Category: எழுத்து

எழுத்து

அன்பின் வழியது

இராசேந்திர சோழன் · 27.02.21

‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில் செருப்பைக் கழற்றிவிட்டு ‘பர்வதம்’ என்று குரல் கொடுத்தார். கூடவே ‘ஒரு சொம்புல தண்ணி கொண்டா’ என்றார். சற்று நேரத்தில் பர்வதம் செம்பில் நீருடன் வெளியே வந்தாள். செம்பை வாங்கி முகத்தை கைகால்களைக் கழுவியபடி ‘இன்னைக்காவது மணியார்டர் வந்துதா’ என்று கேட்டார். ‘மணியார்டர் தானே, வந்துட கிந்துடப் போவுது’ என்று வேண்டாவெறுப்பாகச் சிடுசிடுப்போடு பதிலளித்துவிட்டு செம்பை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.  […]

எழுத்து

கலி சுட்டும் அகம்: உருவகங்களும் அழகியலும்

வெண்பா கீதாயன் · 27.02.21

எட்டுத்தொகை நூல்களில் நாடகத்தன்மையும் காட்சியழகியலும் செறிந்த நூல் கலித்தொகை. கலிப்பாக்களில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளால் இயற்றப்பட்டு நல்லந்துவனாரால் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பே காட்சிகளும் காட்சிகளுடனான உரையாடல்களும் ஆகும். வெறும் அகத்திணைகளும் துறைகளும் மட்டுமின்றி அறம் சார்ந்த கூற்றுகளும் இருக்கிற தொகைநூல்.  “அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தருமென பிரி வெண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் வருவர்கொல்.” அரியதெனக் கருதப்படும் அறங்களை […]

எழுத்து

பரிசுத்தத்தின் நொய்மை – ஐசக் பாஷவிஸ் சிங்கரின் புனைவுலகம்

கோகுல் பிரசாத் · 27.02.21

முதலாம் உலகப்போர் முடிவுற்ற போது ஐசக் பாஷவிஸ் சிங்கருக்கு பதினான்கு வயது. தான் சாகும்வரை சிங்கர் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது சுயசரிதையான ‘Love and Exile’ நூலிலும் இதைப் பற்றின குறிப்பு வருகிறது. பதினாறு வயது பூர்த்தியடைந்துவிட்டால் இராணுவ சேவையில் பங்களிப்பாற்ற வேண்டும் எனும் விதிமுறைக்கு பயந்துகொண்டு சிங்கர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை பல பத்தாண்டுகள் கழித்தே ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதை அறிந்ததும் சிங்கர் தனது கல்லறையில் புரண்டு படுத்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால், கண்ணாமூச்சி ஆட்டத்தின் போது ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் சிறுவனது […]

எழுத்து

நிழல் இலா ஒளி (பகுதி 1)

பாதசாரி · 27.02.21

1. உனக்குள் நீ உணர்ந்து உனக்கு வழங்கிக்கொள்ளும் மதிப்பை மீறி எவராலும் கூடுதலாகத் தந்துவிட முடியாது. 2. என்னிடம் கேட்டுக்கொண்டா வந்தது இவ்வுயிர், என்னிடம் சொல்லிக்கொண்டு போவதற்கு? 3. உன்னால் ஏறவே முடியா உச்சியில் இருந்து, தென்னை தன் காயை, தெங்கம்பழமாக்கித் தானே உதிர்க்கிறது. ஞானப்பழம் பறிக்கவேவொண்ணாது, தானே உதிரும் காண். 4. தரையில் கிடந்து பாடிக்கொண்டிருக்கும் உதிர்ந்த இலைக் குவியலை, குப்பை எனச் சொல்லும் உன் மனம்தான் இயற்கையில் ஒட்டாத மட்காத குப்பை. 5. யாதனின் […]

எழுத்து

தல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி! (பகுதி 2)

போகன் சங்கர் · 27.01.21

தல்ஸ்தோய் மறைந்து சரியாக நூற்றிப்பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் உலக அரங்கில் மானுட குலத்தின் மீது அவரது பாதிப்பு என்னவென்று ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். 2010-இல் உலகம் முழுவதும் அவர் மறைந்து நூறாண்டுகள் சென்றதையொட்டி அவரது படைப்புகள் குறித்து மீண்டுமொரு பெரிய கவனம் எழுந்தது. அவரது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் காட்சிப்படுத்தும் ‘The Last Station’ என்கிற திரைப்படமும் வெளிவந்தது. 1910ஆம் ஆண்டு ருஷ்யாவின் நல்ல பனிக்காலத்தில் வயோதிகர் ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியேறி ஒரு […]

எழுத்து

மகாலட்சுமி

இராசேந்திர சோழன் · 25.01.21

1938ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது அந்நகரத்திலேயும் அரசாங்கத்திலேயும் அதிக செல்வாக்குப் பெற்றவராக இருந்தார் சிவஞானம் பிள்ளை. நிலப்பிரபு வேறு. எந்தவிதக் கவலையும் கிடையாது. பெயருக்கேற்றாற் போலவே அவர் பக்திமான் என்பது புதுச்சேரி மக்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஆனாலும் அவருக்குள் இடைவிடாது துன்புறுத்திக்கொண்டிருக்கும் பெரிய கவலையும் ஒன்று உண்டு. அது அவர் மகள் மகாலட்சுமியைப் பற்றியது. அம்மா இல்லாமல் வளர்கிறவள். இந்தக் கவலை மற்றவர்களுக்குத் தெரியாது. மகாலட்சுமிக்கு வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும். நல்ல சிகப்பு, கனிவான […]

எழுத்து

தொ.ப எனும் பெருசு

மானசீகன் · 25.01.21

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும் என்றால் சினிமாவுக்குப் போய் பாட்டெழுதி கதாநாயகிகளை வார்த்தைகளால் துகிலுரிய வேண்டும். குறைந்தபட்சம் அரசியல்வாதிகள் தலைமையேற்கும் நிகழ்ச்சிகளில் போய் உட்கார்ந்துகொண்டு ‘நீ உன் மானத்தால் வானத்தை நாண வைத்தவன்’ என்று சிரிக்காமல் கயிறு திரிப்பதற்குக் கற்றிருக்க வேண்டும். மற்றவர்களையெல்லாம் ‘எழுத்தாளர்கள்’ என்று அவர்கள் குடும்பத்திற்கே தெரியாது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முகநூல் வந்த பிறகு சுயமி படத்தை பதிவேற்றம் செய்து விருப்பக்குறிகளை […]

எழுத்து

உழவர் சத்தியாகிரகம்

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 25.01.21

கடந்த ஐம்பது நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்திவரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  இதற்கு முன்பு, மராத்திய மாநிலத்தில் நடந்த 150 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகச் சென்ற பேரணியும் முக்கியமான ஒன்று எனினும், அது சில நாட்களில் நடந்து முடிந்துவிட்டது. இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடக்க முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்களும், உழவர் சங்கங்களும் ஒன்றிணைந்து, 3-4 மாத போராட்டத்துக்கான மனநிலையுடனும், உணவு, படுக்கை […]

எழுத்து

நாயகனின் சாகசம்: ஜோசப் கேம்ப்பெல்

மோகன ரவிச்சந்திரன் · 25.01.21

பில் மோயர்ஸ், தொன்மவியலாளர் ஜோசப் கேம்ப்பெல் ஆகிய இருவரும் இலக்கியத்திலும், நிஜ வாழ்விலும், மேலும் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களிலும் நிலையான, தொடர்ச்சியான நாயக வடிவமைப்பு உட்பட செவ்வியல் நாயக சுழற்சியை ஆய்வுசெய்கின்ற, அடிப்படைகளைத் தகர்க்கின்ற முடிவற்ற உரையாடலைத் துவக்கினர். பார்வையாளர்கள் தங்கள் சொந்த வாழ்வின் பகுதிகளை நாயகப் பயணங்களாகக் காணும் போக்கை கேம்ப்பெல் உற்சாகப்படுத்துகிறார். முதல் அத்தியாயத்தின் ஒரு காட்சியில், பார்வையாளர்கள் தங்களை எது கிளர்ச்சியடைச் செய்கிறது என்பதைக் கண்டறியத் தூண்டுவதோடு, தங்கள் சொந்தப் பயணங்களுக்கான அடித்தளத்தை […]

எழுத்து

உமையொருபாகன்

பாலாஜி பிருத்விராஜ் · 25.01.21

“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த பளபளப்பு உடலுடன் எனக்குப் பின்னால் பார்த்து ஜெயராம் அண்ணா கத்திக்கொண்டிருந்தான். முகத்தில் நீர் வழிவுடன் ஒரு சிரிப்பும் இருந்தது.  அப்போதுதான் எங்கிருக்கிறேன் என்கிற உணர்வு வந்தது. கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தேன். சுவரில் என்றால் சுவர் நுனியில். அத்தனை நேரம் எப்படி விழாமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. ஏதொவொன்று என்னைக் கீழே விழாமல் தடுத்திருக்கிறது. பின்னால் திரும்ப […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்

ஆத்மார்த்தி · 25.01.21

தேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி ஒன்று அமையும். மேடைக் கச்சேரிகளிலோ நேர்முகப் பேட்டியிலோ இசையுடனோ இன்றியோ பாட முனையும்போது அந்தப் பாடலின் பதிவுக் கணத்திற்குத் திரும்பச் சென்று அங்கே நின்றபடி பாடுவதுதான் துல்லியமான மறுநிகழ்தலை வாய்த்துத் தரும். பாடல்களை அவற்றின் பதிவுத் துல்லியத்தோடு எப்போதும் பாடுவது இயந்திரத்தாலன்றி மனித எத்தனத்தால் முடியாத ஒன்றுதான். முன்பே சொல்கிறாற் போல் எந்தப் பாடலையுமே அதனதன் யதார்த்தப் புள்ளியிலிருந்து […]

எழுத்து

கோபயாஷியின் ‘Rebellion’: ஒரு பெண்ணியக் கிளர்ச்சி

விலாசினி · 25.01.21

மனித நாகரீகத்தின் பழமை வாய்ந்த பண்பாடுகளில் ஒன்றான ஜப்பானிய சாமுராய் பண்பாடு அச்சமூகத்தின் கலை இலக்கியப் படைப்புகளில் பண்டைய காலம் முதல் நவீன காலம்வரை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒன்று. குறிப்பாக சாமுராய் பண்பாட்டை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் எண்ணற்றவை. அவற்றை விரிவாக மூன்று வகைமைகளின் கீழ் பிரிக்கலாம்- அப்பாண்பாட்டின் மேன்மைகளை எடுத்துரைக்கும் படைப்புகள், அதை உள்ளது உள்ளபடி பதிவுசெய்பவை, அதன் போதாமைகளையும் போலிப் பெருமைகளையும் கேள்விக்குட்படுத்தும் அல்லது விமர்சிக்கும் படைப்புகள்.   என்றாலும், ஒரு […]