ஓய்வறையின் பேசும் கடிகாரம் பாடியது. ‘டிக் டாக்! ஏழு மணி! எழ வேண்டிய நேரம்! ஏழு மணி! எழ வேண்டிய நேரம்!’. யாரும் எழ மாட்டாரோ எனப் பயந்தது போலப் பாடியது. காலையில் வீடு வெறுமை
சமையலறையில் இருந்த சிற்றுண்டி அடுப்பு உஸ்ஸென சீறலாகப் பெருமூச்சொன்றை எழுப்பி, மிகச் சரியாக வாட்டப்பட்ட எட்டு பழுப்பு ரொட்டித்துண்டுகள், ஒருபக்கம் மட்டும் வறுத்த எட்டு முட்டைகள், பன்றி இறைச்சித் துண்டுகள் பதினாறு, இரண்டு காஃபி மற்றும் இரண்டு கோப்பைகள் குளிர்ந்த பால் என அனைத்தையும் அதன் சூடான உட்பகுதியிலிருந்து வெளிக்கொணர்ந்தது.
சமையலறை மேற்கூரையில் இருந்து இரண்டாவது குரல்.
“கலிஃபோர்னியா ஆலன்டேல் நகரத்தில் இன்று ஆகஸ்ட் 4, 2026” என்றது. நன்கு நினைவில் நிற்கும் வண்ணம் தேதியை மீண்டும் மூன்றுமுறை சொன்னது.
தொடர்ந்து “இன்று திரு. ஃபெதர்ஸ் டோனின் பிறந்த நாள், டிலிட்டாவின் திருமண ஆண்டு நிறைவு நாள். காப்பீடு செலுத்த வேண்டிய நாள். தண்ணீர், எரிவாயு, மின்சாரக் கட்டணங்களும் செலுத்த வேண்டும்” என்றது அக்குரல்.
சுவரில் எங்கோ மின்சுற்று கிளிக்கிட்டது, நினைவு நாடாக்கள் மின்சாரக் கண்பார்வையில் நழுவின.
“எட்டு-ஒன்று, டிக்டாக், மணி எட்டு ஒன்று, வேலைக்குச் செல், ஓடு, ஓடு, எட்டு ஒன்று” என்றது குரல். ஆனால் எந்தக் கதவும் அறைந்து சாத்தப்பட
வெளியே கார்நிறுத்தும் இடம் மணியோசையுடன் தன்கதவைத் தூக்கித் திறந்தது. அதனுள் கார் ஒன்று காத்திருந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பின்கதவு மீண்டும் கீழே இறங்கியது.
மணி எட்டு முப்பது ஆன போது முட்டைகள் உலர்ந்து சுருங்கியும், ரொட்டி கல்லைப் போலவும் ஆகியிருந்தன. ஓர் அலுமினியக் கரண்டி அவற்றைச் சுரண்டி கழுவும் தொட்டியில் கொட்டியது. அதிலிருந்து வந்த சுடுநீர் அவற்றை ஒரு உலோகத் தொண்டைக்குள் செலுத்த, அது அவற்றைச் செரித்து, தொலைவிலிருந்த கடலில் வெளியேற்றியது. அழுக்குப் பாத்திரங்கள் தூய்மைப்

“ஒன்பது பதினைந்து. தூய்மையாக்கும் நேரம்” எனப் பாடியது கடிகாரம்.
உடனே சுவரின் வளைகளில் இருந்து குறுஎந்திர எலிகள் துள்ளிப் பாய்ந்தன. ரப்பராலும் உலோகத்
பத்து மணி.
மழைக்குப் பின்னான சூரியன் வெளியே வந்தது. இடிந்த குவியல்களும் சாம்பலும் மட்டுமே காணப்படுகிற நகரத்தில் அவ்வீடு மட்டும் தனித்து எஞ்சி நின்றது. இரவில் அழிந்துபோன அந்நகரத்திலிருந்து வீசிய கதிர்வீச்சின் வெளிச்சத்தைப் பல மைல்களுக்கு அப்பாலும் பார்க்க முடிந்தது.
பத்து-பதினைந்து.
தோட்டத்தின் தெளிப்பான்கள் பொன்னான நீர் ஊற்றைச் சுழற்றியடித்து, அந்தக் காலையை மென்காற்றில் ஒளிச்சிதறல்களாய் நிறைத்தன. ஜன்னல் கண்ணாடிகள் மீது தெறித்த நீர், அவ்வீட்டின் வெள்ளைப்பூச்சு முழுதும் அறவே எரிந்திருந்த மேற்குப்புற
நீர்த் தெளிப்பானிலிருந்து வந்த மென்மழை, தோட்டத்தைச் சிதறும் ஒளியால் நிறைத்தது.
இதுநாள் வரையில் அவ்வீடு எவ்வளவு அமைதி காத்தது. தனித்துத் திரிந்த நரிகளிடமும் ஊளையிடும் பூனைகளிடமும் எந்தப் பதிலும் வராமல் “அங்கே செல்வது யார்?”, “கடவுச் சொல் என்ன?” என்றெல்லாம் எவ்வளவு கவன
ஒவ்வொரு சத்தத்திற்கும் அவ்வீடு நடுங்கித் துடித்தது. ஒரு குருவி ஜன்னலை உரசினால் கூட ஜன்னல்திரை வேகமாகத் திறந்தது. குருவி திடுக்கிட்டுப் பறந்து விடுகிறது. ஒரு பறவை கூட அந்த வீட்டைத் தொடக்கூடாது.
அவ்வீடு ஒரு ஆலயம் போலிருந்தது. சிறிதும் பெரிது
மதியம் பனிரெண்டு மணி.
வீட்டின் முகப்பில் ஒரு நாய் நடுங்கியபடி ஊளையிட்டது.
நாயின் குரலை அடையாளம் கண்டுகொண்ட முன்வாசற்கதவு திறந்தது. முன்பு பெரிதாகச் சதைப்பிடிப்புடன் இருந்த அந்த நாய் இப்போது எலும்பும் தோலுமாக, புண்களுடன் காணப்
ஒரு பழுத்த இலை, கதவுக்கு அடியில் பறந்து வந்தால் கூட போதும். உடனே சுவரின் பலகைகள் திறக்க, செம்புத் துண்டாலான எந்திர எலிகள் பாய்ந்து வந்தன. தூய்மையை அவமதிக்கும் தூசோ, முடியோ, காகிதமோ எதுவாயினும் தங்கள் மீச்சிறு எஃகுத் தாடைகளில் கவ்விக்
அவ்வீட்டு நாய் ஒவ்வொரு கதவருகேயும் வெறியுடன் குரைத்தபடி மாடிக்கு ஓடியது. இறுதியில் அந்த வீடு புரிந்து கொண்டதைப் போலவே அங்கு மௌனம் மட்டும்
நாய் காற்றை முகர்ந்து சமையலறைக் கதவைச் சுரண்டியது. அந்தக் கதவுக்குப் பின்னால்அடுப்பு, தோசைகளை இட்டுக்
வாயில் நுரைதள்ள காற்றை முகர்ந்தபடி கதவருகே படுத்துக்கிடந்த நாயின் கண்கள் நெருப்பாக மாறின. அது மூர்க்க
“இரண்டு மணி” எனப் பாடியது ஒரு குரல்.
இறுதியில் மெல்லிய அழுகல் வாடையை உணர்ந்த எந்திர எலிப்படை மின்சாரக் காற்றில், பழுப்புச் சருகுகள் புரள்வதைப் போல், மென்மை

இரண்டு-பதினைந்து.
இப்போது அந்த நாய் மறைந்து போயிருந்தது.
நிலவறையில் எரிதொட்டி திடீரென ஒளிர, புகைபோக்கியில் தீப்பொறிகள் சுழன்று மேலெழுந்தன.
இரண்டு-முப்பத்தைந்து.
வீட்டின் உள்முற்றத்துச் சுவர்

நான்கு மணிக்கு பெரிய வண்ணத்துப் பூச்சி
நான்கு-முப்பது.
சிறார் அறைச் சுவர்கள் ஒளிர்ந்தன.
மஞ்சள் ஒட்டகச் சிவிங்கிகள், நீலச் சிங்கங்கள், இளஞ்சிவப்பு மான்கள், வெளிர் ஊதா சிறுத்தைகள் எனப் பளிங்கினாலான பல விலங்குகள் வடிவம் பெற்று நடனமாடின. கண்ணாடியால் ஆன சுவர்கள் வண்ணங்களாலும் கற்பனை நிறைந்த வடிவமைப்பாலும் தனித்துத் தெரிந்தன.
நன்கு எண்ணெய் இடப்பட்ட பற்சக்கரங்களினூடாக சுவரில் மறைந்திருந்த படச்சுருள் இயங்க, சுவர்கள் காட்சி
சிறார் அறை தரைப்பகுதி மிருதுவான ஒரு தானிய வயல்வெளி போல் தோற்றமளிக்குமாறு நெய்யப்
மஞ்சள்நிற பெருந்திரட்சியான தேன்கூட்டில் ஈக்களின் முரலொலி போல, சிங்கத்தின் சோம்பலான உறுமலைப் போல, ஓர் ஓசை கேட்டது.
ஒகாபி வரிமான் குளம்பொலியும், வனத்துள் பெய்கின்ற புதுமழையின் முணுமுணுப்பாகவும் கோடையில் காய்ந்திருந்த புல்லின் மீது குளம்படி ஓசைகள் எழுந்தன. இப்போது வறண்ட களைச்செடி நிலங்
அது குழந்தைகளுக்கான நேரமாக இருந்தது.
ஐந்து மணி.
குளியல் தொட்டி தெளிந்த வெந்நீரால் நிரப்பப்

ஆறு, ஏழு, எட்டு மணி.
இரவு உணவுப் பண்டங்கள் மாயவித்தை போல கையாளப்
ஒன்பது மணி. படுக்கைகள் மறைவுக்குள் இருந்த தங்கள் மின்சுற்று
ஒன்பது ஐந்து.
படிக்கும் அறையின் கூரையில் இருந்து ஒருகுரல் பேசியது, “திருமதி மெக்கலெல்லன்! நீங்கள் எந்தக் கவிதையை இன்று மாலை வாசிக்க விரும்புகிறீர்கள்?”
வீடு அமைதியாக இருந்தது.
இறுதியில் அந்தக் குரல், “உங்கள் விருப்பத்தைச் சொல்லாததால் நானே ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்” என்றது. இப்போது அந்தக் குரலின் பின்னணியில் மெல்லிய இசை கேட்டது.
“உங்களுக்கு மிகவும் பிடித்த சாரா டீஸ்டேலின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது……
“மென்மையான மழையும் மண்ணின் மணமும் இங்கு சூழும். தகைவிலான் குருவிகள் தம்மினுங்குகிற குரலுடன் வட்டமிடும்.குளத்துத் தவளைகள் இரவுகளில் பண்ணிசைக்கும். காட்டு ப்ளம் மரங்களோ நடுங்கும் வெண்ணிறமடையும். கருஞ்சிட்டுகள் இறகுகளாலான தழலணிந்துதாழ்வான வேலிக்கம்பிகளில் அமர்ந்து தம் விருப்பத்தைச் சீழ்க்கையில் சொல்லும்.போரைப் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.இறுதியில் அது முடிந்ததும் ஒருவருக்குமே அதைப் பற்றிய அக்கறை இராது.மரமோ பறவையோ இல்லை.யாரொருவரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்.மனித இனம் முற்றிலும் அழிந்தொழிந்தாலுங் கூட.வசந்தமெனும் பெண்ணாளும் விடியலில் துயில் கலைந்தெழும் போதுநாம் மறைந்து விட்டோம் என்பதைச் சிறிதும் அறிந்திடாள்.”
கல் அடுப்பில் நெருப்பு எரிந்தது. அமைதியான சுவர்
பத்து மணிக்கு அவ்வீடு உயிரிழக்கத் துவங்கியது.
காற்று வீசியது. சமையலறை ஜன்னல் வழியே ஒரு மரக்கிளை முறிந்து விழுந்தது. கண்ணாடிப் போத்தலில் இருந்த தூய்மைப்
“நெருப்பு” என்றொரு குரல் அலறியது. வீட்டின் விளக்குகள் ஒளிர்ந்தன. உட்கூரையிலிருந்த நீர்க் குழாய்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தன. ஆனால் லினோலியம் விரிப்பில் அந்தக் கரைசல் பரவி அறையில் இருந்த அனைத்தையும் நெருப்பு தின்று சமையலறைக் கதவின் வழியாகத் தன் நாவைச் சுழற்றியது. பல குரல்கள், “நெருப்பு”, “நெருப்பு”, “நெருப்பு” என்று ஒத்திசைந்து ஒலித்தன.
அந்த வீடு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயன்றது. கதவுகள் இறுக்கமாகச் சாத்திக் கொண்டன. ஆனால் ஜன்னல்கள் வெம்மை தாங்காமல் நொறுங்கின. அப்போது வீசிய காற்று நெருப்பை உறிஞ்சி வளர்ந்தது.
நூறு கோடி கோபப் பொறிகளாக நெருப்பு ஒவ்வொரு அறையாக எளிதாக நகர்ந்து, மாடியை அடைந்தது. பிழம்பிடம் வீடு பணியத் துவங்கியது. நீர்கொணரும் அவசரத்தில் சுவரிலிருந்து எந்திர எலிகள் கீச்சொலி எழுப்பியவாறே நீரைப் பீய்ச்சி அடித்தன. இன்னும் நீர்கொணர விரைந்து ஓடின. சுவர்த் தெளிப்பான்கள் இயந்திர மழையைப் பொழிந்தன.

ஆனால் அதற்குள் வெகுதாமதமாகி விட்டிருந்தது. எங்கோ ஒரு குழாய் அலட்சியப் பெருமூச்சுடன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. தீயணைக்கும் மழை நின்றது. வெகுநாளாக குளியல் தொட்டியை நிறைத்த, பாத்திரங்களைத் தூய்மைப்படுத்திய, சேமிப்பு நீர் இப்போது தீர்ந்து போனது.
நெருப்பு சடசடத்து மாடியை அடைந்தது. மாடியின் கூடங்
அடுத்து அங்கிருந்த படுக்கை
பரணின் கதவு
ஆனால் நெருப்போ புத்திசாலித்தனமாகத் தன் பிழம்பு
வீட்டின் குழாய்களையெல்லாம் இயக்கிய பரணிலிருந்த இயந்திர மூளை வெடித்து வெண்கலத் துண்டுகளாக உத்தரத்தின் மீது நொறுங்கி வீழ்ந்தது.
வேகமாக ஒவ்வொரு அலமாரிக்குள்ளும் சென்ற நெருப்பு, அவற்றில் தொங்கிக் கொண்டிருந்த துணிகளைத் தழுவியது.
அந்த வீடு ஓக் மர எலும்புக்கூடாக வெப்பத்தில் அஞ்சி நடுங்கியது. அதனுடைய கம்பி நரம்புகள் எல்லாம் வெளியே தெரிந்தன. ஓர் அறுவை சிகிச்சையாளர் உடலின் தோலைக் கிழித்து சிகப்பு ரத்த நாளங்களையும் நரம்புகளையும் கொதிக்கும் காற்றுபட்டு துடிக்க வைப்பது போல அவ்வீடு காட்சியளித்தது.
“உதவி, உதவி! நெருப்பு! ஓடு, ஓடு!” எளிதாய் உடைபடக் கூடிய குளிர்காலத்தின் முதல் பனிக்கட்டியைப் போல நெருப்பின் வெம்மை, வீட்டின் கண்ணாடி
மின்கம்பி
சிறார் அறையில் இருந்த காடு எரிந்தது. நீலச் சிங்கங்கள் கர்ஜித்தன. ஊதா ஒட்டகச் சிவிங்கிகள் எம்பிக் குதித்தன. சிறுத்தைகள் நிறம் மாறி வட்டத்தில் ஓடின. நூறுகோடி விலங்குகள் நெருப்பின் முன் ஓடி, தூரத்தே ஒரு வெள்ளாவி நதியில் மறைந்து போயின.
மேலும் பத்து குரல்கள் மறைந்தன.
அந்த நெருப்பாற்றின் சீற்றத்தின் இறுதித் தருணத்தில் அதைப் பற்றி ஏதுமறியா சில குரல்கள் நேரத்தை கூட்டாக அறிவிக்க, இசை ஒலிக்க, தொலையியக்கி புல்லறுக்கும் கருவி புல்வெளியை சீராக்க, அதில் பரபரப்பாக ஒரு குடை விரிய, முன்கதவு திறந்து பின்அறைந்து மூட எனஆயிரம் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன.

கடிகாரக் கடைகளில் அனைத்து கடிகாரமும் மணியோசையை முன்னுக்குப் பின்னாக பித்துப்பிடித்தது போல தொடர்ந்து ஒலிக்கையில், வெறித்தனமாய் ஒரு குழப்பக் காட்சியாக இருப்பினும், அதிலுமோர் ஒத்திசைவு இருக்குமே, அது போலிருந்தது இப்போது எழுந்த ஓசைகள். தூய்மைப்
நெருப்பு அந்த வீட்டை வெடிக்கச் செய்து, முழுதுமாகத் தரைமட்டமாக்கி, தீப்பொறியும் புகையு
சமையலறையில் நெருப்பு மழை பொழிவதற்கு முந்தைய தருணம் வரை அடுப்பு ஒரு மனம் பிறழ்ந்த வேகத்தில் சிற்றுண்டியைத் தயாரித்துக் கொண்டிருந்தது. பத்து டஜன் முட்டைகள், ஆறு ரொட்டிகள், இருபது டஜன் பன்றி இறைச்சித் துண்டுகள் என அனைத்தையும் நெருப்பு தின்று தீர்த்து, அடுப்பை மறுபடியும் வெறித்தன
இடிந்து நொறுங்கும் ஓசை கேட்டது. சமையல் அறை மீதும் வரவேற்பறை மீதும் பரண் விழுந்து நொறுக்கியது. வரவேற்பறை நிலவறை மீதும், நிலவறை கீழே இன்னொரு சிறு நிலவறை மீதும் இடிந்து நொறுங்கின. குளிர் சாதனப்பெட்டி, கை வைத்த நாற்காலி, படச்சுருள்கள், மின்சுற்றுகள், படுக்கைகள் யாவும் தாறுமாறாக வீசப்பட்ட எலும்புக் கூட்டின் குவியலென அடியாழத்தில் மேடாகக் குவிந்தன.
எஞ்சியது புகையும் அமைதியும். பெருமளவு புகையே.
கிழக்கில் பெரும் புகையின் இடையே தோன்றியது மங்கலான விடியல்.
இடிபாடுகளுக்கிடையே ஒரு சுவர் தனித்து நின்றது. கட்டடக் குவியலின் மீதும் அதிலிருந்து எழும் நீராவியின் மீதும் உதித்த சூரியன் ஒளிரத் துவங்கிய பிறகும் கூட, அந்தச் சுவருக்குள் இருந்து ஒரு கடைசிக் குரல் திரும்பத் திரும்பச் சொன்னது:
இன்று ஆகஸ்ட் 5, 2026.
இன்று ஆகஸ்ட் 5, 2026.
இன்று…
