நாய் வேஷம்
திகிலும் கலவரமும் சூழ சத்திரத்துத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான் இருசப்பன். போன ஆட்டமே ஒரு சீட்டில் போய் விட்டது. கையிலும் காசு போண்டி. இந்த ஆட்டமாவது காட்டினால் தான் தொடர்ந்து ஆட முடியும். நாலடி கட்டுக் கட்டியாகிவிட்டது. மூணடி கட்டும் ஒன்று பூர்த்தி. ஸ்பேட் நாலும் அஞ்சும் கையிலிருக்கிறது. மூணு வந்தாலும் சரி, ஆறு வந்தாலும் சரி. கையைக் காட்டி விடலாம். மேசை ரெண்டரை ரூபாய் வரும். அடுத்த ஆட்டம் போடலாம். ஆனால் அதற்குள் யாரும் கையைக் […]
