Category: எழுத்து

எழுத்து

புனைவில் சொல்லடுக்கின் கலை

ஆர்.அபிலாஷ் · 27.12.22

மிக எளிமையாகத் தோன்றும் மொழிக்குச் சொந்தக்காரர் அசோகமித்திரன். ஆனால் அந்த மொழி ஒன்றும் கவனமின்றி வெறுமனே சிக்கனமான சொற்களால் உருவாக்கப்பட்டதல்ல. சிக்கனத்துக்கும் அடங்கின தொனிக்கும் அப்பால் அசோகமித்திரனிடம் தன்னுடைய ஸ்டைல் குறித்த அபாரமான தெளிவு உள்ளது. இந்த ஸ்டைல் வெறும் அழகுக்கானது அல்ல. அதற்குப் பொருள் நோக்கம் உள்ளது. எப்படி கவிதையில் ஒரு சொல்லை எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்பதற்குக் கவிஞனுக்கு என ஒரு நியதி, புரிதல், இத்யாதி உள்ளதோ, அவ்வாறுதான் புனைவிலும் ஒரு கதைக்கலைஞனுக்கு […]

எழுத்து

இராசேந்திர சோழனுக்கு விளக்கு விருது

எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.22

அனைவருக்கும் வணக்கம். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருதை இன்று பெருமைப்படுத்தியிருக்கும் மதிப்பிற்குரிய இராசேந்திர சோழன், வண்ணநிலவன் இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கும் புனைவு சாராத பிற துறைகளிலும் பெரும் பங்களித்து வரும் எழுத்தாளர்களைத் தொடர்ந்து கௌரவித்து வரும் விளக்கு அமைப்புக்கு பாராட்டுகள். * ‘என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி’ என்றார் காந்தி. ஒரு மனிதனின் வாழ்வே அவன் இந்தச் சமூகத்துக்கு விட்டுச்செல்லும் செய்தியாக இருக்கமுடியும். ஒரு மனிதன் எழுத்தாளனாக இருந்திருக்கலாம். அரசியல்வாதியாக […]

எழுத்து

முறிந்த சிறகுகள் – கலீல் கிப்ரான்

கோ.கமலக்கண்ணன் · 27.12.22

இரவின் கருமையில் ஒரு மனிதன் செய்யும் எந்த ரகசியக் காரியமும் வெண்பகலில் தெள்ளியதாக வெளிப்பட்டுவிடும். தனிமையில் புலம்பிய சொற்கள் யாவும் எதிர்பாராத விதமாகப் பொது உரையாடலின் பேசுபொருளாக ஆகிவிட்டிருக்கும். இன்று நம் அறை மூலைகளில் மறைத்து வைக்கும் ஆவணங்கள் யாவும் நாளை வீதிகளெங்கும் பறைசாற்றப்படும். இப்படித்தான் மதகுரு பூலோஸ் காலிப், ஃபாரிஸ் எஃபாண்டி கராமியுடன் சந்தித்து உரையாடியதை இருண்மையின் வாய்கள் அரற்றின. அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து பேசிப் பேசி அலர் என் காதை எட்டியது. அந்த இரவு பூலோஸ் […]

எழுத்து

ஒரு ஜெருசலேமின் மன ஓசை

கே.என்.சிவராமன் · 25.10.22

ஜே.பி. என நண்பர்களால் அழைக்கப்பட்ட பா.செயப்பிரகாசம், எழுபதுகளின் புகழ்பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி. வானம் பார்த்த கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் முன்வைத்தவர். தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் எனும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர். ‘ஒரு ஜெருசலேம்’, ‘ஒரு கிராமத்து ராத்திரிகள்’, ‘காடு’, ‘இரவுகள் உடையும்’ முதலான பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், ‘வனத்தின் குரல்’, ‘நதிக்கரை மயானம்’, ‘தெக்கத்தி […]

எழுத்து

தானச் சோறு

சரவணன் சந்திரன் · 11.10.22

ஆண்டிப் பண்டாரம் தெற்கே இருந்து நிலத்தை ஊடறுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் சோர்ந்து போய் நடந்து வந்தார். மாட்டுக்கு எடுப்பதைப் போலத் தாங்கவியலாத் தாகம் எடுத்தது அவருக்கு. எதிரே இருக்கிற குன்றில், தாகம் தீர்க்கிற சொடக்குத் தக்காளிகளும் கள்ளிப் பழங்களும் கிடைக்குமென ஊகித்தார். குன்றினில் மெல்லத் தன் குச்சியை ஊன்றி மேல் நோக்கிப் பலத்தைத் திரட்டி, நடந்து போனார். பாலில் பனங்கற்கண்டைப் போட்டுக் காய்ச்சிய மணம் குன்றின் மீதிருந்து வீசியது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் போய்ச் சுருண்டது காற்று. […]

எழுத்து

சித்திரச் சபை

சுரேஷ் பிரதீப் · 10.10.22

1 அப்பா முதலும் கடைசியுமாக என் முன்னே அமர்ந்து குடித்தது என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில். பாண்டவையாற்றின் கரையிலிருந்த ஒரு கைவிடப்பட்ட கான்கிரீட் சுடுகாட்டில் அப்பாவும் நானும் அமர்ந்திருந்தோம். எங்களைச் சூழ்ந்து கரையில் செழித்திருந்த புற்களை ஆடுகள் வலுக்கட்டாயமாக மேயும் ‘வருக் வருக்’ சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பாண்டவனூரில் நான் வெறுக்கும் பொழுது இந்தப் பின்மதியம்தான். ஆத்தா வீட்டில் தொலைக்காட்சி வாங்கப்படாதவரை விடுமுறை நாட்களில் இப்பொழுதின் நிசப்தம் என்னை அவ்வளவு அச்சுறுத்தி இருக்கிறது. சன் டிவியில் நகைச்சுவைத் திங்கள், […]

எழுத்து

கீறல்

கமல தேவி · 10.10.22

புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு பள்ளிவாயிலை நோக்கி உஷா ஓடினாள். வகுப்பிலிருந்து அனைவருமே வெளியேறியிருந்தார்கள். காலை பதினொரு மணிக்குப் பள்ளிக்கூடம் சாத்தப்படும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கவில்லை. நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பிலும் அறிவுறுத்திச் சொல்லி அனுப்பினார்கள். குதித்துக்கொண்டும் சிரித்தபடியும் தலைமையாசிரியர் அறைக்கு அப்பால் உள்ள தென்னை மரங்களைக் கடந்து சிறிய படல் வழியில் வெளியேறினார்கள். பள்ளிக்காவலாளி ராமசாமி மேற்குப் பக்கமாக இருந்த பள்ளியின் முக்கிய வாயிலைப் பெரிய தென்னம்படலை இழுத்து வைத்து மூடிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் […]

எழுத்து

சிகை – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 10.10.22

1 இந்தப் பெண் சூசன் ரீட் ஓர் அனாதை. பர்ச்செட் குடும்பத்தினர் தங்களின் மற்ற இரண்டு மூன்று குழந்தைகளுடன் சேர்த்து அவளையும் வளர்த்தனர். சூசன் அவர்களின் கூடப்பிறந்தவர்களின் மகள் அல்லது வேறு யாரோ உறவினரின் மகள் என்று ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். இன்னும் சிலர் திருவாளர் பர்ச்செட்டின் நடத்தையில் சந்தேகம் கொண்டனர். இன்னும் சிலருக்கு அவர் மனைவியின் ஒழுக்கம் குறித்து சந்தேகம். உங்களுக்குத்தான் தெரியுமே! இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான். ஹாக்சா இந்த ஊருக்கு வந்து சேர்ந்தபோது அவளுக்கு […]

எழுத்து

நீரின்றி அமையாது உலகு: மனைமாட்சி நாவல்

மானசீகன் · 10.10.22

தமிழில் எழுதப்பட்ட வெகுஜன நாவல்களும் திரைப்படங்களும் ‘குடும்பம்’ என்கிற அமைப்பைத் தொடர்ந்து புனிதமான ஒன்றாகவே சித்தரித்தன. கதாபாத்திரங்களின் காமத் தத்தளிப்புகளை உக்கிரமாகப் பேசிய தி.ஜா, பாலகுமாரனின் நாவல்கள் காம, மோக, குரோதங்களில் இருந்து விடுபடுவதற்கான மீட்சி தரும் அம்பிகையெனக் கூட்டுக்குடும்பத்தின் புனிதத்தையே கட்டமைத்தன. 2015-ல் வெளிந்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படமானது திருமணமின்றி சேர்ந்து வாழும் (Living Together) நவயுக இளைஞர்களின் கொண்டாட்டத் தருணங்களை ஒப்புக்குக் காட்டிவிட்டு அவ்வுறவு உருவாக்கும் வெறுமைக்கு மாற்றாக நம் மரபான குடும்ப […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 14): புதிய தலைமுறை பெண்களின் சவால்கள் – லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 10.10.22

அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரின் சொந்த ஊர் திருச்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை அடுத்திருக்கும் ஒரு கிராமம். மனைவியும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் பட்டதாரிகள். ஒருநாள் மாலை புதிதாக வாங்கிய உடைகளை என் மனைவியிடம் காட்டிக்கொண்டிருந்த நண்பரின் மனைவி சிரித்தபடியே சொன்னார். “சுடிதார், நைட்டியெல்லாம் இங்கதான். ஊருக்குப் போனா ஸாரி மட்டுந்தான் கட்டமுடியும்.” கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் நண்பரின் மகள் தோளைக் குலுக்கியபடியே சிரித்தாள். “ஊருக்குன்னு தனி […]

எழுத்து

கிளாரா – ராபர்ட்டோ பொலான்யோ

கோ.கமலக்கண்ணன் · 10.10.22

தடமுலைகள், மெலிந்த கால்கள், நீல விழிகள். அவளை அப்படித்தான் ஞாபகத்தில் வைக்க விரும்புகிறேன். நான் ஏன் அவளை வெறித்தனமாகக் காதலித்தேன் என்று அறியேன். ஆனாலும் காதலித்தேன். முதல் நாட்கள், முதல் மணித்துளிகள் என்று தொடக்கம் மிகச் சிறப்பாகவே கடந்தன. அவள் பார்செலோனாவுக்கு விடுமுறையைக் கழிக்க வந்தாள். பின்னாட்களில் கிளாரா தெற்கு ஸ்பெயினில் தான் வசித்த நகரத்திற்குத் திரும்பியதும் எல்லாம் சிதையத் தொடங்கின.  ஓரிரவு என் கனவில் தேவதூதன் வந்தான். வெறுமையாக இருந்த அகன்ற மதுவகக் கூடத்தில் நான் நடந்தபோது […]

எழுத்து

தகப்பன் அரூபன்

வி.அமலன் ஸ்டேன்லி · 10.10.22

அரேபியப் பாலைப் பிரதேசத்து அதி உயரமும் கம்பீரமும் கொண்ட தேகமாய் இருந்திருக்க வேண்டும். அசாதாரண நீளமிக்க சமாதி. அண்மைப்பட்டு அமர்கையில் நீண்டு விரிந்து மலையென மண்ணில் அமைந்த கல்லறை. கண்கவர் வண்ண மென் ஜரிகைத் துணியால் போர்த்தப்பட்டு மேலே ரோஜாவும் மல்லிகையுமாய் குவிந்து உதிரிதழ்கள் விரவிக் கிடக்கும் மேடு. சுற்றிலும் அலங்கார மரத்தடுப்பு. அறை பூராவும் ஊடேறும் சுகந்தம்; வாசனைகளின் ஆழ்ந்த கலப்பும் ஈர்ப்பும். உடலிலும் மனத்திலும் செறிவுற்ற ஆழ் மணத்தில் திளைத்து தானாகவே ஒன்றாகி அகத்தில் சுரந்து ஒளியாகி தன்னுணர்வைத் […]