கன்னிகை
“எத்தான், நீங்க எதுக்கு ரொம்ப யோசிக்கியோ? ஒரே ஒரு தடவதான? போனா கெடைக்க பைசால கொஞ்ச நாள கழிக்கலாம்லா?” “நிறுத்துட்டி, என்ன கையாலாகாத்தவன்னு சொல்லுக என்னா? ஊர்ல எல்லாவனும் என்னப் பாத்து என்ன கேப்பான்? பிள்ளைய கோயிலுக்கு அனுப்பிப் பொழைக்கான்னு சொல்ல மாட்டானுவளா? அதுவும் பொம்பளப் புள்ளக்கிப் பதிலாட்டு. சீ.. ஊர்ல நா மொகங்காட்டி நடக்கது ஒனக்குக் கொள்ளலையா?” “இல்லத்தான், நீங்க எதுக்கு அப்பிடிலாம் யோசிக்கியோ? நம்ம மட்டுமா பண்ணுகோம்? எல்லாருந்தான் பிள்ளேல அனுப்புகா? கொஞ்சம் மனசிலாக்குங்கோப்பா. […]
