எழுத்துப் பெருக்கமும் மொழிக் காப்பும் – மகுடேசுவரன்
இன்றைய காலத்தின் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இணையம் வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் திரையிட்டுக் கட்டிக் காக்கப்பட்ட பலவும் பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கின்றன. செய்தி முதற்கொண்டு கலை இலக்கியங்கள் ஈறாக யாவற்றின் பெருக்கமும் அளவிட முடியாததாகிறது. இவ்விரைவு மேலும் மேலும் கூடுகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து குவிகின்றன. புதுக்கருத்தியல்கள், புதுப்பொருளில் அமைந்த உரையாடல்கள், புதுக்கலை வெளிப்பாடுகள், ஊடகப் பெருவெளி என்று பற்பல அடிப்படை மாற்றங்களைக் காண்கின்றோம். இன்று மொழியானது பேச்சாகவும் எழுத்தாகவும் அடைந்திருக்கின்ற அன்றாடப் பயன்பாட்டு உயரம் […]
