Category: கட்டுரை

எழுத்து

போரில் பிறர்

பன்னீர் செல்வம் வேல்மயில் · 18.03.19

போர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. மனித நாகரிகமும், மனித குடிகளின் கலாச்சார கருத்தியல் பரிமாற்றங்களும் போரின் மூலமாகவே நடந்துள்ளன. கலாச்சார மொழி விழுமிய திணித்தல் மிக அதிகமாக நடப்பது போரின் மூலம் தான். அமர்ந்து பேசி இத்தகைய பரிமாற்றம் சமூகத்தின் விளிம்பில் இல்லாமல் பண்டமாற்று போல் நடப்பது உலக மயமாக்கல் வந்த பின்னரே. இந்த வகை பரிமாற்றத்திலும் திணித்தல்கள் உண்டு. அதை முடிவு செய்வது உலகமய சந்தையின் விசைகள். நவீன போரில் இரண்டு விடயங்கள் மாறியுள்ளன. முதலாவது, […]

எழுத்து

பனிமுடிப் பணிதல்: ஷௌகத்தின் ‘ஹிமாலயம்’

சுநீல் கிருஷ்ணன் · 18.03.19

‘இதைக் காணும் ஒருவன் கடவுளைக் கண்டதில்லையென்று சொல்வானெனில், இனி ஒருபோதும் அவனால் கடவுளைக் காண முடியாது.’ – நடராஜ குரு ‘ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து முடித்து அவ்வுலகின் அவசங்களில் இருந்து வெளிவர முற்றிலும் வேறு மனநிலையைத் தரவல்ல ஒரு நூலைத் தேடும்போது ‘ஹிமாலயம்’ வசப்பட்டது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக என் புத்தக அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தது. ஜெயமோகன் […]

எழுத்து

கதாசரித் சாகரம் என்னும் பெருங்கதை

கால.சுப்ரமணியம் · 18.03.19

8ஆம் நூற்றாண்டில் அரபியில் தொகுக்கப்பட்ட ‘அல்ப்ஃ லைலா’ என்ற பெருங்கதைத் தொகுப்பு பெர்சிய, இந்திய மூலங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரத்தொரு அராபிய இரவுக் கதைகள் (அல்ப்ஃ லைலா வ லைலா / Alf Leiyla Wa-Layla) என்ற பாரசீகத்துக் கதைத் தொகுதியை கால்லன்ட் (Antoine Galland 1704–1717) பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வழி ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினார். கிழக்கத்திய (ஓரியண்டல்) பண்பாட்டுக்களம் அப்போதிலிருந்து மேற்கத்திய (ஆக்சிடென்டல்) இலக்கியக் களத்தில் விளக்கம் கொண்டது. பென்ப்ஃபே (Theodor Benfey) தமது பஞ்சதந்திரக் கதை […]

எழுத்து

அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம்

மானசீகன் · 17.02.19

“அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற இயலவில்லை. ‘போராடுவதற்கான உரிமைகளை மதிக்கிறேன். அவர்களது தரப்பின் நியாயங்களை உணர்கிறேன் . ஆனால் அது அவர்களுக்கும், அரசுக்கும் இடையிலான முரண். எந்தப் போராட்டத்திற்கும் பேச்சு வார்த்தையே தீர்வு என்பதே என் நிலைப்பாடு. அது நிகழாமல் போனதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து அரசு ஊழியர்கள் பெற வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன்’ என்று […]

எழுத்து

நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்

தர்மு பிரசாத் · 17.02.19

ஈழத்து போர்க்காலப் படைப்புகள் கருணையுடன் கை தூக்கிவிடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகி விட்ட பின்னர், சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற்செறிவோ, படைப்புமொழி குறித்த ஓர்மையோ, சொல்முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும் உள்விரிவுமற்ற குறைப்படைப்புகள் ஈழத்தின் நவீன முகங்களாக உரையாடப்படும் போதும், போரின்/ போராட்டத்தின் […]

எழுத்து

ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு

கால.சுப்ரமணியம் · 17.02.19

சென்ற ஆண்டு கலிங்கப் பயணத்தில் உதயகிரி குகைகளைப் பார்த்தது மறக்கமுடியாத சம்பவம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு உண்மையில் அங்கே தான் இருக்கிறது என்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. முன்னால் வைத்திருந்த அறிவிப்பையும் படித்துக் கொள்ளவில்லை. எங்களை அங்கே அழைத்துச் சென்ற தென்னிந்திய வரலாற்றில் ஆழங்கால்பட்ட நண்பர் முன்பே அங்கு சிலமுறை போயிருந்தும் அதை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உதயகிரி என்ற பெயரில் இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் உள்ளது. குழுவை […]

எழுத்து

நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம்

ப.தெய்வீகன் · 17.02.19

ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன்

பாலா கருப்பசாமி · 17.02.19

1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான […]

எழுத்து

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அனோஜன் பாலகிருஷ்ணன் · 17.02.19

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான […]

எழுத்து

ஹெர்டர் (பகுதி 2) – இரா. குப்புசாமி

இரா. குப்புசாமி · 17.02.19

ஐரோப்பிய வரலாற்றை ஆழ்ந்து வாசித்தால் ஓர் உண்மை புலப்படும். அது ஜெர்மானிய மண்ணின் தனித்த வாசனை. காலம் காலமாக அது தன்னைத் தனிமைப்படுத்தியே அடையாளம் கண்டிருக்கிறது. மற்றச் சமயங்களை, அவற்றின் தெய்வங்களை ஜெர்மானிய பழங்குடித் தொன்மங்களும் அவை காட்டிய தெய்வங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தே வந்திருக்கின்றன. சமரசம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. மேற்கிலிருந்து வந்த யூத, கிறித்துவ சமயங்களையும், கிரேக்க, உரோமானிய தத்துவங்களையும், கலாச்சாரங்களையும் எப்போதும் அது எதிர்த்தே நின்றிருக்கிறது. பல சமயங்களில் தகர்த்து அழித்திருக்கிறது. […]

எழுத்து

தொல்நிலம்

போகன் சங்கர் · 13.01.19

வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு […]

எழுத்து

சித்தாந்தவாதி எனும் உபாதை

நவீன்குமார் · 13.01.19

நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்லாம் கருத்து மோதல்கள் அல்ல, கருத்தியல் மோதல்கள் […]