தண்டவாளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset / Midnight)
1 ஜனநாயகம் என்பது விசேசப் புதிர். குறிப்பாக, கலை, இலக்கிய, அறிவியல் ஆழ்நிலைகளில் படைப்புகள் உருவாக்கப்படுகையில் ஜனநாயகம் என்பது அறவே தவிர்க்கப்பட வேண்டிய பாவச்செயல். விலைக்காகவெனவே முன்வைக்கப்படும் சரக்குகளின் மாஸ்டர்களால் போற்றப்பட வேண்டிய கருத்தியலது. கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்த முதல் பத்து படங்களின் பட்டியலை கவனித்தால் அதில் ஆறு படங்கள் மனித இயல்வாழ்வில் துளியும் சம்பந்தமற்ற சூப்பர்ஹீரோ கதைகளாக இருக்கின்றன. அது இருந்துவிட்டுப் போகட்டும் என மீதம் நான்கை கவனித்தால் […]
