இருந்து
*
அலைகளின் பெருத்த ஓசைக்கு கடல் காரணமில்லை, ஊளையிடும் காற்று
*
நாம் அதிகமும் செல்லம் கொஞ்சுவது பிள்ளைகளோடோ, பேரன் பேத்திகளோடோ அல்ல. காதலன், காதலியோடுதானா எனில் அதுவுமல்ல. பின்னே? பழக்கத்தோடு
*
மரண பயம் நீங்கினாலே மரணத்தைக் கடந்ததாகும்.
*
உடலினுள் உயிர், தான் கடைந்த போதில் திரண்ட அமுதம் தலைக்கேறும். விடத்தையோ நாவில் தேக்கும் மாசுறு மனம்.
*
என் அறிவுக்கு உணவு என் மனக்கனி
*
அஞ்சுகிறேன், அதனால் இருக்
*
காலத்தின் சீருடை அணிந்த இந்த எண்ணங்
*
மனதைக் குறித்த புகாரை மொழியிடம் முறையிட்டு என்ன பயன்? மனதின் சுவாசமே மொழிதானே!
*

நல்லவனாகப் பேரெடுக்க நாலுபேர் முன்னிலை தேவை. நல்லவனாக இருக்க நானொருவனே போதும்.
*
தேடுதேடுதேடுவெனத் தேடியும் திருப்தியுறாது அகந்தை நிறை தரித்திரச் சிந்தை.
*
மரங்
*
நல்ல உள்ளம் என்பது எதையும் வெல்லும் எண்ணம் இல்லாதது. அதற்கு வெல்லவும் ஞாலத்தில் எதுவுமில்லை.
*
நாய் குரைக்கும் போதெல்லாம், அது கோபத்தில் குரைக்கிறது என்றே எடுத்துக்கொள்பவன் எதைத்
*
கனியக் கனியத் திரள்வது அர்த்தம்.
*
காரியத்தைவிட காரணம்
*
உடல் உறங்கி எழும்.
புறம் உண்டு அகம் கழிக்கும்.
ஊறவைத்துக் கசக்கிப் பிழியப்
உதறிக் கொடியில் உலரும் துணிகள்.
அவ்வளவு
உன் பொருள் வாழ்வு.
*
பிறர் மீது வெறுப்பின் கசப்பை உமிழ உமிழ,
தன்மீதும் வெறுப்பின் கசப்பு தனக்குள் சேகரமாகித்
தானே விழுங்க வேண்டியிருக்
*
ஆசை மோகத்தின் அந்தித் துளி வற்றினும்,
அதை அடைதலின் அகந்தை ஊற்று ஏங்கியே நிற்கும்!
*
விசிறிக் கை ஓய்ந்தேன்.
ஓயாமல் காலம் வீசிக்
*
காலம் என்பது நம் தலைக்கு மேல் மர்மமாய்த் தொங்கியபடி நம்மை மிரட்டிக்கொண்டிருப்பது!
இடம் என்பதோ நம் பாதம் பணிய மண் முத்தமிடுவது!
நினைவுக்குள் காலத்தை இழுத்து வந்துவிடலாம்.
நினைவுக்குள் நம் இடம் அது கொள்ளுமோ!
வாழிடம் நீங்குவதே மனித வாதையின் உச்சம்.
*
போதுமே என்னுள் இம்மூன்றுமே:
சூரியன், மலர், தேனீ.
