Category: மதிப்புரை

எழுத்து

பொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்

சி.சரவணகார்த்திகேயன் · 20.09.19

‘த்ரில்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மருத்துவத் துறையில் ஓர் அர்த்தமுண்டு. மாரில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்தால் கேட்கும் இருதயத்தின் வித்தியாசமான அதிர்வை அது குறிக்கும். இலக்கியத்திலும் கிட்டத்தட்ட அதை ஒட்டிய பொருள் தான். நன்றாக வனையப்பட்ட‌ த்ரில்லரொன்றை வாசிக்கையில் இதயம் தடதடக்கத்தான் செய்யும்! முத்தமும் த்ரில் தான், யுத்தமும் த்ரில் தான். இரண்டிலும் ஆர்வமும் பதற்றமும் தொற்றிக் கொள்ளும். கவனித்தால் இரண்டிலுமே ஆதார போதை “அடுத்து என்ன நடக்குமோ?” என்ற நிச்சயமின்மை. அந்தப் புகைமூட்டம் வாசகனுள் கிளர்த்தும் ஊகங்கள் […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 7) – பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி · 20.09.19

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை என்ற தலைப்பில் 1984ல் பிரமிளின் கட்டுரைப் புத்தகம் ஒன்று வெளியானது. (அமேசான் தளத்தில் கிடைக்கிறது) ஈழத் தமிழர் பிரச்சினைகளைத் தொடக்கத்திலிருந்து புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் இது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ‘புது யுகம்’ என்ற இதழில் வெளிவந்துள்ளது. அதன் முதல்வரியே இப்படித்தான் ஆரம்பிக்கிறது: ”இலங்கைக்குப் பிழைக்கப் போன தமிழர்கள் அங்கே தனிநாடு கேட்கிறார்கள் – இது, இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்ராயம்.” யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் […]

எழுத்து

இருப்பே சாராம்சம் – சர்வோத்தமன் சடகோபன்

சர்வோத்தமன் சடகோபன் · 17.08.19

உங்களை ஒருவன் கன்னத்தில் அறைந்து விடுகிறான். நீங்கள் அவனைத் திரும்ப கன்னத்தில் அறைந்து விடுகிறீர்கள். கணக்கு தீர்ந்து விடுகிறது. உங்களுக்கு ஒருவன் துரோகம் இழைத்து விடுகிறான். நீங்கள் அவனைப் பழிக்குப்பழி வாங்க முற்படுகிறீர்கள். கோபத்தில் உங்கள் கன்னம் சிவக்கிறது. கண்கள் துடிக்கின்றன. இரவு படுத்தால் தூங்க முடியவில்லை. எந்த வேலையைச் செய்தாலும் அந்தத் துரோகம் உங்களை தொந்தரவு செய்கிறது. நீங்கள் அவனை செருப்பால் அடிக்கிறீர்கள். அவன் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள். அன்றிரவு நீங்கள் நன்றாக தூங்க முடியும். […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் ( பகுதி 6 ) – பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி · 17.08.19

சென்ற கட்டுரையில் வெ.சா. மீதான பிரமிளின் முதலாவதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டினைப் பார்த்தோம் (சிருஷ்டிபூர்வம், ரசனாபூர்வம்). வெளிப்படையாக அவர் சொல்லவில்லையே தவிர பிராமணீயக் குண இயல்பை அவர் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டி விமர்சிக்கத் தொடங்குகிறார். அதில் ஒன்றுதான் இந்த இரசனாபூர்வம். யோசித்துப் பார்த்தால் ஒட்டுமொத்த மக்களையே இரண்டாகப் பிரித்து விடலாம் என்று தோன்றுகிறது. வைஷ்ணவம்-சைவம். இம்மை-மறுமை. அறிவு-உணர்வு. Insensitive-sensitive. இகவாழ்வுத் தேடல் எனும் போது இதிலுள்ள இன்பங்களை நுகர, அனுபவிக்க, இரசனாப்பூர்வமாக அணுக இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மறுமை […]

எழுத்து

நாமும் அஜ்னபி தான் – மானசீகன்

மானசீகன் · 17.08.19

அது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில் எதையாவது உளறுவதே அவர் வழக்கம். சுற்றிச் சுற்றி வந்தவர் என் மேப்பைப் பிடுங்கிப் பார்த்தார். ‘ஏண்டா பாய்! இப்டி தப்பா எழுதி இருக்க?  சவூதி அரேபியா  இங்கயா இருக்கு? தப்பா போட்ருக்க’ என்று சொல்லிக் கொண்டே மேப்போடு  வகுப்பறையின் மத்திக்குச் சென்று விட்டார். எல்லோரிடமும் அதைக் காட்டிக் கொண்டே ‘பார்த்தியாடா, பாய் தப்பா எழுதிருக்கிறதை? இந்தியாவ தப்பா […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 5) – பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி · 12.07.19

25.5.2019 அன்று திருநெல்வேலியில் பிரமிள் படைப்புகள் அறிமுகவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரமிளின் எழுத்துகளை வெளியிடும் உரிமை பெற்று தொகுப்புகளைக் கொண்டு வந்த பதிப்பாசிரியர் கால.சுப்ரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். நான்-பிரமிள் விமர்சனங்கள், எழுத்தாளர் போகன் சங்கர்-பிரமிளின் ஆன்மீகம், எழுத்தாளர் சுந்தர்காளி-பிரமிள் உரையாடல், காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன்-பிரமிளின் கதைகள் குறித்து உரையாற்றினோம். இந்நிகழ்வில் நான் வாசித்த கட்டுரையை கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன். “பிரமிள் எல்லா வகையான குழுக்களுக்கும் எதிரானவர். ஜே.கிருஷ்ணமூர்த்தியை ஆதர்ஷமாகக் கொண்ட தனிநபர்வாதி அவர். பிரமிளின் […]

எழுத்து

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

அனோஜன் பாலகிருஷ்ணன் · 12.07.19

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. […]

எழுத்து

ஆளில்லா ரயில்வே கேட்களில் தாழ்ந்து உயரும் அருட்கரங்கள்: பெருந்தேவியின் கவியுலகம்

சுநீல் கிருஷ்ணன் · 12.07.19

ஒரு தடித்த ஆய்வு நூலுக்கில்லாத கண்கள் ஒரு கட்டுரைக்கில்லாத உதடுகள் திமிர் பிடித்த கவிதைக்குண்டு – பெருந்தேவி 1 ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை என்ன அளிக்கும்? முதன்மையாக மொழியின் வார்ப்புருக்களைச் சிதைத்து அர்த்தங்களை உருக்கும். அவருடைய மொழியையும் சிந்தனையையும் பார்வையையும் தேய்வழக்காகாமல் காக்கும். அவருடைய உணர் கொம்புகளில் படிந்திருக்கும் பிசினை நீக்கித் துலங்கச் செய்யும். பெருந்தேவியின் கவிதை மேலதிகமாக ஒன்றை எனக்குச் செய்தது, மேற்சொன்ன வரிகளை எழுத்தாளன், அவன் என்று ஆண்பால் விகுதியிலேயே இதற்கு முன்பு வரை […]

எழுத்து

திரும்ப நிகழ்த்தப்பட்ட வரலாற்றில் கையளியக்கப்பட்ட துளி இருள்: எம். கோபாலகிருஷ்ணனின் ‘அம்மன் நெசவு’

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 12.07.19

வரலாற்றினைச் சரிவரக் கற்று அறியாதவர்களாலும் அறிந்தும் கண்களை மூடிக்கொண்டு அஞ்ஞானத் தூக்கத்தில் திளைப்பவர்களாலும் வரலாறு அதன் அத்தனை கீழ்மைகளோடும் போதாமைகளோடும் குறைகளோடும் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் அதுவே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. அப்படி நிகழ்த்தப்பட்ட வரலாறென்னும் இருட்குகையின் துளி இருளை நாவலாக்கி கையளித்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள். இந்தியா முழுவதும் சாதியின் வேர்கள் ஒரே நேரத்தில் ஆழமாகவும் நுட்பமாகவும் ஊடுருவியுள்ளன. இதோ, இன்று இங்கே இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் பின்பு ஏதோ ஒரு நாளில் எங்கோ […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 4)

பாலா கருப்பசாமி · 22.05.19

இதுவரை விரிவாகப் பார்த்த கட்டுரைகளைப் போல 1971க்குப் பிறகு சில கட்டுரைகளே இலக்கியம் சார்ந்து வினையாற்றலோடு பிரமிள் எழுதியிருக்கிறார். மற்றவை எதிர்வினைகளாகவே அமைந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது மதிப்பீட்டு இயக்கத்தைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பேச்சிற்கும் பதில் சொல்லியிருக்கிறார். அக்கட்டுரைகளுக்குள் நுழைந்து வருவதென்றால் அதேயளவுக்காவது அவற்றை விரித்துச் சொல்ல வேண்டியிருக்குமென்பதால் அவற்றைத் தவிர்த்து விடலாம். தேவைப்படின் தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். சென்ற கட்டுரையில் ஜெனே குறித்து ‘கசடதபற’ இதழில் பிரமிள் எழுதியிருந்ததைப் […]

எழுத்து

தோப்பில் எனும் நவீனத்துவர்

மானசீகன் · 22.05.19

இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 3)

பாலா கருப்பசாமி · 20.04.19

மார்ச் 26, 2019ல் தமிழ் இந்துவில் வெளியான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பேட்டி இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரு பதிலில் அவர் ”‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது’” என்று சொன்ன பதில்தான். இதில் பிராமணிய ஆதிக்கம் தொடர்வதாகக் கூட அவர் சொல்லவில்லை. பிராமணியம் […]