Category: கட்டுரை

எழுத்து

ஹெர்டர் (பகுதி 1)

இரா. குப்புசாமி · 13.01.19

ஹெர்டர் (1744 – 1803) 1 ஹெர்டர் கிழக்கு பிரஸ்ஸியா நாட்டில் ஒரு சிறு நகரில் ஒரு பள்ளியாசிரியரின் மகனாக 1744ம் ஆண்டு பிறந்தார். இலத்தீன், மருத்துவம் ஆகியவற்றை விரும்பிக் கற்றாலும், இறையியலே இவரது வாழ்நாள் பணிக்கு மூலதனம் ஆனது. ஒரு கிறித்துவ பாதிரியாகவே கடைசிவரை வாழ்ந்து 1803ல் இறந்தார். இவரது பரந்த படிப்பும், ஆழ்ந்த சிந்தனையும் மொழியியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப் பல்துறைகளில் ஏராளமான நூல்களை எழுத உதவின. இவரது படைப்புகள் 33 தொகுதிகளாக […]

எழுத்து

கல்லிலே கண்ட கலைவண்ணம்: படங்களின் வழியே ஒரு பயணம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 13.01.19

விஜயநகரப் பேரரசு – தென்னிந்தியாவின் மாபெரும் பேரரசு. செல்வச் செழிப்பும் கலைப்பெருக்கும் படைபலமும் ஆற்றலும் கொண்ட விஜயநகரப் பேரரசின் தலைநகரம் ஹம்பி. தக்காணத்தின் மத்தியில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆந்திரத்தின் எல்லையோரத்தில் அமைந்த சிற்றூர். ஒருபுறம் பெருக்கெடுத்தோடும் துங்கபத்திரையும் சுற்றிலும் பிரமாண்டமான பாறைக் குன்றுகளும் இயற்கை அரண்களாய் அமையப் பெற்ற அழகிய ஊர். 14ம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கப்பட்டு இந்திய வரலாற்றின் சிறப்புகள் மிக்க தலைநகராய் கோலோச்சிய விஜயநககரம், 1565ம் ஆண்டில் இஸ்லாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. கலை எழில்மிக்க […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 4)

மானசீகன் · 13.01.19

‘ஸ்காலர்ஷிப்னா என்னடா? எதுக்கு தர்றாங்க?’ ‘அது அய்யருகள்லாம் சூத்திரன்னு ஒதுக்கி வச்சுட்டாங்கள்ல? அதுக்காக கவர்மெண்ட் நமக்கு காசு கொடுக்குது.’ ‘அதில்ல மாப்ள. அம்பேத்கர் அவுக ஆளுகள்ல படிக்கிறவனுகளுக்கு துட்டு தரணும்னு அரசியல் சட்டத்தில எழுதி வச்சுட்டாராம். தேவர் சண்டை போட்ருக்காப்ல. அதுக்கப்புறம்தான் நமக்கும் காசு வருது.’ ‘அப்ப தேவர்தான் ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுத்தாரா? எங்க தாத்தா வெள்ளக்காரன் சட்டம் போட்டதுன்னு சொன்னாரு.’ ‘யார் தந்ததுன்னு தெரியல. ஆனா பெரியார், அம்பேத்கர் எல்லாம் போராடிருக்காங்க.’ ‘எம்ஜிஆராத்தான் மாப்ள இருக்கும். […]

எழுத்து

ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை

ஆர்.ஸ்ரீனிவாசன் · 15.12.18

“விடுதியிலிருந்து வந்து கொண்டிருந்த ஓலங்களினால் என்னால் பத்து நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. மறுநாள் சர்ச்சிலிருந்து பிரார்த்தனை முடிந்து திரும்பும் பொழுது, எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தார்கள். நான் ப்ளூஸுடன் வீடு திரும்பினேன். இந்த இடத்துக்கு வந்த பிறகு முதன்முறையாக தனிமையையும் அனுதாபத்தையும் உணர்ந்தேன்.” ஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியரும், அடிமைமுறை ஒழிப்புப் போராளியுமான ஷார்லட் ஃபோர்ட்டன் (Charlotte Forten Grimké), டிசம்பர் 14 ,1862இல் இவ்வரிகளை தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு தெற்கு கேரலைனா […]

எழுத்து

வால்டேர் (பகுதி 3)

இரா. குப்புசாமி · 15.12.18

வாழ்வில் வெற்றிபெற்ற மாமனிதர்கள் பெரும்பாலும் தனக்கு முன் வாழ்ந்த ஒருவரை முன்மாதிரியாக வைத்திருந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். மாவீரர்களில் ஜுலியஸ் சீசர் மகா அலெக்சாண்டரை முன்மாதிரியாகக் கொண்டார். அவரைப் போலவே உலகம் முழுவதையும் ஒரே குடைக் கீழ்தான் உரோமப் பேரரசின் தலைவனாக இருந்து ஆள விரும்பினார். அக்கனவில் ஓரளவு வெற்றி கண்டார். ஐரோப்பா கண்டத்தில் பெரும்பகுதி, ஆப்ரிக்க கண்டத்தில் எகிப்து போன்ற பகுதிகளை வென்றார். பின்னாளில் பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியன் இதே போன்றதொரு பெருங்கனவைக் […]

எழுத்து

ஸெர்கெய் ரஹ்க்மனினோஃப் : இசையின் கிறக்கத்தில்.. !

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் · 15.12.18

“To speak of music is to foster an illusion, a “category mistake” as logicians would put it. It is to treat music as if it was or was very close to natural language. It is to transfer semantic realities from a linguistic to a musical code. Musical elements are experienced or classified as syntax; the […]

எழுத்து

பின் தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 3)

மானசீகன் · 15.12.18

சாதிக் கலவரங்களை எம்ஜிஆர் × நம்பியார் கத்திச் சண்டையைப் போல் புரிந்து வைத்திருந்த எனக்கு அதன் கொடூரத்தை பத்து வயதிற்குள்ளாகவே உணர்கிற வாய்ப்பு வந்தது. 1989 ஆம் வருடம் நாங்கள் சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் இருந்தோம். மறவர்கள் அதிகமாகவும், இஸ்லாமியர்கள் குறைவாகவும் வாழும் பகுதி அது. கொஞ்சம் கூட வேறுபாடில்லாத நெருக்கமான உறவு மறவர்களோடு எங்களைப் போலவே அங்கிருந்த பல இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் வாய்த்திருந்தது. சின்னமனூர் – தேனி நெடுஞ்சாலையில் முதல் நிறுத்தம் காந்தி சிலைதான். அங்குதான் ஐந்து […]

எழுத்து

அன்பு செலுத்த வழிகள் ஏராளம்

வி.அமலன் ஸ்டேன்லி · 15.12.18

ஜென் குரு பெர்னி க்ளாஸ்மேன் (Bernie Glassman) நவம்பர் ஐந்தாம் தேதி, ஞாயிறன்று அமெரிக்காவின் மேஸசுஸெட்ஸில் காலமானார். ஜென் அமைதி படைப்போர் (Order of Zen Peacemakers) மற்றும் கிரேஸ்டோன் (Greystone) அமைப்பின் ஸ்தாபகரான இவர் வீதியோர தியானக்கூடுகை (Street Retreats), கோமளித்தனம் (Clowning), மூழ்குதல் (plunge) சாட்சியம் பகிர்தல் (Bearing Witness) போன்ற புதுமையான ஜென் கருத்தாக்கங்களை உருவாக்கி சமூகத்தின் அடிமட்ட, பிற்படுத்தப்பட்ட, பாராமுகம் காட்டப்படும், போரினாலும் வறுமையினாலும் துன்பப்பட்டு வரும் மக்களின், ஆதரவற்றோரின் யதார்த்தங்களை, ஜென் […]

எழுத்து

இரவில் ஆந்தைகள் : டி.என்.ஏ.பெருமாள் ஆந்தைகளைப் படமெடுத்த அனுபவம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 14.11.18

பன்னர்கட்டாவுக்கு பறவைகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வோம். பன்னர்கட்டாவிற்கு ஐந்து கிலோமீட்டருக்கு முன்பு ஒரு இடத்திலிருந்து தான் காடு தொடங்கும். அந்த கிராமத்தில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஆந்தை ஒன்று பாறையிலிருந்து பறப்பது தெரிந்தது. அந்தப் பாறையில் ஏறிப் பார்த்த போது ஆந்தையின் முட்டைகள் இருந்தன. படமெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். உயரமான பாறை. பரண் அமைக்க வேண்டும். பக்கத்தில் கிராமத்தினரிடம் சொல்லி பரண் அமைப்பதற்கான மரக்கட்டைகளை ஏற்பாடு செய்தோம். அந்தப் பாறையின் அருகில் அந்த மரங்களை […]

எழுத்து

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்

தர்மு பிரசாத் · 14.11.18

சாதனாவின் கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன. வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்ப கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும் கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன். தொகுப்பின் முன்னுரையில் சாருநிவேதிதா உலகத் தரத்திற்கான ‘அளவுகோலை’ எழுதியதாக நினைவில் இல்லை. இலக்கிய அடியார்க்கு அருளப்பட்டதாக முடிவுகளை […]

எழுத்து

ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள்

பாலா கருப்பசாமி · 14.11.18

அழகியல்வாதத்துக்கும் (aestheticism) மிகையுணர்வுவாதத்துக்கும் (romanticism) என்ன வேறுபாடு? மனிதன் தன்னை விலங்கிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்தே இருக்கும் பார்வையாக அழகியலைச் சொல்லலாம். புறம் மொழிக்குள் வந்தவுடன் அழகியல் கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது. சுட்டப்படும் சொற்களே படிமமாய் இருப்பதால் அழகியல் எழுத்தின் தவிர்க்கமுடியாத ஒன்று. எழுத்தில் மட்டுமில்லாமல் அழகியல் வேறு தளங்களிலும் அடிப்படையில் இயங்கும் தன்மையுடையது. உதாரணத்திற்கு நமது பார்வைக்கோணம் 180 டிகிரிவரை பார்க்கும்படி இருந்தாலும், ஒரு க்ஷணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம் பார்வை குவிகிறது. […]

எழுத்து

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’

அனோஜன் பாலகிருஷ்ணன் · 14.11.18

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’ […]