Category: எழுத்து

எழுத்து

ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அகவெளிப் பயணங்கள்

சுநீல் கிருஷ்ணன் · 12.10.18

“Eternity” he answered. “Believe it or not, it’s as real as shit.” – Island, Aldous Huxley  ஆல்டஸ் ஹக்ஸ்லியை ஒரு பெயராக எப்போதோ அறிந்திருந்தேன். இப்போது நினைவுகூரும் போது அது ஜூலியன் ஹக்ஸ்லியாக இருக்கக்கூடும். ஜூலியன் ஆல்டஸின் சகோதரர். பேர்போன பரிணாமவியல்  ஆதரவாளர், அறிவியலாளர். இவர்களின் தாத்தா தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி பரிணாமவியல் கோட்பாட்டை தீவிரமாக முன்னெடுத்தவர். சென்ற ஆண்டு திமோதி ஸ்னைடர் எழுதிய ‘கொடுங்கோன்மையைப் பற்றி (On tyranny)’ நூலை […]

எழுத்து

கானுயிர் புகைப்படக் கலைஞர் டி.என்.ஏ. பெருமாளின் பந்திப்பூர் அனுபவங்கள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 12.10.18

(டி.என்.ஏ.பெருமாள் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர். புகைப்படத் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே இருந்த போது அவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இன்றும் வியப்பளிப்பவை. புகைப்படங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றைத் தகுந்த முறையில் புராசஸ் செய்து அச்சிடுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தவர். இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற Royal Photographic Societyயினுடைய Associate-ship 1977ல் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே, 1978, அதே அமைப்பினுடைய Fellowship தகுதியையும் பெற்றார். கர்நாடக அரசு இவரது பணியை அங்கீகரிக்கும் முகமாக […]

எழுத்து

படமெடுத்தாடும் பாய்மரங்களும் மரக்கலக் கொத்தளங்களும் : திரைகடலோடிய சகாப்தங்களில் இந்தியப் பெருங்கடலும் சில வழக்கொழிந்த மொழிகளும் – அமிதவ் கோஷ்

கால.சுப்ரமணியம் · 12.10.18

பாய்மரக்கலங்கள் ஓடியாடிய சகாப்தத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அராபியர், சீனர், கிழக்கு ஆப்ரிக்கர், ஃபிலிப்பினோக்கள், மலேயர், தென்னாசியாக்காரர் ஆகிய சுதேசிக் கடலோடிகள், “லஸ்கர்” என்ற ஒரு இனக்குழுவை உருவாக்கினார்கள். பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், உண்மையிலேயே பல்வேறு இனத்தவர் கலந்து நிறைந்த இந்தக் குழு, ‘லஸ்கரி‘ மொழியை உலகுக்கு அளித்தது. பைபிளில் வரும் பேபல் கோபுரத்தில் நடந்தது போல் ஆங்கிலம், மலாய், ஹிந்துஸ்தானி, சீனம், மலையாளம் என்று கப்பல் தளத்தில் பேசப்பட்ட எல்லா மொழிகளையும் கலந்து, மரக்கலங்களைச் செலுத்த […]

எழுத்து

சி. சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’

பாலா கருப்பசாமி · 12.10.18

‘ஆப்பிளுக்கு முன்’ சி. சரவண கார்த்திகேயனின் முதல் குறுநாவல். 2014ல் வெளிவந்த கிழக்குப் பதிப்பக வெளியீடான ‘குஜராத் 2002 கலவரம்’ என்ற கவனிக்கத்தக்கப் புத்தகத்தை எழுதியவர். இவருடைய இந்த நூல் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனையை முன்வைத்து வரலாற்றுப் புனைவாக எழுதப்பட்டிருக்கிறது. சாண்டில்யன் மாதிரி ஒரு துணுக்கு ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஆயிரம் பக்கம் எழுதும் வகையல்ல, கிட்டத்தட்ட முழுக்கவும் உண்மை. கற்பனையான உரையாடல்கள் மற்றும் சில விவரணைகளைத் தான் அவர் புனைவு என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். புத்தகத்தின் கடைசிப் […]

எழுத்து

வால்டேர் (பகுதி 1)

இரா. குப்புசாமி · 12.10.18

வால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில் ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை ஓர் இலக்கியவாதி ஆக்கியது. 23ஆவது வயதில் ஓர் அங்கதக் கவிதை எழுதியதற்காகப் பாஸ்டில் சிறையில் தள்ளப்பட்டார். 29 வயதில் Comédie-Française என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். 32 வயதில் ஒரு பிரபுவுடன் ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றி தகராறு ஆக மீண்டும் பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1)

மானசீகன் · 12.10.18

சாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாரதியாரை பொருள் புரியாமல் மேடைகளில் ஒப்பிக்க ஆரம்பித்தத் தருணத்தில் கண்டிப்பாய் அதை உணர்ந்திருக்கவில்லை. சாதிக்கு எதிராய் பேசினால் கை தட்டு கிடைக்கும். கீழே நாம் உட்கார்ந்திருந்தால் அதற்கு கண்டிப்பாக கை தட்ட வேண்டும். இவ்வளவுதான் என் புரிதல். நான்காம் வகுப்பு வரை குச்சனூரில் படித்தேன். அப்போது ஒரு நண்பனின் […]

எழுத்து

காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் · 12.10.18

காலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்களை மறப்பதில்லை. யாரோ, எப்பொழுதோ அந்தத் தமிழைக் கண்டு மயங்கி அன்னாரைக் குறித்து நினைக்கும் பொழுது காலமும் தன் அவசர அடிக்கோலத்தைக் கொஞ்சம் நிறுத்தி நின்று கவனிக்கிறது. இல்லாவிட்டால் திரு பக்ஷிராஜன் என்பவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றோ அவர் பாடி எந்த மலரிலோ வந்து காலத்தில் உறங்கிய பாட்டுகள் கண்ணில் பட்டதும் கருத்தில் மின்னுகிறது. உயிர் விளங்கும் பிராணியை நாம் பார்த்தால் […]

எழுத்து

சிறுத்தை நடை

போகன் சங்கர் · 13.09.18

1 ஸ்கார்லெட் அந்த பலகையைப் பார்த்து சட்டென்று நின்றாள். சிறுத்தை நடமாடும் இடம் கவனம். ”இங்கே சிறுத்தை வருமா?” கார்மல் ”எப்பவாவது. போன வருஷம் அதோ அந்த மேட்டுல தேயிலை பறிச்சிக்கிட்டிருந்த பொன்னியோட மகளைத் தூக்கிட்டுப் போயிடுச்சி.” ஸ்கார்லெட் ”அப்புறம் ?” என்றாள் படபடப்போடு. ”அப்புறம் என்ன ?”கார்மலின் முகத்தில் ஒரு இகழ்ச்சி படர்ந்தது ”அன்னிக்கு அந்த சிறுத்தை நிறைஞ்ச வயித்தோட சுகமாத் தூங்கியிருக்கும்.” கார்மலை அந்தக் கணத்திலிருந்து தான் தனக்குப் பிடிக்காமல் போனதா என்று பின்னால் […]

எழுத்து

பாற்குடங்கள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 13.09.18

ஆளரவமற்ற நீண்ட பிரகாரத்தில் வெகு நேரமாய் நிற்கிறேன். யாளி முகம் தாங்கி நிற்கும் கற்தூணில் கொடிமங்கை. என் கண்கள் அவள் மார்பையே உற்றுப் பார்த்திருக்கின்றன. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்க்கிறேன். யாருமில்லை. கோபுர மாடத்திலிருந்து புறாக்கள் படபடத்து அணைகின்றன. கண்கள் மீண்டும் மங்கையின் மார்பில் படிகின்றன. சிற்பியின் கற்பனையா? இல்லை இவள் இப்படித்தான் நின்றாளா? மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பெண்கள். எல்லோர் மார்புகளும் இதே வடிவில். இதே அளவில். விரல்கள் தொட்டுப்பார்க்கத் துடிக்கின்றன. அழகைக் காட்டி நிற்கும் இவற்றை […]

எழுத்து

தீ வளர்க்க… – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 13.09.18

நாள் சாம்பல் நிறத்தில் குளிராகத் துவங்கியது. அந்த மனிதன் பிரதான யூக்கான் தடத்திலிருந்து விலகி அங்கிருந்த சரிவின் மேலேறிய போது குளிர் மிதமிஞ்சியிருந்தது. வானம் ஆழ்ந்த சாம்பல் நிறத்துடன் காணப்பட்டது. அந்த சரிவின் உச்சியில் சொற்ப அளவிலேயான பயணிகள் செல்கிற, கண்களுக்குத் தெளிவாகப் புலப்படாத மற்றொரு தடம் கிழக்கு நோக்கிச் சென்றது. செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த ஊசியிலை மரங்களின் ஊடாக அத்தடம் அமைந்திருந்தது. செங்குத்தான அந்த சரிவின் மீதேறியதும் அதன் உச்சியில் நின்று மூச்சு வாங்கியவாறு தனது […]

எழுத்து

அழிந்துபோன நூல்களும் நகரங்களும்

கணியன் பாலன் · 13.09.18

அழிந்துபோன நூல்கள்:     பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, பரிபாடல், சிற்றிசை, பேரிசை, சிற்றிசைச்சிற்றிசை, பண்டைய இசை நுணுக்கம், பேரிசை, யாழ்நூல், அகத்தியம், பரதம், செயிற்றியம், முறுவல், கூத்துவரி, கூத்தநூல், நுண்ணிசை, குருகு ஆகிய 20 நூல்களும் அழிந்து போயின. இவை சங்க செவ்வியல் இலக்கியகால, சங்கம் மருவியகால நூல்கள் எனலாம். காமவிண்ணிசை, மகிழிசை, குணநூல், சயந்தம், பிந்தைய இசை நுணுக்கம், இசைத்தமிழ் 16 படலம், மதிவாணர் நாடகத்தமிழ், பஞ்சபாரதீயம், வியாழமாலை அகவல், பரதசேனாபதீயம், […]

எழுத்து

உயிர்ப்பிழைப்பின் வேட்கை

கோகுல் பிரசாத் · 13.09.18

‘வலியது வெல்லும்’ என்பது வாழ்வை வன்முறைக் களமாக்கி மனிதர்களைக் கொதிநிலையிலேயே தத்தளிக்க வைக்கும் குரூர உத்தி. கீழே அதல பாதாளம் இருக்க உச்சிமுனையில் நிற்க வைத்து, ஈட்டியை நெஞ்சுக்கு நேராக நீட்டி ‘ஆடு ஆடு’ என்கிறர்கள். தவறி விழுந்தால் அது நம்முடைய இயலாமை அன்றி சமூக அமைப்பின் கோளாறு அல்ல என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அந்த வாசகம் விவிலிய மேற்கோள் போல பாவிக்கப்பட்டு குருதி வழிய அதற்கு விசுவாசமாக இருப்போமே ஒழிய ‘கிஸ் மை ஆஸ்’ சொல்ல […]