“அதுதான் நமது வழி”: Master and Man
1895-இல் எழுதப்பட்ட “மாஸ்டர் அண்ட் மேன்”, தல்ஸ்தோயின் நீண்ட சிறுகதைகளில் ஒன்று. வல்லிக்கண்ணன் “இரண்டு பேர்” என்ற தலைப்பில் அக்கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குற்றவுணர்ச்சி, மன்னிப்பு, மீட்சி என்று விரியும் தல்ஸ்தோயின் படைப்புலகத்தை ஒட்டிய புனைவுதான் இக்கதை என்றாலும், தடையற்ற இலட்சியத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு கதையின் மேல்தளத்தில் நகர்கிறது. உட்தளத்தில் கதை ஒரு நில உரிமையாளருக்கும், அவரிடம் தொடர்ச்சியாக வேலைபார்த்து வரும் ஊழியருக்கும் இடையிலான உறவுகளின் தன்மையை ஆராய்கிறது. ரஷ்ய நிலப்பிரபுத்துவத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் ஏற்கும் மறுக்கும் […]
