Category: சிறுகதை
எழுத்து
பா.திருச்செந்தாழை · 27.07.21
பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே பொன் வெளிச்சம் பூத்து வந்தது. குச்சியை அணைத்து வீசிவிட்டு கண்மாய்ச் சரிவின் இருளுக்குள் பார்வையை விட்டார். நீர் நிறைந்து கிடக்கும் வாகைக்குளம் கண்மாயின் மீது நிலவு வெளிச்சம் துணியைப் போல மிதந்துகொண்டிருந்தது. மேடுவரை ஏறிவந்து கரையில் மோதி கண்ணாடிக் கட்டிகளைப் போல நீர் உடைந்துகொண்டிருக்க, கருவேலம் மரத்திற்குக் கீழே பரமு பாவாடையைக் கைகளால் விரித்து குத்த வைத்திருந்தாள். […]
எழுத்து
எம்.கோபாலகிருஷ்ணன் · 27.07.21
தொலைபேசியை வைத்துவிட்டு அச்சகத்திலிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்தபோது மழை வலுத்திருந்தது. மழையில் கரையும் தெருவிளக்கின் ஒளியை உற்றுப் பார்த்தபடி ஜன்னலருகே அவன். “அப்பாதானே?” அறையின் எதிர்மூலையில் பாய் மீது கிடந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு சுவரில் சாய்ந்தான் கிருஷ்ணமூர்த்தி. “சாயங்காலத்துலேர்ந்து எத்தனாவது போன் இது?” விரலிடுக்கில் புகைந்த சிகரெட்டின் சாம்பலைத் தட்டி உதிர்த்தான். “அவருக்கு இன்னும் பயம். மறுபடியும் மடத்தனமா ஏதாவது செஞ்சுக்குவேன்னு யோசிக்கறார் போல”. கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல் கனத்த மழையை வெறித்திருந்தான். ஓட்டுக் கூரையில் விழுந்து […]
எழுத்து
சுரேஷ் பிரதீப் · 27.07.21
உடல் களைத்துப் போயிருந்தது. கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகு கொஞ்ச தூரம் இருசக்கர வாகனம் ஓட்டினாலும் இந்தக் களைப்பு வந்து பற்றிக்கொள்கிறது. இரண்டு வாரங்களாகிவிட்டன. நான் ஒரு காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். அவர் வரச்சொன்ன நாளுக்கு முந்தைய நாளே மருந்துகள் தீர்ந்துவிட்டிருந்ததால் ஒரு நாளுக்கு முன்பே அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதற்கு ஏதும் சொல்வாரோ என்ற உறுத்தல் ஒரு பக்கம் இருந்தது. ஒரு குறுகலான தாழ்வாரமும் அதை ஒட்டியிருந்த மருந்தகமும் மருந்தகத்துக்குப் பக்கத்திலிருந்த […]
எழுத்து
இராசேந்திர சோழன் · 27.07.21
‘த புள்ள… பில்லுக்கட்டு எப்டி…’ குரல் கேட்டுத் தலையைத் திருப்பி நின்றாள் மங்காத்தா. வயசுப் புள்ள. மாஞ்செவுலு. மடிசார் கட்டுப் புடவை. நெஞ்சைப் போர்த்தி பிடரி வழியாய் தலைக்கு ஏறிய முந்தானை சிம்மாடு. மேலே புல்லுக்கட்டு. இலேசான ஈரத்தலை. ஓரங்களில் கொஞ்சம் கொஞ்சம் சேற்றுத் திப்பிகள். தண்ணி தொட்டு கழுவிய முகம் மட்டும் பளிச்சென்று தெரிகிறது. காதில் மூக்கில் தொடப்பக் குச்சிகள். கழுத்தில் மஞ்சளாயிருந்து அழுக்கேறி கறுத்துப்போன தாலிக்கயிறு. மேலே கட்டை வலது கையால் எத்தாகப் பிடித்து, ‘முக்கா ரூபா…’ […]
எழுத்து
சரவணன் சந்திரன் · 24.06.21
ஒருமணி நேரத்தில் திரும்பவும் அழைக்கிறேன் எனப் புதிய எண்ணொன்றில் இருந்து முகுந்த் நாராயணி சொன்ன போது, அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து துள்ளினேன். அப்படி எழுந்த போது, விமானம் தரையிலிருந்து எழும்புவதற்கு முன்பு சப்தமிடுவதைப் போல, ஹ்ஹஹக் என எல்லோருக்கும் கேட்கும்படியான உறுமல் கேட்டதாகப் பிற்பாடு அலுவலக நண்பன் ஒருத்தன் சொன்னான். அவனிடமிருந்து அழைப்பு என்றதுமே ஆர்வ மிகுதியில் நானே அப்படிச் சப்தமிட்டிருக்கிறேன் போல. நெஞ்சளவு கேபின் இருக்கிற என்னுடைய அலுவலகத்தில் ஏதோ துக்கச் செய்தி வந்துவிட்டது என […]
எழுத்து
பா.திருச்செந்தாழை · 24.06.21
“ப்பா..” என்றவாறே சின்னவன் கைகளை விரித்து, தத்தியபடி இன்னாசியின் கால்களைக் கட்டிக்கொள்ள வந்தான். அவனது அரைஞாண் கயிற்றில் முடிச்சிடப்பட்டிருந்த சேலையின் இன்னொருமுனை ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்தது. அம்மணமான கரிய நிறப் பிஞ்சு உடலில் வயிற்றிலும் முட்டியிலும் குறுமணல்கள் ஆபரணத்துகள்கள் போல ஒட்டியிருந்தன. இன்னாசி ..ர்ர்ரப்பென அவனது முகத்தில் அறைந்தான். “ஒழி சனியனே..” இன்னாசியின் ஆடை முழுக்கக் கட்டிப்புரண்டு சண்டை போட்ட புழுதிக் கறைகள். கைலி தாறுமாறாகப் பதற்றத்தில் கட்டப்பட்டிருக்க சட்டையின் முதுகுப் பகுதியில் கூர்மையான ஏதோவொன்றால் தாக்கப்பட்டதன் […]
எழுத்து
செந்தில் ஜெகன்நாதன் · 24.06.21
அன்று காலை நாங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும்போது மணி ஆறு முப்பது ஆகியிருந்தது. நான்கு மணிக்கே எழுந்ததன் பலனால் அவ்வளவு சீக்கிரம் செல்ல முடிந்தது. பேருந்தைவிட்டு இறங்கும்போது அம்மாவுக்குக் கால்கள் மரத்துப் போய்விட்டதாகச் சொன்னாள். நீரின் மீது நடப்பதைப் போல கவனமெடுத்து ஓரொரு அடியாய் வைத்தாள். பேருந்து நிலையத்திலேயே இருந்த டீக்கடையில் எங்கள் இருவருக்கும் காபி வாங்கிக் கொடுத்துவிட்டு அப்பா டீ குடித்தார். காபியை வட்டாவில் ஊற்றிக் குடித்தவுடனே அம்மா புடவைக்குப் பின்னே இடதுகரத்தை வளைத்து அடிமுதுகில் […]
எழுத்து
லோகேஷ் ரகுராமன் · 24.06.21
இன்று மாலை முதலில் கிளம்பும் அலுவலகப் பேருந்திலேயே ஏறிவிட்டிருந்தேன். நீண்ட நாள் கழித்து இன்றுதான் அலுவலகத்தில் மீண்டும் சேர்ந்தேன். ஆனால் இருப்பு கொள்ளவில்லை. உடனே கிளம்ப வேண்டும் என்றிருந்தது. அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வந்தது போல என்னை இந்நிலத்தில் நிலைகொள்ள விடாமல் எதுவோ செய்தது. நகர்ந்துவிட வேண்டும். நகர்ந்து நகர்ந்து எங்கோ செல்ல வேண்டும். எங்கே செல்ல? நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும், அவ்வளவுதான். கிளம்பினேன். பேருந்தில் ஏறிக்கொண்டேன். இந்திரா நகரில்தான் என் வீடு. அங்குதான் எனக்கான நிறுத்தம். பேருந்து நீலாங்கரையை […]
எழுத்து
பாலாஜி பிருத்விராஜ் · 24.06.21
“சர்ஜரி முடிஞ்சு ரெண்டு நாள்தான ஆகுது? அந்த ஷாக் இருக்கும். மெல்ல மெல்ல மீண்டு வந்துருவாரு.” கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டிலிருந்து கண்களை எடுக்காமல் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எங்களின் பதற்றம் அவருக்குப் புரியவில்லை. மற்ற நோயாளிகளைப் போல இல்லை என் முதலாளியின் நிலை. நான் நிலைமையை விளக்க முயன்றேன். “இல்ல டாக்டர். வலியில் எதாவது முனங்குனாக்கூட பரவாயில்லை. அவர்கிட்ட இருந்து சத்தமே வரலை. முதலாளி எப்பவுமே அப்படித்தான். கடையில இருக்கும் போதுகூட முகத்துல பெருசா காமிச்சுக்க மாட்டாரு. ஒரு […]
எழுத்து
குமாரநந்தன் · 24.06.21
நீர்நிலைக்கு அருகில் இருப்பதைப் போல அறை குளிர்ச்சியாக இருந்தது. புயல் சின்னம் காரணமாக இரண்டு நாட்களாய் சூரியன் தென்படவில்லை. நேற்றிரவு முழுவதும் தூறல் விழுந்துகொண்டிருந்தது. அதிகாலையில் மழை நின்றபின் கோடை காலத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு குளிர்ந்த நாளாக அது மாறிவிட்டிருந்தது. மனோகரன் கண் விழித்தபோது ஜில்லென்ற நாள் அவனைத் தழுவிக்கொண்டிருந்தது. இன்று விடுமுறை என்ற நினைவு மேலும் அவனை இலேசாக்கியது. ஓய்ந்திருக்க முடியாத இயந்திரத்தில் இட்டுப் பிழியும் தன்மைகொண்ட வேலை என்ற பூதத்திடம் இருந்து விலகி இருப்பது அவன் மகிழ்ச்சியடைய […]
எழுத்து
சரவணன் சந்திரன் · 25.04.21
ஒரு பணம் கண்ட திருட்டுப் பயலைப் போல, அடிக்கடி உள்ளங்கையை முகர்ந்து பார்க்கக் கூடாதெனத் தனக்குள் சொல்லிக்கொண்டான் வளன். ஆச்சி அந்தக் கதையை அவனுடைய சின்ன வயதிலிருந்து அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும். எதற்காக அவனிடம் அதைச் சொல்கிறது என யோசித்தும் இருக்கிறான். புதுத் திருடன் ஒருத்தன் கொள்ளையடிக்கப் போனானாம். ஒட்டடைக் குச்சியையொத்த தேகம் கொண்டவன், அரும்பாடுபட்டு ஓட்டைப் பிரித்து இறங்கியதில் ஒரேயொரு மூட்டை மட்டும் சிக்கியிருக்கிறது. வீட்டிற்கு வந்தவன் காடா விளக்கொளியில் அதை விரித்துப் பார்த்த போது, அதில் […]
எழுத்து
பா.திருச்செந்தாழை · 25.04.21
அப்பா தனது சட்டைக்காலரை ஒருமுறை தூக்கிவிட்டபடி ‘உஸ்ஸ்ஸ்’ என்றார். பளீரிட்ட வெண்மையான வேட்டி சட்டைக்குள் அவரது உடலும் முகமும் வழக்கமான துருத்தலோடிருந்தன. இயல்பாகச் செய்வதைப் போல, கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை சட்டை விளிம்புகளுக்குள்ளும், விரலிலிருந்த நவரத்தினக்கல் மோதிரத்தின் முகப்பை உள்ளங்கைக்குள் திரும்பியிருக்கும்படியும் மாற்றிக்கொண்டார். முகத்தில் அவர் கொண்டுவர நினைத்திருந்த சாதாரணத்தன்மை மெல்ல மெல்லப் பரவுவதை உணர்ந்தேன். கையிலிருந்த பொன்னிறச் சதுரமிட்ட வரவேற்பு அழைப்பிதழ்களின் பெயர்களைச் சரிபார்த்தேன். நேரம் போய்க்கொண்டிருந்தது. “போலாம். சர்க்யூட் ஹவுஸ்ல ஜெகநாதன்கிட்ட சொல்லிருக்கேன். முன்னபின்னனாலும் சர்க்யூட் […]