Category: எழுத்து

எழுத்து

ரேமண்ட் கார்வரும் இலக்கிய ஜனநாயகமும் – உமையாழ்

கோகுல் பிரசாத் · 17.08.19

தமிழ் இலக்கிய உலகம் ஆரம்பம் முதலே உலக இலக்கியத்தை மிகத் திறந்த மனதுடனேயே அணுகி இருக்கிறது. அதன் பயனாக, காப்பிய மரபிலிருந்து மாறி வந்த கதைசொல்லல் முறைமையை வேற்றுமொழி இலக்கியங்கள் வாயிலாகவே தமிழ் இலக்கிய உலகம் கற்றுக் கொண்டது என்பது கூட மிகையான கூற்றல்ல. தாமதமாக தமிழுக்கு வந்த சிறுகதை வடிவமும் மகத்தான படைப்பு வடிவமான நாவல்களும் தமிழுக்கு உலக மொழிகளின் கொடைகள் தாம். போலவே, தனக்கான நவீன இலக்கிய விமர்சன முறைமையையும் பிறமொழிகளிடம் இருந்தே தமிழ் […]

எழுத்து

காலத்தின் தொடர்வேட்டன்: பி கானும் அவரது “நயநுணுக்கமிக்க பிணங்களும்”

நம்பி கிருஷ்ணன் · 17.08.19

Cadavre exquis (ஆங்கிலத்தில் Exquisite Corpse, நயநுணுக்கமிக்க பிணம்) என்று பிரெஞ்சுக்காரர்கள் அழைக்கிறார்கள் அல்லவா, அங்கு துவங்குகிறேன். சர்ரியலிஸ்டுகளே விளையாட்டுத்தனமாகத் தான் இதைத் தொடங்கி வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டையும் போல் இவ்விளையாட்டிற்கும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் உண்டு. அவற்றின்படி சித்திரங்கள் அல்லது சொற்றொடர்களை விளையாடுபவர்கள் அடுத்தடுத்து இணைத்துக் கொண்டே செல்ல வேண்டும். பங்களிக்கையில் அதுவரையில் தொகுக்கப்பட்டிருக்கும் பங்களிப்புகளில் ஒரு பகுதியை மட்டுமே ஒருவர் பார்வையிட முடியும் போன்ற நிபந்தனைகளும் உண்டு. சைனீஸ் […]

எழுத்து

இருப்பே சாராம்சம் – சர்வோத்தமன் சடகோபன்

சர்வோத்தமன் சடகோபன் · 17.08.19

உங்களை ஒருவன் கன்னத்தில் அறைந்து விடுகிறான். நீங்கள் அவனைத் திரும்ப கன்னத்தில் அறைந்து விடுகிறீர்கள். கணக்கு தீர்ந்து விடுகிறது. உங்களுக்கு ஒருவன் துரோகம் இழைத்து விடுகிறான். நீங்கள் அவனைப் பழிக்குப்பழி வாங்க முற்படுகிறீர்கள். கோபத்தில் உங்கள் கன்னம் சிவக்கிறது. கண்கள் துடிக்கின்றன. இரவு படுத்தால் தூங்க முடியவில்லை. எந்த வேலையைச் செய்தாலும் அந்தத் துரோகம் உங்களை தொந்தரவு செய்கிறது. நீங்கள் அவனை செருப்பால் அடிக்கிறீர்கள். அவன் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள். அன்றிரவு நீங்கள் நன்றாக தூங்க முடியும். […]

எழுத்து

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டமும் தேசிய கல்விக் கொள்கையும்

இல. சுபத்ரா · 17.08.19

நான்கு ஆண்டுகள் என்பது எவ்வளவு பெரிய காலம்? மிக நீண்டது? ஆம். ஒரு தனி மனிதனின் வாழ்வில் அது மிக நீண்ட காலம். சரி, ஒரு நாட்டின் வரலாற்றில்? ஒரு சீர்திருத்தத்தின் வரலாற்றில்? கடந்த ஜனவரியில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஒப்புதல் ஆகியிருக்கும் “No Detention Policy (all pass)”-க்கு எதிரான மசோதாவை ஆதரித்தவர்கள் உட்பட, பள்ளிகளில் கல்வித்தரம் கடந்த 10 ஆண்டுகளில் அதலபாதாளத்திற்குச் சரிந்திருப்பதாகக் குறைபடும் அனைவரும் அதற்கு அடித்தளமாகக் கொண்டிருக்கும் ASER (Annual Survey of […]

எழுத்து

நெருஞ்சிக் கனவுகளைச் சுமக்கும் வெள்ளை முகமூடிக்காரர்கள்: மைக்கேல் ஹனகேவின் திரைப்படங்கள்

கோ.கமலக்கண்ணன் · 17.08.19

1 ஒரு வணிக இயக்குநரின் மிகச்சிறந்த திரைப்படம் என்று குறிப்பிடப்படும் ஒரு படம் எதிர்பார்த்ததைப் போலவே பல வணிக இயக்குநர்களை உருவாக்கும். அந்தத் திரைப்படத்தின் ஏறத்தாழ அப்பட்டமான மறுவார்ப்பையும் அதை விட தரம் சற்றே குறைந்த படைப்பையும் அவர்கள் எடுத்துத் தள்ளுவார்கள். இது ஒரே பொம்மையைப் பெயரை மாற்றி விற்கும் இயந்திரத்தனமான செய்கையை ஒத்தது. அதன் நோக்கம் சுய பொருளாதார முன்னேற்றம் மட்டுமே. சிலர் அதற்கென தொழில்நுட்ப வித்தைகளையும் சேர்த்திருப்பார்கள். உதாரணமாக கிறிஸ்டோபர் நோலனைப் பார்த்து இந்தியா […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் ( பகுதி 6 ) – பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி · 17.08.19

சென்ற கட்டுரையில் வெ.சா. மீதான பிரமிளின் முதலாவதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டினைப் பார்த்தோம் (சிருஷ்டிபூர்வம், ரசனாபூர்வம்). வெளிப்படையாக அவர் சொல்லவில்லையே தவிர பிராமணீயக் குண இயல்பை அவர் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டி விமர்சிக்கத் தொடங்குகிறார். அதில் ஒன்றுதான் இந்த இரசனாபூர்வம். யோசித்துப் பார்த்தால் ஒட்டுமொத்த மக்களையே இரண்டாகப் பிரித்து விடலாம் என்று தோன்றுகிறது. வைஷ்ணவம்-சைவம். இம்மை-மறுமை. அறிவு-உணர்வு. Insensitive-sensitive. இகவாழ்வுத் தேடல் எனும் போது இதிலுள்ள இன்பங்களை நுகர, அனுபவிக்க, இரசனாப்பூர்வமாக அணுக இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மறுமை […]

எழுத்து

நாமும் அஜ்னபி தான் – மானசீகன்

மானசீகன் · 17.08.19

அது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில் எதையாவது உளறுவதே அவர் வழக்கம். சுற்றிச் சுற்றி வந்தவர் என் மேப்பைப் பிடுங்கிப் பார்த்தார். ‘ஏண்டா பாய்! இப்டி தப்பா எழுதி இருக்க?  சவூதி அரேபியா  இங்கயா இருக்கு? தப்பா போட்ருக்க’ என்று சொல்லிக் கொண்டே மேப்போடு  வகுப்பறையின் மத்திக்குச் சென்று விட்டார். எல்லோரிடமும் அதைக் காட்டிக் கொண்டே ‘பார்த்தியாடா, பாய் தப்பா எழுதிருக்கிறதை? இந்தியாவ தப்பா […]

எழுத்து

சுவை

ப.தெய்வீகன் · 12.07.19

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரிலிருந்து நானூற்றைம்பது கிலோ மீற்றர் தொலைவில் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கூனபரா நகரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள திறந்தவெளிச் சிறையின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வோகன் குடியிருப்பு தொகுதியிலுள்ள 37 ஆவது இலக்க சிறிய அறையில் செய்யாத குற்றத்துக்காக நான் அடைக்கப்பட்டிருந்தேன். அது எனது முதலாவது இரவு. தூக்கம் வரவில்லை. பத்து மணியளவில் கண்ணயர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரத்திலேயே திடுக்கிட்டு எழும்பிப் பார்க்கும் போது அவ்வளவு நேரமும் ஏன் […]

எழுத்து

மரணத்தைக் கடத்தல் ஆமோ

ரா.கிரிதரன் · 12.07.19

துர்மரணம். இரத்த பலி கேட்கும் அகால மரணம். விசுவநாத ஐயர் தன் முன்னே விழுந்திருந்த கட்டங்களை நம்ப முடியாமல் பார்த்தார். காறைக்கட்டியிருந்த சுண்ணாம்பை நன்றாகக் குழப்பி விட்டு, செல்லத்திலிருந்து எடுத்த வெற்றிலையில் தடவினார். மடித்த பின்னர் கையில் நீவியபடி ஏதோ யோசனையில் இருந்தார். அவசரமாக கைவிரலை வேஷ்டியில் துடைத்தபடி மீண்டும் கட்டத்தை உற்றுப்பார்த்தார். அன்று மாலையிலிருந்து நிரந்தரப் பைத்தியக்காரனைப் போல மனம் குழம்பிக் கிடந்தது. காற்றாட வெளியே சென்று வரலாம் என்றால் மேல் வேஷ்டியைப் போட்டுக்கொள்ள வீட்டுக்குள் […]

எழுத்து

சிறுதுளை

தர்மு பிரசாத் · 12.07.19

1 திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும் மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும் சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உச்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வறண்ட தொனியில் இருந்தது. திருவின் அம்மா தனபாக்கியம் வீட்டை ஒட்டி நீண்டிருந்த வெளிக்குந்தில் அமர்ந்திருந்தார். படலையிலிருந்து கூப்பிட்டதைக் கேட்காமல் சூடை […]

எழுத்து

கோகோ கோலா எனும் தொன்மம்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 12.07.19

ஒன்று போலவே இருக்கும் கோகோ கோலா பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலவெளியில் இருக்கின்றன என ஜான் கேஜ் சொன்னதை, ஒவ்வொரு முறை கோகோ கோலா பாட்டிலைக் கையில் எடுக்கும் போதும் யோசிக்கிறேன். இதற்கு முற்றிலும் எதிர்த்தளத்தில், உலகின் எந்த மூலையிலும், கோகோ கோலா பாட்டிலைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் ஒரே காலவெளியில் இருப்பார்கள். இந்தக் காலவெளி உலகமயமாக்கம் உருவாக்கியது. சென்னை நகரவாசியையும், சியோல் நகரவாசியையும் ஒன்றாக இணைக்க முடிகிற சாத்தியம் கோக்கிற்கு மட்டுமே உண்டு. நமது உள்ளங்கைகள் […]

எழுத்து

வனாந்தரத்தின் குரல்

போகன் சங்கர் · 12.07.19

ஆலன் கின்ஸ்பெர்க்கின் (Allen Ginsberg) ‘ஊளை ‘பற்றி தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் யாராவது பேசுவதுண்டு. பீட் தலைமுறை எனப்படும் அவரோடு சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய ஆர்வம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டதுமுண்டு. ஊளை சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்தது. வில்லியம் பரோஸ் பற்றி நாகார்ஜுனன், சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள், மொழி பெயர்த்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் ஜாக் கேராக் இன்னொரு முக்கியமான ஆளுமை. அவர் பற்றி அதிகம் இங்கு பேசப்படவில்லை. அவரது ‘DHARMA BUMS’ முக்கியமானதொரு […]