Category: எழுத்து

எழுத்து

கே.என்.செந்திலின் ‘அகாலம்’

சுரேஷ் பிரதீப் · 18.03.19

சமீபத்தில் என் நண்பர் ஒருவர், பதினைந்து வருட வாசிப்புப் பழக்கம் கொண்டவர், இலக்கியம் சூழியல் வாழ்க்கை வரலாறு எனப் பல தளங்களில் வாசிக்கக் கூடியவர் ‘போரும் வாழ்வும்’ வாசிப்பதற்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவதாகச் சொல்லி இருந்தார். அதேநேரம் வாசிக்காமலும் விட முடியவில்லை என்றும் சொன்னார். போரும் வாழ்வும் அளவுக்கே இணையாக சலிப்பூட்டக்கூடிய படைப்புகளைச் சொல்ல முடியும். பூமணியின் ‘பிறகு’ ஓர் உதாரணம். ஆனால் இந்தச் சலிப்பு எழுத்தாளனின் திறனின்மையால் பிரதியில் ஏற்படுவதல்ல. ஒருவகையில் இந்தச் சலிப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுவது. […]

எழுத்து

கதாசரித் சாகரம் என்னும் பெருங்கதை

கால.சுப்ரமணியம் · 18.03.19

8ஆம் நூற்றாண்டில் அரபியில் தொகுக்கப்பட்ட ‘அல்ப்ஃ லைலா’ என்ற பெருங்கதைத் தொகுப்பு பெர்சிய, இந்திய மூலங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரத்தொரு அராபிய இரவுக் கதைகள் (அல்ப்ஃ லைலா வ லைலா / Alf Leiyla Wa-Layla) என்ற பாரசீகத்துக் கதைத் தொகுதியை கால்லன்ட் (Antoine Galland 1704–1717) பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வழி ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினார். கிழக்கத்திய (ஓரியண்டல்) பண்பாட்டுக்களம் அப்போதிலிருந்து மேற்கத்திய (ஆக்சிடென்டல்) இலக்கியக் களத்தில் விளக்கம் கொண்டது. பென்ப்ஃபே (Theodor Benfey) தமது பஞ்சதந்திரக் கதை […]

எழுத்து

நம் மூதாதையர் வரலாறு: டோனி ஜோசஃபின் ‘Early Indians’

வெ.சுரேஷ் · 18.03.19

கலைஞர் கருணாநிதி – சிவாஜி இணையில் பராசக்திக்குப் பின் மிகப் பிரபலமான படம் மனோகரா. அப்படத்தின் உச்சக்காட்சியில், “இன்பச்சோலையின் இடையே தோன்றி விட்ட கணவாயின் வழியாக இந்தப் பூமியில் குடியேறி நிலைபெற்றுவிட்ட குள்ளநரி” என்று ஒரு வசனம் வரும். அப்போது தியேட்டரில் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும். நான் மனோகரா முதன் முதலாக பார்த்தது 70களின் துவக்கமாக இருக்கலாம். சிறுவனாக இருந்த எனக்கு அந்த வசனத்தின் முக்கியத்துவம் உடனே புரியவில்லை. மேலும் அந்தப் படத்தில் எல்லோருமே நீள நீளமாக பேசிக்கொண்டே […]

எழுத்து

உடனிருப்பவன்

சுரேஷ் பிரதீப் · 17.02.19

1 ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு மணமான போது நாற்பத்து இரண்டு வயது. மாலினிக்கு முப்பத்தியெட்டு. அவளைப் பெண் பார்க்கச் சென்றபோது சலிப்புடன் தான் சென்றேன். தம்பி பதினேழு வருடங்களுக்கு முன்பு மணமுடித்திருந்தான். அவன் மகன் பெண் பார்க்கப் போகும் போது சில வருடங்களாகச் செய்வது போல அன்றும் “கன்கிராட்ஸ் பெரியப்பா” என்று செய்தி அனுப்பியிருந்தான். அதை அம்மாவிடம் காட்டிய போது அம்மாவும் வழக்கமாகச் செய்வது போல முகம் பூரித்து புன்னகைத்தாள். அப்பா வழக்கம்போல மென்மையாகச் சிரித்தார். […]

எழுத்து

சங்கேதங்களும் குறியீடுகளும் – விளடீமர் நபக்கவ் – தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

கால.சுப்ரமணியம் · 17.02.19

1 இப்படியான இந்த வருடங்களில், நான்காவது தடவையாக, குணப்படுத்தவே முடியாதபடிக்குச் சீர்குலைந்துவிட்ட சித்தத்தையுடைய இளைஞனுக்கு, பிறந்த நாள் பரிசாக எதைத் தருவது என்ற பிரச்சனையை அவர்கள் மீண்டும் எதிர்கொண்டார்கள். அவனுக்கு என்று தனி விருப்பம் எதுவும் கிடையாது. மனிதனால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும், எந்தப் பிரயோஜனமும் அற்ற இந்தக் குணரூப உலகின் அனைத்து வசதிகளும், அவனுக்குத் தீமையின் தேனடைகளாகவே தோன்றின. அவற்றில் குரோதத்துடன் அலை பாய்ந்து ரீங்கரிப்பவை, அவனால் மட்டுமே அறியக்கூடிய விதத்தில் இருந்தன. அவனைப் புண்படுத்தக்கூடிய […]

எழுத்து

சக்திதேவன் – சமஸ்கிருத மூலம் : சோமதேவர் / தமிழாக்கம் : டாக்டர் வே. ராகவன்

டாக்டர் வே. ராகவன் · 17.02.19

(‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி‘ என்று சி.என். குப்புசாமி முதலியார் 1911-ல் எழுதிப் பிரசித்தமான நாவலுக்கும் அதை அடிப்படையாகக் கொண்டு பின்பு 1947-ல் வந்த திரைப்படத்துக்கும் மூலமாய் அமைந்த கதை) மாநிலத்திற்கே அணியான வர்த்தமானம் என்ற நகரத்தில் பகைவரை வாட்டுபவனான பரோபகாரி என்ற அரசன் இருந்தான். உயர்ந்த தன்மையனான அவ்வரசனுக்கு, மேகத்தின் மின்னலைப் போன்றவளும் ஆனால் மின்னலின் நிலையின்மை என்ற குறையில்லாதவளுமான, கனகப்பிரபை என்ற பட்டமகிஷி இருந்தாள். அவ்வரசனுக்கு அந்த கனகப்பிரபையிடம், மகாலக்ஷ்மிக்குத் தன் அழகிலுள்ள கர்வத்தை […]

எழுத்து

அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம்

மானசீகன் · 17.02.19

“அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற இயலவில்லை. ‘போராடுவதற்கான உரிமைகளை மதிக்கிறேன். அவர்களது தரப்பின் நியாயங்களை உணர்கிறேன் . ஆனால் அது அவர்களுக்கும், அரசுக்கும் இடையிலான முரண். எந்தப் போராட்டத்திற்கும் பேச்சு வார்த்தையே தீர்வு என்பதே என் நிலைப்பாடு. அது நிகழாமல் போனதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து அரசு ஊழியர்கள் பெற வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன்’ என்று […]

எழுத்து

நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்

தர்மு பிரசாத் · 17.02.19

ஈழத்து போர்க்காலப் படைப்புகள் கருணையுடன் கை தூக்கிவிடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகி விட்ட பின்னர், சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற்செறிவோ, படைப்புமொழி குறித்த ஓர்மையோ, சொல்முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும் உள்விரிவுமற்ற குறைப்படைப்புகள் ஈழத்தின் நவீன முகங்களாக உரையாடப்படும் போதும், போரின்/ போராட்டத்தின் […]

எழுத்து

ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு

கால.சுப்ரமணியம் · 17.02.19

சென்ற ஆண்டு கலிங்கப் பயணத்தில் உதயகிரி குகைகளைப் பார்த்தது மறக்கமுடியாத சம்பவம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு உண்மையில் அங்கே தான் இருக்கிறது என்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. முன்னால் வைத்திருந்த அறிவிப்பையும் படித்துக் கொள்ளவில்லை. எங்களை அங்கே அழைத்துச் சென்ற தென்னிந்திய வரலாற்றில் ஆழங்கால்பட்ட நண்பர் முன்பே அங்கு சிலமுறை போயிருந்தும் அதை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உதயகிரி என்ற பெயரில் இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் உள்ளது. குழுவை […]

எழுத்து

நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம்

ப.தெய்வீகன் · 17.02.19

ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், […]

எழுத்து

நன்றாக நின்று கொண்டாயா, நன்றி, சுடுகிறேன்!

எம்.கே.மணி · 17.02.19

பல தரப்புகள் சினிமாவிற்கு. அதற்கு எல்லைகள் கிடையாது. எந்த சினிமாக் கலைஞனும் தனது மன மொழியின் வழியே, தான் சொல்லக் கூடிய உண்மைகளை அடைவது தான் எப்போதும் நடக்கிறது. மற்ற வகையினர் இதில் சேர்த்தியில்லை. நான்கு புறத்தில் இருந்து நாற்பது பேர் வைத்து நசுக்கின பழங்களில் இருந்து பஞ்சாமிர்தம் செய்வது ஒரு மரபான தொழிலேயன்றி அதை சினிமா என்று குறிப்பிடக்கூடாது. அப்புறம் நாம் குறிப்பிடுகிற இந்த மன மொழிகளில் பேதமுண்டு. அவற்றில் படிப்பும் அனுபவமும் சேர்க்கிற ருசிக்கு […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன்

பாலா கருப்பசாமி · 17.02.19

1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான […]