Category: சிறுகதை

எழுத்து

முள்

எம்.கே.மணி · 30.08.22

அதுவொரு மூச்சடைப்பு. அவளுடைய மார்புப் பிளவை எவ்வளவு நேரம் வெறித்து நின்றேனோ? அங்கிருந்து பார்வையை விலக்கினாலும் மனம் அடித்துக்கொண்டிருந்தது. மஞ்சுவைப் போல ஒரு அழகியை நான் அதுவரை பார்த்தது இல்லை என்பது உறுதி. இடுப்பில் ஒரு வேட்டி கட்டி, ஒரு ஜாக்கெட்டுடன் முந்தானை போடாமல் நிற்கிற அத்தனை பெண்களும் எனக்கு வியப்புதான் என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆயினும் பேசும்போது, சிரிக்கும்போது, என்னிடம் மழலை கொஞ்சும்போது, எல்லாவற்றையும்விட எனது தலையைக் கோதிவிட்டுச் செல்லும்போது என்னை நான் வெடித்துவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பது […]

எழுத்து

இசைவு

இராசேந்திர சோழன் · 30.08.22

நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன். மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை […]

எழுத்து

வீழ்ச்சி

பா.திருச்செந்தாழை · 25.07.22

சோம்பலான தங்கத்தைப் போன்ற உடல்கொண்ட வெண்கலக் கிண்ணியில் கறவைப்பால் வெதுவெதுப்பாக நுரைத்திருந்தது. நல்ல தலையளவு மட்டத்திற்கு அது நிறைந்திருப்பதைப் பார்த்தால் அமிர்தா ஈன்றிருக்க வேண்டும். ஆனால் அவள் அகன்ற வயிற்றோடு தொழுவில் நின்றதாக நினைவில் இல்லை. முதலில் இது எந்த இடம்? பட்டறைச் சந்திலிருந்த பூர்வீக வீடா? தெரியவில்லை. பார்க்கும்போதே எங்கிருந்தோ சிவபாலன் டவுசர் பனியன் அணிந்து வந்தான். பத்து வயதிற்கு மீறிய உடல்வாகுதான். கரணை கரணையான புஷ்டிக் கட்டுகள் குழந்தைமைக்குப் பிறகும் நீங்காத உடல். அவனது […]

எழுத்து

சன்னதம்

மயிலன் ஜி சின்னப்பன் · 25.07.22

அதிகாலை கருக்கிருட்டில் வீராயி புரண்டுப் புரண்டு முனகிக்கொண்டிருந்தாள். அவளுடைய தூக்கம் இப்படித்தான் – முணுக்கென்றாலும் விழித்துக்கொள்வாள்; வாசலுக்குப் போவாள்; அலங்கமலங்க நாலாதிசையையும் பார்ப்பாள்; சமயங்களில் முக்கத்து சோடியம் விளக்கு வரை நடப்பாள்; வளைந்தோ குந்தியோ எக்கியோ.. தூரத்தை நோட்டமிடுவாள்; வந்து படுத்துக்கொள்வாள். அரவமில்லாமலும் செய்யவராது. ரப்பர் குடங்களை உருட்டி, விலகிப் புரளும் உள்பாவாடையில் இடறிக்கொண்டு, தவிட்டுச் சல்லடையைத் தட்டிவிட்டு, கொண்டியில் ஒரு டமார்.. அவ்வளவுதான் – தங்கம் எழும்பிவிடுவான். “அய்யய்யய்ய.. ஓத்திரிய யெழவு இந்த பொம்பளயோட..” அவன் […]

எழுத்து

மோப்பநாய்

சரவணன் சந்திரன் · 25.07.22

மேசையில் அந்தக் கோப்பைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, விறைத்து நின்று வணக்கம் வைத்தனர் என்னுடைய இளம் அதிகாரிகள். கோப்பை எடுத்து அந்தரத்தில் தூக்கி வைத்துக் கூர்ந்து பார்த்தேன். இஸ்மாயில், வயது ஐம்பத்தி ஐந்து என மேலே எழுதியிருந்தது.  “எவ்ளோதான் போராடறது? லூசாட்டம் சொன்னதையே சொல்றாரு. அப்புறம் அமைதியாயிடறாரு. என்னோட தலையில ஆணி வச்சு யாரோ நங்கு நங்குன்னு அடிச்ச மாதிரி இருக்கு” என்றான் எனக்குக் கீழ்ப் படிநிலையில் பணிபுரியும் இளம் அதிகாரி ஒருத்தன். அவனது சட்டை முழுக்கவே வியர்வையால் […]

எழுத்து

சிவந்த மச்சத்தின் நிழலில்

மானசீகன் · 25.07.22

திருமலையின் குறுஞ்செய்தி சற்று முன்புதான் வந்திருந்தது. ஒரே வரிதான். ‘நாளை மறுநாள் அஃப்ரீனுக்குக் கல்யாணம். திடீர் ஏற்பாடாம்.’ ஏற்கெனவே மிகுந்த குழப்பத்தோடு இருந்த போதுதான் இந்தக் குறுஞ்செய்தி வந்துசேர்ந்திருக்கிறது. நேரில் வந்து தொலைக்கப் போகிறேனே! கொஞ்சம் பொறுத்திருந்து இந்த இடியை நாளைக்கு என் தலையில் போட்டிருந்தாலென்ன? அம்மா சற்று முன்புதான் அழைத்திருந்தாள். நன்னிமா பற்றி ஒரே புலம்பல். நடுராத்தியில் எழுந்து உட்கார்ந்து, ‘தன் ராதிமா மௌத்தாகிவிட்டார். யாரும் கிளம்பலையா?’ என்று கேட்கிறார். குளிக்கப் போனால் ஒரு மணி […]

எழுத்து

நரை விதை

லோகேஷ் ரகுராமன் · 25.07.22

நாணாவுக்கு விழிப்பு தட்டியது. அரைமயக்கத்தில் அருகில் ஜன்னல் கம்பிகளின் இடைவெளிகளில் காலை ஒளி கசிவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். மயக்கம் தெளிந்த பிறகு, ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கீழே படுக்கை விரிப்பைத் தடவினான். நறநறவென்று இருந்தது. அவனது நெற்றியிலும் உடம்பிலுமிருந்து ஆங்காங்கே போடப்பட்டிருந்த மஞ்சள் பற்று காய்ந்து பெயர்ந்து படுக்கை விரிப்பில் உதிர்ந்து கிடந்தது.  அவன் வெற்றுடம்பில் கன்றிய அரச இலைகள் ஒட்டிக்கிடந்து சரசரத்தன. நேற்று மாலை எங்கோ விளையாடித் திரிந்து வந்தவன் உடம்பைச் சொறிந்த படியே வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான். பாட்டியும் தாத்தாவும் […]

எழுத்து

துறப்பு

இளங்கோவன் முத்தையா · 25.07.22

கல் கட்டிடத்தின் சுவரை ஒட்டி இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது இரண்டு செக்யூரிட்டிகள் வேகமாக ஓடிவந்தார்கள். “சார், இங்க நிறுத்தக்கூடாது, வெளிய பார்க்கிங்ல போய் நிறுத்துங்க” என்றார் ஒருவர். என் மனைவி வண்டியிலிருந்து இறங்கி, “பேஷண்ட் இல்ல, டாக்டர் ரவிச்சந்திரனோட கெஸ்ட், அவர்தான் வண்டிய இங்க நிறுத்திட்டு வரச்சொன்னாரு” என்றாள் நிதானமான குரலில். இந்த மாதிரியான இடங்களில், அதிகாரத்துக்கான, அலட்சிய முகபாவத்தை வெளிப்படுத்துவது அவளுக்கு இயல்பாகவே வருகிறது என்பதை மீண்டும் உணர்ந்தேன். அதே அலட்சியத்துடன் என் பக்கம் திரும்பி, […]

எழுத்து

இந்திரஜித்

எம்.கே.மணி · 25.07.22

இந்திரஜித் இறந்துவிட்டதாகத் தங்கை மகி போன் செய்திருந்தாள். நான் சற்று நேரம் ஒன்றும் செய்யாமல் வெறித்திருந்துவிட்டு, அந்தச் செய்தியைச் சிவதாசனுக்கு அறிவித்தேன். போனில்தான். அப்படியா என்ற பிறகு சிறிது நேரம் பேச்சில்லை. “விடு, என்ன செய்வது“ என்பது போல எதையோ சொன்னான் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் ஒரு கதையைப் பேச, திருவண்ணாமலைக்குச் செல்வதாக ஏற்பாடு இருக்கிறது. காலையில் இருந்து வாய் ஓயாமல் பேசித் தீர்த்தாலும் அன்றைய இரவின் குடிப்பொழுதில் நாங்கள் இருவரும் மட்டுமாக எஞ்சும் போது […]

எழுத்து

பங்காளி

கமல தேவி · 25.07.22

கொமாரசாமி கவுண்டர் கல்யாணம் முடித்ததும் இந்த ஊருக்கு வந்து வயல் வாங்கித் தன் பிழைப்பைத் தொடங்கியபோது பெருமாள் நாயக்கர்தான் இந்த மண்ணின் நுணுக்கங்களைச் சொல்லித் தந்தார். இது பச்சை மலையடிவார பூமி. இங்கே பெய்தலிற்கும் காய்தலிற்கும் இடையில் தடுமாறும் வானம். “வெளியூரு… வெளியாளுங்கன்னு நெனச்சி மலைக்க வேணாம். சுத்தி வயக்காரங்க நாங்க இருக்கோம். விவாசயம் பண்றவங்க எல்லாம் பங்காளியாட்டம் இருந்தாதான் ஒருத்தருக்கொருத்தர் உபகாரம்…” என்று சொல்லோடு நில்லாமல் ஒவ்வொரு விதைப்புப் பட்டத்திற்கும் இந்த மண்ணின் புஞ்சை விவசாயத்தைச் […]

எழுத்து

எருக்கிலம்பற்றைக்குச் சில எட்டுகள் தள்ளி மடுவத்தில் தலைப்பூடம்

சப்னாஸ் ஹாசிம் · 25.07.22

கால்களைப் பவ்வியமாகக் கரையிலிருந்து தண்ணீருக்குள் நீட்டி வைத்துக்கொண்டான். புற்தரைக்களியிலிருந்து களப்புப்படுக்கை மணல் பிரியும் கோட்டில் குதிகாலை களியிலும் புல் வேரிலும் தண்ணீருக்குள் உராய்ந்து கொடுப்பது புதிதாய்த் தோன்றிய பித்த வெடிப்பு அரிப்புக்கு இதமாக இருந்தது. கெண்டைச்சதையில் மோதும் களப்பின் குற்றலைச்சூடு மெதுமெதுவாயிறங்கி விரல்களைத் தின்னும் குஞ்சு மீன் வழுவழுப்பில் சடுதியாக ஏறியது. ஐந்தாறு பனை மரங்களோடு சேர்த்தியாக களப்போரம் வாகாயிருந்த ஒற்றையடிப்பாதையில் அதை இழுத்து வந்து எருக்கிலம் பற்றைக்குப் பின்னால் போட்டு வைத்திருந்தான். பற்றையடியிலிருந்து வடியும் தண்ணீரைக் […]

எழுத்து

மானு மோராஸ்

சரவணன் சந்திரன் · 25.04.22

”இந்த ஊரிலேயே பேரழகி என ஒருத்தியைக் காட்டுகிறேன். எப்பாடுபட்டாவது அவளை எனக்கு இரையாக்கிவிடு” என ரெகார்டோவிடம் சொன்னபோது, உடனடியாக அவன் “மானு மோராஸ்” என்றான். அதுவொரு கெட்ட வார்த்தை என்பது எனக்கு உடனடியாகவே புரிந்தது. “இதுதான் எனக்கு வேலையா?” என அவன் அடுத்த வாக்கியத்தைச் சொன்ன பிறகே அவ்வார்த்தையின் மிகக் கெட்ட அர்த்தத்தை விளங்கினேன். ரெகார்டோ இப்படித்தான் எப்போது பார்த்தாலும் இந்த வார்த்தையை அடிக்கடி எச்சிலைப் போலத் துப்பிக்கொண்டே இருப்பான். இந்தியாவில் அம்மாவைக் குறிக்கும் வசைச்சொல் போல […]