துன்பக் கனி
துயரின் நிழலடர்ந்த அறைக்குள் தயங்கி நுழைந்தான் குணா. மங்கிய நீல விளக்கொளியில் யுகனின் முகத்தைப் பார்த்தான். அமைதியும் புன்னகையும் கலந்தொளிரும் பாலகன் ஏசுவைப் போலிருந்தது. பார்த்துக்கொண்டே நின்றான். முகத்தை நோக்கி மெல்லக் குனிந்தான். நெஞ்சுக்கூட்டை உற்றுக் கவனித்தான். சுவாசத்தின் அசைவைக் கணிக்க முயன்றான். நாசியருகே கைவைத்தபோது விரல்கள் நடுங்கின. சலனமேதுமில்லாத நொடிகள். பதற்றத்துடன் காத்திருந்தான். வெம்மை கூடிய மூச்சின் சிறு கற்றையொன்று விரலோரத்தைத் தீண்டிக் கடந்தது. ஆசுவாசத்துடன் நிமிர்ந்து இதுவரையில் இழுத்து நிறுத்தியிருந்த மூச்சை வெளியேற்றிய பின் […]
