Category: சிறுகதை

எழுத்து

புத்துயிர் அமுதம்! – பால்ஸாக்

ராஜேந்திரன் · 13.01.19

டான் யுவான் பெல்விடாரோ ஒரு குளிர்கால மாலையில், பகட்டான ஃபெராரா மாளிகையில் எஸ்தே குடும்பத்தைச் சார்ந்த இளவரசருக்கு விருந்தளித்தார். அக்காலத்தில் மாளிகை விருந்தோம்பல் என்பது மலைக்க வைக்கும் நிகழ்வாகும். அதற்கு மிதமிஞ்சிய பெரும் செல்வம் அல்லது அதிகாரமிக்க பெரும் பதவி போன்றவை இன்றியமையாதவை. விருந்தினர் அறையிலிருந்த சுவர்களில் சிகப்புக் காரை பூசப்பட்டிருந்தது. அவற்றிலிருந்த வியத்தகு ஓவியங்களில் காணப்பட்ட பளிங்குக் கற்களின் வெண்மை எடுப்பாகத் தோற்றமளித்தது. விலையுயர்ந்த துருக்கிய தரை விரிப்புகளிலிருந்து மாறுபட்ட அழகை அந்த ஓவியங்கள் தந்தன. […]

எழுத்து

வெட்டுக்காடு

கண்மணி குணசேகரன் · 15.12.18

வெயிலில் வதங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு வெளியின் ஒற்றையடிப் பாதை, பூமாறி நிற்கும் கொன்றை மரத்தின் காலடியால் குள்ளச்சி ஓடையில் இறங்கியது. ஓட்டமும் பெருநடையுமாக வெறிகொண்டவளைப் போல ஓடிவந்த அந்த சடசடப்பிலும் மணிமேகலை, ஒருசரிவில் கால்கள் சறுக்கி விடாதவாறு தாங்கலாய்தான் இறங்கினாள். அப்படியும் ஓடையின் கல்ச்சி மணலில் விழுந்து கிடந்த காய்ந்து பனங்கொட்டை ஒன்று இடது பாதத்தில் இடறவும் மீண்டும் மக்கிளித்துக் கொண்டதாய் கண்ணில் தெறிக்கிற வலி. பல்லைக் கடித்துக்கொண்டு ஓரத்து நாணாச் சிம்புகளைப் பிடித்து எதுமேட்டில் மெல்ல […]

எழுத்து

சுழல்

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 15.12.18

திங்கட்கிழமை காலைப் பொழுதுகளின் வழமையான சலிப்போடு மழிக்கும் கத்தியின் கூர்தீட்டலுக்கு இலக்கான சிறு பிம்பிள் மொட்டுடைப்பின் எரிச்சலும் சேர்ந்து கொண்டது. எவ்வளவு கவனத்துடன் செயல்பட்டாலும் சில தற்செயல்களின் கிடுக்குப்பிடிக்குள் சிக்காமல் தப்பிப்பது அத்தனை சுலபமாக இருப்பதில்லை. திங்களன்று பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு வெளியேறிய வெள்ளிக்கிழமையின் குமிக்கப்பட்ட அலுவலக வேலைகள் வேறு ஒவ்வொன்றாகக் கண் முன்னே வந்துபோயின. அது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது. கண்ணாடியிலிருந்து கண்ணை நகர்த்தி சாப்பாட்டு மேசையைப் பார்த்தேன். மதிய உணவு கட்டி […]

எழுத்து

மெக்ஸிகன் – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 15.12.18

அவரது சரித்திரம் யாருக்கும் தெரியாது. அதிலும் ஜன்டாவிற்குத் தெரிய வாய்ப்பேயில்லை. அவர் அவர்களது ‘இளம் புதிர்.’ ‘பெரும் அபிமானி.’ நிகழவிருக்கும் மெக்ஸிகோ புரட்சிக்கு ஜன்டாவினர் எந்தளவு பாடுபட்டார்களோ, அதே போல அவரும் அவரது வழியில் பாடுபட்டார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். அவர்களில் ஒருவருக்குக்கூட அவரைப் பிடிக்கவேயில்லை. பல அலுவல்களில் பரபரப்பாயிருந்த, கூட்டம் நிறைந்த அறைக்குள் அவர் நுழைந்த அன்றே அவரை ஒற்றர் என்றும், டயஸின் உளவுப் படையினரால் அனுப்பப்பட்ட கைக்கூலி என்றும் ஜன்டாவினர் எண்ணினர். […]

எழுத்து

தப்புக்கொட்டை

கண்மணி குணசேகரன் · 14.11.18

”பெத்த வவுறு பத்தி எரியுதுடா கொலகாரப் பாவி! நீனும் இப்பிடி பண்ணிட்டியடா. ஓடன ஓங் காலுல கட்ட மொளைக்கோ… ஒனக்கு ஒசன சொல்லிக் குடுத்தவ குடும்பம் அழியோ… அவ மண்ணாப் பூடோ…” ஊரை இரண்டாய்க் கிழித்த மூக்காயியின் கூப்பாட்டை, ஒப்பாரியை மேற்கிலிருந்து பொட்டமண்ணை அள்ளிக் கொண்டு வந்த காற்று சுதி மாறாமல் வாரிக் கொண்டுபோய், ஊருக்கும் கிழக்குப்புறமாய் இருக்கும் முந்திரிக்காட்டில் தப்புக்கொட்டை பொறுக்கிக்கொண்டிருந்த சனங்களின் காதுகளில் போட்டது. சருவைச் சீய்ச்சிக் கொண்டிருந்த குச்சியைப் போட்டுவிட்டு, கூண்டுக்குள்ளிருந்து வெளியவரும் […]

எழுத்து

சிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 14.11.18

ரொட்டியின் கடைசி விள்ளலால் மிச்சமிருந்த மாவு க்ரேவியை துடைத்து வழித்துத் தட்டைக் காலி செய்த டாம் கிங், நிதானமாக ஆழ்ந்த யோசனையுடன் அதனை சுவைத்துத் தின்றார். அவர் மேஜையிலிருந்து எழுந்த போது பசியாறவில்லை என்னும் உணர்வு அவரை வாட்டியது. எனினும் அவர் மட்டுமே உணவருந்தியிருந்தார். மற்றொரு அறையில் இரண்டு பிள்ளைகள் படுத்திருந்தனர். இரவு உணவை சாப்பிடவில்லை என்பதை மறந்து விடும்படி விரைவாக அவர்கள் உறங்க வைக்கப்பட்டிருந்தனர். அவரது மனைவி ஒன்றையும் தொடவில்லை. அமைதியாகக் கணவரைப் பரிவுடன் பார்த்தவாறிருந்தார். […]

எழுத்து

முதியோர் சாசனம் – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 12.10.18

ஒரு மனிதரின் மரண தண்டனை குறித்த வழக்கு விசாரணை, படை வீரர்களின் குடியிருப்பில் நடைபெற்று வந்தது. அந்த மனிதர் வயோதிகர். அவர் வெள்ளை மீன் நதி பாய்ந்தோடி விழும் லே பார்ஜ் ஏரியின் கீழுள்ள யூக்கான் பிரதேசத்தின் பழங்குடியினரில் ஒருவர். அந்த வழக்கு குறித்து டாவ்சன் நகர் முழுவதும் பதற்றத்தில் ஆழ்ந்தது. அதே போல் யூக்கான் பிரதேசத்தின் மேலும் கீழும், சுமார் ஆயிரம் மைல்கள் வரையிலும் அதே பதற்றம் நீடித்தது. அந்நியர் நிலம் திருடி, கடல் திருடி […]

எழுத்து

சிறுத்தை நடை

போகன் சங்கர் · 13.09.18

1 ஸ்கார்லெட் அந்த பலகையைப் பார்த்து சட்டென்று நின்றாள். சிறுத்தை நடமாடும் இடம் கவனம். ”இங்கே சிறுத்தை வருமா?” கார்மல் ”எப்பவாவது. போன வருஷம் அதோ அந்த மேட்டுல தேயிலை பறிச்சிக்கிட்டிருந்த பொன்னியோட மகளைத் தூக்கிட்டுப் போயிடுச்சி.” ஸ்கார்லெட் ”அப்புறம் ?” என்றாள் படபடப்போடு. ”அப்புறம் என்ன ?”கார்மலின் முகத்தில் ஒரு இகழ்ச்சி படர்ந்தது ”அன்னிக்கு அந்த சிறுத்தை நிறைஞ்ச வயித்தோட சுகமாத் தூங்கியிருக்கும்.” கார்மலை அந்தக் கணத்திலிருந்து தான் தனக்குப் பிடிக்காமல் போனதா என்று பின்னால் […]

எழுத்து

பாற்குடங்கள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 13.09.18

ஆளரவமற்ற நீண்ட பிரகாரத்தில் வெகு நேரமாய் நிற்கிறேன். யாளி முகம் தாங்கி நிற்கும் கற்தூணில் கொடிமங்கை. என் கண்கள் அவள் மார்பையே உற்றுப் பார்த்திருக்கின்றன. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்க்கிறேன். யாருமில்லை. கோபுர மாடத்திலிருந்து புறாக்கள் படபடத்து அணைகின்றன. கண்கள் மீண்டும் மங்கையின் மார்பில் படிகின்றன. சிற்பியின் கற்பனையா? இல்லை இவள் இப்படித்தான் நின்றாளா? மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பெண்கள். எல்லோர் மார்புகளும் இதே வடிவில். இதே அளவில். விரல்கள் தொட்டுப்பார்க்கத் துடிக்கின்றன. அழகைக் காட்டி நிற்கும் இவற்றை […]

எழுத்து

தீ வளர்க்க… – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 13.09.18

நாள் சாம்பல் நிறத்தில் குளிராகத் துவங்கியது. அந்த மனிதன் பிரதான யூக்கான் தடத்திலிருந்து விலகி அங்கிருந்த சரிவின் மேலேறிய போது குளிர் மிதமிஞ்சியிருந்தது. வானம் ஆழ்ந்த சாம்பல் நிறத்துடன் காணப்பட்டது. அந்த சரிவின் உச்சியில் சொற்ப அளவிலேயான பயணிகள் செல்கிற, கண்களுக்குத் தெளிவாகப் புலப்படாத மற்றொரு தடம் கிழக்கு நோக்கிச் சென்றது. செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த ஊசியிலை மரங்களின் ஊடாக அத்தடம் அமைந்திருந்தது. செங்குத்தான அந்த சரிவின் மீதேறியதும் அதன் உச்சியில் நின்று மூச்சு வாங்கியவாறு தனது […]

எழுத்து

குரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ்

க. மோகனரங்கன் · 13.08.18

பியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற இளம் விலைபெண்ணிடம் காதலில் வீழ்ந்தவன், தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்திட்டங்களை ரத்துசெய்தான். அவர்கள் இரண்டு தினங்களை, பெரும்பாலும் பியர்டின் விடுதி அறையிலேயே ஒன்றாகக் கழித்தனர். பகலிலும் இரவிலும் சாப்பிடுவதற்காக மட்டும் அவளை உணவகங்களுக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம்நாள் இங்கர் தனக்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக பியர்டிடம் கூறினாள். பியர்டு வருவதற்கு முன்பு அவளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. […]

எழுத்து

தீட்டு

போகன் சங்கர் · 09.07.18

செருப்பைக் கழற்றிவிட்டு தார்சாலில் ஏறியதும் வழக்கத்துக்கு மாறான பரபரப்போடு அக்கா எழுந்து வந்தாள். இல்லாவிட்டால் அவள் வந்ததை அறியாதவள் போல அந்தி கருத்தும் தலையைக் கூட முடியாமல் டிவியையே வெறித்துக் கொண்டிருப்பாள். உண்மையில் அதிலும் என்ன ஓடுகிறது என்று நிறுத்திக் கேட்டால் தெரியுமா என்பது சந்தேகமே. கோமதி அவளை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். ‘’எப்பவும் தீட்டுக்காரி மாதிரி தலையைக் கட்டிக்காம உக்காந்திரு. பிறகு இந்த வீடு விளங்கறதுக்கா’’ வழக்கமாய் உள்ளறையிலிருந்து கேட்கும் மெல்ல தனக்குத்தானே ஆச்சி பாடும் தேவாரப்பதிகங்கள் […]