Category: பொது

எழுத்து

தமிழ்த் தேசியத்தின் சமய வேர்கள் (பகுதி 1)

B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · 28.09.21

தேசியம், தேசம் ஆகியவை அடிப்படையில் உணர்வுகளால் கட்டமைக்கப்படுபவை. அத்தகைய உணர்வுப்பூர்வமான அடிப்படை மிகவும் இன்றியமையாததும்கூட. அரசியல் ரீதியாகவோ பூகோள ரீதியாகவோ மட்டும் எந்த ஒரு தேசத்தையும் உருவாக்க முடியாது. இதையும் தாண்டி உணர்வுப்பூர்வமான ஒரு பந்தம் தேவை. பழங்குடிகள் இன்றும் ஒரு பகுதியைத் தங்கள் மண் என்று கூறுவதற்குக் காரணம் அது தங்கள் தெய்வங்கள் உறையும் பூமி, தங்கள் மூதாதையர் உறங்கும் பூமி என்ற அழகான உணர்வுப்பூர்வமான நம்பிக்கையால்தான். ஐக்கிய அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் பெரும் நிறுவனங்களிடமிருந்து […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 2): வி.குமார்

ஆத்மார்த்தி · 29.08.21

இசை பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மாவையும், மனதிற்குச் சிறகுகளையும், கற்பனைக்கு விமானத்தையும், எல்லாவற்றிற்கும் வாழ்வையும் தருகிறது என்பது ப்ளேட்டோவின் கூற்று. இசை நம்மை உணர்வுப்பூர்வமாகத் தொடுகிறது. வார்த்தைகளால் அது முடியாது என்றார் ஜானி டிப். மொஸாட்டின் பார்வை நூதனமானது. இசை என்பது இசைக்குறிப்புகளில் இருப்பதல்ல. மாறாக இருபுறமும் அணைக்கும் நிசப்தத்தில் இருப்பது என்கிறார். தல்ஸ்தோய் சொன்னது எனக்கு மிகவும் உவப்பான இசைமொழி. “இசை என்பது உணர்வுகளின் சுருக்கெழுத்து”. என்ன அற்புதமான சொல்லாடல்? ஜிமி ஹென்றிக்ஸ் சொல்வதுதான் சரி. இசை […]

எழுத்து

பின்லாந்தின் நாட்டுப்புறக் காவியக் கதைப்பாடல் கலேவலா: அஸ்கோ பார்பொலா

கால.சுப்ரமணியம் · 29.08.21

நாட்டுப்புறவியல் துறை உயர்நிலையை அடைந்த நாடுகளில் பின்லாந்து முதன்மையானது. இந்த உச்சத்தை அந்த நாட்டு ஆய்வாளர்கள் தம் தேசியக் கதைப்பாடலான ‘கலேவலா ’ (Kalevala) என்ற வாய்மொழிக் காவியத்தைத் திரட்டிச் செம்மைப்படுத்தி வெளியிட்டதன் மூலம்தான் அடைந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். தம் தேசியக் காவியத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காக நிறைய முயற்சியும் மானிய நிதியுதவிகளும் செய்துள்ளார்கள். அப்படித் தமிழிலும் மிக அட்டகாசமாக அதன் தமிழ் வடிவம் வெளிவந்து எல்லோருக்கும் பெரும்பாலும் இலவசமாக அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. ஆனால் என்ன துரதிர்ஷடம் என்றால் […]

எழுத்து

அன்றாடத்தின் கற்பிதம்: தமிழ்த் திரைப்படங்களில் உள்ளூர் நாயகர்கள்

ஸ்டாலின் ராஜாங்கம் · 27.07.21

1980களில் பல்வேறு உள்ளூர் அம்சங்கள் திரைப்படச் சட்டகத்திற்குட்பட்டு தமிழ்த் திரை வெளிக்குள் கொணரப்பட்டன. உள்ளூர் நினைவுகளில் நிலைத்துவிட்ட நாட்டார் நாயகர்கள் பற்றிய கதைகளை மையமாக்கி வெளியான படங்கள் அவ்வகையில் முக்கியமானவை. அவற்றுள் இரண்டு போக்குகள் உண்டு. மக்களிடையே வாழ்ந்து வாய்வழிக் கதைகளாக உள்ளவர்களின் வரலாறை வெகுஜன கதையாடலுக்கேற்ப மாற்றி வெளியிட்ட படங்கள் முதல்வகை. கரிமேடு கருவாயன், மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இந்த வகையில் கூறலாம். இவர்கள் பெரும்பாலும் உள்ளூரில் நிலவிய ஏதோவொரு அதிகாரத்தால் பாதிக்கப்பட்டு […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 1): கமல்ஹாசன்

ஆத்மார்த்தி · 27.07.21

1 இசை மானுட வாழ்வின் வினோதம். உணர்வுகளின் துல்லியத்துக்கும் உணர்தலின் நுட்பத்துக்கும் இடையிலான பெருங்கால அலசலை இசை சாத்தியப்படுத்துகிறது. சுயத்தில் மூழ்கிக் கனிந்தபடி திரும்பி வராத பாதையின் இருளே ஒளியெனப் புறப்பட்டுச் செல்கிற தீராப் பயணம் இசை. இருந்த இடத்திலிருந்தபடி நாடோடியின் உலாவலைப் பரிசளிப்பது இசையின் வசீகரம். இசையில்லாத திசையிலிருந்தபடிதான் இந்தப் பிரபஞ்சத்தின் அழிதல் தொடங்கும். இசையே இறை. இசையின்றி வாழ்வில்லை. “Music is the one incorporeal entrance into the higher world of […]

எழுத்து

மாதா சோறு

ஷாலின் மரியா லாரன்ஸ்  · 27.07.21

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே – அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே மணி இரவு பதினொன்றரை கடந்தது. பெரிய சர்ச்சுக்குப் பக்கத்தில் இருக்கும் பொரி பட்டாணிக் கடைகளில் இருந்த ஒலிப்பெருக்கியில் பி.சுசீலா தேனைவிட மதுரமான குரலில் இயேசுவைத் துதித்துக்கொண்டிருந்தார். நான் அதைக் கேட்டுக்கொண்டே மிக கோபமாய் அமர்ந்திருந்தேன். சர்ச்சுக்கு நேரெதிரேயுள்ள தோமையார் இல்லத்தில்தான் தங்கியிருந்தோம். மிகவும் மோசமான காலகட்டம் அது. காலேஜ் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த நேரம். வீட்டில் […]

எழுத்து

இருதலை மணியன்

செல்வேந்திரன் · 27.07.21

அதிகாலையிலேயே அருகிலிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்காவில் கிரேட் இந்தியன் பஸ்டார்ட் எனும் கானமயில்களைக் காண வேண்டுமென்பது எங்களின் விருப்பமாக இருந்தது. இரவிரவாகப் பெய்த மழையில் எங்கள் கார் ஒன்றின் கதவு திறக்காமல் போய்விட்டது. ஏற்பாடு செய்திருந்த வாடகை ஜீப்பும் ஈரமணலில் சக்கரம் சிக்கிக்கொள்ளும் என வர மறுத்தனர். விடிய விடிய பெய்த மழையில் நிலமெல்லாம் ஊறிக்கிடந்தது. பாலைவனத்தைப் பிரிக்கும் கனத்த தார்சாலை கறுத்த மலைப்பாம்பைப் போல நீண்டிருந்தது. சிலர் ஜீப்புகளைத் தலைதெறிக்கும் வேகத்தில் கத்தியபடியே ஓட்டிச் சென்றனர். […]

எழுத்து

சமஸ்: A De-professionalized Intellectual

முகம்மது ரியாஸ் · 30.06.21

I சமஸுக்காக ‘இந்து தமிழ்’ நாளிதழை வாங்கத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பொள்ளாச்சியில் நான் படித்த பி.ஏ. பொறியியல் கல்லூரியின் நூலகத்தில்தான் முதன்முதலாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் பார்த்தேன். தமிழில் அதுவரை பார்த்திராத வகையில் அதன் வடிவமைப்பு இருந்தது. குறிப்பாக, அதன் எழுத்துரு. ஏனைய பக்கங்களைவிடவும் நடுப்பக்கம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. முதல் நாள் ஜெயமோகன் கட்டுரை எழுதியிருந்தார். ‘இவ்வளவு செய்திகள் எதற்கு?’ பத்திரிகை வெளிவரும் முதல் நாளே செய்திகள் அதிகம் தேவையில்லை என்று ஒரு கட்டுரை. அடுத்த சில தினங்களில் அருந்ததி ராயின் கட்டுரை ஒன்று […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 10): தனியாவர்த்தன மின்னல்கள்

ஆத்மார்த்தி · 24.06.21

“Music is the language of the spirit. It opens the secret of life bringing peace, abolishing strife.” – Kahlil Gibran சகஜமும் அந்தரங்கமும் பொங்கிப் பெருக்கெடுக்கும் குரல் உமா ரமணனுடையது. புதிய குரல்களின் தேவைக்கும் வருகைக்கும் இடையிலான தொடர்பு கவனிக்கத்தக்கது. எப்போதெல்லாம் கவன மாற்று ஒன்று அவசியமாகிறதோ அது வரையில் பெரும் செல்வாக்கு பெற்ற குரல்களே போதுமானதாக இருந்துவரும். திடீரென்று ஒரு பாடலின் சூழல் அந்தக் குறிப்பிட்ட பாடலை யாருக்கு […]

எழுத்து

தாய்ப்பாசத்தின் கற்பிதமும் உண்மையும் – ஏங்கல்ஸும் ஹைடெக்கரும்

ஆர்.அபிலாஷ் · 24.06.21

தமிழ்நாடு அம்மா பாசத்துக்குப் பெயர் போனது – ஒப்பிடுகையில் தாயைப் போற்றும் காட்சிகள் பழைய இந்திப் படங்களில் உண்டு. மலையாளத்திலும் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவிலே நீண்ட காலமாக அம்மா செண்டிமெண்ட் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் அனேகமாக ஹிட்தான். மலையாளத்திலும் இந்தியிலும் நான் பார்த்தவரையில் அம்மா பாடல்களைவிட தாலாட்டுப் பாடல்கள் அதிகம். தந்தை-மகன் / மகள் உறவு அங்கு தாய்-மகன் உறவைவிட அதிகமாக அங்கு கொண்டாடப்படுகிறது. ராஜ்கிரண் “என் […]

எழுத்து

சோற்று ஜாதி

ஷாலின் மரியா லாரன்ஸ்  · 24.06.21

அன்றைய ஆபிஸ் மீட்டிங் பூமர் சூயிங்கத்தைப் போல் இழுத்துக்கொண்டே போக, ஒரு வழியாக ஆறரை மணிக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். அரைமணி நேரம் லேட். வீட்டிற்குக் கூட்டிச்செல்லும் ஆட்டோக்கார சுரேஷ் அண்ணா கீழே காத்துக்கொண்டிருந்தார். வீடு திரும்ப வேண்டும் என்கிற அவசரத்திலும்கூட லிஃப்டை நோக்கி நடந்துகொண்டே மொபைலில் ஹவுஸ் ஆப் மார்லி ஹெட்போனைச் சொருகி என்னுடைய விருப்பப் பாடல்கள் லிஸ்டை ஓடவிட்டேன். லிஃப்ட் வந்தது. உள்ளே நுழைந்தேன். காதில் “ஊத்திக்குனு கடிச்சிக்கவா, கடிச்சிக்குனு ஊத்திக்கவா” […]

எழுத்து

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு · 24.06.21

2016ல் மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் மருத்துவத்திற்காகச் செய்யும் செலவில் 100 ரூபாயில் 52 ரூபாய் மருந்துகளுக்காகவே செலவிடுகின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியர்களின் மருத்துவச் செலவீனங்களில் 30 சதவிகிதம் மட்டுமே அரசின் பங்களிப்பு உள்ளது. அதாவது மக்களின் மருத்துவச் செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக மட்டுமே அரசின் பங்களிப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள்கூட மருத்துவச் சேவைகளுக்காக இந்தியாவைவிடக் கூடுதல் நிதிப் பங்களிப்பு […]