷி என்பதன் லத்தீனிய வடிவம். சீனாவின் தலையாய ஆசிரியராகவும் ஞானத் தந்தையாகவும் அறியப்படுபவர். கிரீடமில்லா அரசன் எனப் புகழப்படுபவர். கன்பூசியஸ் செப்டம்பர் 28 ஆம் நாள் 551 கி.மு.வில் பிறந்தார். பதினைந்து வயதில் மனதைக் கல்வியிலும் அறிந்துகொள்ளலிலும் பதித்தார். முப்பது வயதில் அதன்படி நின்றார். நாற்பது வயதில் இரண்டகநிலை இல்லாமல் மனதைத் திடப்படுத்தினார். ஐம்பது வயதில் வானுலகின் கட்டளையை அறிந்துகொண்டதாகச் சொன்னார். அறுபது வயதில் அதன் பொருட்டு  காதைப் பொருந்தச் செய்தார். […]

எழுத்து

கோ யுன் கவிதைகள் – தமிழில்: வே.நி. சூர்யா

கோகுல் பிரசாத் · 24.02.20

இவர் தென் கொரியாவின் முன்னணி கவிஞர். முன்னாள் பெளத்த துறவி. ஆசிய நிலக்காட்சிகள், பெளத்தம், கொரிய யுத்தத்தின் எதிரொலிகள் போன்றவற்றால் ஆனது இவருடைய கவியுலகம். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் அவருடைய “First Person Sorrowful” மற்றும் “What?: 108 Zen Poems” ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. பனிப்பொழிவு ஓராயிரம் வருடங்களுக்கு முன்பு நான் நீயாக இருந்தேன். ஓராயிரம் வருடங்களுக்குப் பின்பு நீ நானாக இருப்பாய். எல்லா காதுகளாலும் நாம் கேட்டுக் […]

எழுத்து

தேவியின் தேசம் – சா. ராம்குமார்

கோகுல் பிரசாத் · 24.02.20

அமெரிக்கா என்ற தேசத்தைப் பார்க்க விரும்பாத பிற தேசத்தவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. எப்படியாவது அங்கு சென்று வாழ்க்கையைத் தொடங்கிவிட வேண்டும் என்று ஏங்கும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்காவின் நாசாவில், அமெரிக்காவிலேயே இப்படியாக நடக்குது, அமெரிக்கா என்ன அமெரிக்கா என்று அவரவர் அளவில் ஒரு குறைந்தபட்ச தரத்தை நிர்ணயப்பதைப் பார்த்திருக்கிறேன். மேலும் 80-90களில் பிறந்து இன்று வாழ்பவர்களுக்கு அமெரிக்கா, காட்சி ஊடகமாக மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தொலைக்காட்சி தொடர்கள், ஹாலிவுட் செட்டுக்கு […]