Category: எழுத்து

எழுத்து

முனியும் முனியும் – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் · 25.09.20

அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க முச்சந்திகளில் நிற்பதில்லை. கோட்பாட்டுக் கூப்பாடுகளை எழுப்பி நிழற்படக் கலைஞர்களுக்கு முகம் காட்டி நிற்பதுவும் இல்லை. ஞாபக […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம்

மானசீகன் · 25.09.20

காமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும்  பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஈர்ப்பு, காதல் ஆகியவற்றுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கும் தனி மனிதனின் அளப்பரிய சாதனைகளுக்கும் கூட காமமே அடிப்படையாக இருக்கிறது. நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல் பிரபஞ்சத்தின் உயிர்கள் காமத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றன அல்லது சபிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மகத்தான படைப்பாளியை மதிப்பிட காமம் குறித்த சித்திரிப்புகளை மிக முக்கியமான அளவுகோலாகக் கொள்ளலாம். தமிழிலக்கியப் பரப்பில் காதல், பாசம், […]

எழுத்து

தாழப் பறக்கும் கழுகுகள் – ஹெலோன் ஹபிலா – தமிழாக்கம்: லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம் · 25.09.20

அஜேகுன்லே சேரிப் பகுதிக்குள் நுழைய இரண்டு வழிகள் உள்ளன. பரபரப்பான போக்குவரத்துக்கிடையே அமைந்திருக்கும் சந்தடி மிகுந்த அங்காடித் தெருவில், ஆயத்த ஆடைகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் காட்சிப்படுத்தி வைத்திருக்கும் சிறு கடைகளைத் தாண்டி நடந்தால் அங்கிருந்து செல்லக்கூடிய முன்பக்கப் பாதை ஒன்று அல்லது அப்பாப்பா துறைமுகத் தொழிற்பேட்டையையும், சேரியையும் பிரிக்கும் அழுக்கும் கசடுகளும் தேங்கிய மலம் மிதக்கும் காயல் வழியே படகுப் பயணமாகப் பின்பக்க வழியாகவும் செல்லலாம். நீர் வழித்தடத்தில் செல்வதையே தேர்ந்தெடுத்தேன். நான் பணிபுரியும் ’வேன்கார்ட்’ […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 4): மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்களை முன்வைத்து

ஆத்மார்த்தி · 25.09.20

கர்நாடக சங்கீதத்தின் மீது பிற எந்தத் தென் மாநிலத்தை விடவும் அதிகப் பற்றுகொண்ட திரைமாநிலம் கேரளம். எல்லா விதமான படங்களும் உருவாகி வருகிறதான திரைக்கதை, படவுருவாக்கத்தின் மறு எல்லையில் இசையைப் பொருத்தவரை பாரம்பர்யத்தின் வேர்வரை ஆழப் பற்றிக்கொள்கிற ஆதார மனோபாவம் குறிப்பிடத்தக்கதாகிறது. மண் சார்ந்த கலைகள், தொன்மங்கள், தங்களுக்கு உரிமைப்பட்ட இசை என்பனவற்றைப் பற்றியெல்லாம் அவ்விடத்திற்கென்று தனித்த பாலிஸிகள் உண்டு. போனி எம்-மையும் மைக்கேல் ஜாக்ஸனையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸையும் இரசித்துக்கொண்டே தங்கள் ஆதர்ஸ மாற்றத்தை நிகழாமல் பேணி […]

எழுத்து

கடைசியாக எப்படியோ அப்பா தப்பியோடிவிட்டார் – புரூனோ ஷூல்ஸ் – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்

கால.சுப்ரமணியம் · 25.09.20

இது நடந்தது, எங்களுடைய வியாபாரம் நொடித்துப்போன நேரத்தில், இறுதியும் கையறுநிலையும் கொண்ட ஒரு பரிபூரண தகர்ப்புக் காலத்தில். எங்கள் கடையின் மேலிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, பாதியளவு கீழிறக்கப்பட்ட ஷட்டர்களுடன், எஞ்சியிருந்த பொருட்களை வைத்து, யாருமறியாமல் கடையின் உள்ளேயிருந்தபடி, வியாபாரத்தை நடத்திவந்தாள் என் அம்மா. அடெலா அமெரிக்காவுக்குப் போனாள். அவள் பயணித்த படகு மூழ்கிவிட்டதாகவும், பயணிகள் எல்லோருமே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வதந்தியை விசாரித்து உண்மையை அறிய எங்களால் முடியவில்லை. ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றிய அனைத்து தடையங்களும் […]

எழுத்து

கருணையின் பெயரால் கைவிடப்படுதல்: சார்லி காஃப்மேனின் திரைப்படங்கள்

கோ.கமலக்கண்ணன் · 25.09.20

நான் என்பதன் அடிப்படைதான் என்ன? அது வெறும் எண்ணத்திரளா அல்லது இருப்பா? அவ்வாறாயின் நித்தியத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படுவதாலேயே அது இருப்பென்று உணரப்படுகிறதா அல்லது நித்தியத்தின் ஒரு துகள் என்பதாலேயே நான் என்று உணர்கிறேனா? அநித்தியத்தின் அங்கமா அல்லது அதன் மீதான எதிர்ப்பா? நான் இல்லாமலே என் வாழ்வு சங்கிலித் தொடர்ச்சி பெறும் என்பதை ஒரு படைப்பாளியால், ஒரு மதலை பெற்றெடுத்தவனால் நம்ப முடிகிறதே! அரூப வடிவில் தோன்றிப் பெருகும் எண்ணங்கள் அனைத்துமே பரு வடிவில் நிகழ்ந்தே […]

எழுத்து

மிலன் குந்தேரா: நாவல்களைப் பற்றின உரையாடல் – தமிழாக்கம் – ராம் முரளி

ராம் முரளி · 25.09.20

இந்த நேர்காணல், 1983ஆம் வருடத்தின் இலையுதிர் காலத்தில், பாரீசில், மிலன் குந்தேராவுடனான தொடர்ச்சியான சந்திப்புகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மாண்ட்பமாஸுக்கு அருகே இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் மேல்தளத்தில் வசிக்கும் அவரது வீட்டில்தான், மிலன் குந்தேரா தனது அலுவலகமாக பயன்படுத்தும் மிகச் சிறிய அறையில், இந்தச் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரின் அறையைப் போலல்லாமல், ஒரு மாணவனின் அறையைப் போல மேசை நாற்காலிகளுடனும், தத்துவப் புத்தகங்களுடைய அலமாரியுடனும், பழைய பாணியிலான தட்டச்சு பொறியுடனும், இசை ஆல்பங்களுடன் இருந்ததாக நேர்காணல் […]

எழுத்து

பாலுத்தேவரும் சேனாதிபதியும்: தமிழ்த் திரைப்படங்களில் காவல் உரிமையும் வாக்கைக் காத்தலும் – ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் · 25.09.20

வேத நூல்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு புயலாகிப் புறப்படும் ‘புதுமைப்பெண்’ணை (1984) காட்டிய பாரதிராஜா மூன்றாண்டுகள் கழித்து வேதங்களைப் புதிதாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு (வேதம் புதிது 1987) வந்தார். இரண்டிலும் வேதம் பழமையின் குறியீடாகச் சொல்லப்பட்டு மாற்றத்திற்கான அடையாளமாக புதுமை/புதிது எனும் சொற்கள் வைக்கப்பட்டன. புதுமைப்பெண்ணில் பெண்ணடிமைத்தனம். வேதம் புதிதில் சாதி. இரண்டு படங்களிலும் பாகுபாடுகளுக்குமான ஆதாரமாக வேதங்கள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. இவ்விரண்டு பாகுபாடுகளின் அழிவும் வேதம் அழிவது அல்லது மாறுவது என்பவற்றோடு தொடர்புகொண்டிருந்தன. வேதங்கள் பிராமணர்கள் தொடர்பில் […]

எழுத்து

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

வி.அமலன் ஸ்டேன்லி · 25.09.20

மிக நெடிய தேடல். எதிர்ப்பட்ட அனைத்திலும் மிகத் தீவிரத்துடன். விவேகானந்தர், வேதாந்தம், உபநிடதங்கள், ஓஷோ, ஜேகே, ரமணர் என்று. பதஞ்சலி யோகசூத்திரம் ஆழ்ந்துபோக வைத்தது. ஒரு பொறியாளரிடமுள்ள பழுதுபார்க்கும் கருவிப்பெட்டி போன்றது இவ்வழிகாட்டிகளின் போதனைகள். ஒவ்வொரு மகான்களும் வேறுபட்டதொரு கருவிபோல. சுத்தியல்போல ஓஷோ உள்ளே இறுகிப்போனதை உடைக்க உதவினார். ஒவ்வொரு கருவிக்கும் ஒரு குறிக்கோளுண்டு. ஜேகே திருப்புளி அல்லது மரைகழற்றி. கோட்பாடுகளோ கருத்தியலோ அன்றி வார்த்தைக்கு அப்பாற்பட்டதை மொழிக்குள் வரிக்கப் பார்த்தவர். ஜேகேயின் நூல்களை ஆரம்பகால பெளத்தத் துறவிகளுக்கு மனவிழிப்புநிலை […]

எழுத்து

இனிமை – டோனி மோரிசன் – தமிழாக்கம்: கார்குழலி

கார்குழலி · 25.09.20

அது என்னுடைய தவறில்லை. அதனால் நீங்கள் என்னைக் குற்றம்சாட்ட முடியாது. நான் அதைச் செய்யவில்லை, அது எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை. என்னுடைய கால்களுக்கு இடையே இருந்து அவளை எடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்துகொண்டு விட்டேன். உண்மையாகவே சரியில்லை. எனக்கு அச்சமேற்படும் அளவுக்கு கறுப்பாக இருந்தாள். நடுநிசியின் கறுப்பு, சூடானின் கறுப்பு. நான் மாநிறமாக நல்ல தலைமுடியுடன் இருந்தேன். அடர் மஞ்சள் என்று சொல்லும் நிறம், அதே போலத்தான் இருந்தான் லூலா […]

எழுத்து

யெஹூதா அமிகாய் கவிதைகள்

சசிகலா பாபு · 25.09.20

இஸ்ரேலைச் சேர்ந்த யெஹூதா அமிகாய் (Yehuda Amichai: மே 3, 1924 – செப்டம்பர்  22, 2000) கவிதையுலகில் தனித்துவமான புகழ்பெற்றவர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இவருடைய கவிதைகள் 40 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1924இல் ஜெர்மனியில் பிறந்தார் அமிகாய். அவருக்கு பனிரெண்டு வயதானபோது ஹிட்லரின் கொடூர ஆட்சிக்கு அஞ்சி அமிகாயின் குடும்பம் ஜெர்மனியை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்தில் குடியேறியது. அமிகாயின் முக்கிய மொழியாக ஜெர்மன் இருந்தபோதும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்வதற்கு முன்னதாகவே அவர் ஹீப்ரூ மொழியையும் […]

எழுத்து

விழிப்புணர்வின் பாதை

வி.அமலன் ஸ்டேன்லி · 25.09.20

சித்தார்த்தருக்கு உணவை எடுத்து வந்தாள் சுஜாதா. அரசமரத்தடியில் அவர் இளங்காலைப் பொழுதில் எழிலார்ந்து அமர்ந்திருந்தார். அவரின் உடலும் முகமும் சாந்தத்தையும், உவப்பையும், உள்ளச் சமநிலையையும் காட்டின. கம்பீரமும் ஆழமைதியும் கொண்ட அவரை அரச மரத்தடியில் பலமுறை அவள் கண்டிருந்தபோதும் அன்றைய நாள் அவர் வெகுசிறப்புடன் காணப்பட்டார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவளது துயரமும் வருத்தமும் ஒழிந்துபோயின. இளந்தென்றலென மகிழ்ச்சி அவள் இதயத்தை நிறைத்தது. இப்பூமியில் தனக்கு வேறெதுவும் தேவையாயிருக்கவில்லை என்றுணர்ந்தாள். இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் நன்றெனவும் உதவிகரமாக இருப்பதாகவும், […]