Category: சிறுகதை

எழுத்து

அகிலம்

வண்ணதாசன் · 27.12.22

தவமணிக்கு இப்படித்தான் ஆகிவிடுகிறது. மனதுக்குச் சரியில்லாமல் என்னமோ மாதிரி இருக்கிறது, நல்ல வெயில் அடித்தாலும் வீடு முழுவதும் இருட்டில் மிதக்கிறது, அவள் என்ன இது என்ன மாதம், இன்றைக்கு என்ன கிழமை, போன வருஷம் இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நினைத்துக்கொண்டா இருக்கிறாள்? ஆனால் வேண்டாதது எல்லாம் ஞாபகம் வந்து இம்சை பண்ணுகிறது. செல்வமணி இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு +1 படித்துக்கொண்டு இருப்பான். அவனுக்குப் பின்னால் பிறந்த செல்வராணியே இப்போது எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். எந்த நேரத்திலும் அவள் […]

எழுத்து

கூன்வண்டு

சரவணன் சந்திரன் · 27.12.22

படுக்கையில் என் மார்பு மீது கையை ஊன்றி அதில் தலையைச் சாய்த்து, மேல்நோக்கி விழிகளை உயர்த்தி, “ஹேப்பியா இருக்கீயாடா?” என்றாள் புனிதா. நானும் உடனடியாக, “ஏன்.. நல்லாத்தான் இருக்கேன்” எனப் பொய் சொல்லிவிட்டேன். அவளோடு இருக்கையில் இப்படிப் பொய் பேச வேண்டியிருக்கிறது. மனதில் இருந்ததை அப்படியே அவளிடம் கொட்டிவிட முடியாது என்பதால், என் வார்த்தைகளைத் தணிக்கை செய்தபடியே இருப்பேன். கையில் ஜெபமாலையை வைத்து மெதுவாக ஒவ்வொன்றாய் உருட்டுவதைப் போல வார்த்தைகளைப் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் தடவித் தள்ளுவேன். […]

எழுத்து

சுடர்த்தொடி கேளாய்!

மானசீகன் · 27.12.22

“ஃபௌசி.. இன்னிக்கு நா சி.எல் இல்லடி. ஸ்கூலுக்கு திரும்ப வந்துட்டிருக்கேன்.” “அச்சோ.. ஒங்க பண்டல் மச்சானோட படத்துக்குப் போகலையா?” “இல்ல.. அவருக்கு திடீர்னு கம்பெனில வேல வந்திருச்சாம்.” “……………” “வந்து சொல்றேன். நீ முதல்ல ஆஃபிஸ்க்கு போயி லீவ் லெட்டர திரும்ப வாங்கிடு.” ஃபௌசி அயர்ச்சியாகத் தொலைபேசியை வைத்தாள். மகாவை நினைத்தால் பாவமாயிருந்தது. திருமணமாகி ஆறே மாதத்தில் அவர்கள் சேர்ந்து கிளம்புவதாகத் திட்டமிடும் ஒவ்வொரு முறையும் இதே மாதிரிதான். இறுதிக்காட்சி மட்டும் மாறாமல் உறைந்துவிட்ட ஒரே நாடகத்தின் […]

எழுத்து

கன்னிகை

சுஷில் குமார் · 27.12.22

“எத்தான், நீங்க எதுக்கு ரொம்ப யோசிக்கியோ? ஒரே ஒரு தடவதான? போனா கெடைக்க பைசால கொஞ்ச நாள கழிக்கலாம்லா?”  “நிறுத்துட்டி, என்ன கையாலாகாத்தவன்னு சொல்லுக என்னா? ஊர்ல எல்லாவனும் என்னப் பாத்து என்ன கேப்பான்? பிள்ளைய கோயிலுக்கு அனுப்பிப் பொழைக்கான்னு சொல்ல மாட்டானுவளா? அதுவும் பொம்பளப் புள்ளக்கிப் பதிலாட்டு. சீ.. ஊர்ல நா மொகங்காட்டி நடக்கது ஒனக்குக் கொள்ளலையா?” “இல்லத்தான், நீங்க எதுக்கு அப்பிடிலாம் யோசிக்கியோ? நம்ம மட்டுமா பண்ணுகோம்? எல்லாருந்தான் பிள்ளேல அனுப்புகா? கொஞ்சம் மனசிலாக்குங்கோப்பா. […]

எழுத்து

அரும்பு

கமல தேவி · 27.12.22

சாயங்கால வெயில் தணிந்திருந்தது. எங்கள் சுற்றுக்குள் உள்ள நான்கு வீடுகளிலும் மதிய உறக்கம் முடித்த அம்மாக்களின் நடமாட்டம் தொடங்கியது. நான்கு வீடுகள் சுற்றியிருக்க, வீடுகளுக்கு நடுவில் உள்ள சிமெண்ட் தளம் இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சிக்களம் அளவுக்கு மேல் இருக்கும். தெற்கு ஓரத்தில் பழைய கிணறு ஒன்று. அதன் முடிவில் கிழக்கு பார்த்த சுற்றுச்சுவரில் பெரிய இரும்புக் கதவுகளின் முன்னே வண்டி வந்து நின்றது. சனிக்கிழமை என்பதால் வங்கியிலிருந்து சீக்கிரமே அப்பா வந்துவிட்டார். நான் அவருக்குக் கை காட்டிவிட்டு […]

எழுத்து

தானச் சோறு

சரவணன் சந்திரன் · 11.10.22

ஆண்டிப் பண்டாரம் தெற்கே இருந்து நிலத்தை ஊடறுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் சோர்ந்து போய் நடந்து வந்தார். மாட்டுக்கு எடுப்பதைப் போலத் தாங்கவியலாத் தாகம் எடுத்தது அவருக்கு. எதிரே இருக்கிற குன்றில், தாகம் தீர்க்கிற சொடக்குத் தக்காளிகளும் கள்ளிப் பழங்களும் கிடைக்குமென ஊகித்தார். குன்றினில் மெல்லத் தன் குச்சியை ஊன்றி மேல் நோக்கிப் பலத்தைத் திரட்டி, நடந்து போனார். பாலில் பனங்கற்கண்டைப் போட்டுக் காய்ச்சிய மணம் குன்றின் மீதிருந்து வீசியது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் போய்ச் சுருண்டது காற்று. […]

எழுத்து

சித்திரச் சபை

சுரேஷ் பிரதீப் · 10.10.22

1 அப்பா முதலும் கடைசியுமாக என் முன்னே அமர்ந்து குடித்தது என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில். பாண்டவையாற்றின் கரையிலிருந்த ஒரு கைவிடப்பட்ட கான்கிரீட் சுடுகாட்டில் அப்பாவும் நானும் அமர்ந்திருந்தோம். எங்களைச் சூழ்ந்து கரையில் செழித்திருந்த புற்களை ஆடுகள் வலுக்கட்டாயமாக மேயும் ‘வருக் வருக்’ சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பாண்டவனூரில் நான் வெறுக்கும் பொழுது இந்தப் பின்மதியம்தான். ஆத்தா வீட்டில் தொலைக்காட்சி வாங்கப்படாதவரை விடுமுறை நாட்களில் இப்பொழுதின் நிசப்தம் என்னை அவ்வளவு அச்சுறுத்தி இருக்கிறது. சன் டிவியில் நகைச்சுவைத் திங்கள், […]

எழுத்து

கீறல்

கமல தேவி · 10.10.22

புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு பள்ளிவாயிலை நோக்கி உஷா ஓடினாள். வகுப்பிலிருந்து அனைவருமே வெளியேறியிருந்தார்கள். காலை பதினொரு மணிக்குப் பள்ளிக்கூடம் சாத்தப்படும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கவில்லை. நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பிலும் அறிவுறுத்திச் சொல்லி அனுப்பினார்கள். குதித்துக்கொண்டும் சிரித்தபடியும் தலைமையாசிரியர் அறைக்கு அப்பால் உள்ள தென்னை மரங்களைக் கடந்து சிறிய படல் வழியில் வெளியேறினார்கள். பள்ளிக்காவலாளி ராமசாமி மேற்குப் பக்கமாக இருந்த பள்ளியின் முக்கிய வாயிலைப் பெரிய தென்னம்படலை இழுத்து வைத்து மூடிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் […]

எழுத்து

ஆரஞர் உற்றன கண்

விஜய ராவணன் · 10.10.22

நான் அவனை ஜெர்மனியின் ‘ஸ்டட்கர்ட்’ நகரில் முதல்முறை பார்த்த அன்று, ‘க்ளோரா’ உணவகத்தில் அளவுக்கு அதிகமான மின்விளக்குகள் இரவின் கருமைக்கு வண்ணம் தீட்டியிருந்தன. உணவகத்தின் வாசலில் நெருக்கமாய் இடப்பட்டிருந்த சிறுசிறு வட்ட மேசைகளைச் சுற்றி குட்டையான மர ஸ்டூல்களிலும் உயரமான மூங்கில் நாற்காலிகளிலும் அமர்ந்து மக்கள் புகைப்பதும் மது அருந்துவதுமாய்ச் சத்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். உணவகத்தின் மேல்தளத்து முற்றத்தின் அலங்காரச் செடிகளின் நடுவே பல வண்ண மின்விளக்குகள் பிரகாசித்தன. தூரத்தில் அவ்வப்போது வான வேடிக்கைகளும் செவிமடலைக் கிழிக்கும் […]

எழுத்து

தனபாக்கியத்தோடே ரவ நேரம்

இராசேந்திர சோழன் · 10.10.22

தனபாக்கியம் ஆத்திரம் தாங்காமல் ஓலமிட்டு அழுதாள். பரட்டைத் தலைமயிர் காதோரங்களிலும் கன்னங்களிலும் தொங்கியது. கண்களிலிருந்து பெருகி வரும் கண்ணீரைக்கூடத் துடைத்துக்கொள்ளத் தோன்றாமல் கத்தினாள். புருஷனோடு சண்டை, வயிற்றெரிச்சல். ‘ஒங்க எழவுங்கள எடுக்க… ஒங்க கருமாந்தரத்துக்க ஒழைச்சி ஒழைச்சிதான் ஓடா பூட்டனேடா! இன்னமும் அடிக்க வர்ரியேடா, பாவி நீ வௌங்குவியா….’ ‘ஒனக்கு இன்னமும் என்னுமோ ஒடம்பு ஊரிக்னுதான் இருக்குது.’ கட்டிலில் குந்தியிருந்தவன் தலையை ஆட்டிக் கறுவினான். ‘யாருக்கு ஊருதுன்னு ஒன்னுந் தெரியல. கேப்பார் மேப்பார் கெடையாதுன்னு நெனைச்சீங்கீறியா… எங்க […]

எழுத்து

அரைப் பனை

சரவணன் சந்திரன் · 30.08.22

இடிவிழுந்து எரிந்துபோய்க் கன்னங்கரேலெனப் புல்லின் நுனியளவுகூடப் பச்சையமில்லாமல், நின்றமேனிக்கு இருந்த வேப்ப மரத்தின் பின்னால் இருந்து சுடலை நடந்து வந்தபோதுதான் முதன்முறையாக அவரைப் பார்த்தேன். சாம்பல் வண்ணத்திலிருந்து, தும்பையைத் துவைத்தெடுத்த மாதிரி வெள்ளைவேட்டி சட்டையணிந்து காட்சியாய்த் தோன்றிய அவருமே அந்தக் கரிதோய்ந்த மரத்தின் நிறத்திலேயே இருந்தார். பொன்னிமலைக் கரட்டின் உச்சியில் திரிகிற மேகப் பொதியை வெட்டி எடுத்து அவரது மூக்கிற்குக் கீழே மீசையாய் யாரோ வரைந்து விட்ட மாதிரி அத்தனை வெண்மையாய் இருந்தது. மூக்கின் துவாரங்களுக்கு உள்ளே […]

எழுத்து

எட்டு நிமிடங்கள்

இந்திரா ராஜமாணிக்கம் · 30.08.22

இது நான் உனக்கு எழுதும் மூன்றாவது கடிதம், அதாவது நம் விவாகரத்திற்குப் பிறகு. உனக்கான கடிதங்களை ‘அன்புள்ள’ என்று ஆரம்பிப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இருப்பதில்லை ராஜி. எல்லாக் கடிதங்களையும் அப்படித்தான் தொடங்க வேண்டுமா என்ன! இதற்கு முன்பான என் முதல் கடிதத்தை, “சௌக்கியங்களைத் திருடிச்சென்றவளுக்கு” என்று ஆரம்பிக்க நினைத்து, பிறகு “எப்படியிருக்கிறாய் ராஜி?” என மாற்றியிருந்தேன். இரண்டாவதில், “நெடுந்தூரப் பயணமொன்றுக்கு என்னைத் தயார்செய்தவளுக்கு” என்று எழுத நினைத்து, “மூன்று வருடங்கள் ஓடிவிட்டது ராஜி” என ஆரம்பித்திருந்தேன். […]