Category: பொது

எழுத்து

கவிதையும் தத்துவமும்

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் · 20.09.19

கத்திரி முடிந்தும் காய்கதிர் சினம் தணிந்தபாடில்லை என்று நொந்து, இப்பொழுது தான் ஏதோ வெறித்த வான் அருள் கூர்ந்திருக்கிறது. எத்துணை வியர்ப்பு, வேட்கை, நோதல், நலிதல். எத்தனை உயிரின் ஏக்கம். அத்தனையும் காதில் விழுந்து தான் அகல்வான் கடுவெயில் ஆற்றிக் கொள்ளை அருள் மழை பெய்கிறதோ? ஆம் என்று எவரே கூறவல்லார்? இல்லை என்றும் கூற எவருக்குத் தான் மனம் வரும்? எங்கும் மழை, மழை, மழை, வெள்ளக்காடு, நீரோடை. கதிரின் முகம் கண்டே பன்னாள் ஆகிறது. […]

எழுத்து

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டமும் தேசிய கல்விக் கொள்கையும்

இல. சுபத்ரா · 17.08.19

நான்கு ஆண்டுகள் என்பது எவ்வளவு பெரிய காலம்? மிக நீண்டது? ஆம். ஒரு தனி மனிதனின் வாழ்வில் அது மிக நீண்ட காலம். சரி, ஒரு நாட்டின் வரலாற்றில்? ஒரு சீர்திருத்தத்தின் வரலாற்றில்? கடந்த ஜனவரியில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஒப்புதல் ஆகியிருக்கும் “No Detention Policy (all pass)”-க்கு எதிரான மசோதாவை ஆதரித்தவர்கள் உட்பட, பள்ளிகளில் கல்வித்தரம் கடந்த 10 ஆண்டுகளில் அதலபாதாளத்திற்குச் சரிந்திருப்பதாகக் குறைபடும் அனைவரும் அதற்கு அடித்தளமாகக் கொண்டிருக்கும் ASER (Annual Survey of […]

எழுத்து

கோகோ கோலா எனும் தொன்மம்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 12.07.19

ஒன்று போலவே இருக்கும் கோகோ கோலா பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலவெளியில் இருக்கின்றன என ஜான் கேஜ் சொன்னதை, ஒவ்வொரு முறை கோகோ கோலா பாட்டிலைக் கையில் எடுக்கும் போதும் யோசிக்கிறேன். இதற்கு முற்றிலும் எதிர்த்தளத்தில், உலகின் எந்த மூலையிலும், கோகோ கோலா பாட்டிலைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் ஒரே காலவெளியில் இருப்பார்கள். இந்தக் காலவெளி உலகமயமாக்கம் உருவாக்கியது. சென்னை நகரவாசியையும், சியோல் நகரவாசியையும் ஒன்றாக இணைக்க முடிகிற சாத்தியம் கோக்கிற்கு மட்டுமே உண்டு. நமது உள்ளங்கைகள் […]

எழுத்து

வனாந்தரத்தின் குரல்

போகன் சங்கர் · 12.07.19

ஆலன் கின்ஸ்பெர்க்கின் (Allen Ginsberg) ‘ஊளை ‘பற்றி தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் யாராவது பேசுவதுண்டு. பீட் தலைமுறை எனப்படும் அவரோடு சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய ஆர்வம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டதுமுண்டு. ஊளை சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்தது. வில்லியம் பரோஸ் பற்றி நாகார்ஜுனன், சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள், மொழி பெயர்த்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் ஜாக் கேராக் இன்னொரு முக்கியமான ஆளுமை. அவர் பற்றி அதிகம் இங்கு பேசப்படவில்லை. அவரது ‘DHARMA BUMS’ முக்கியமானதொரு […]

எழுத்து

டேவிட் அட்டன்பரோ: செய்திப்படங்களின் பிதாமகன்

எம்.கோபாலகிருஷ்ணன் · 12.07.19

அட்டன்பரோ என்ற பெயர் நமக்குப் புதிதல்ல. உடனடியாக ‘காந்தி’, ‘ஜூராஸிக் பார்க்’ எனத் திரைப்படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் ‘காந்தி’ படத்தை இயக்கியவரும் ‘ஜுராஸிக் பார்க்’கில் நடித்தவரும் ரிச்சர்ட் அட்டன்பரோ. இன்னொருவர் டேவிட் அட்டன்பரோ. உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கும் சூழலியலில் அக்கறை கொண்டோர்களுக்கும் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத பெயர். ரிச்சர்ட் அட்டன்பரோவும் டேவிட் அட்டன்பரோவும் உடன்பிறந்தவர்களே. இன்னொரு சகோதரரும் உண்டு. இவர்களைத் தவிர குடும்ப உறுப்பினர்கள் பலரும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்றவர்களே. […]

எழுத்து

எழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள்?

B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · 22.05.19

ஒரு முறை நானும் எழுத்தாளர் பாலா கருப்பசாமியும் அவரது நூலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி இலக்கியவாதிகளிடம் சென்று இறுதியாக அவர்கள் முன்வைக்கும் தத்துவ மரபில் சென்று சேர்ந்தது. தனக்குத் தெரிந்து இந்தியத் தத்துவ மரபைச் சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவரும் தங்களை அத்வைதிகள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள், இதற்கான காரணம் என்னவென்று பாலா கேட்டார். எல்லா நதிகளும் கடலைச் சேருவது போல ஞான மரபில் ஆர்வம் உடைய நவீன எழுத்தாளர்கள் […]

எழுத்து

இந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும்

அழகேச பாண்டியன் · 20.04.19

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த நியோ லிபரல் பொருளாதார பரிசோதனை தற்போது போக்கிடம் இன்றி தரை தட்டி நிற்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின்  ஜிடிபி ஆறு மடங்கு வளர்ந்திருக்கிறது. முழு வறுமை (absolute poverty) மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்திருக்கிறது. நுகர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளியலாளர் அமித் பசோலேவின் வரிகளில் சொன்னால் மால், மொபைல்,மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் பிரமாதாமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் இதே காலகட்டத்தில், அரசு அத்தியாவசிய […]

எழுத்து

பீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம்

மானசீகன் · 20.04.19

சூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து தங்கள்  ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். அதற்கும் முன்பாகவே அரபு வணிகர்கள் கடல் வழியாக வணிகம் செய்து வணிகத் தொடர்புகளோடு திருமணத் தொடர்புகளையும் ஏற்படுத்தி இங்கு குடியேறினர். ஏறத்தாழ இதே தருணத்தில் வெளியிலிருந்து வந்த சூஃபி ஞானிகளும் இங்கிருந்து உருவாகியவர்களும் இந்திய  ஆன்மீகத்தின் பல்வேறு கூறுகளை உள்வாங்கிக் கொண்டு தங்கள் பணிகளாலும், வர்ணாசிரமம் கடந்த மானுட சமத்துவத்தாலும் இங்கிருப்போரின் […]

எழுத்து

தலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல்

மானசீகன் · 18.03.19

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்தே தமிழகத்தில் இருக்கிற பல கட்சிகளின் நிஜமான பலத்தைக் கண்டறிய முடியும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மாபெரும் அராஜகங்களை, ஜனநாயகப் படுகொலைகளை, மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்களை, தலித்துகள் மீதான தாக்குதல்களை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மீறல்களை, தேசத்தையே திகைக்க வைத்த பொருளாதாரத் […]

எழுத்து

போரில் பிறர்

பன்னீர் செல்வம் வேல்மயில் · 18.03.19

போர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. மனித நாகரிகமும், மனித குடிகளின் கலாச்சார கருத்தியல் பரிமாற்றங்களும் போரின் மூலமாகவே நடந்துள்ளன. கலாச்சார மொழி விழுமிய திணித்தல் மிக அதிகமாக நடப்பது போரின் மூலம் தான். அமர்ந்து பேசி இத்தகைய பரிமாற்றம் சமூகத்தின் விளிம்பில் இல்லாமல் பண்டமாற்று போல் நடப்பது உலக மயமாக்கல் வந்த பின்னரே. இந்த வகை பரிமாற்றத்திலும் திணித்தல்கள் உண்டு. அதை முடிவு செய்வது உலகமய சந்தையின் விசைகள். நவீன போரில் இரண்டு விடயங்கள் மாறியுள்ளன. முதலாவது, […]

எழுத்து

அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம்

மானசீகன் · 17.02.19

“அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற இயலவில்லை. ‘போராடுவதற்கான உரிமைகளை மதிக்கிறேன். அவர்களது தரப்பின் நியாயங்களை உணர்கிறேன் . ஆனால் அது அவர்களுக்கும், அரசுக்கும் இடையிலான முரண். எந்தப் போராட்டத்திற்கும் பேச்சு வார்த்தையே தீர்வு என்பதே என் நிலைப்பாடு. அது நிகழாமல் போனதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து அரசு ஊழியர்கள் பெற வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன்’ என்று […]

எழுத்து

ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு

கால.சுப்ரமணியம் · 17.02.19

சென்ற ஆண்டு கலிங்கப் பயணத்தில் உதயகிரி குகைகளைப் பார்த்தது மறக்கமுடியாத சம்பவம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு உண்மையில் அங்கே தான் இருக்கிறது என்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. முன்னால் வைத்திருந்த அறிவிப்பையும் படித்துக் கொள்ளவில்லை. எங்களை அங்கே அழைத்துச் சென்ற தென்னிந்திய வரலாற்றில் ஆழங்கால்பட்ட நண்பர் முன்பே அங்கு சிலமுறை போயிருந்தும் அதை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உதயகிரி என்ற பெயரில் இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் உள்ளது. குழுவை […]