Category: எழுத்து

எழுத்து

ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு

கால.சுப்ரமணியம் · 17.02.19

சென்ற ஆண்டு கலிங்கப் பயணத்தில் உதயகிரி குகைகளைப் பார்த்தது மறக்கமுடியாத சம்பவம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு உண்மையில் அங்கே தான் இருக்கிறது என்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. முன்னால் வைத்திருந்த அறிவிப்பையும் படித்துக் கொள்ளவில்லை. எங்களை அங்கே அழைத்துச் சென்ற தென்னிந்திய வரலாற்றில் ஆழங்கால்பட்ட நண்பர் முன்பே அங்கு சிலமுறை போயிருந்தும் அதை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உதயகிரி என்ற பெயரில் இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் உள்ளது. குழுவை […]

எழுத்து

நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம்

ப.தெய்வீகன் · 17.02.19

ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், […]

எழுத்து

நன்றாக நின்று கொண்டாயா, நன்றி, சுடுகிறேன்!

எம்.கே.மணி · 17.02.19

பல தரப்புகள் சினிமாவிற்கு. அதற்கு எல்லைகள் கிடையாது. எந்த சினிமாக் கலைஞனும் தனது மன மொழியின் வழியே, தான் சொல்லக் கூடிய உண்மைகளை அடைவது தான் எப்போதும் நடக்கிறது. மற்ற வகையினர் இதில் சேர்த்தியில்லை. நான்கு புறத்தில் இருந்து நாற்பது பேர் வைத்து நசுக்கின பழங்களில் இருந்து பஞ்சாமிர்தம் செய்வது ஒரு மரபான தொழிலேயன்றி அதை சினிமா என்று குறிப்பிடக்கூடாது. அப்புறம் நாம் குறிப்பிடுகிற இந்த மன மொழிகளில் பேதமுண்டு. அவற்றில் படிப்பும் அனுபவமும் சேர்க்கிற ருசிக்கு […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன்

பாலா கருப்பசாமி · 17.02.19

1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான […]

எழுத்து

ஆஸ்கார் விருதுகள் 2019

கோ.கமலக்கண்ணன் · 17.02.19

1 ஆஸ்கார் எப்போதும் ஒரு வித கலவையான ரசனையுடனேயே படத்தேர்வில் ஈடுபடுகிறது. முழுக்க சிறந்த திரைப்படங்களை மட்டுமோ, அல்லது முழுக்க வணிக வெற்றி படங்களையோ கொண்டோ அது தன் பட்டியலை நிரப்புவதில்லை. அது அதிகளவிலான மக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டாடிக் கொள்வதற்கான தருணமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கான பிரயத்தனங்களிலேயே எப்போதும் ஈடுபடுகிறது. ஆஸ்காரின் தேர்வுகள் ஏதோவொரு அரசியல் நோக்கத்தைத் தன்னுள்ளே வைத்தே செயல்பட்டு வருகிறது என்பது இன்று புரிந்து கொள்ள முடியாத கருத்தமைவல்ல. அது கூடிய மட்டும் […]

எழுத்து

வலசை

சு. வேணுகோபால் · 17.02.19

இரவெல்லாம் சிறுவாணைப் பகுதியில் நான்கு யானைகள் வட்டமடித்துவிட்டு விடியற்காலை சோளக்காட்டிற்குள் புகுந்து கொண்டன. கலைந்து போகவில்லை. காலை ஒன்பது மணிக்கே சலீமைக் கொண்டு வந்து இறக்கினர். மேட்டுப்பாளையம் வனச்சரக அதிகாரிகளும் வந்தார்கள். சலீம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஒன்பதரைக்கு வந்த டாக்டர் “என்ன சலீம், என்ன காரியத்த முடிச்சுத் தரமாட்டெங்கிற” என்று பேசியபடி அருகில் சென்றார். சலீம் டாக்டரை அடையாளம் கண்டுகொண்டது. துதிக்கையைத் தூக்கி டாக்டரின் தலையைத் தடவியது. செல்லமாக டாக்டரை இடித்தது. தண்ணீர் வைக்கச் சொன்னார். கொஞ்சம் […]

எழுத்து

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அனோஜன் பாலகிருஷ்ணன் · 17.02.19

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான […]

எழுத்து

தபசி கவிதைகள்

தபசி · 17.02.19

மறக்கமுடியாத கவிதை இவ்வாறெல்லாம் நினைந்தொழுக ஆசிர்வதிக்கப்படுவாயாக உன்மத்த காமப் பார்வையினால் ஊடுருவிப் பார்க்கப்படுவதாக வெறிகொண்டதோர் தழுவலில் உதடு கவ்வி முத்தமிடப்படுவதாக மார்த்திறந்தவுடன் முலைகளில் பற்தடயம் பதிக்கப்படுவதாக அந்தரங்க உறுப்பின் தகிப்பு அடக்கியாளப்படுவதாக இன்னும் உன் காமுறு எண்ணமனைத்தும் நிறைவேற்றப்படுவதாகவும் இதைவிட முக்கியம் இனி நாம் சந்திக்கும் நேரங்களில்லெல்லாம் கிறக்கமான உன் மனதில் தப்பாமல் வரப்போகும் மறக்கமுடியா இந்தக் கவிதையின் நாயகனாக நானே இருப்பதாகவும். மரணம் அலுப்பாக இருக்கிறது. ஒரு நாளுக்காக இன்னும் எத்தனை நாள்தான் காத்திருப்பது? மதிப்பீடு […]

எழுத்து

ஹெர்டர் (பகுதி 2) – இரா. குப்புசாமி

இரா. குப்புசாமி · 17.02.19

ஐரோப்பிய வரலாற்றை ஆழ்ந்து வாசித்தால் ஓர் உண்மை புலப்படும். அது ஜெர்மானிய மண்ணின் தனித்த வாசனை. காலம் காலமாக அது தன்னைத் தனிமைப்படுத்தியே அடையாளம் கண்டிருக்கிறது. மற்றச் சமயங்களை, அவற்றின் தெய்வங்களை ஜெர்மானிய பழங்குடித் தொன்மங்களும் அவை காட்டிய தெய்வங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தே வந்திருக்கின்றன. சமரசம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. மேற்கிலிருந்து வந்த யூத, கிறித்துவ சமயங்களையும், கிரேக்க, உரோமானிய தத்துவங்களையும், கலாச்சாரங்களையும் எப்போதும் அது எதிர்த்தே நின்றிருக்கிறது. பல சமயங்களில் தகர்த்து அழித்திருக்கிறது. […]

எழுத்து

விடைபெறுதல்

சுரேஷ் பிரதீப் · 13.01.19

1 அருட்தந்தை எல்வ் அன்று கண்விழிப்பதற்கு முன் சற்று விசித்திரமான ஒரு கனவு கண்டார். ஷாமும் அன்றொரு கனவு கண்டே எல்வுக்கு முன் விழித்து அவரை எழுப்பச் சென்றார். “தந்தையே எம்மை கைவிடாதிரும். தந்தையே எம்மை ஏமாற்றாதிரும். தந்தையே எம்மீது கருணை வையும்” என்று தூய்மையான வெள்ளைத் தலையணை நனையுமளவு மூடிய கண்களில் இருந்து நீர் வழிய அழுது அரற்றிக் கொண்டிருந்த தன்னை ஷாம் மெல்லத் தொட்டு உசுப்பியபோது தான் ஏசுவைக் கனவில் கண்டதாக நம்பிய வண்ணம் […]

எழுத்து

வாடாமல்லி

கண்மணி குணசேகரன் · 13.01.19

“அழகிய கண்ணே… உறவுகள் நீயே…” கொன்றை மர இலைகளின் மேல் பறந்து போகிற பொன் வண்டைப் போல் மனசை வருடிச் செல்கிற பாடல். தோட்டத்தின் தூரத்து சனிமூலை குடிமுந்திரியில் தலையில் முந்தானையை போட்டபடி சொரட்டுக் கழியோடு முந்திரிக் கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு கிணற்றுக்குள் கேட்பது போல் காதில் விழவும் திரும்பி வீட்டுப்பக்கம் பார்த்தாள். “போன் அடிச்சிகிட்டு கெடக்கு. அப்பா எங்கடா போச்சி…” பூண்டியாங்குப்பத்து தேரைப் போல் சன்னபின்னலாய் காய்த்துத் தள்ளியிருக்கும் முந்திரியின் தொங்கலில் கொட்டை பொறுக்கிக் […]