Category: எழுத்து
எழுத்து
கோகுல் பிரசாத் · 24.01.20
நினைவு ஒரு சந்திப்பு மறதி ஒரு விடுதலை * சூரியன் அலைவது நாட்களாய் ஆனது நாட்களை அளக்க கடிகாரம் வந்தது ஓடும் வாழ்வில் மீண்டும் நாம் அதே நாளில் – அதே இடத்தில் சந்தித்தல் இயலுமோ? * வாழ்வின் நீதியில் நான் நம்பிக்கை இழக்கவில்லை. மென்துகில் மஞ்சத்தில் துயில்பவன் கனவும் கட்டாந்தரையில் கைவைத்துக் கிடந்தவன் கனவும் ஒன்றுபோலவே அழகானதாகவே இருக்கிறது. * மனிதனின் கற்பனைக்கும் அவனது சாதனைக்குமிடையே ஓர் இடைவெளி உண்டு. அவனது வேட்கையே அதை நிறைவு […]
எழுத்து
தபசி · 24.01.20
சிறுபிள்ளை விளையாட்டு மரம் ஏறும் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ‘கீழே இறங்கி வாடா’ என்பாள் அக்கா நான் கேட்க மாட்டேன் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுவாள் நானோ கிளை மேல் உட்கார்ந்து கொண்டு பழிப்பு காட்டுவேன். கல் எடுத்து விட்டெறிவாள் சாதுர்யமாக தப்பித்துக் கொள்வேன் ஆத்திரம் தாளாமல் பூமியை உதைப்பாள் அழுவாள் கெஞ்சுவாள் நானும் கீழே இறங்குவது போல் இறங்கி திரும்பவும் மேலே ஏறிக் கொள்வேன் மிகவும் சுவாரசியமான விளையாட்டு அது கடைசி வரை […]
எழுத்து
கோகுல் பிரசாத் · 24.01.20
பெருந்தேவியின் “பெண் மனசு ஆழம் என 99.99 சதவீத ஆண்கள் கருதுகிறார்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து. சமூகத்தின் அசைவுகளுக்கிடையில் உந்தப்படும் மனிதன் அந்தப் பாடுகளை எழுதிவிடுதல் என்பது இன்று நேற்றல்ல, காலங்காலமாக தொடரும் ஒரு நிகழ்வு தான். மனித வாழ்வின் போக்குகளை மாற்றியமைத்த ஒவ்வொரு சம்பவங்களின் முன்னும் பின்னுமாக புதிய ஒழுங்குகளும் ஒழுங்கமைவின்மைகளும் நிகழ்ந்தேறியிருந்தன. அதையே இலக்கியங்களும் பிரதிபலித்தன. அவற்றில் சில கலையாகின. சில பிரச்சாரங்களாயின. இன்னும் சில தங்களுக்கான இடங்களைக் கோரி கூவி அழைத்துக் கொண்டே இருக்கின்றன. நவீனத்தின் பின்னான ஊடுபாய்ச்சலில் […]
எழுத்து
சு. வேணுகோபால் · 27.12.19
ஐந்து வருடங்களில் ஏழு வீடு மாறிய பின்தான் சொந்தமாக வீடு வாங்கியே தீர வேண்டும் என்று நடத்திக்காட்டி விட்டாள் செண்பகம். எஞ்சினியர்கள் கட்டிக் கட்டி விற்கும் வீடுகளில் ஒன்று தான் இது. செண்பகமும் குடியிருக்கும் வீட்டில் அது குறை இது குறை என்று கசப்பை வளர்த்துத் தான் வெளியேறுவாள். சாத்தூருக்கும் கோவைக்கும் ஏழுமணி நேரப் பயணம். வர ஒரு நாள். போக ஒரு நாள். புதுமனை புகுவிழாவிற்கு ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியதாகி விட்டது. புது […]
எழுத்து
ப.தெய்வீகன் · 27.12.19
1 மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகாலமாக அந்தக் கோயில் அங்குள்ளது. நவாலி வேலக்கை பிள்ளையார் கோவில் கொடியேறும் காலப் பகுதியில் அந்தக் கோயிலுக்கு காவடி எடுக்க நேர்த்தி வைப்பவர்களை இந்தக் காளி கோவிலுக்கு அழைத்து வந்து இங்கு தான் முள்ளு குத்துவார்கள். பின்னர் அவர்களை ஆடி ஆடி சங்கரப்பிள்ளை வீதிக்கு அழைத்துச் சென்று […]
எழுத்து
கோகுல் பிரசாத் · 27.12.19
ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது […]
எழுத்து
ஸ்ரீதர் நாராயணன் · 27.12.19
அந்த ஞாயிற்றுக் கிழமையை அப்படியே தொந்தரவு செய்யாமல், அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் எனத் தான் சரிதா விரும்பினாள். வாரயிறுதி நாட்களில் பொழுது போக்குவது சற்று சிரமமாகத் தான் இருந்தது. கல்லூரிக் காலங்களிலும், புதிய இடங்களில் அவள் பெரும்பாலும் தனி ஆளாகத் தான் இருந்திருக்கிறாள். ஆனால், இவ்வளவு தூரம் தனிமையை உணர்ந்ததில்லை. தற்போதைய வேலையா அல்லது இந்த மனநிலையா என்று தெரியவில்லை. கடந்த ஆறு மாத காலமாக அவளை எந்த விஷயத்திலும் நாட்டம் காட்ட விடாத ஒரு […]
எழுத்து
போகன் சங்கர் · 27.12.19
சமீபத்தில் சிற்பி தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை‘ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அறுபதுகளில் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. தமிழ் வெளியில் முதன்முதலாக ஓவியம், சிற்பம் போன்றவற்றில் ஈடுபடுகின்ற நுண்கலைஞர்களின் வாழ்க்கை குறித்தான திறப்பு என்று சொல்லலாம். காலச்சுவடு தற்போது இதை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, கலைஞர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கை உடையவர்கள் அல்லது மனநிலை சிதறியவர்கள் என்பது போன்ற மனப்பதிவு நம்மிடம் உண்டு. தனபாலின் சுயசரிதையைப் படிக்கும் போது இந்த மனப்பதிவிற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்குக் […]
எழுத்து
அழகேச பாண்டியன் · 27.12.19
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடெங்கும் நடக்கும் போராட்டங்களின் தாக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த போதும், சில குறிப்பிடத்தக்க மாறுதல்களை உருவாக்கி இருக்கின்றன. திரில்லர் திரைப்படம் ஒன்றின் இறுதிக் காட்சியில் முடிச்சுகள் விறுவிறுவென அவிழ்வதைப் போலவும், அவிழ்ந்து கொண்டிருக்கும் போதே பார்வையாளன் தான் இருக்கும் அறை விஷ வாயுவால் நிரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்டு, வெளிக்காற்றை சுவாசிப்பதற்கு ஒப்பான பீதியும், நிம்மதியும் ஒன்றாய்க் கலந்த உணர்வு. […]
எழுத்து
எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.19
சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. சென்ற பகுதி தூயனின் கதைகளைப் பற்றி அமைந்திருந்தது. ‘ஒளிர் நிழல்’ நாவலின் வழியாக தமிழ்ச் சூழலில் கவனம் பெற்ற சுரேஷ் பிரதீப் தொடர்ந்து ஊக்கத்துடனும் தெளிவுடனும் எழுதி வரும் இளம் எழுத்தாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அவரது சிறுகதைகளைக் குறித்தது இந்த இரண்டாம் பகுதி. பதினைந்து கதைகளைக் கொண்ட […]
எழுத்து
கோ.கமலக்கண்ணன் · 27.12.19
1999-இல் Rosetta படத்திற்காகவும் 2005-இல் The Child திரைப்படத்திற்காகவும் இருமுறை தங்கப்பனை விருது பெற்றிருக்கும் பெல்ஜியத்தின் இரட்டை இயக்குநர்களான டார்டன் சகோதரர்கள் (Jean-Pierre Dardenne, Luc Dardenne) தங்களது தனித்துவமான யதார்த்த திரைக்கதைகள் மூலம் தொடர்ந்து உலக அரங்கில் சினிமா ஆர்வலர்களின் அங்கீகாரத்தினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். பெரும்பாலான திரைக்கதைகள் தனிமையில் நிர்கதியில் உழலும் சின்ன மனங்களின் தவிப்பையும் ஆற்றாமையையுமே பேசு பொருட்களாகக் கொண்டிருக்கின்றன. கூடியிருப்பினும் வாழ்க்கையின் பிரம்மாண்டத்தின் முன் மனித சிற்றினம் வீழ்ச்சிக்குரியதே. எனினும் தனித்திருக்கும் […]
எழுத்து
சுரேஷ் பிரதீப் · 27.12.19
தமிழில் குழந்தைப் பேறின்மை சிக்கலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுகள் பல உள்ளன. குள்ளச்சித்தன் சரித்திரம் மற்றும் மாதொருபாகன் சமீபத்திய உதாரணங்கள். இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கக் கூடிய நாவல்கள். குள்ளச்சித்தன் நேர்கோடற்ற தன்மை கொண்ட நாவல். மாதொருபாகன் ஒரு யதார்த்தவாத நாவல். ஆனால் இரண்டு நாவலும் ‘பரிகாரம்’ என்ற ஒரு புள்ளியில் இணைகின்றன. குழந்தைப் பேறின்மைக்கு மருத்துவரீதியாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் நம்முடைய மனம் இந்த புறவயக் காரணங்களால் திருப்தியுறுவதில்லை. குழந்தைப் பேறினை ஒரு […]