Category: பொது

எழுத்து

இரவில் ஆந்தைகள் : டி.என்.ஏ.பெருமாள் ஆந்தைகளைப் படமெடுத்த அனுபவம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 14.11.18

பன்னர்கட்டாவுக்கு பறவைகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வோம். பன்னர்கட்டாவிற்கு ஐந்து கிலோமீட்டருக்கு முன்பு ஒரு இடத்திலிருந்து தான் காடு தொடங்கும். அந்த கிராமத்தில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஆந்தை ஒன்று பாறையிலிருந்து பறப்பது தெரிந்தது. அந்தப் பாறையில் ஏறிப் பார்த்த போது ஆந்தையின் முட்டைகள் இருந்தன. படமெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். உயரமான பாறை. பரண் அமைக்க வேண்டும். பக்கத்தில் கிராமத்தினரிடம் சொல்லி பரண் அமைப்பதற்கான மரக்கட்டைகளை ஏற்பாடு செய்தோம். அந்தப் பாறையின் அருகில் அந்த மரங்களை […]

எழுத்து

வால்டேர் (பகுதி 2)

இரா. குப்புசாமி · 14.11.18

இது தனித்துறை வல்லுநர்களின் காலம். ஏதாவது ஒரு துறையில் மற்ற யாரும் செய்யாத சாதனையை நீ செய்தாயா? இதுவே காலம் ஒவ்வொரு எழுத்தாளனையும், அறிஞனையும் பார்த்துக் கேட்கும் கேள்வி. ரூஸோ அரசியல் சித்தாந்தத் துறையில் இமாலய சாதனை செய்தவன். பௌதலேர் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிறான். குறைவாக எழுதினாலும் அவர்தம் துறையில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்கள். அதனால்தான் இன்றும் நினைக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஒரு துறையில் உலகின் உன்னத நிலையை வால்டேர் பெறவில்லை – அவருடைய உரைநடை, கதைகளைத் […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 2)

மானசீகன் · 14.11.18

தாத்தா இறந்த பிறகும் அவர் நினைவாக ஒரு பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் தான் விஜயராணி அக்காளின் படம் இருக்கிறது. விஜயராணி அக்காளை நான் நேரடியாகப் பார்த்ததில்லை. புகைப்படத்தில் இருக்கிற அந்த பிம்பத்திற்கு பதினாறு வயசிருக்கும். கருப்பு வெள்ளைப் புகைப்படம். சற்றே தலையைச் சாய்த்தது போலவே அக்கா நின்றிருப்பார். ஃபோட்டோவில் சுமார் தான். ஒருவேளை நேரில் பார்க்க அழகாய் இருக்கலாம். அது ஏதோ ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படமாகவே இருக்கக் கூடும். கொஞ்சம் அழுக்கேறியிருந்தது. நன்னிமா அதை […]

எழுத்து

கானுயிர் புகைப்படக் கலைஞர் டி.என்.ஏ. பெருமாளின் பந்திப்பூர் அனுபவங்கள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 12.10.18

(டி.என்.ஏ.பெருமாள் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர். புகைப்படத் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே இருந்த போது அவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இன்றும் வியப்பளிப்பவை. புகைப்படங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றைத் தகுந்த முறையில் புராசஸ் செய்து அச்சிடுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தவர். இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற Royal Photographic Societyயினுடைய Associate-ship 1977ல் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே, 1978, அதே அமைப்பினுடைய Fellowship தகுதியையும் பெற்றார். கர்நாடக அரசு இவரது பணியை அங்கீகரிக்கும் முகமாக […]

எழுத்து

வால்டேர் (பகுதி 1)

இரா. குப்புசாமி · 12.10.18

வால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில் ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை ஓர் இலக்கியவாதி ஆக்கியது. 23ஆவது வயதில் ஓர் அங்கதக் கவிதை எழுதியதற்காகப் பாஸ்டில் சிறையில் தள்ளப்பட்டார். 29 வயதில் Comédie-Française என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். 32 வயதில் ஒரு பிரபுவுடன் ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றி தகராறு ஆக மீண்டும் பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1)

மானசீகன் · 12.10.18

சாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாரதியாரை பொருள் புரியாமல் மேடைகளில் ஒப்பிக்க ஆரம்பித்தத் தருணத்தில் கண்டிப்பாய் அதை உணர்ந்திருக்கவில்லை. சாதிக்கு எதிராய் பேசினால் கை தட்டு கிடைக்கும். கீழே நாம் உட்கார்ந்திருந்தால் அதற்கு கண்டிப்பாக கை தட்ட வேண்டும். இவ்வளவுதான் என் புரிதல். நான்காம் வகுப்பு வரை குச்சனூரில் படித்தேன். அப்போது ஒரு நண்பனின் […]

எழுத்து

சகலமுமாகி விட்ட பூதம்

மானசீகன் · 13.09.18

மனித இருப்பே இரண்டே இரண்டு சொற்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒன்று அன்பு ; மற்றொன்று அதிகாரம். நாம் அன்பை பிறரிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டே அதிகாரத்தை இன்னொருவருக்குப் பரிசாகத் தருகிறோம். இந்த முரண்தான் நம் வாழ்வின் மிகப்பெரிய சிக்கல். உண்மையில் மனிதகுலம் கண்டடைந்திருக்கிற நாகரிகம் என்பதே அதிகாரத்தின் கை மாறல்தான். எல்லா மதத் தொன்மங்களிலும் இதற்கான தடத்தைப் பார்க்க முடியும். பழமோ , பாம்போ அங்கே ஒரு பிரச்சினை அல்ல. அதிகாரத்திற்குக் கட்டுப்படாமைதான் ஏதேன் தோட்டத்தில் இருந்து மனிதனை […]

எழுத்து

அந்தச் செம்பு ரொம்பப் பழசு

மானசீகன் · 13.08.18

தமிழ் சினிமாவிற்கும் தமிழர்களின் வாழ்க்கைக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பதில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்ச்சிகரமான பல்வேறு மாறுதல்களை தமிழ்த் திரைப்படங்கள் பதிவு செய்யவும் இல்லை. விதவையான பின் சர்வ சாதாரணமாக அறுத்துக் கட்டும் பழக்கமுடைய பல சாதிகள் இங்குண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் பிராமணரல்லாத பல பெண்களும் இரண்டாயிரம் வரையிலும் கூட வெள்ளைச் சேலைகளோடு தான் பவனி வந்தார்கள். திராவிட இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வந்த காலத்தில் அதன் அடையாளமாகக் கருதப்பட்ட எம்ஜிஆர் சம்பந்தமே இல்லாத […]

எழுத்து

முன்னம் அவனது நாமம் கேட்டேன்

மானசீகன் · 09.07.18

அந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக  ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும். அன்றிலிருந்து அந்தப் பெயரை காதலிக்கத் தொடங்கி விடுவான். ஒவ்வொரு நாளும் விதவிதமாக அந்தப் பெயரைச் சொல்லிப் பார்ப்பான். அதைச் சொல்லிப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நறுமணம் தன்னைச் சூழ்ந்து கொள்வதாக அவனுக்கு ஒரு பிரமை தட்டும்.அந்தப் பெயரால் விரியும் முடிவற்ற சாத்தியங்களின் வழியேஅவன் தன் பிரக்ஞையை நழுவ விட்டிருப்பான். கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை […]