Category: மதிப்புரை

எழுத்து

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி: மாண்டேக் சிங் அலுவாலியாவின் “Backstage”

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 28.09.21

பெரும்பாலான சமயங்களில், வரலாறு நிகழும்போது, அதைச் சமூகம் உணர்ந்து கொண்டாடுவதில்லை. காலம் கடந்து பின்னோக்கிப் பார்க்கையில்தான், அது புரிபடுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி அப்படிச் சமகாலத்தில் கொண்டாடப்படாத வரலாறு. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால், இந்தியா உலகின் மிக வலுவான பொருளாதாரங்களுள் ஒன்றாக இருந்தது. வேளாண்மை, கைவினைத் தொழில், ஜவுளி போன்ற துறைகளில் மிக முன்னேறிய நாடாக இருந்தது.  உலகப் பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்கு 24% ஆக இருந்தது. ஆனால், பல நூறு […]

எழுத்து

சுஜாதாவை என்னதான் செய்வது?

எம்.கோபாலகிருஷ்ணன் · 29.08.21

தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்த காலத்தில் முதன்முதலாகக் கற்றுக்கொண்ட ஒன்று, யாரிடமும் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லக்கூடாது என்பதுதான். சுஜாதா என்ற பெயரே உச்சரிக்கக் கூடாத ஒன்று என்பது அப்போது மட்டுமல்ல, இப்போதும்தான்.  சுஜாதா ஒரு வெகுஜன எழுத்தாளர். வணிகப் பத்திரிகையில் மலினமான யுத்திகளுக்காகவும் வியாபாரப் பெருக்கத்துக்காகவும் எழுதிக் குவிப்பவர் என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் அவர் எழுதுவதெல்லாம் அவரது மேதைமையைக் காட்டுவதற்காகவே ஒழிய உண்மையில் இலக்கியத்தின்பால் அவருக்கு அக்கறை இல்லை என்று […]

எழுத்து

அழுமூஞ்சிப் பொட்டணத்தை எள்ளல் கைகொண்டு பிரிப்பவன்: இசையின் கவிதைகளை முன்வைத்து

மனோஜ் பாலசுப்ரமணியன் · 29.08.21

ஒரு முறை சத்தியமூர்த்தி (aka) கவிஞர் இசை சொன்னார், “விழுகுற அன்பு வந்து விழுந்தா போதும் நண்பா”. நான் துணுக்குற்றேன். அந்தச் சொல்லிணைவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அன்பை ஏன் விழுதலுடன் இணைத்துச் சொன்னார்? அன்பை மழை என்று சொல்கிறாரா அல்லது மழைதான் அன்பா? தனித்தனியாக இயங்கும் போது சாதாரணமாக இருக்கும் சொற்கள், விசித்திரமான இணைவில் மிக அசாதாரணமான ஒன்றாக எழுகின்றன. “கவிதையின் அடிப்படை அலகு சொல்” – என்பதை இசையின் கவிதைகளில் அழுத்தமாகக் காணலாம். சென்ற […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமியின் கதைகளில் தொன்மம்

மானசீகன் · 27.07.21

எந்தக் கலைப் படைப்பும் அந்தரத்திலிருந்து கிளம்பி வருவதில்லை. ஏற்கனவே நிலைகொண்டிருக்கும் மரபுகளும் தொன்மங்களும் ஒரு படைப்பாளனின் நனவிலி மனதை ஆட்கொள்ளாமல் இருக்க முடியாது. மகத்தான படைப்பாளர்களின் படைப்புகளில் அவர்கள் வாழும் மண், பேசும் மொழி சார்ந்த தொன்மங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். தமிழில் புனைவெழுத்தின் முன்னோடியாகக் கருதப்படும் புதுமைப்பித்தன் பல தொன்மக் கதைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய ‘ சாப விமோசனம்’, ‘அகல்யா’ போன்ற கதைகள் இராமாயணத் தொன்மத்தையும், ‘அன்றிரவு’ மாணிக்கவாசகர் வரலாறையும், ‘சிற்பியின் நரகம்’, ‘கபாடபுரம்’ ஆகியவை தமிழ் வரலாறு […]

எழுத்து

மானுடத்தின் எல்லைகள் – பால்சாக்கின் “தந்தை கோரியோ”

பாலாஜி பிருத்விராஜ் · 27.07.21

ஓர் அழகியல் மரபின் ஆரம்பகாலப் படைப்புகளைப் படிப்பது எப்போதும் ஆர்வமூட்டுவது. வளர்ந்த மூங்கிலைப் பின்சென்று குருத்து நிலையில் பார்ப்பதைப் போன்ற உணர்வு அது. எந்தக் கணு எவ்வாறு முளைத்து வளர்ச்சி பெறப்போகிறது என்கிற சாத்தியத்தை அதில் காணும்போது ஏற்படும் கிளர்ச்சி அலாதியானது. மேலும் அவ்வகையான அழகியல் எழுந்து வருவதற்கான தேவையும் எவ்வகையில் அது முந்தைய வடிவிலிருந்து வேறுபட எத்தனிக்கிறது என்பதை அவதானிப்பதும் ஒரு இலக்கிய வாசகர் அம்மரபைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது. பால்சாக்கின் படைப்புகள் இலக்கியத்தில் யதார்த்தவாதத்தைத் தொடங்கி […]

எழுத்து

அலங்காரத்தம்மாள் வந்தாள்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 27.07.21

In most of the cases adultery is purely accidental. அதன் பின்விளைவுகளும் விபத்தைப் போலவே நிரந்தரமாக ஒரு வலியாகவோ, ஊனமாகவோ எஞ்சிவிடுகின்றன. ஒரு தனிமனிதனின் ஆன்மாவில் அல்ல, நம்பிக்கைகுரிய ஓர் உறவின் ஆன்மாவில் ஏற்படும் உடைவே அடல்ட்ரி. ஒரு பெண், எங்காவது ஓர் ஆணை மிஞ்சிவிட முடியுமென்றால், அடல்ட்ரியின் வழியாக அவனை வீழ்த்துவதின் மூலமாகவே சாத்தியம். இந்த வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்கள் வன்முறையைக் கையாள்கிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் வகிக்கும் பாத்திரங்களிலேயே ஆகப் பரிதாபகரமானது அவன் ஒரு Cuckold-ஆக […]

எழுத்து

உப்பு மலையின் நுனி

தென்றல் சிவகுமார் · 27.07.21

“காஃபி தாகம் எடுக்குது” என்பாள் எனதொரு தங்கை. அயர்ச்சியை இதைவிட அழகாகச் சொல்ல முடியாதென்று தோன்றும் எனக்கு. பால்யத்திலிருந்து பதினுக்கு, பதினிலிருந்து உலகுக்கு என்று பகுதிப் பகுதியாக நிகழ வேண்டியது மனித வாழ்வின் நகர்வு. இதனைச் சிதைத்து, வரம்புகளை அழித்து, வாழ்க்கை ஆனந்தை அவன் பால்யத்திலிருந்து நேராக உலகுக்குள் தள்ளிவிடுகிறது. உலகின் ஒளியிலிருந்து விலகி, தனக்கு விதிக்கப்பட்ட இருளுக்குள் சென்றவன், மீண்டு உலகுக்குள் திரும்பும்போது இருளடைத்த மங்கல் ஒளியே அவனுக்கு எஞ்சுகிறது. ஒருவனது மொத்த வாழ்க்கையில் ஒரு […]

எழுத்து

அ.மாதவையா: நவீனத்தின் முதல் குரல்

மானசீகன் · 24.06.21

1 காப்பியக் காலத்தில் நாம் மதம், மொழி, இனம் வழியாகப் பல மையங்களைக் கட்டமைத்தோம். அதற்குப் பிறகு ‘கதை’ என்கிற விஷயம் பெரிய அளவில் வேறு வடிவம் எடுக்கவில்லை. சொல்லப்போனால், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்கிற பெயரில் வர்ணனைகள், கேலிகள், ஆபாசம் என்கிற அளவிலேயே நம் மொழியும் கவித்துவமும் இலட்சியவாதம் கொண்ட பெருங்கற்பனைகளும் சுருங்கிப் போய்விட்டன. இன்னொரு புறத்தில் பௌராணிகர்கள் ‘கதையை’ பக்திக்கான கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டு புராணங்களிலிருந்து உருவியதைச் சொந்தச் சரக்குகளோடு சேர்த்து மக்கள் கூட்டத்தை வாய்மொழியால் புளகாங்கிதம் அடையச் […]

எழுத்து

பழங்குடிகளைப் புரிந்துகொள்வது எப்படி?

மருதன் · 24.06.21

ஒருமுறை கள ஆய்வுக்காக இமயமலை சென்றிருந்தபோது, பழங்குடி கிராமமொன்றில் சில முதியோர்களைக் கண்டேன். உங்களை ஒரு படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல, உலகளவில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய சுபத்ரா மித்ரா சன்னா. தன்னுடைய புதிய நூலில் (Anthropological Perspectives on Indian Tribes, 2020) இந்தப் புகைப்பட அச்சத்துக்குப் பின்னாலுள்ள மானுடவியல் காரணங்களை அவர் விவாதிக்கிறார். என்னை நீங்கள் படம் எடுக்கும்போது […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 9): அகத்தின் ஆழம் தேடி… – மயிலன் ஜி. சின்னப்பனின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.06.21

2019 ஜூன் மாதத்தில் ஒரு நாள் சாலை விபத்தொன்றில் சிக்கிய மோகன் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த இரண்டாம் நாள் படிப்பதற்கு ஏதாவது புத்தகம் வேண்டுமெனக் கேட்டார். கூடவே, ஆனந்த விகடனில் வந்திருக்கும் கதையைப் பற்றி சிலர் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னார். இரண்டொரு புத்தகங்களுடன் ஆனந்த விகடனை வாங்கிச் சென்றேன். அதில் வெளியாகியிருந்த ‘அன்நோன்’ கதையைப் பற்றி அறிந்திருந்தவர், ‘இந்தக் கதையை இப்போது […]

எழுத்து

ஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 24.06.21

மகிழ் ஆதன், ஒன்பது வயதில், தனது முதல் கவிதைத் தொகுப்பை – அவனது தந்தையால் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு – வெளியிட்டிருக்கிறான். நான் அறிந்த வரையில் தமிழில் ஒரு குழந்தையால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். வள்ளலார் குழந்தையாக இருக்கும்போதே முருகனின் மீது பாடல் இயற்றியதாகச் சொல்வார்கள். குழந்தை மேதைகளுக்கு நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஞானசம்பந்தர், இராமானுஜர், வள்ளலார், பாரதியார் என மத்திய காலத்திலிருந்து நவீன காலகட்டம் வரை மகிழ் ஆதனுக்கு இவர்களே மூதாதைகள். கவிதையின் […]

எழுத்து

அந்த நீர்தான், அதே நீரன்று: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ 

மானசீகன் · 25.04.21

நவீன மனிதனின் மெய்யியல் தேடல்களை விவரிக்கும் நாவல்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை. சிலர் உடனே ‘ பொய்த்தேவில்’ வரும் சோமு முதலியைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். லௌகீகத்தின் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் துறவையோ அல்லது அதற்கு நிகரான காவி வேஷத்தையோதான் தமிழின் பல நாவல்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பேசியிருக்கின்றன. ஜெயகாந்தன் காவியை உடுத்தியவுடனே ஒருவனைச் சகலமும் அறிந்த ஞானியாக்கி விடுவார். அந்தச் சாமியாரின்/ பைத்தியக்காரனின் ஆணவம் நிரம்பிய அலட்டலான சவுக்கடிக்கு முன் சாதாரண மனிதன் ஒடுங்கி […]