பாறையை உண்டு பசியாறியவன்
விரைவில் வெளிவரும் தோல்வியின் அறிவிப்பு தோற்கப் போவது இருவரில் ஒருவர்தான் நீ பொய்யானாலும் உன் கவிதைகள் பொய்யறியாதவை ஒழுங்கான பொய்களாக உன் வார்த்தைகள் அமைந்திருப்பினும் ஒழுக்கமற்ற உண்மைகள் உன் எழுத்துக்குள் மின்னி மின்னிச் செல்கின்றன. நம்பிக்கையின் நிறத்தை நீ நிச்சயிக்கிறாய் அவநம்பிக்கையின் நிறத்தை நான். கிளியிலிருந்து பச்சையெடுத்து புல்லில் வந்து அமர்ந்ததும் புல்லின் பச்சை கொத்தி கிளியை நோக்கிப் பறந்ததும் எதுவென்று தெரிந்துவிடும். * உயரத்துப் பார்வையிலிருந்து… இரவு வானத்தின் மேலே கவிழ்ந்து படுத்துக்கொண்டு யாரோ உற்றுப் பார்த்தபோது நடுங்கிய உயிரின் […]
