Category: எழுத்து

எழுத்து

தோடுடையாள்

சுஷில் குமார் · 25.04.21

“அப்பா, அப்பா, நீங்களும் நம்ம கோயில் நம்பூதிரி மாதி பூணூல் போட்ருக்கியோ, ஆனா, ஏன் கோயில்ல பூஜைல்லாம் பண்ண மாட்டுக்கியோ?” அய்யண்ணனின் தோள் மீது சாய்ந்தவாறு கேட்டாள் சுபத்திரை. அவளது கருங்கூந்தல் நீண்டு பூச்சூடிய பின்னலாக ஆடியாடி அவரது பெரிய தொப்பையின் மீது விழுவதும் போவதுமாக இருந்தது. ஒரு கணம் கண்மூடி அவளது மெல்லிய கைகளைத் தன் கழுத்தோடு இழுத்துப் பிடித்து முத்தமிட்டார் அய்யண்ணன். “அந்த பூணூல் வேற, இது வேற மக்ளே. அப்பால்லாம் பூஜ பண்ண […]

எழுத்து

தந்தையைக் கொன்ற தனயன்: ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வியல் பார்வையில் தஸ்தாயேவ்ஸ்கி

டாக்டர் ஜி.ராமானுஜம் · 25.04.21

இலக்கியத்திற்கும் உளவியலுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. கலைகள், குறிப்பாக இலக்கியம், மனித மனதின் எண்ணங்களுடைய சிக்கல்களை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை, இவற்றின் விளைவாக அவனது நடவடிக்கைகளில் ஏற்படும் மாறுபாடுகளைப் புனைவாகவும் கவிதையாகவும் வடிக்கின்றன. மனிதனின் எண்ணம், உணர்ச்சிகள், செயல்பாடு ஆகிய மூன்றின் சமநிலைச் சீர்குலைவையே (Disorder) மனநலமும் அறிவியல்பூர்வமாக விளக்கி விடைகாண முயல்கிறது. மனம் என்பது வெறுமனே மூளையின் மின்னோட்ட இரசாயன மாற்றங்கள் மட்டுமல்ல. அதில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட ஆளுமை, சமூகம் எனப் பல்வேறு […]

எழுத்து

விஷாத யோகம்

சுநீல் கிருஷ்ணன் · 25.04.21

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவி வீடடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் துப்பறிவாளர்களாக அரசு தேடித் தேடிப் பரிசோதித்துக்கொண்டிருந்த காலத்தில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நோயாளிகள் மருத்துவமனையில் இடமின்றி, செயற்கை சுவாசக் கருவியின்றி, சாலையில் மரித்துக்கொண்டிருந்த போது, இங்கோ காரைக்குடியில் சின்ன முத்துமாரியம்மனுக்கு மாசி மாதக் காப்புகட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. சோதனையோட்டமாக அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வீடடங்கிற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்துமாரியம்மனுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பால்குடமும், அக்கினிச் சட்டியும், காவடியும், வேலும் சுமந்துகொண்டு, […]

எழுத்து

அபத்தமானவனின் கனவு – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

கோ.கமலக்கண்ணன் · 25.04.21

1 நான் அபத்தமானவன். இப்போது என்னைப் பைத்தியம் என்றும் அவர்கள் அழைத்து வருகிறார்கள். முன்பிருந்ததைப் போலவே அவர்கள் கண்களுக்கு நான் தெரிந்துகொண்டிருந்தால் பதவி உயர்வின்மை என்றாகிவிடுகிறது அல்லவா? என்னைப் பற்றிப் பேசிக் கேலிசெய்து சிரிக்கையிலும்கூட, எல்லோரும் என்னை அன்புக்குரியவனாக வைத்திருக்கிறார்கள்! சொல்லப்போனால் என்னை நகைப்புப் பொருளாக்கும் போதுதான் என் மீது அதீத அன்பு காட்டுகிறார்கள். என்னாலும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக்கொள்ள முடிகிறது. அதற்கு என்னை நானே கேலிசெய்து கொள்வதாகப் பொருளில்லை. இப்போதெல்லாம் அது குறித்து நான் ஆத்திரம் அடைவதில்லை. […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 1): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 25.04.21

தபலா அய்யப்பனுக்குள் இருப்பது என்னவாக இருக்கும் என்கிற யோசனை விட்டபாடில்லை. நான் முதன்முதலில் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் படம், ‘யவனிகா’தான். பரத் கோபி வருவார், போவார், யாருடனும் இணக்கமில்லை. முறைப்பும் உறுமலுமாக அவரை எங்கேயும் இருக்கவிடாமல் செய்து, குடி தினங்களால் தன்னையே விரட்டிக்கொண்டிருக்கிற அவன் யார்? ஒரு முறை பார்த்த படம், அடுத்த முறை பார்த்து இன்னும் சற்று விளங்கிக்கொள்ளும் வரையில் எனக்குள் ஒரு தழும்பு போலவே கிடந்தது. ஜார்ஜ் நல்ல படம் எடுப்பவர் அல்ல, யாரையும் பாதிக்கிற […]

எழுத்து

உறக்கமில்லாக் குருதி

ப.தெய்வீகன் · 25.04.21

[1] திரவத்தகடுகள் போல மினுங்கியபடி புரளும் யாரா நதியின் அசைவுகளைப் பார்த்தவாறு கார்த்திகேசு புற்தரையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் ரயிலேறி மெல்பேர்ன் நகருக்கு வந்துவிடுகின்ற கார்த்திகேசுவுக்கு, இந்தப் புற்தரை சிநேகமாகி மூன்று மாதங்களாகின்றன. பூப்பையைத் தன் பக்கத்திலேயே பத்திரமாய் வைத்திருந்தார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே நீர் தெளித்து கவனமாக எடுத்துவந்த பூக்கள். வீட்டில் பூக்கள் கிடைப்பது கடினம் என்று, மெல்பேர்ன் சிவா விஷ்ணு கோவிலில் சொல்லி எடுத்த பூக்கள் இவை. வெயில் ஏறிக்கொண்டுபோக, நீள் காற்சட்டையைக் கொஞ்சம் […]

எழுத்து

கணக்கு வாத்தியார்களும் கரப்பான் பூச்சிகளும்: தஸ்தாயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகளில்’ இருத்தலியலின் நெருக்கடி

சித்துராஜ் பொன்ராஜ் · 25.04.21

ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளைத் தேதிவாரியாக வாசிப்பவர்கள் ஓர் உண்மையை உணரக்கூடும். 1864க்கு முன்பாகத் தஸ்தாயேவ்ஸ்கி தன்னை மகத்தான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் எழுதவில்லை. 1844ல் வெளிவந்த அவருடைய ‘ஏழைகள்’ என்ற நாவலும் 1862ல் அவர் சிறைக்குச் சென்றுவந்த பின் எழுதிய ‘மரண வீடும்’ விளிம்புநிலை மக்கள் படும் துயரங்களை எடுத்துச்சொல்லும் வகையில் ரஷ்ய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக அமைந்தன. இந்த இரண்டு நாவல்களிலும் – குறிப்பாக ‘மரண வீட்டில்’ – தஸ்தாயேவ்ஸ்கியின் பாத்திரப் […]

எழுத்து

தலித்துகளின் வாழ்வு முக்கியம் என்று கருதும் நிலை இந்தியக் கல்வி நிறுவனங்களில் எப்போது உருவாகும்? – தீபக் மல்கான்

மைதிலி · 25.04.21

ஆசிரியர், மாணவர் அமைப்புகளில் பன்முகத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்த வாதங்களை பிரின்சிடன் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், இந்திய உயர்கல்வி நிலையங்கள், தமது நிறுவனங்களில் பிராமண மேலாதிக்கம் நிலவுவதைத் தொடர்ந்து மறுத்துவருகின்றன.  தனது பொது, பன்னாட்டு விவகாரங்கள் பள்ளியிலிருந்து உட்ரோ வில்சனின் பெயரை நீக்குவதாக பிரின்சிடன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டில் அறிவித்தது. வில்சன் பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இதை நான் ஆமோதிக்கிறேன். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. 2015ஆம் ஆண்டு உட்ரோ வில்சனின் பெயரை நீக்குமாறு […]

எழுத்து

மதூரி கதிர்வேல்பிள்ளை

அனோஜன் பாலகிருஷ்ணன் · 25.04.21

[1] “ஓயா பஹின தான மெதன” என்றார் ஓட்டுனர். டாக்ஸி குலுங்கி நின்றபோது மதூரி தூக்கத்திலிருந்து விழித்தாள். இடப்பக்கக் கழுத்து வலித்தது. பயணம் முழுவதும் அவளை அறியாமல் துயில்கொண்டிருந்தாள். உதட்டைக் கர்சீப்பால் அழுத்தித் துடைத்து, சரிந்திருந்த ஆடைகளைச் சீர்செய்தாள். இரண்டு சூட்கேஸை சில்லுகள் தரையில் உருள இழுத்துக்கொண்டு லிப்டுக்குள் நுழையும்போது அருகேயிருந்த கடலின் இரைச்சல் அள்ளிவந்து காதில் அறைந்தது. சின்ன வயதிலிருந்து கேட்ட அந்த இரைச்சல் அவளை வருடித் தழுவி, கடலைப் பார்க்கவேண்டும் என்ற உவகைக்குள் தள்ளியது.  […]

எழுத்து

மறைந்தழியும் உலகுடன் ஒரு கடைசி செல்ஃபி – சமேர் அபூ ஹவேஷ்

நம்பி கிருஷ்ணன் · 25.04.21

சில சமயங்களில் அசட்டை செய்யப்பட்ட இலையொன்றே தவறவிட்ட பெயரொன்றின் பூட்டைத் திறந்து வைக்கிறது. * சிரத்தின் வனத்தில் பொதிந்திருக்கும் பேசா முகங்களின் தொலைந்த குரல்களை மீட்டளிக்க சுடுரசத்தை ஊதித் தணிப்பது போல் ஆவிபடர் குளியலறை ஆடியின் மீது மூச்செறிவதே போதுமானது. * உன்னிடமிருந்தா அல்லது சருமத்திற்கு மிக  நெருக்கமானதொரு தொலைவில் அச்சுறுத்தும் அருகாமையில்  இருக்கும் ஒரு விலங்கிடமிருந்தா  என்று நிர்ணயம் செய்ய முடியாத அளவிற்கு இப்போது காட்டு விலங்கை ஒத்திருக்கும்  மூச்சிரைத்தலை ஆடிமுன் நின்றுகொண்டிருக்கும் உன்னாலுமேகூட கட்டுப்படுத்த […]

எழுத்து

நிழல் இலா ஒளி (பகுதி 2)

பாதசாரி · 25.04.21

இருந்துகொண்டே இல்லாமல் இருப்பதில்தான் ஓர் அமைதி. * அலைகளின் பெருத்த ஓசைக்கு கடல் காரணமில்லை, ஊளையிடும் காற்றுதான் காரணம். * நாம் அதிகமும் செல்லம் கொஞ்சுவது பிள்ளைகளோடோ, பேரன் பேத்திகளோடோ அல்ல. காதலன், காதலியோடுதானா எனில் அதுவுமல்ல. பின்னே? பழக்கத்தோடுதான். * மரண பயம் நீங்கினாலே மரணத்தைக் கடந்ததாகும். * உடலினுள் உயிர், தான் கடைந்த போதில் திரண்ட அமுதம் தலைக்கேறும். விடத்தையோ நாவில் தேக்கும் மாசுறு மனம். * என் அறிவுக்கு உணவு என் மனக்கனிகளே! * […]

எழுத்து

எழுதும் கலை – எட்கர் கீரத்

செங்கதிர் · 25.04.21

மாயா எழுதிய முதல் கதையில் மனிதர்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக உடலை செங்குத்தாகப் பிளந்து இரண்டாக்கிக்கொண்டார்கள். அந்த உலகில், எந்த ஒரு மனிதனும் எத்தருணத்திலும் ஓருயிரை ஈருயிராக்கிக் கொள்ளலாம். அப்படியாகும் இரு உயிர்களும் வயதில் பாதிப்பாதியாகிவிடும். சில மனிதர்கள் இளம் வயதிலேயே இதை உபயோகித்துக்கொண்டார்கள். உதாரணமாக, பதினெட்டு வயது இளைஞன் பிளந்து ஒன்பது வயதுமிக்க இரண்டு சிறுவர்களாக மாறிக்கொள்ளலாம். சில மனிதர்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்காக மத்திம காலம் வரை காத்துக்கொண்டிருப்பார்கள். மாயாவின் கதைநாயகி பிளவுற விரும்பாதவள். எண்பது […]