Category: கட்டுரை

எழுத்து

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

அனோஜன் பாலகிருஷ்ணன் · 12.07.19

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. […]

எழுத்து

டேவிட் அட்டன்பரோ: செய்திப்படங்களின் பிதாமகன்

எம்.கோபாலகிருஷ்ணன் · 12.07.19

அட்டன்பரோ என்ற பெயர் நமக்குப் புதிதல்ல. உடனடியாக ‘காந்தி’, ‘ஜூராஸிக் பார்க்’ எனத் திரைப்படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் ‘காந்தி’ படத்தை இயக்கியவரும் ‘ஜுராஸிக் பார்க்’கில் நடித்தவரும் ரிச்சர்ட் அட்டன்பரோ. இன்னொருவர் டேவிட் அட்டன்பரோ. உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கும் சூழலியலில் அக்கறை கொண்டோர்களுக்கும் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத பெயர். ரிச்சர்ட் அட்டன்பரோவும் டேவிட் அட்டன்பரோவும் உடன்பிறந்தவர்களே. இன்னொரு சகோதரரும் உண்டு. இவர்களைத் தவிர குடும்ப உறுப்பினர்கள் பலரும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்றவர்களே. […]

எழுத்து

ஆளில்லா ரயில்வே கேட்களில் தாழ்ந்து உயரும் அருட்கரங்கள்: பெருந்தேவியின் கவியுலகம்

சுநீல் கிருஷ்ணன் · 12.07.19

ஒரு தடித்த ஆய்வு நூலுக்கில்லாத கண்கள் ஒரு கட்டுரைக்கில்லாத உதடுகள் திமிர் பிடித்த கவிதைக்குண்டு – பெருந்தேவி 1 ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை என்ன அளிக்கும்? முதன்மையாக மொழியின் வார்ப்புருக்களைச் சிதைத்து அர்த்தங்களை உருக்கும். அவருடைய மொழியையும் சிந்தனையையும் பார்வையையும் தேய்வழக்காகாமல் காக்கும். அவருடைய உணர் கொம்புகளில் படிந்திருக்கும் பிசினை நீக்கித் துலங்கச் செய்யும். பெருந்தேவியின் கவிதை மேலதிகமாக ஒன்றை எனக்குச் செய்தது, மேற்சொன்ன வரிகளை எழுத்தாளன், அவன் என்று ஆண்பால் விகுதியிலேயே இதற்கு முன்பு வரை […]

எழுத்து

திரும்ப நிகழ்த்தப்பட்ட வரலாற்றில் கையளியக்கப்பட்ட துளி இருள்: எம். கோபாலகிருஷ்ணனின் ‘அம்மன் நெசவு’

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 12.07.19

வரலாற்றினைச் சரிவரக் கற்று அறியாதவர்களாலும் அறிந்தும் கண்களை மூடிக்கொண்டு அஞ்ஞானத் தூக்கத்தில் திளைப்பவர்களாலும் வரலாறு அதன் அத்தனை கீழ்மைகளோடும் போதாமைகளோடும் குறைகளோடும் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் அதுவே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. அப்படி நிகழ்த்தப்பட்ட வரலாறென்னும் இருட்குகையின் துளி இருளை நாவலாக்கி கையளித்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள். இந்தியா முழுவதும் சாதியின் வேர்கள் ஒரே நேரத்தில் ஆழமாகவும் நுட்பமாகவும் ஊடுருவியுள்ளன. இதோ, இன்று இங்கே இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் பின்பு ஏதோ ஒரு நாளில் எங்கோ […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 4)

பாலா கருப்பசாமி · 22.05.19

இதுவரை விரிவாகப் பார்த்த கட்டுரைகளைப் போல 1971க்குப் பிறகு சில கட்டுரைகளே இலக்கியம் சார்ந்து வினையாற்றலோடு பிரமிள் எழுதியிருக்கிறார். மற்றவை எதிர்வினைகளாகவே அமைந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது மதிப்பீட்டு இயக்கத்தைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பேச்சிற்கும் பதில் சொல்லியிருக்கிறார். அக்கட்டுரைகளுக்குள் நுழைந்து வருவதென்றால் அதேயளவுக்காவது அவற்றை விரித்துச் சொல்ல வேண்டியிருக்குமென்பதால் அவற்றைத் தவிர்த்து விடலாம். தேவைப்படின் தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். சென்ற கட்டுரையில் ஜெனே குறித்து ‘கசடதபற’ இதழில் பிரமிள் எழுதியிருந்ததைப் […]

எழுத்து

எழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள்?

B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · 22.05.19

ஒரு முறை நானும் எழுத்தாளர் பாலா கருப்பசாமியும் அவரது நூலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி இலக்கியவாதிகளிடம் சென்று இறுதியாக அவர்கள் முன்வைக்கும் தத்துவ மரபில் சென்று சேர்ந்தது. தனக்குத் தெரிந்து இந்தியத் தத்துவ மரபைச் சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவரும் தங்களை அத்வைதிகள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள், இதற்கான காரணம் என்னவென்று பாலா கேட்டார். எல்லா நதிகளும் கடலைச் சேருவது போல ஞான மரபில் ஆர்வம் உடைய நவீன எழுத்தாளர்கள் […]

எழுத்து

இந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும்

அழகேச பாண்டியன் · 20.04.19

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த நியோ லிபரல் பொருளாதார பரிசோதனை தற்போது போக்கிடம் இன்றி தரை தட்டி நிற்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின்  ஜிடிபி ஆறு மடங்கு வளர்ந்திருக்கிறது. முழு வறுமை (absolute poverty) மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்திருக்கிறது. நுகர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளியலாளர் அமித் பசோலேவின் வரிகளில் சொன்னால் மால், மொபைல்,மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் பிரமாதாமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் இதே காலகட்டத்தில், அரசு அத்தியாவசிய […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 3)

பாலா கருப்பசாமி · 20.04.19

மார்ச் 26, 2019ல் தமிழ் இந்துவில் வெளியான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பேட்டி இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரு பதிலில் அவர் ”‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது’” என்று சொன்ன பதில்தான். இதில் பிராமணிய ஆதிக்கம் தொடர்வதாகக் கூட அவர் சொல்லவில்லை. பிராமணியம் […]

எழுத்து

பீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம்

மானசீகன் · 20.04.19

சூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து தங்கள்  ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். அதற்கும் முன்பாகவே அரபு வணிகர்கள் கடல் வழியாக வணிகம் செய்து வணிகத் தொடர்புகளோடு திருமணத் தொடர்புகளையும் ஏற்படுத்தி இங்கு குடியேறினர். ஏறத்தாழ இதே தருணத்தில் வெளியிலிருந்து வந்த சூஃபி ஞானிகளும் இங்கிருந்து உருவாகியவர்களும் இந்திய  ஆன்மீகத்தின் பல்வேறு கூறுகளை உள்வாங்கிக் கொண்டு தங்கள் பணிகளாலும், வர்ணாசிரமம் கடந்த மானுட சமத்துவத்தாலும் இங்கிருப்போரின் […]

எழுத்து

தலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல்

மானசீகன் · 18.03.19

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்தே தமிழகத்தில் இருக்கிற பல கட்சிகளின் நிஜமான பலத்தைக் கண்டறிய முடியும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மாபெரும் அராஜகங்களை, ஜனநாயகப் படுகொலைகளை, மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்களை, தலித்துகள் மீதான தாக்குதல்களை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மீறல்களை, தேசத்தையே திகைக்க வைத்த பொருளாதாரத் […]

எழுத்து

புகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக்

நம்பி கிருஷ்ணன் · 18.03.19

கலாச்சாரத்தின் வருங்கால ஜனநாயக அகல்பரப்புக் காட்சிகளை, பீர்கையில் வால்ட் விட்மன் அழகிற்கும் அழகின்மைக்குமிடையே, சாரத்திற்கும் சாரமின்மைக்குமிடையே உள்ள வேறுபாட்டிற்கு அப்பால் பார்க்க முனைந்தார். பெருந்தன்மையான தரப்பிரித்தல்களைத் தவிர மற்ற தகவுப் பாகுபாடுகள் அனைத்துமே கண்மூடி அடிமைத்தனமாகவோ அல்லது மேட்டிமைத்தனமாகவோ அவருக்குத் தோன்றியது, நம் கலாச்சார புரட்சியின் அதிதீரமும், அதிபித்தும் வாய்ந்த கவிஞர் கபடில்லாத நேரடித்தனத்தின் மகோன்னதங்களை அதிகமாகவே பறைசாற்றினார். அமெரிக்க வாழ்வனுபவத்தின் ‘அனைத்தையும் அரவணைத்து’க் கொள்ளும் குணத்தையும், அதன் வீரியத்தையும் ஏற்று அதன் நிதர்சனத்தை ஆரத் தழுவிக் […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 2)

பாலா கருப்பசாமி · 18.03.19

“Then his words were, ‘There is nothing to be said’. I was not surprised by this. It seemed correct, and I had already felt that it was to be myself alone, which would solve the problem.” ’லயம்’ கால சுப்ரமணியம் ஒட்டுமொத்தமாகக் கொண்டு வந்திருக்கும் பிரமிளின் ஆறு தொகுப்புகளில் அவரது பேட்டிகள்-உரையாடல்கள் தவிர்த்து மீதி ஐந்தும் கிட்டத்தட்ட ஒரே அளவானவை. இதில் இரண்டு […]