Category: மதிப்புரை

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம்

மானசீகன் · 25.09.20

காமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும்  பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஈர்ப்பு, காதல் ஆகியவற்றுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கும் தனி மனிதனின் அளப்பரிய சாதனைகளுக்கும் கூட காமமே அடிப்படையாக இருக்கிறது. நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல் பிரபஞ்சத்தின் உயிர்கள் காமத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றன அல்லது சபிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மகத்தான படைப்பாளியை மதிப்பிட காமம் குறித்த சித்திரிப்புகளை மிக முக்கியமான அளவுகோலாகக் கொள்ளலாம். தமிழிலக்கியப் பரப்பில் காதல், பாசம், […]

எழுத்து

சிறிய உலகின் பெரிய விஷயங்கள்: சாரா ஜோசஃபின் ‘ஆலாஹாவின் பெண்மக்கள்’

கே.என்.செந்தில் · 24.08.20

“முகத்தை வெளியே காட்டாமல் பாயைத் தொங்கவிடும் கொடியின் கீழே இருட்டில் மெல்ல மெல்ல கரைந்து போய்க்கொண்டிருக்கும் பெரிய அத்தை, எங்கே இருக்கிறார்களெனத் தெரியாமல் அலைந்து திரியும் நோனு அத்தையும் பேபியும், மெளனமாகிப் போன அம்மா, சிரிக்காத சின்னம்மா, இரண்டாயிரம் ரூபாய் சீதனத்தைத் தராததைக் காரணம்காட்டி குஞ்ஞிப்பாலுவால் பிறந்த வீட்டிற்கு வர அனுமதி மறுக்கப்பட்ட சிய்யம்மா, தொடர்ந்து வேதனைகளைப் பார்த்துப் பார்த்தே வயதாகிப் போன பாட்டி, ஆன்னியிடம் கூட மகிழ்ச்சியாக உரையாடாத குட்டிப் பாப்பன். எழுதியதை மாய்த்து விடலாம், […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 20.07.20

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே […]

எழுத்து

சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு

ரா.கிரிதரன் · 20.07.20

யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருகும் ஶ்ரீதர் நாராயணன் எழுதிய கத்திக்காரன் கதைத் தொகுப்பில் மிக அநாயசமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் கதை என ‘புதிய நிலம்’ கதையைச் சொல்ல முடியும். சிறு காதல் கதையாகத் தொடங்கிய கதை, மனிதன் நிலத்தைக் கொண்டு நினைவினூடாக செல்லும் அகப்பயணங்களைச் சீராக நம்முன்னே நிகழ்கிறது. சவிதா எனும் இந்தியப்பெண் அவளது அமெரிக்க நண்பர்களுடன் கழிக்கும் ஓரிரு மணிநேரங்களில் நிகழும் கதை என்றாலும் மாறும் நிலம் வழியே வரலாறு நெடுக மனிதர்கள் அடையக்கூடிய புது மாற்றங்களை […]

எழுத்து

ஜெயமோகனின் கதைத் திருவிழா

விஷ்வக்சேனன் · 16.06.20

சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு பிடி யானையை வெடி வைத்துக் கொன்ற செய்தியைக் கேட்ட போது நினைவுக்கு வந்த முதல் விஷயம், ஜெயமோகன் எழுதிய ராஜன் என்ற சிறுகதை தான். ராஜன் ஒரு யானையைப் பற்றிய கதை. தென் திருவிதாங்கூரில், சிற்றூர்களின் மாடம்பிகளான இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு கர்வப் போட்டியில், பர்வதராஜன் என்ற அந்த யானையை விஷம் வைத்துக் கொல்ல ஒரு தரப்பின் எஜமானன் முடிவெடுத்து தனது பாகனிடம் பேசுவதில் தொடங்குகிறது அக்கதை. பூதத்தான் […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்: கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 16.06.20

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப், சித்துராஜ் பொன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராம் தங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோரது சிறுகதைகளைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகளைக் குறித்து வெளியாகிறது இந்தப் பகுதி. * எழுதுவதும் வெளியிடுவதும் பதிப்பிப்பதும் இன்று மிகச் சுலபமான காரியங்கள். இணைய இதழ்களின் வழியாக உலகளாவிய வாசக கவனிப்பையும் பெற முடிகிறது. இரண்டாயிரத்தில் நாவல்கள் பெரும் வீச்சில் எழுதப்பட்ட போது சிறுகதைகளின் மீதான […]

எழுத்து

போரும் காமமும்: அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 16.05.20

மண்ணுக்கும் பெண்ணுக்குமான இச்சையே மனித வாழ்வைச் செலுத்தும் இரு புள்ளிகள். பிற உயிர்களைப் போல இயற்கையின் ஒரு பகுதியாக இருந்த மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திய எல்லைகளை அறிவின் திறத்தால் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட போதிலும் ஆதாரமான அந்த இரண்டு விசைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் அவ்விரு விசைகளே இத்தனை தொலைவு அவனைச் செலுத்திக்கொண்டு வந்துள்ளன. இன்றைய மனித வாழ்வின் அனைத்து சாதனைகளையும் முன்னேற்றங்களையும் நவீன அடையாளங்களையும் பகுத்துக்கொண்டே சென்றால் அவற்றின் ஆழத்தில் எஞ்சி நிற்பது இந்த […]

எழுத்து

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்

நம்பி கிருஷ்ணன் · 14.04.20

எடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலினி தான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. மார்கீடுசாதின் (Marquis de Sade) ‘120 டேஸ் ஆஃப் சாடம்’ என்ற நூலின் திரைவடிவம், இது துல்லியமான புவி மற்றும் வரலாற்றுப் பின்புலங்கள் சேர்த்து சாதின் அழகியலை சமகாலத்துக்குரியதாக்குகிறது. சீரணிக்க முடியாத மிகைநுகர்வுகளை விவரிக்கும் சாதின் நாவலில், சமூகத் […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை – இன்று: கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 14.04.20

தூயனின் சிறுகதைகள் குறித்த முதல் பகுதியையும், சுரேஷ் பிரதீப்பின் சிறுகதைகளைக் குறித்த இரண்டாவது பகுதியையும் சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் பற்றின மூன்றாவது பகுதியையும் ராம் தங்கம் சிறுகதைகளைக் குறித்த நான்காவது பகுதியையும் தொடர்ந்து ஐந்தாவதாக இப்பகுதி கிருஷ்ணமூர்த்தியின் கதைகளைக் குறித்தது. இந்த வரிசை தகுதியின் அடிப்படையிலானது அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். தொகுப்புகளை வாசித்த பின் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது எழுதப்பட்டவை. அவ்வளவே. * நூற்று இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிறுகதையில் இனியும் புதிதாய் சொல்ல […]

எழுத்து

கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு

விக்னேஷ்வரி சுரேஷ் · 14.04.20

இன்றளவும் குழந்தைகளின் அக – புற உலகை கு.அழகிரிசாமி போல யதார்த்ததிலிருந்து நூலிழை கூட விலகாமல் யாரும் கதை எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அனேக இலக்கியத்தில் குழந்தைகள் என்றால், கடவுள்கள். மிச்சத்தில் அவை சாத்தான்கள். ஆனால், அழகிரிசாமி கதைகளில் மட்டும் அவை கவித்துவ வர்ணனைகளின் சுமையின்றி குழந்தைகளாகவே திரிகின்றன. என் பாலர் பள்ளி ஆசிரியை அனுபவத்தில், நம்மை விட கூடுதல் கருணை, ஈகோ, சாந்தம், குரோதம், மகிழ்ச்சி என்பதாக உணர்வென்னும் கோப்பை தளும்ப நடமாடும் குழந்தைகளைக் காண்கிறேன். […]

எழுத்து

உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் : ‘திருக்கார்த்தியல்’ – ராம் தங்கம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.20

குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப் பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என தமிழின் சிறுகதை முன்னோடிகள் பலரும் குழந்தைகளின் உலகை கதைகளில் எழுதிக் காட்டியுள்ளனர். அதிலும் கு.அழகிரிசாமியின் கதைகள் நமக்குக் காட்டும் சிறுவர்களின் உலகம் உயிர்ப்புமிக்கது. ‘உழைக்கும் சிறுவர்கள்’ தமிழ் இலக்கியத்துக்கு புதியவர்கள் இல்லை. தி.ஜாவின் ‘சிலிர்ப்பு’ கதையின் காமாட்சியையும், ‘சாப்பாடு போட்டு பத்து ரூபாய்’ கதையின் அக்கணாகுட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். இதன் தொடர்ச்சியாக அண்மையில் நம்பிக்கை […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.01.20

சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் இது. தூயன், சுரேஷ் பிரதீப் ஆகியோரது கதைகளைத் தொடர்ந்து வெளியாகும் மூன்றாம் பகுதி. * உலகெங்கிலும் மனித வாழ்வுக்கென பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. அவ்வாறான தனித்துவமான குணாம்சங்களை சுட்டிக் காட்டுபவையே […]