Category: எழுத்து
எழுத்து
மா.கலைச்செல்வன் · 12.07.19
அறையில் பூரண அமைதி நிலவியது. இராமநாதன் சன்னலருகே அமர்ந்திருந்தார். வேட்டி மட்டுமே உடுத்தியிருந்தார். மெலிந்த அவரது உடம்பில் பூணூல் நிலையான ஓர் உறுப்பைப் போன்று ஒட்டிக் கிடந்தது. அவர் எதையோ ஆலோசனை செய்து கொண்டிருந்தார். ஆலோசனைக்கு நடுவே மெதுவாக ஏதோ முணுமுணுத்தவாறு நடுங்குகின்ற தனது கை விரல்களால் கால் முட்டிகளில் தாளமிட்டார். இராமநாதனுக்கு முன் அமர்ந்திருந்த இளைஞரும் மௌனமாகவே இருந்தார். ஆனால் அவரது மௌனம் அதிகம் பேசப்படுவதாகவே அமைந்திருந்தது. இராமநாதன் கூறப்போகும் பதிலுக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். […]
எழுத்து
பாலா கருப்பசாமி · 12.07.19
25.5.2019 அன்று திருநெல்வேலியில் பிரமிள் படைப்புகள் அறிமுகவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரமிளின் எழுத்துகளை வெளியிடும் உரிமை பெற்று தொகுப்புகளைக் கொண்டு வந்த பதிப்பாசிரியர் கால.சுப்ரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். நான்-பிரமிள் விமர்சனங்கள், எழுத்தாளர் போகன் சங்கர்-பிரமிளின் ஆன்மீகம், எழுத்தாளர் சுந்தர்காளி-பிரமிள் உரையாடல், காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன்-பிரமிளின் கதைகள் குறித்து உரையாற்றினோம். இந்நிகழ்வில் நான் வாசித்த கட்டுரையை கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன். “பிரமிள் எல்லா வகையான குழுக்களுக்கும் எதிரானவர். ஜே.கிருஷ்ணமூர்த்தியை ஆதர்ஷமாகக் கொண்ட தனிநபர்வாதி அவர். பிரமிளின் […]
எழுத்து
கோ.கமலக்கண்ணன் · 12.07.19
1 ஒரு விமர்சகனாக கோட்பாட்டு ரீதியாகவோ, இரசனை ரீதியாகவோ நற்தரத்துடன் நேர்மையான கருத்துகளை முன் வைப்பதென்பது அடிப்படையில் ஒரு கலகச் செயல். அது எத்தனையோ காழ்ப்புகளையும் எரிச்சல்களையும் எதிர்பார்த்த, எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் கொண்டு வந்து தள்ளும். ஒரு வகையில் அதுவே விமர்சகனுக்கான பாராட்டும் ஆசீர்வாதமும் கூட! ஒரு சினிமாவைப் பற்றிய விமர்சனங்களைக் கூட ஏற்கவோ குறைவளவில் பரிசீலிக்கவோ செய்யாமல் விழிமறைந்த இரசிக கும்பல்கள் விமர்சகர்களை ஏளனப்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மைப்பகழியால் நெஞ்சம் கிழிந்தவர்கள் கத்தத்தான் செய்வார்கள். ஆனால் புனுவல் மீதான […]
எழுத்து
அனோஜன் பாலகிருஷ்ணன் · 12.07.19
நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. […]
எழுத்து
எம்.கோபாலகிருஷ்ணன் · 12.07.19
அட்டன்பரோ என்ற பெயர் நமக்குப் புதிதல்ல. உடனடியாக ‘காந்தி’, ‘ஜூராஸிக் பார்க்’ எனத் திரைப்படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் ‘காந்தி’ படத்தை இயக்கியவரும் ‘ஜுராஸிக் பார்க்’கில் நடித்தவரும் ரிச்சர்ட் அட்டன்பரோ. இன்னொருவர் டேவிட் அட்டன்பரோ. உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கும் சூழலியலில் அக்கறை கொண்டோர்களுக்கும் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத பெயர். ரிச்சர்ட் அட்டன்பரோவும் டேவிட் அட்டன்பரோவும் உடன்பிறந்தவர்களே. இன்னொரு சகோதரரும் உண்டு. இவர்களைத் தவிர குடும்ப உறுப்பினர்கள் பலரும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்றவர்களே. […]
எழுத்து
சுநீல் கிருஷ்ணன் · 12.07.19
ஒரு தடித்த ஆய்வு நூலுக்கில்லாத கண்கள் ஒரு கட்டுரைக்கில்லாத உதடுகள் திமிர் பிடித்த கவிதைக்குண்டு – பெருந்தேவி 1 ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை என்ன அளிக்கும்? முதன்மையாக மொழியின் வார்ப்புருக்களைச் சிதைத்து அர்த்தங்களை உருக்கும். அவருடைய மொழியையும் சிந்தனையையும் பார்வையையும் தேய்வழக்காகாமல் காக்கும். அவருடைய உணர் கொம்புகளில் படிந்திருக்கும் பிசினை நீக்கித் துலங்கச் செய்யும். பெருந்தேவியின் கவிதை மேலதிகமாக ஒன்றை எனக்குச் செய்தது, மேற்சொன்ன வரிகளை எழுத்தாளன், அவன் என்று ஆண்பால் விகுதியிலேயே இதற்கு முன்பு வரை […]
எழுத்து
கார்த்திக் பாலசுப்ரமணியன் · 12.07.19
வரலாற்றினைச் சரிவரக் கற்று அறியாதவர்களாலும் அறிந்தும் கண்களை மூடிக்கொண்டு அஞ்ஞானத் தூக்கத்தில் திளைப்பவர்களாலும் வரலாறு அதன் அத்தனை கீழ்மைகளோடும் போதாமைகளோடும் குறைகளோடும் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் அதுவே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. அப்படி நிகழ்த்தப்பட்ட வரலாறென்னும் இருட்குகையின் துளி இருளை நாவலாக்கி கையளித்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள். இந்தியா முழுவதும் சாதியின் வேர்கள் ஒரே நேரத்தில் ஆழமாகவும் நுட்பமாகவும் ஊடுருவியுள்ளன. இதோ, இன்று இங்கே இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் பின்பு ஏதோ ஒரு நாளில் எங்கோ […]
எழுத்து
சுரேஷ் பிரதீப் · 22.05.19
இப்போது நாங்கள் குடியிருக்கும் வீடு நகரின் பிரதான பகுதியில் இருந்ததெனினும் பிற பகுதிகளை ஒப்பிட நெரிசலும் இரைச்சலும் இப்பகுதியில் குறைவு தான். அந்த ஞாயிற்றுக்கிழமையில் நான் வாசலில் கிடந்த தொங்கு நாற்காலியில் அமர்ந்து மெல்ல ஆடியபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். ஒடிசலான ஒரு பையன் வாசலில் வந்து நின்றதும் நான் புதிதாக வாங்கியிருந்த டைகர் அவனைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. அவன் பயத்தை சற்று நேரம் திருப்தியுடன் கவனித்த பிறகு “என்ன?” என்றேன். “ப்ளம்பர் சார். டேங்க்லேர்ந்து […]
எழுத்து
பாலா கருப்பசாமி · 22.05.19
இதுவரை விரிவாகப் பார்த்த கட்டுரைகளைப் போல 1971க்குப் பிறகு சில கட்டுரைகளே இலக்கியம் சார்ந்து வினையாற்றலோடு பிரமிள் எழுதியிருக்கிறார். மற்றவை எதிர்வினைகளாகவே அமைந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது மதிப்பீட்டு இயக்கத்தைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பேச்சிற்கும் பதில் சொல்லியிருக்கிறார். அக்கட்டுரைகளுக்குள் நுழைந்து வருவதென்றால் அதேயளவுக்காவது அவற்றை விரித்துச் சொல்ல வேண்டியிருக்குமென்பதால் அவற்றைத் தவிர்த்து விடலாம். தேவைப்படின் தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். சென்ற கட்டுரையில் ஜெனே குறித்து ‘கசடதபற’ இதழில் பிரமிள் எழுதியிருந்ததைப் […]
எழுத்து
கோ.கமலக்கண்ணன் · 22.05.19
1 தன்னை எவ்விரைவில் ஒரு கலைஞன் தீர்த்துக் கொள்கிறானோ, உண்மையில் அங்கிருந்தே அவன் கலைஞனாகத் தொடங்குகிறான். பவுல் தாமஸ் ஆண்டர்சனின் முதல் நான்கு படங்களும் தன்னைத் தீர்த்துக் கொள்ள அவருக்குப் பயன்பட்டன. அத்தகைய படங்களிலுமே ஒரு பிறிதொன்றிலாத தன்மையை முன்வைத்து அழகிய பயணங்களை மேற்கொண்டிருப்பார். Hard Eight, Boogie Nights, Magnolia, Punch Drunk Love நான்கிலும் அதை உணர முடியும். Boogie Nights திரைப்படத்தில் அவர் போர்னோ திரைப்பட உலகின் அதீத கொந்தளிப்புகளைத் தாளாது அணுகும் […]
எழுத்து
B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · 22.05.19
ஒரு முறை நானும் எழுத்தாளர் பாலா கருப்பசாமியும் அவரது நூலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி இலக்கியவாதிகளிடம் சென்று இறுதியாக அவர்கள் முன்வைக்கும் தத்துவ மரபில் சென்று சேர்ந்தது. தனக்குத் தெரிந்து இந்தியத் தத்துவ மரபைச் சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவரும் தங்களை அத்வைதிகள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள், இதற்கான காரணம் என்னவென்று பாலா கேட்டார். எல்லா நதிகளும் கடலைச் சேருவது போல ஞான மரபில் ஆர்வம் உடைய நவீன எழுத்தாளர்கள் […]
எழுத்து
மானசீகன் · 22.05.19
இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக […]