Category: மதிப்புரை

எழுத்து

துக்க ருசி: வி.அமலன் ஸ்டேன்லியின் “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்”

கடலூர் சீனு · 25.07.22

“நான் என்னையே தேடிச் செல்கிறேன். இத்தேடலில்தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின்போது நான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது.” பிரமிள் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டதே மேற்கண்ட பத்தி. கலைகள் எனும் பாதை வழி நிகழ்வது சாராம்சம் நோக்கிய பயணமே. கலையின் பண்பும் பயனும் அதுவே. இந்திய மரபுக் கலைகள் யாவும் கொண்டிருந்த இந்த அடித்தளம், தமிழ் நிலத்தில், நவீன யுகத்தில், நாவல் கலையில் நவீனத்துவ நோக்கும் அழகியலும் உள்ளே வருகையில் பிரக்ஞைபூர்வமாகவே தவிர்க்கப்பட்டது. அந்தத் தவிர்ப்புக்கு […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 12): நிலமும் திரையும்- செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.07.22

ஈரோடு நண்பர் குமரன் எனக்கு அறிமுகமானது இருபதாண்டுகளுக்கு முன்பு. சென்னையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ராஜேந்திரன் ‘அஜித்துக்கு கதை சொல்லிருக்காரு’ என்று மிதப்புடன் சொன்னது நினைவிலிருக்கிறது. சினிமாவுடன் தொடர்புடைய நபரை முதன்முதலாகச் சந்தித்தது அப்போதுதான். சினிமாவைவிட சினிமாவின் உருவாக்கம் குறித்த தகவல்கள் எப்போதும் ஆர்வமூட்டுபவையாக இருந்த ஒரு பருவம். அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதுபோல அடங்கிய குரலில் புன்னகைத்தபடியே பேசிக்கொண்டிருந்த குமரனை இரண்டு மாதம் கழித்து ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது சற்றே […]

எழுத்து

தடமற்ற இடம்

வி.அமலன் ஸ்டேன்லி · 25.07.22

துருக்கிய நாவலாசிரியை எலிஃப் ஷஃபாக் எழுதியது. 2009-ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் ஏழரை லட்சம் பிரதிகளைக் கண்டது. பேராசிரியர் ரமீஸ் மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார். சூஃபிவழி பயணிப்பதால் கதை மிகச் சிறப்பாக அவரால் பகிரப்பட்டுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாவலை ஆழ்ந்து நாலைந்து மாத காலம் இடைவெளி விட்டு விட்டு முழுதாக மறுபடியும் மறுபடியும் வாசித்தது நிறைவாயிருந்தது. மொழிபெயர்ப்பு நாவல்களில் ரஷிய நாவல்களுக்கும் சில இந்திய நாவல்களுக்கும் பிறகு இதமான, சுவையான வாசிப்பின்பம் திளைத்து விதந்தோதி நின்றது. கடந்த […]

எழுத்து

பூட்லேரின் சொர்க்கமயமான தீமையின் மலர்கள்

நம்பி கிருஷ்ணன் · 25.04.22

பூட்லேரைப் பொறுத்தமட்டில் அவருடன் தொடர்பிலிருந்த பெண்களுடனேயே ஒருவர் ஆரம்பிக்கலாம். லே ஃப்லேர் டு மால் (Les Fleurs du Mal, The Flowers of Evil) தொகுதியின் முதல் கவிதை ஒரு தாயின் குரலில் தொடங்குகிறது, அனைத்துப் பெண்களின் விதிகளிலிருந்தும் தனக்காக இந்தப் பிரத்யேக விதியைத் தேர்ந்தெடுத்ததற்காக, முஷ்டியை மடக்கியபடி கடவுளிடம், கோபத்துடன் மன்றாடுவதைப் போல் அது தொடங்குகிறது: “Since I was chosen of all my sex bring this scandal to my bed and board […]

எழுத்து

இராசேந்திர சோழன் கதைகளில் ஆண் – பெண் உறவு (பகுதி 1)

மானசீகன் · 24.02.22

ஆண்- பெண் உறவின் புதிர்களும் பாவனைகளும் எப்போதும் புனைவுலகின் முடிவுறாத கருப்பொருளாக நீடித்திருக்கின்றன. அந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக விதிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. தேச, கலாச்சார, மொழி சார்ந்த வேறுபாடுகளுக்கேற்ப ‘ஒழுக்கம்’, ‘கற்பு’ ஆகியவை குறித்த வரையறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கின்றன. பெருக்கெடுத்தோடும் சுனை நடுவே, குறிஞ்சிப் பூக்களின் வாசம் கமழ, இருள் போர்த்தி முயங்கும் சங்கக் காதலர்களும், பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பி வருவதற்குள் தொழிற்சாலையிலிருந்து பெர்மிஷன் போட்டு ஓடிவந்து தட்டப்படாத கதவுகளில் மனதை வைத்தபடி அவசரமாய் நிகழ்ந்து […]

எழுத்து

புதினங்கள் புதிது

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.22

2021ம் ஆண்டின் இறுதியில் புதிய நாவல்கள் சில வெளியாயின. அவற்றுள் ஆர்.சிவகுமாரின் ‘தருநிழல்’, லாவண்யா சுந்தர்ராஜனின் ‘காயாம்பூ’, தூயனின் ‘கதீட்ரல்’, கிருஷ்ணமூர்த்தியின் ‘பாகன்’ ஆகிய நான்கு நாவல்களை வாசிக்க முடிந்தது.  தருநிழல், பாகன் இரண்டு நாவல்களுக்கும் சில பொதுத்தன்மைகள் இருந்தன. இரண்டுமே தந்தை-மகன் உறவை மையப்படுத்தியிருந்தவை. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் இந்த உறவுநிலையில் எந்த வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் குறிப்புணர்த்தியவை. சித்தரிப்பில் புறவயமான அணுகுமுறையைக் கொண்டிருந்தவை. நேரடியான சம்பவங்களாலன்றி நினைவுகூறல் உத்தியைக் கொண்டு அமைக்கப்பட்டவை. அளவில் […]

எழுத்து

இன்மையின் இருப்பு: அபியின் கவிதைகள்

சுநீல் கிருஷ்ணன் · 24.02.22

அந்தி விளையாட்டு முடிகிறது வாசற்படிகளில் பிள்ளைகள் வந்து தளைப்படுகின்றனர் பேச்சும் சிறு சிரிப்புகளும் விசிறி மஞ்சளாய்க் கனல்கிறது மாலை கதை மனிதர்கள்  ஆழங்களிலிருந்து மின்னிக்கொண்டு  வருவதும் போவதுமாயிருப்பர் ஏதேதோ அடுக்குகளிலிருந்து  ஏதேதோ அரூபங்கள்  பறந்து படிந்து மறையும் காலத்துள் நிகழ்ந்திராத  காலம் தகதகத்து பிள்ளைகளின் கண்களில் இறங்கும்  கதைகள் சற்றே வண்ணம் கலங்கி, எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில்  உயிர் சேகரித்துக்கொண்டு பழைய இருப்பிலேயே  புதிது புதிதாகும் எல்லாவற்றுடனும் இழைந்து இருத்தலே  காத்திருத்தலாக நான் (மாலை- கதை, அபி) […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 7): கு.அழகிரிசாமியின் சமூகப் பார்வை

மானசீகன் · 30.01.22

கு.அழகிரிசாமியின் கதை வெளியெங்கும் எளிய மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அவர் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மிக முக்கிய குணாம்சமாகப் பசி இருக்கிறது. யாரோ சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையை வழித்துச் சாப்பிடுகிற ராஜா (ராஜா வந்திருக்கிறார்), பக்கத்து வீட்டில் தந்த கஞ்சியை சகோதரன் ‘நியாயம்’ பேசிக் கொட்டிவிட்டதற்காக அம்மா மீது கோபம் கொள்ளும் சிறுவன் (இருவர் கண்ட ஒரே கனவு), பசியை வெல்வதற்காக உடலைத் தந்துவிட்டு காசைப் பார்த்தவுடன் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கும் இளம்பெண் (திரிபுரம்), செருப்பு தொங்க […]

எழுத்து

வெளிறிய மயிலிறகு: கவிஞர் கண்ணகன்

யூமா வாசுகி · 30.01.22

கண்ணகன் பற்றி அண்ணாச்சிக்கு… கண்ணகனுக்கும் எனக்கும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேலான நட்பு. மிளிரும் அவன் கண்களும் அடர்கரும் பெரிய தாடியும் ஒல்லி உடல்வாகும் எல்லாம் சேர்ந்து, அவன் உடல்மொழியிலும் முகபாவத்திலும் குழந்தை மையை ஏற்றி வைத்துக் கொண்டாடிக்கொண்டேயிருந்தன. மாநிறம் என்று வழங்கும் உடல் வண்ணம், தாராளமாக விட்டு வளர்த்த சிகை. அந்தப் பூரிக்கும் இளமையின் துள்ளலும் துடிப்பும் ஆர்ப்பரிப்புமெல்லாம் கவிதை மட்டுமாகத்தானிருந்தது. விவரிப்புக்கு அப்பாற்பட்ட மனிதநேயமாக இருந்தது. சொல்லிலும் செயலிலும் அவன் பேரற்புதமாகவே இறுதிவரை திகழ்ந்துகொண்டிருந்தான். […]

எழுத்து

கதே: முழுமையான வாழ்வின் இலக்கியம்

இரா. குப்புசாமி · 30.01.22

ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது. அவன் பிறக்கும்வரை அது தன்னை மலடியாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட காப்பியம் பிறந்த பிறகு தாய்மையால் பூரிக்கிறது. தனக்கு இனி என்றுமே அழிவில்லை என்று இறுமாந்து கொள்கிறது. அந்தக் காப்பியம்தான் அந்த மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் அந்தத் தேசத்தையே உரிமையாக்கும் சாசனமாக அன்று முதல் மாறுகிறது. ஹீப்ரு மொழிக்கு ஒரு மோஸஸ், கிரேக்க மொழிக்கு ஒரு ஹோமர், […]

எழுத்து

கந்து வட்டியும் சூப்பர் ஹீரோக்களும்!

கிங் விஸ்வா · 30.01.22

கதை உருவான கதை: 2015ல் அமெரிக்காவில் இரண்டு விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ஒன்று, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பக் கட்ட முடியாதவர்களிடம் இருந்து வசூலிக்கும் முறைகள். இரண்டாவது விஷயம், விக்கிலீக்ஸ். இந்த இரண்டையும் வைத்து, இளைய தலைமுறை காமிக்ஸ் படைப்பாளிகளான டோனியும் ஷாவும் ஒரு காமிக்ஸை உருவாக்க நினைத்தார்கள். அதே சமயம் சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களில் இருக்கும் சில விஷயங்களையும் பகடி செய்து உருவாக்கியதே இந்தக் காமிக்ஸ் தொடர்.  தலைப்பு: The Paybacks கதாசிரியர்: டோனி […]

எழுத்து

ஆண்டன் செகாவ் – சிறுகதை முதல்வர்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.12.21

1 உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் தல்ஸ்தோய்க்கும் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் ஆண்டன் செகாவ். முந்தைய இருவரும் நாவல்களில் செய்திருக்கும் சாதனைக்கு நிகராக செகாவ் சிறுகதைகளில் நிகழ்த்தியிருக்கிறார்.  தமிழில் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும் என பெரும் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு தீவிரமான மொழியாக்கங்கள் செகாவின் கதைகளுக்கு இல்லை.  ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்களின் அரசியல் நிலைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை செகாவ் கொண்டிருந்ததே அதற்குக் காரணமாக இருக்கமுடியும். இலக்கிய […]