எட்டுத்தொகை நூல்களில் நாடகத்தன்மையும் காட்சியழகியலும் செறிந்த நூல் கலித்தொகை. கலிப்பாக்
“அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தருமென
பிரி வெண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்.”
அரியதெனக் கருதப்
இவ்வடிகள் பாலைக்கலியில் வருகின்றன. எந்தவொரு உருவக பாவனைகளும் நாடகத் தருணங்களுமின்றி ஏன் பொருளீட்ட வேண்டுமென உலகியல் வழக்கத்தைக் கூறும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் இன்றைய வாழ்வியலுக்கும் பொருந்தக்
இதன் தொடர்ச்சியை தேவதேவனின் வரிகளில் காணலாம்.
‘கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல்
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப்போக விழைகிறேன்’.
இந்த நவீன வரிகளானது ஆயிரக்கணக்கான வருடங்
இது தலைவனின் கூற்றாக இருக்கையில் தலைவியின் கூற்று இதற்கு எதிர்செய்யுளாக அமைந்துள்ளது.
தலைவி தலைவனிடம் வேண்டுகிறாள்,
“அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப
பிரிந்துறை சூழாதி ஐய! விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும் நினைத்துக் காண்
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உளநாள்
ஒரௌஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை
அரிதுஅரோ
சென்ற இளமை தரற்கு”
“அரிய பொருட்கள் மீதுள்ள வேட்கை உன்னைச் சூழ்ந்துள்ளதால் என்னைப் பிரிந்து செல்லாதே ஐயனே! காதலோடு என் தோளில் நீ தீட்டிய தொய்யில் உன் மார்பில் சுணங்கிக் கலந்ததை நினைத்துப் பார்ப்பாயாக! செல்பவரெல்லாம் நீர்போல முகந்து
பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிகழ்வுகளும்- பொருள்வயிற்பிரிவு, பொருள் தேடச்செல்லும் தலைவனை நினைத்து அழுங்குதல், உடன்போதல் போன்ற நிகழ்வு
அருமணம் கொண்ட சந்தனம் மலையில் பிறக்கிறது. அதனால் மலைக்கு ஏதேனும் பயனுண்டோ? அதைத் தரிப்பவருக்குத்தானே பயன்? நீரினுள் முளைக்கும் வெண்முத்தினால் நீருக்கு ஏதும் பயனுண்டோ? அதை அணிபவர்தானே பெருமை கொள்கிறார்? யாழின் நரம்பிலிருந்து எழும் ஏழிசைப் பண்ணால் யாழுக்கு ஏதும் இனிமையுண்டோ? அதனை மீட்டி செவிகொள்பவருக்குத்தானே இனிமை? அதுபோலத்

நெய்தற்கலியில் தலைவி இரங்கி துன்பத்தில் ஏங்குவதை பல்வேறு உருவகங்கள் வெளிப்படுத்துகின்றன. கோடல் மலர்கள் இதழ்வாடி குலையிலிருந்து உதிரும் நிகழ்வு, மெலிந்த கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிகழ்வோடு ஒப்புமைப்படுத்தப்படுகிறது. கொந்தளிக்கும் கடலில், ஒரு அலை மீனைக் கரையில் எறிந்திட, மறுஅலை மீட்டுக் கரை சேர்ப்பது போல, தன்னை மீட்குமாறு தலைவி தலைவனை வேண்டுகிறாள்.
இன்றும் காதலி
அணிச்சிறை குருகின் ஒலியைத் தலைவனின் தேர்மணி ஓசை எனக் கருதி வாயிலை நோக்கும் தலைவி, பின்னர் உள்ளடங்கும் ஒலிகேட்டு கானற்பறவையின் ஒலி எனப் புலம்புகிறாள். நீரில் அவிழும் பூக்களின் மணத்தினை காற்றில் உணரும் போது தலைவனின் மார்பில் கமழும் மாலையின் மணமென எண்ணி எழுவாள். பின்னர் மாலைக் காற்றினால் கழிபூத்த மலர்
மற்றொரு பாட்டில் தலைவியின் மொழியென நல்லந்துவனார் தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டுள்ளார். தலைவி கடலையும் அன்றிலையும் குழலையும் நோக்கி வினவுகிறாள். ஒலிக்கும் கடலலையைப் பார்த்து ஒலித்துக்
மற்றொரு நெய்தற்கலி பாடலில் தலைவியின் அழகை தலைவன், ‘துளியிடை மின்னுபோல் தோன்றி ஒருத்தி, ஒளியோடு உரு என்னைக் காட்டி’ என்று வர்ணிக்கிறான். “தலைவி மழையிடையே மின்னும் கீற்று மின்னலைப் போல ஒளிகாட்டும் உருக்கொண்டவள்” என்கிறது அடி. இப்பாட்டு கைக்கிளை திணை சார்ந்தது என்பதை இவ்வரியே உணர்த்துகிறது. தலைவியை இதுவரை அருகில் காணவில்லை, தொட்டுத் துய்க்க
கலியில் முல்லைக் கலிப்பாடல்கள் ஆயர்
‘பல்ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளிமேல்
கொல்லேறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ? எம் கேளே’
என்கிறாள். தயிர் கடையும்போது தன் மேனியில் தெறித்த துளிகளுடன் குருதி படிந்த தோளுடன் வரும் கணவனைத் தழுவுதல் தனக்கான அணிகலன் அல்லவோ என்று வினவுகிறாள். மற்றொரு பாடலில் ‘அளைக்கு எளியாள், வெண்ணெய்க்கும் அன்னள்’ என்றொரு அடி வருகிறது. அளை என்றால் தயிரென்றும் தழுவுதலென்றும் பொருள். தயிர்கொள்பவள் வெண்ணெய்க்கும் ஆவாளென்றும் தழுவிக் கொள்பவள் வெண்ணெய்க்கும் தானென்றும் இருபொருள்பட அகத்தன்மையுடன் பொருள் கொள்ளலாம். இதுபோன்ற நுண்ணுருவகங்கள் முல்லைக்கலி முழுக்க பரந்துள்ளன.
மருதக்கலி பரத்தையற் பிரிவு, அதனால் கொள்ளும் ஊடல், பாணன் கூற்று முதலியவற்றை உள்ளடக்கியது. வேளாண்நிலக் காட்சிகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன.
உதாரண
“மணிநிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணிமிகு சேவலை அகல் அடை மறைத்தென
கதுமென காணாது கலங்கி அம்மடப் பெடை
மதிநிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி
பல் மலரிடைப் புகூஉம் பழனம்….”
அல்லிகள் நிறைந்து நிற்கும் தெளிநீலத் தடாகத்தில் ஆண்- பெண் அன்னங்கள் மகிழ்ந்து ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தன. திடீரென அன்னச்சேவலைக் காணாமல் அன்னப்பெடை கலங்கி இலைகளின் இடையேவெல்லாம் தேடியது. அப்போது நிலவின் நிழலைத் தன்னுடைய இணையென எண்ணித் துரத்தியது. பெடை நிலவின் நிழலைத் துரத்தி வருவதைக் கண்ட அன்னச்சேவல் இணையை அணைக்க எதிரே வர பெடை அன்னம் நாணி மலர்களுக்கிடையில் ஒளிந்து கொள்கிற தடாகத்தைக் கொண்ட செழிப்புகொண்ட நிலம் மருதமாகும்.
மற்றொரு மருதக் கலிப்பாடலில் நீர்த்துறையில் மலர்ந்திருக்கும் வெண்தாமரை வெள்ளிக்கிண்ணத்தில் தேறல் உண்பவளின் முகம் போல மலர்ந்திருப்பதாக தலைவி பாடுகிறாள். ஊடலென்பதற்கு அப்பாற்பட்டு அழகிய இயற்கை உருவகங்
குறிஞ்சிக்கலி கூடலும் கூடல் நிமித்த
எல்லா மொழிகளிலும் பழைய இலக்கியங்
