Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள் – எட்கர் கீரத்

செங்கதிர் · 29.08.21

ஒரு காலத்தில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் பெரும் செல்வந்தன். அளவுக்கு மீறி பணம் வைத்திருப்பதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு அவன் எதையோ புதிதாகக் கண்டுபிடித்திருந்தான் அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்திருந்ததைக் களவாடியிருந்தான். அது நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டதால் என்ன நடந்ததென்று அவனுக்கே ஞாபகமில்லை. அந்தக் கண்டுபிடிப்பைப் பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஏராளமான தொகைக்கு விற்றுவிட்டான். கிடைத்த பணம் மொத்தத்தையும் நிலத்திலும் நீரிலும் முதலீடு செய்தான். வாங்கிய நிலத்தில் சிறு சிறு கான்கிரீட் […]

எழுத்து

எமிலிக்காக ஒரு ரோஜா – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 29.08.21

1 செல்வி எமிலி கிரியர்சன் இறந்தபோது ஊர் முழுமையும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. விழுந்துவிட்ட நினைவுச் சின்னம் ஒன்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்கள் சென்றார்கள். வீட்டுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகப் பெண்கள் சென்றார்கள். தோட்டக்காரன், சமையல்காரன் என இரண்டு வேலைகளையும் செய்துவந்த வயதான ஆண் வேலைக்காரனைத் தவிர கடந்த பத்து வருடத்தில் யாருமே அந்த வீட்டின் உட்புறத்தைப் பார்த்ததில்லை. அது ஒரு பெரிய சதுரச் சட்டகம் போன்ற அமைப்பைக்கொண்ட வீடு. ஒரு காலத்தில் வெண்ணிறமாக […]

எழுத்து

அதீத அப்பாவியாக இருப்பதன் அபாயம் – பால்சாக்

விஜயராகவன் · 29.08.21

மாண்ட்கண்ட்டூர் பிரபு தீரமிக்கப் போர்வீரர் ஆவார். ஆஞ்ஜு (Anjou) சமஸ்தான சீமானின் மாட்சிமைக்காக நடந்த போரில் இவர் தன் தைரியத்தை வெளிப்படுத்தி மத வெறியர்களை வென்றதால் இவருக்கு இந்தப் பட்டப்பெயரைப் பின்னர் மன்னராக முடிசூட்டிக்கொண்ட ஆஞ்ஜுவின் சீமான் அளித்தார். ஊவ்ரே (Vouvre) பிரதேசத்தில் கட்டப்பட்ட கோட்டைக்கும் இப்பெயரே வாய்த்தது. இந்தப் போர்வீரருக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் நல்ல கத்தோலிக்கர்கள்தாம். இதில் மூத்த மகன் அரசவையில் இடம்பெற்றிருந்தார். புனித பார்த்தோலோமியோவின் தினத்தை முன்னிட்டு என, தந்திரமான உபாயமாக […]

எழுத்து

பல்தஸாரே ஸில்வாண்டேவின் மரணம் – மார்சல் ப்ரூஸ்ட்

இல. சுபத்ரா · 27.07.21

“அட்மீடஸின் சுற்றத்தினரை அப்பல்லோ இரட்சித்ததாகக் கவிஞர்கள் கூறுகிறார்கள். போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முட்டாள் வேடம் தரித்திருக்கும் கடவுள்தான்” — ரால்ஃப் வால்டோ எமர்ஸன். 1 “அப்படி அழவேண்டாம் அலெக்ஸிஸ். ஸில்வானியாவின் மதிப்பிற்குரிய பிரபு உனக்கு ஒரு குதிரை தருவாராய் இருக்கும்.” “பெரிய குதிரையா பெப்போ, அல்லது சிறியதா?”  “திரு கார்டினியோவினுடையதைப் போல பெரியதாய்த்தான் இருக்கும். சரி, இப்படி அழாதீர்கள்…. அதுவும் உங்களது பதிமூன்றாவது பிறந்த தினத்தில்!”  ஒரு குதிரை கிடைக்கப்போகிறது என்கிற நம்பிக்கையும் தனக்குப் […]

எழுத்து

நாவல் மரம் – மோனிக்கா அரேக் தே நியாக்கோ

லதா அருணாச்சலம் · 27.07.21

நீ தாயகம் திரும்புகிறாய் என்னும் செய்தியை நமது பக்கத்து வீட்டு மம்மா அத்திம் சொல்லக் கேள்விப்பட்டேன். அவரை உனக்கு நினைவிருக்கிறதல்லவா? நாமிருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டோ, குதித்தபடியோ, ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டோ பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரைப் பற்றிப் பேசியவாறே செல்வோம். மக்காச்சோளத்தை மொய்க்கும் எறும்புகள் போல அவரது வாய் வார்த்தைகளின் மீது இயங்கிக்கொண்டே இருக்கும். ஒஹ்! அவருடைய ஓயாத க்வாக்- க்வாக்- கவாக்- வாயைப் பற்றித் தெரிந்திருந்தாலும் தன்னுடைய இயந்திரத் துப்பாக்கி போன்ற வாயால் படபடவென வார்த்தைகளைப் பொழிந்து […]

எழுத்து

காஃப்காவின் நண்பர் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

எஸ்.கயல் · 27.07.21

காஃப்கா எழுதிய நூல்களை வாசிப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்பே காஃப்காவின் நண்பரும், யூத நாடகக் குழு ஒன்றின் முன்னாள் நடிகருமான ஜாக் கோஹன் மூலமாக அவரை நான் அறிந்திருந்தேன். முன்னாள் நடிகர் என்று நான் ஜாக்கைக் குறிப்பிடக் காரணம் எனக்கு அறிமுகமான போதே அவர் மேடை நாடகங்களில் நடிப்பது நின்றுவிட்டிருந்தது. வார்சாவின் யூத நாடக அரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை முப்பதுகளின் துவக்கத்திலேயே குறைய ஆரம்பித்திருந்தது. ஜாக்கும்கூட நொடித்துப் போயிருந்தார். தன் பகட்டைப் பறைசாற்றும்படியான நாகரீக உடைகளையே அவர் இப்போது […]

எழுத்து

தாமஸ் மன் ஏன் எழுதினார்? – செஸில் C.H. கலேந்தர்

கோ.கமலக்கண்ணன் · 27.07.21

1875ல் பிறந்த தாமஸ் மன் (Thomas Mann), இருபதாம் நூற்றாண்டின் தவப்புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாசிரியர். 1929ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெனிஸ் மரணம் (Death in Venice) குறுநாவல், மாயமலை (The Magic Mountain) நாவல் ஆகிய இரு படைப்புகளின் மூலமாக அமேரிக்காவில் நன்கு அறியப்பட்டவர். மன் பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல், அதன் ஆசிரியர் பீட்டர் டி மெண்டிலோசனின் (Peter de Mendelssohn) மரணத்தால், 1982ல் முழுமை பெறவில்லை. அவரது இறப்பிற்குப் பிறகு மன்னுடைய […]

எழுத்து

அந்தி நேரத்துச் சூரியன் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 27.07.21

I இப்போதெல்லாம் ஜெஃபர்ஸனில் திங்கட்கிழமையும் மற்ற நாட்களைப் போலத்தான் இருந்தது. சாலைகள் தளம்பாவப்பட்டு இருக்கின்றன. நிறமற்ற ஊதிப்பெருகிய வெளுத்த திராட்சைக் கொத்துகள் தொங்கும் இரும்புக் கம்பங்களை நிறுவுவதற்காகத் தொலைபேசி மின்சார நிறுவனங்கள் ஓக், மேப்பிள், எல்ம், லோகஸ்ட் போன்ற நிழல்தரும் மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளுகின்றன. திங்கட்கிழமைக் காலைகளில் நகரின் சலவை நிறுவனம் பளீரென்ற வண்ணத்தில் இருக்கும் சிறப்பு மோட்டார் கார்களில் வலம்வந்து துணிமூட்டைகளைச் சேகரிக்கும். ஒரு வாரத்தின் அழுக்குத் துணி மூட்டைகள் எச்சரிக்கையும் எரிச்சலுமூட்டும் ஒலிப்பான்களின் […]

எழுத்து

அகமத் சாதவி உருவாக்கும் ஈராக்கிய ஃப்ரான்க்கென்ஸ்டைன்: Frankenstein in Baghdad

மோகன ரவிச்சந்திரன் · 27.07.21

அரேபியப் புனைகதைக்கான பன்னாட்டு விருதுக்கு 2014-ஆம் ஆண்டின் பட்டியலில் ஈராக் நாவலாசிரியர் அகமத் சாதவி இடம்பெற்றது ஆச்சரியப்படக் கூடியது அல்ல. இளைய ஈராக் நாவலாசிரியர் அவருடைய மூன்றாவது நாவலான Frankenstein in Baghdad (2013) வெளியீட்டுக்குப் பின் திடீரென புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார். அந்த நாவல் எலும்பும் தோலுமான ஒரு மனிதனின் கதையைச் சற்று நடுங்க வைக்கும் அச்சுறுத்தலோடு கூறுகிறது. அவன் 2005-ல் குடிமை யுத்தத்தால் நைந்து போன பாக்தாத் வீதிகளில் அலைந்து, ஒரு மனிதனின் சடலத்தை […]

எழுத்து

அரசியின் கழுத்தணி – இடாலோ கால்வினோ

கோ.கமலக்கண்ணன் · 24.06.21

பியத்ரோவும் தொமோசோவும் வாதிட்டபடியே இருந்தனர். விடியற்காலையில் சூனியமாக காட்சிதரும் தெருவில், அவ்விருவரது பழைய மிதிவண்டிகளின் கீச்சொலியும் குரல்களும் மட்டுமே கேட்டன. பியத்ரோவின் குரல் நாசித்தன்மை கொண்டது, அவ்வப்போது குரலின் இடையில் வெறுங்காற்றும் வெளிப்படும். கரகரப்பான, இரகசியம் பேசுவது போன்ற குரல் தொமோசோவினுடையது. இருவரும் தாம் பணியாற்றும் தொழிற்சாலைக்கு ஒன்றாக செல்கின்றனர். நசுங்கிய முரல்வென ஒலிக்கும் பணிமனை சங்கொலி காற்றில் ஒவ்வொரு இல்லமாகச் சென்று தொழிற்சாலை திறக்கும் நேரத்தை அறிவித்தது. நகரமும் நாட்டுப்புறமும் ஒன்றாகும் புறநகர் பகுதியின் இறுதியெல்லையை […]

எழுத்து

ஒன்பது கடிதங்களில் ஒரு புதினம் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

இல. சுபத்ரா · 24.06.21

I (ஃப்யோதர் இவானீச்சிடமிருந்து  இவான் பெத்ரோவிச்சிற்கு) மரியாதைக்குரியவரும் மதிப்புமிக்க நண்பருமாகிய இவான் பெத்ரோவிச், நண்பரே, ஒரு முக்கியமான விஷயம் குறித்துப் பேசுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை எங்கேயுமே காண முடியவில்லை. நேற்று நாங்கள் சீமியோன் அலெக்ஸியிச்சின் வீட்டில் இருந்த போது என் மனைவி உங்களைப் பற்றி ஒரு அருமையான நகைச்சுவையைக் கூறினாள். நீங்களும் டத்யானா பெத்ரோவ்னாவும் எப்போதும் பறந்துகொண்டே இருக்கக்கூடிய ஜோடிப் பறவைகளாகிவிட்டீர்கள். உங்கள் இருவருக்கும் திருமணமாகி இன்னும் மூன்று மாதங்கள்கூட […]

எழுத்து

தீ மூட்டுதல் – வில்லியம் ஃபாக்னர்

எஸ்.கயல் · 24.06.21

நீதிபதியின் அறை பாலாடைக்கட்டி வாசனையால் மணந்தது. கூட்டமாக இருந்த அறையின் பின்புறத்தில் பீப்பாயின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்த சிறுவன் தன் உடலின் மீது பாலாடையின் வாசம் வீசுவதை உணர்ந்தான். அலமாரிகளில் வரிசைப்படி நெருக்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதவிதமான வடிவங்கள் கொண்ட குடுவைகளின் மீதிருந்த ஒரு எழுத்துகூட அவனுக்குப் புரியவில்லை. ஆனால் கருஞ்சிவப்பு நிறப் பூதங்களும் வெள்ளி வண்ண மீன்களும் கொண்ட லேபிள்களை அவன் கண்களைவிட அவனுடைய வயிறால் அடையாளம் காண முடிந்தது. தன் மீதிருந்து வந்த பாலாடைக் […]