1
மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகால
எனக்கு பத்து வயதாக இருக்கும் போது இந்தக் காளி கோவிலில் தான் முதல் தடவையாக காவடிக்கு முள்ளுக் குத்துவதைப் பார்த்தேன். அன்றைய தினம் வேலக்கைப் பிள்ளையார் கோவில் தேர் என்று ஞாபகம். மதியம் தாண்டி காவடிக்காரர்கள் அனைவரையும் காளி கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். முள்ளுக் குத்துவதை பார்ப்பதற்காக ஆவலோடு ஐஸ்கிறீமை சூப்பிக் கொண்டு காவடிக்காரர்
வேலக்கை பிள்ளையார் கோவில் தேருக்கு விசேட
குட்டித்தம்பியைத் தான் முதலாவது ஆளாக அழைத்து வந்தார்கள்.
குட்டித்தம்பியைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. வேலக்கை பிள்ளையார் கோவில் உள்வீதியில் சாமி வலம்வரும் போது குடை பிடிக்கும் எனக்கு கை வலித்தால் உடனடியாக என்னை மாற்றி விடுவது குட்டித்தம்பி தான். அண்ணன் மாதிரி. என்னுடன் நல்ல நெருக்கம். மேவி இழுத்த தலைமுடி. கோயில் பிரகாரத்தில் அவன் மேலாடை இல்லாமல் திரியும் போது எவரையும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் அழகு. புடைத்த புஜங்கள் கை நரம்புகள் வெளித்தள்ளியிருக்கும். அவனைப் பார்த்து நானும் மேலாடை இல்லாமல் வீட்டில் கண்ணாடிக்கு முன்பாக நின்று கையை அழுத்தி நன்றாக மடக்கிப் பார்ப்பேன். நரம்புகள் தெரிவதே இல்லை. கிள்ளிப் பார்ப்பேன். அப்போதும் தெரியாது. அவனது சிவந்த உடம்பில் நரம்புகள் நதிபோல கிளை பரப்பியோடிக் கிடக்கும்.
குட்டித்தம்பியை முதலாவதாகக் கொண்டு வந்து குப்புற கிடத்தினார்கள். முதுகில் விபூதி அடித்தார்கள். பெரிய கூரான கொழுக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு தாடி வைத்த மதவடிச் சாமியார் குட்டித்தம்பிக்கு அருகாக வந்தார். தனது இரண்டு கால்களுக்கும் இடையில் குட்டித்தம்பியை குப்புற வைத்துக் கொண்டு தனது முடியை சிலுப்பினார். மதவடிச்சாமியார் அநேக
மதவடிச்சாமியார் மிகக் கொடூரமானதொரு பார்வையுடன் காளி கோவிலின் மூல ஸ்தானத்தை பார்த்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே விரித்து வைத்துக்
எனக்கோ காற்சட்டையோடு மூத்திரம் போகப் போகிறது என்பது முக்காற்கட்டம் உறுதியாகி விட்டது. அப்போது மேலே கையை தூக்கிக் கும்பிட்டுக் கொண்டிருந்த மதவடிச்சாமியார் பளார் என்று அப்பிடியே தேங்காய் விழுந்த வேகத்தில் கீழே குனிந்து குட்டித்தம்பியின் முதுகுச் சதையை கொத்தாகப் பிடித்தார். ஒரு கையில் கூரான கொழுக்கியோடு மறுகையால் சதையை இழுத்து இழுத்து பதம் பார்த்தார். கொழுக்கி மினுங்கியபடியிருந்தது. அடுத்த கணம் அது குட்டித்தம்பியின் சதையைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து வெளியே வரப்போகிறது என்பதை என்னை அறியாமலேயே எனது முகம் முன்னுக்குத் தள்ளி பார்த்துக் கொண்டிருந்தது. எனது காதுகள் சூடாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். கண்கள் இருட்டிக்
சங்கரப்பிள்ளை வீதியிலுள்ள கடையின் முன் சீமேந்து கட்டில் எனக்கு நினைவு தெளிந்து எழுந்த போது அப்பா கையில் ஐஸ்கிறீம் ஒன்றுடன் எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்.
“காவடி எங்க” என்று கேட்ட போது ஐஸ்கிறீமை கையில் தந்து –
“நாங்கள் வீட்ட போவம்” – என்றார் அப்பா.
எனக்கு காற்சட்டையெல்லாம் ஈரமாகக் கிடந்தது.
வீட்டுக்குப் போன போது நான்தான் காவடி எடுத்து விட்டு வருவது போல அம்மா ஓடி வந்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். பக்கத்திலுள்ள வைரவர் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய் திருநீறு பூசி விட்டார்.
குட்டித்தம்பிக்கு முதலாவது முள்ளுக்குத்தும் போதே நான் அங்கு நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு இராஜேஸ்வரி அக்காவின் கற்பூரச்சட்டிக்கு மேல் மயங்கி விழுந்து எல்லோரும் என்னை வெளியில் தூக்கிக்
அது எனக்குப் பெரும் கிலுசை கேடாகப் போனது மாத்திரமல்லாமல் முள்ளுக்குத்துவதை பார்ப்பதற்கு கனநாட்களாக நான் காத்திருந்தது கூட வீணாகி விட்டது என்ற ஏமாற்றத்தைத் தந்தது. அன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே போவதற்கே வெட்க
அடுத்த நாள் தீர்த்தத் திருவிழா நடந்து கொண்டிருந்த போது நான் கோவில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் குட்டித்தம்பியை தேடித் திரிந்தேன். கடைசியாக சாமியை கோயில் கேணிக்குள்ளிருந்து வெளியில் தூக்கிக் கொண்டு வரும் போது வேட்டியை மடித்துக் கட்டியபடி மற்றவர்
தீர்த்தம் முடிந்து நாலாவது நாள் ஒரு மாலை நேரம் அப்பாவுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது சங்கரப்பிள்ளை வீதியின் இருமருங்கிலும் இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தார்கள். கடைகளில் நின்ற சனம் கடை வாசலில் தொடங்கிக் கொண்டிருந்த வாழைக்குலை
குட்டித்தம்பியின் முகத்தில் எந்தப் பரபரப்பையும் காணவில்லை. என்னையும் அப்பாவையும் எதிரில் பார்த்தவுடன் குட்டித்தம்பி சாதுவாக புன்னகைக்க எத்தனித்
அடி வயிற்றில் எதோ செய்தது. குட்டித்தம்பியை ஏன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? எத்தனையோ கேள்விகள் மனதிற்குள் உரு ஆடியது. தலை கடித்தது. குட்டித்தம்பிக்கு மதவடிச்சாமியார் முள்ளுக்குத்தும் போது ஏற்பட்ட அதே பயம் மீண்டும் எனக்குள் வந்து நின்றாடியது. ஆனால் அப்பா கூடவே இருந்தது ஒருவித தெம்பைத் தந்தது. அந்தக் கொடூர
அடுத்த நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தபோது குட்டித்தம்பியை இராணுவத்தினர் விடுதலை செய்து விட்டார்கள் என்ற செய்தியை அம்மா சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. நானே விடுதலையானது போன்ற திருப்தி கிடைத்தது.
அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்காவது நாள் மானிப்பாய் மாத்திரமல்லாமல் பக்கத்து ஊர்களும் களேபர
“மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள ஆர்மி செக் பொய்ண்டில் நிற்கிற ஆர்மிக்காரியைக் கூட்டிக்
எனக்கு மேளமும் மணிகளும் ஆரோகணித்துக் கொண்டு போகின்ற சத்தம் மண்டைக்குள் கேட்டது. கண்கள் சாதுவாக இருட்டிக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடத்துக்கு சீருடை அணிந்து கொண்டிருந்த நான் அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன்.
அன்று மாலை மதவடிச்சாமியார் தொடக்கம் குட்டித்தம்பியின் குடும்பத்தினர் அனை
மானிப்பாய் மாத்திரமன்றி அருகிலுள்ள நகரங்களும் இராணுவத்தினரின் தேடுதலுக்கு உள்ளானது. வேலிகளை வெட்டிக் கொண்டு பெருந்தொகையான இராணுவத்தினர் எல்லா வீடுகளுக்கும் நுழைந்து குட்டித்தம்பியைப் பற்றி விசாரித்தனர். குட்டித்தம்பியின் தூரத்து சொந்தக்காரர்களும் சுற்றி வளைக்கப்
கைது செய்யப்
தங்களில் கை வைத்தவர்
இப்போது ஊரே தேடித் திரிந்து ஒருவாறு குட்டித்தம்பியைப் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அச்சத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டு திரிந்தது. பொழுது மங்கும் நேரத்தில் யார் வீட்டுக்கு முன்னால் வந்து இராணுவத்தின் வாகனம் நிற்கும் என்று தெரியாதளவுக்கு நகரின் பெருந்தெருக்கள் முதல் குச்சொழுங்கைகள் வரை அனைத்தும் கலக்கத்திலிருந்தன. குட்டித்தம்பியின் நண்பர்கள் உறவினர்கள் உட்பட கோயில் ஐயர் கூட முகாமுக்கு விசாரணைக்காக அழைக்கப்
ஆனால் எனக்கு மாத்திரம் குட்டித்தம்பி செய்த காரியத்தில் ஊராரும் இராணுவமும் சிந்திப்பது போன்று எந்தப் பயமும் இல்லாமல் அவன் மீது மிகப்பெரிய மதிப்பும் பொறாமையும் அன்பும் கரைபுரண்டு ஓடியது. எனக்குத் தெரிய குட்டித்தம்பியை கோயிலுக்குள் குறைந்தது ஐந்தாறு அக்காமார் கண்களாலேயே காதலித்துக் கொண்டு திரிந்தார்கள். கேணியடி, வைரவர் கோவில், இலுப்பமரம், மடப்பள்ளி கிணற்றடி என்று பல இடங்
அப்படிப்பட்ட குட்டித்தம்பி எல்லோரையும் தவிர்த்து விட்டு ஒரு ஆர்மிக்கார பொம்பிளையை கூட்டிக் கொண்டு ஓடியிருக்
ஊரே குட்டித்தம்பியைத் தேடிக்
இரண்டு வாரங்களாக எந்தத் தகவலும் இல்லாமல் குட்டித்தம்பி ஓடிப்போன கதை கொஞ்சம் கொஞ்ச
ஒருநாள் பாடசாலை விட்டு வரும்போது வழியிலுள்ள விளாத்திக்குளத்துக்கு அருகாமை
அங்கு கூட்ட
குட்டித்தம்பியின் சடலம் குப்புறக் கிடந்தது. கண்கள் திறந்தபடி முகம் இடப்பக்கம் திரும்பியிருந்தது. மேற்சட்டை இல்லை. காவடி எடுத்த போது குத்திய முள்ளுக்காயங்கள் அப்படியே இருந்தன. அதைத் தவிர உடம்பில் வேறு எந்தக் காயங்களையும் காணவில்லை. சடலத்தை இலையான் மொய்த்தபடியிருந்தது. கழுத்துப் பக்கம் வீங்கி பொங்கி பொக்களம் போலிருந்தது. சடலத்தின் கால்வாசிப் பகுதி பற்றைக்குள் மறைந்து கிடந்தது. கைகளில் ஒன்று உடம்புக்கு கீழேயும் மற்றையது தலைக்கு கீழேயும் நசிந்தபடி கிடந்தது.
குட்டித்தம்பியின் தாயார் அப்போது தான் மதவடிச்சாமியோருடன் குழறிக் கொண்டு குளத்தடியை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார். அவர்களுக்குப் பின்னால் அப்பாவும் சைக்கிளை கரையில் நிறுத்தி விட்டு வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. நான் பயத்தில் அப்பாவை நோக்கி ஓடினேன். எனக்கு பக்கத்தில் நின்றவர்கள் குட்டித்தம்பியின் தாயை நோக்கி –
“சொர்ணமக்கா……” – என்று கத்திக்
“என்ர அப்பு………….” – என்று குழறியபடி குட்டித்தம்பியின் தாயார் ஓடிவந்து பற்றைக்குள் விழுந்து குழறியழத் தொடங்கினார். மதவடிச்சாமியாரும் உரத்த குரலெடுத்து ஒப்பாரியிட்டார்.
அப்பா ஓடி வந்து எனது கைகளைப் பிடித்துக் கொண்டு வேகமாக சைக்கிளை நோக்கி நடந்தார்.
“பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டுக்கு நேரா வரவேணும்” – என்று மெதுவாக தழதழத்த குரலில் எனது காதுகளில் குனிந்து சொல்லியபடி என்னை வேகமாக சைக்கிளடிக்கு அழைத்துச் சென்றார். நான் கையை அப்பாவிடம் கொடுத்து விட்டு பின்னுக்குத் திரும்பி குட்டித்தம்பியின் சடலம் கிடந்த இடத்தையே பார்த்தபடி போய்க் கொண்டிருந்தேன். அப்பாவின் சைக்கிள் லோட்டன் வீதியை தாண்டும் போது பெருந்தொகையான ஆர்மிக்காரர்கள் வீதியின் இருமருங்கிலும் நடந்து போய்க் கொண்டிருக்க நடுவில் பெரிய இராணுவ வாகனம் ஒன்று மிக மெதுவாக அவர்

2
கொழும்பு வெள்ளவத்தை விகாரை வீதிக்கு அருகாமையிலிருந்த அடுக்குமாடி ஹோட்டலில் வைத்து அன்று மதியம் என்னைக் கைது செய்தார்கள்.
“பொலிஸ் பதிவு இல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தது குற்றம்” – என்று காக்கியில் வந்திருந்த ஐவரில் ஒருவர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னிடம் கூறினார். அதை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஓரளவுக்கு புரிந்து கொண்டேன். தங்களுடன் பொலீஸ் நிலையத்துக்கு வருமாறு அவர்கள் கூறி முடிக்கும் முன்னரே – அதுவரை எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்த – அம்மா குழறத் தொடங்கினார். எனக்கு உள்ளுக்குள் பயமிருந்தாலும் இயன்றளவு வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேற்றுடையை அணிந்து கொண்டேன். கைது செய்ய வந்த ஐவரோடும் ஹோட்டலின் வாசலை நோக்கிச் சென்றேன்.
வியர்த்து வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்டேன். ஐந்து காக்கியுடனும் நான் முன்னே நடக்க அன்று காலை எனக்காக வாங்கி வந்த இட்லிப் பொதியையும் எடுத்துக் கொண்டு அம்மா எனக்குப் பின்னாலேயே ஓட்டமும் நடையு
என்னை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துப் போவதாக வாசலில் நின்று கொண்டிருந்த ஹோட்டல் மனேஜரிடம் சொன்னார்கள்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது மங்களா பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாக இரண்டு இளைஞர்கள் – என் வயதொத்த தோற்றத்தவர்கள் – எமக்கு எதிராக வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து காக்கிகள் சமேதராக – நடுவில் – நான் வந்து கொண்டிருந்த கோலம் என்ன பதற்றத்தை ஏற்படுத்தியதோ தெரிய
அவர்கள் நடந்து வந்த விதமும் பொலீஸைக் கண்டதும் உடனடியாக தப்பியோட முடியாமல் குந்தியிருந்து செருப்பைத் தைக்கக் கொடுத்த வேகமும் அவர்
நேரே போய் தோளில் தட்டி மூவரையும் எழுப்பி “பொலீஸ் பதிவு இருக்கிறதா” என்று கேட்டார்கள்.
இப்போது என்னோடு நடப்பதற்கு மேலும் இருவர் துணை.
பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்ததும் ‘பெல்ட்’ முதல் சகல தஸ்தாவேஜூக்களையும் களைந்து ஒரு லாச்சியில் போட்டு வைத்தார்கள். வெள்ளவத்தை மக்கள் எல்லோரும் ஒன்றாக ‘ஆய்’ போய் விட்டு கழுவாமல் விட்ட மலசலக்கூடம் ஒன்று எப்படி நாறுமோ அப்படியொரு கழிவறையுடன் கூடிய கூண்டு. அதற்குள் போயிருக்கச் சொன்னார்கள். ‘பெல்ட்’ இல்லாத பாண்ட்ஸ்’ பயங்கர லூஸாகக் கிடந்தது. ஒருகையால் மூக்கையும் மறுகையால் பாண்ட்ஸையும் இழுத்துக் கொண்டு அந்தக் கூண்டின் ஒரு மூலையில் போய் நின்று கொண்டேன்.
இரண்டு மூன்று மணிநேரத்தில் கூண்டைத் திறந்து என்னை விசாரணைக்கென்று கூறி அழைத்துச் சென்ற காக்கி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் பின்பாக உள்ள அலுவலகத்துக்குள் கொண்டு போய் இருத்தினார்.
அங்கு என்னை விசாரிப்பதற்கென்று சிவில் உடையில் பேப்பருடன் ஒருவர் காத்திருந்தார். அந்த உருவம் என்னைப் பார்த்து ‘வணக்கம்’ சொன்னவுடன் அதுவரை பொத்திவைத்திருந்த பயம் அனைத்தும் நெஞ்சுக்குள் ‘குபீர்’ என்று பாய்ந்தது. அந்தக் காலப்பகுதியில் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் நிலைகொண்டிருந்த தமிழ் அதிகாரி ஒருவன் தமிழ் இளைஞர்
அவருக்கு பக்கத்தில் சீருடையில் ஒரு பெண் நான் சொல்வதை தட்டச்சு செய்வதற்கு ஆயத்த
அவளது உருவம் நிச்சய
சட்டென்று நினைவு
பிறகு அவர் –
“சரி. அஞ்சு இயக்கப்பாட்டு சொல்லு” – என்றார்.
“இயக்கப்பாட்டு……..” – என்று இழுக்க –
“டேய்! அங்க அவங்கள் போடுறது இஞ்ச கேக்குது. என்ன நடிக்கிறாய். சொல்லு…..ம்”
“இந்த மண் எங்களின் சொந்த மண்”
“ம்”
“எதிரி
“ம்ஹ்ம்…”
“கடலதை நாங்கள் வெல்லுவோம்”
“வேற”
“குயிலே பாடு” – என்று ஒருவாறு அவன் கேட்ட அஞ்சுக்கு கூடாமலும் குறையாமலும் சொல்லி முடித்தேன். ஆனால், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” – என்ற மாதிரியான – அவனை சினப்
திரும்பவும் கூண்டில் கொண்டு வந்து அடைத்து விட்டு அடுத்தவனை அழைத்துச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் அவள் எனது கூண்டைத் தாண்டிப் போவதைக் கண்டேன். அலுவலகத்திலிருந்த லாச்சியை திறந்து ஏதோ ஒரு கோப்பை எடுத்துப்பார்த்து விட்டு அந்தக் கோப்பின் இரண்டு மட்டை
அன்று மாலைக்கிடையில் எனது உறவினர்கள் ஏதேதோ எல்லாம் செய்ய என்னை விடுதலை செய்ய பொலிஸ் இணங்கி விட்டதாக அறிந்தேன். மாலை ஆறரை ஏழு மணியிருக்கும். என்னை கூண்டுக்குள்ளிருந்து வெளியில் அழைத்து வந்து விடுவிப்பதாக கூறினார்கள்.
பொலீஸ் நிலையத்துக்கு வெளியே அழுது கொண்டு நின்ற அம்மா நான் வெளியே போனவுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டார். நான் அம்மாவை அணைத்தபடி பொலீஸ் நிலையத்தை திரும்பிப் பார்த்தேன். அவள் உள் ஜன்னலடியில் நின்று
3
“உனக்கு எத்தனை தடவை இந்த வாகனத்தில் இஞ்ச வர வேண்டாம் என்று சொல்லியிருக்
கோபமாக கேட்டு முடிக்கும் முன்னரே வாசலில் நின்று கொண்டிருந்த எனது ரீசேர்ட் கொலர் இரண்டையும் ஒரு கையினால் கொத்தாகப் பிடித்து இழுத்து வைத்து முத்தமிட்டாள். அதன்பிறகு எனது கொலரிலேயே தனது உதடு
எனக்கோ பரபரப்பு தீராமல் வாசலில் நின்ற பொலீஸ் வாகனத்தை எட்டிப் பார்த்தேன். கீழ் வீட்டிலிருக்கும் ஜயரட்ணவின் நான்கு வயது பெடியன் வாகனத்தின் டயரில் கையில் தடியொன்றை வைத்து ஏதோ கீறி விளையாடிக் கொண்டிருந்
மழை சாதுவாக பெய்து ஓய்ந்திருந்தது. வெளியில் வாகனப் போக்குவரத்து சத்தம் அப்படியே தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது. மொட்டை மாடியில் குளிர்காற்று நன்றாகவே அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
அவளது முடி காற்றுக்கு ஏற்றவாறு முகத்துக்கு முன்பாக வந்து கும்மியடிக்க அதை அவள் கற்றையாக எடுத்து மேலே விட்டபடி எனது முகத்தையே பார்த்துக் கொண்டு வாசலில் சப்பாத்துக்
“இதெல்லாம் பொலீஸ் நிலையத்துக்குள்ளேயே வைத்து சைட் அடிப்பதற்கு முதல் யோசித்திருக்க வேணும். அதுவும் பக்கத்தில ஒரு மகா என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டை வைத்துக் கொண்டு சைட் அடிக்கும் போது இன்னும் தெளிவாக யோசிச்சிருக்க வேணும். இல்லாட்டிக் கூட பரவாயில்லை. மயூராபதி அம்மன் கோவிலில வச்சு சார் பிறகு எதுக்கு லவ் பண்ண கேட்டீங்களாம்”
திரும்பவும் அருகில் வந்து உதடு
“ஜெயா நான்காவது தடவையாக அந்த பொலிஸ் இன்ரலிஜன்ட்காரன் என்னட்ட வந்து பேசியிருக்
சாதுவான சினத்தோடு நான் கேட்டு முடிக்கும் முன்னரே –
“டேய் சிறிலங்கா பொலீஸில காதலிக்கிறது ஒண்டும் தேசத் துரோகமில்லை. அங்க இருக்கிற அத்தனை பேரும் லவ்-மரேஜ் தான். அவளவை அங்க இருக்கிற பொலீஸ லவ் பண்ணி கட்டுறாளவை. நான் பொலீஸ் பிடிச்சுக் கொண்டு வந்தவனை லவ் – பண்ணி கட்டப் போறன். அவ்வளவு தான். நீ ஒண்டுக்கும் பயந்து சாகாதை. எத்தனையோ தரம் சொல்லீட்டன். எங்கட வீட்டில எங்கட விஷயம் தெரியும். நீ உன்ர வீட்டில் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி ஆக வேண்டியதைப் பார்”
எனக்கு எந்தச் சமாதானமும் மனதுக்கு ஒத்துவர
“சிங்களத்திய கட்டப்போறியா எண்டு உன்ர அம்மா கத்துறதுக்கு முதல் வெள்ளவத்தை பொலீஸ்காரியம்மா நல்லா தமிழ் கதைப்பாள் என்று முதலே சொல்லிப் போடடா” –
தேனீர் போடுகின்ற கரண்டியை ஆட்டிக் கொண்டே குறும்பாகச் சிரித்தாள். அந்த உதடுகள் பேசிய உபநிடதம் நெஞ்சுக்குள் உற்சவம் செய்தது.
அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு ஜெயாவுடன் சென்று யூ.எஸ். ஹோட்டலில் இருவரும் தங்கினோம். லீவு எடுத்துக் கொண்டு என்னுடன் பயங்கர சந்தோசத்துடன் வந்திருந்தாள். நான் வீட்டுக்கு எந்தத் தகவலும் கொடுக்க
அன்று புதன்கிழமை மாலை அவளைச் சேலையில் தயாராகும்படி கூறியிருந்தேன்.
அரை மணிநேரத்தில் அலங்காரச் சிலை போல வந்து நின்றாள்.
“பூவெல்லாம் வைத்து கற்பூரச்சட்டி ஒன்றையும் எடுத்துக் கொண்டு வரவா” – என்றாள்.
அப்போது தான் பொறி தட்டியது.
வீட்டுக்குப் போவதற்கு முன்னர் மானிப்பாய் காளி கோவிலடிக்கு போய் கும்பிட்டு விட்டுப் போகலாம் என்று வாடகைக்கு எடுத்த வாகனத்தை நேரே காளி கோவிலடிக்கு விட்டேன். அவள் மிகுந்த மகிழ்ச்சியில் கார் ஜன்னல் கண்ணாடியை சற்று கீழே இறக்கி விட்டு உள்ளே வந்த காற்றில் முடியைப் பறக்கவிட்ட படி வெளிக்காட்சி
காளி கோவிலடியில் காரை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே கும்பிடுவதற்கு இறங்கிப் போனோம். நான் வெளியில் நின்று கண்களை மூடிக் கும்பிட்டபடி நின்ற போது அவள் நேரே உள்ளே சென்றாள். சடைத்த ஆலமரத்தின் காற்று அந்தப் பகுதியில் சாதுவானதொரு குளிர்மையைத் தந்து கொண்டிருந்தது. அண்ணாந்து மரத்தின் தடித்த கிளைகளைப் பார்த்தேன். நெருக்க
கோயிலின் உள்ளே நான் ஏறிச்செல்ல ஜெயா உள்ளங்கையில் திருநீற்றை அள்ளியபடி எனக்கு பூசி விடுவதற்கு குடுகுடுவென்று வேகமாக நடந்து வந்தாள். அப்பா – அம்மாவைப் பார்ப்பதற்கு அவள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் அதற்கான நேரம் நெருங்கியிருப்பதால் அவள் கொண்டுள்ள பரவசத்தையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
திருநீறை என் நெற்றியில் அளவாகப் பூசிவிட்டாள். கண்களுக்கு மேல் கையைக் குடை போல பிடித்து திருநீற்றை சாதுவாக ஊதி விட்டாள். அதன்பிறகு வெளி மண்டபத்தில் சாஸ்டாங்க
வேண்டுதலை முடித்துக் கொண்டு எழுந்த போது கண்ட காட்சியால் திடுக்குற்றுப் போனேன்.
மதவடிச்சாமியார் எனக்கு முன்பாகவிருந்த கோயில் தூணடியில் நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நன்றாக வயது போயிருந்தது. மேலாடை அணியாமல் அதே சிவப்பு வேட்டியிலிருந்தார். தீவெட்டி மட்டும் தான் அருகில் இல்லையே தவிர அவரது கண்களில் மிகப்பெரியதொரு அகோரம் தெரிந்தது. முதுகு சாதுவாக கூனியிருந்தது. கீழ் இமைகள் துடித்தபடியிருந்தது. இடது கை நடுங்கிக் கொண்டிருந்தது.
“டேய் என்னடா அந்தக் கிழவனை பார்த்துக் கொண்டு நிக்கிறாய்” – என்று எனது கன்னத்தைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பினாள் ஜெயா.
“போவம் வா” – என்று கூறியபடி என் கையைப் பிடித்துக் கொண்டு காரை நோக்கி நடந்தாள்.
அவளோடு நிற்பதால் உடனடியாக மதவடிச்சாமியோடு எனக்கு பேசுவதற்கு எதுவுமே வாயில் வரவில்லை. ஆறுதலாக பேசலாமே என்று அவரைத் தெரியாதது போலவே அவளோடு காரை நோக்கி நடந்தேன்.
மதவடிச்சாமி நேரே கோயிலின் உட்பிரகாரத்துக்குள் போய் அங்கிருந்த கொத்து மணியை வேகமாக உலுப்பினார். மிக வேகமாக உலுப்பிக் கொண்டேயிருந்தார். ‘யாருமில்லாத கோவிலில் பூசையும் நடவாத இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு சத்த
அந்நேரம் அந்தக் கோவில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் அந்த மணிச் சத்தத்தில் அதிர்ந்தபடியிருந்தது.
