Category: எழுத்து

எழுத்து

கன்னி

ஜெ.பிரான்சிஸ் கிருபா · 22.05.19

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் […]

எழுத்து

அழகுநிலா கவிதைகள்

அழகுநிலா · 22.05.19

சிகரத்தை உரசிக் கூடும் மேகங்களை அடிவாரத்தில் மேயும் எவையும் அறியாமலில்லை புல்லின் நுனி அறிந்தே மெல்லப்படுகிறது பற்களுக்கிடைய. ****** நீலத் திமிங்கலமாய் நீ மீன் கொத்தியாய் நான் யாரையும் யாரும் எதுவும் செய்ய முடியாதவாறு. ****** மலை நெருங்க நானும் நெருங்க ஒரு பயணம் பறக்கும் இடத்திலேயே பறவைகள் மிதக்கும் இடத்திலேயே மேகங்களெ. ****** மொத்தக் கடலும் கரித்துக் கிடக்கையில் துணிந்து இனிக்கிறது தேன்துள. ****** குளத்தில் எறிந்த கல் வானத்தில் கிடக்கிறது குளத்தோடு. ****** கனி […]

எழுத்து

வாளி

கண்மணி குணசேகரன் · 20.04.19

முடிவு தெரிந்த இரண்டு நாளாய் செவுடிக்கு வாயைத் திறந்தாலே குச்சித்திரம் குச்சித்தரமாய் நர வார்த்தைகள் தான். குப்பப் படையாட்சியால் தாங்க முடியவில்லை. கேட்டுக் கேட்டு காது புளித்துப் போய்விட்டது. கடந்து வாசாங்காய் விட்டுத் தள்ளிய ஒரு கணத்தில் ஓங்கி அவளின் குறளியில் குத்தி விட வேண்டுமென அவருக்குக் கைகள் பரபரத்தன. ஆனாலும் ரொம்பவும் சிரமப்பட்டு கோபத்தை அடக்கியபடி பேசாமல் குந்திக் கொண்டிருந்தார். வேறு வழி. இதுவேறு படாத இடத்தில் பட்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் வவுத்துக் […]

எழுத்து

இந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும்

அழகேச பாண்டியன் · 20.04.19

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த நியோ லிபரல் பொருளாதார பரிசோதனை தற்போது போக்கிடம் இன்றி தரை தட்டி நிற்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின்  ஜிடிபி ஆறு மடங்கு வளர்ந்திருக்கிறது. முழு வறுமை (absolute poverty) மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்திருக்கிறது. நுகர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளியலாளர் அமித் பசோலேவின் வரிகளில் சொன்னால் மால், மொபைல்,மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் பிரமாதாமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் இதே காலகட்டத்தில், அரசு அத்தியாவசிய […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 3)

பாலா கருப்பசாமி · 20.04.19

மார்ச் 26, 2019ல் தமிழ் இந்துவில் வெளியான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பேட்டி இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரு பதிலில் அவர் ”‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது’” என்று சொன்ன பதில்தான். இதில் பிராமணிய ஆதிக்கம் தொடர்வதாகக் கூட அவர் சொல்லவில்லை. பிராமணியம் […]

எழுத்து

வஞ்சத்தின் அம்புகள் முன்னும் தைக்கும்; முதுகிலும் தைக்கும் : கேம் ஆஃப் த்ரோன்ஸ்

கோ.கமலக்கண்ணன் · 20.04.19

1 நம் வாழ்வைக் கேள்விகள் என்னும் கருவி கொண்டு திருகியும், பிடுங்கியும், உடைத்தும் கிடைக்கும் சிதறிய பிம்பங்களை மீண்டும் பல்வேறு முறைமைப்படி அடுக்குவதன் மூலம் புரிந்து கொள்வதும், வாழ்வின் சிடுக்குகளிலிருந்து விலகி சரித்து விடாத கனவுமலை மீது காலாற நடந்து மகிழவும், அவ்வப்போது பறக்கவும், நம் ஆழுள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் இருளின் அதி தீவிர பிம்பங்களின் தோற்றத்தை எடுத்துக் கொண்டு நாம் ஒளி பெறுவதும் என்பதுமான இச்சாத்தியங்கள் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்க மிகுபுனைவுதான் ஆகச்சிறந்த பாதையாக இருக்க […]

எழுத்து

பீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம்

மானசீகன் · 20.04.19

சூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து தங்கள்  ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். அதற்கும் முன்பாகவே அரபு வணிகர்கள் கடல் வழியாக வணிகம் செய்து வணிகத் தொடர்புகளோடு திருமணத் தொடர்புகளையும் ஏற்படுத்தி இங்கு குடியேறினர். ஏறத்தாழ இதே தருணத்தில் வெளியிலிருந்து வந்த சூஃபி ஞானிகளும் இங்கிருந்து உருவாகியவர்களும் இந்திய  ஆன்மீகத்தின் பல்வேறு கூறுகளை உள்வாங்கிக் கொண்டு தங்கள் பணிகளாலும், வர்ணாசிரமம் கடந்த மானுட சமத்துவத்தாலும் இங்கிருப்போரின் […]

எழுத்து

குணா கந்தசாமி கவிதைகள்

குணா கந்தசாமி · 20.04.19

நீண்ட பெருமூச்சொன்று வெளியேறுகிறது  துயரமிக்க ரணங்களை தன்னில் சுமந்தவாறே முடங்கிக் கிடந்த மனசின் சிறகுகள் மெல்ல விரிந்து மேலெழும்புகின்றன தழும்புகள் தந்திருக்கிறது தாங்கும் தினவு பாழ் நிறைந்த காலத்தை எழுதி முடிக்கிறேன் என் நாட்குறிப்பில் ஆசுவாசக் கண்ணீர் அழகாய்த் தான் வைக்கிறது முற்றுப்புள்ளி. கணிதம் வியாபித்த உறவுகள்  லாபமிட்ட வெறிகொண்டலைய வெளியெங்கும் தூசிப்படலமாய் சூத்திரங்கள் மிதக்கின்றன சொற்கள் இடையில் கணிதக்குறிகள் புன்னகையாய்த் தளும்புகின்றன எல்லாமே வகுபட்டுக் கொண்டிருக்கின்றன எண்களால் மாயச்சரடாய் காற்றையும் திசைகளையும் சூழ்ந்திருக்கிறது முடிவிலி எப்போதும் […]

எழுத்து

தலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல்

மானசீகன் · 18.03.19

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்தே தமிழகத்தில் இருக்கிற பல கட்சிகளின் நிஜமான பலத்தைக் கண்டறிய முடியும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மாபெரும் அராஜகங்களை, ஜனநாயகப் படுகொலைகளை, மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்களை, தலித்துகள் மீதான தாக்குதல்களை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மீறல்களை, தேசத்தையே திகைக்க வைத்த பொருளாதாரத் […]

எழுத்து

யானை

அனோஜன் பாலகிருஷ்ணன் · 18.03.19

“வழியிலே கொட்டிய குப்பைக் குவியலிலிருந்து மனதிற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது.” -தம்ம பதம் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான். பாடசாலை பயிற்சிப் […]

எழுத்து

புகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக்

நம்பி கிருஷ்ணன் · 18.03.19

கலாச்சாரத்தின் வருங்கால ஜனநாயக அகல்பரப்புக் காட்சிகளை, பீர்கையில் வால்ட் விட்மன் அழகிற்கும் அழகின்மைக்குமிடையே, சாரத்திற்கும் சாரமின்மைக்குமிடையே உள்ள வேறுபாட்டிற்கு அப்பால் பார்க்க முனைந்தார். பெருந்தன்மையான தரப்பிரித்தல்களைத் தவிர மற்ற தகவுப் பாகுபாடுகள் அனைத்துமே கண்மூடி அடிமைத்தனமாகவோ அல்லது மேட்டிமைத்தனமாகவோ அவருக்குத் தோன்றியது, நம் கலாச்சார புரட்சியின் அதிதீரமும், அதிபித்தும் வாய்ந்த கவிஞர் கபடில்லாத நேரடித்தனத்தின் மகோன்னதங்களை அதிகமாகவே பறைசாற்றினார். அமெரிக்க வாழ்வனுபவத்தின் ‘அனைத்தையும் அரவணைத்து’க் கொள்ளும் குணத்தையும், அதன் வீரியத்தையும் ஏற்று அதன் நிதர்சனத்தை ஆரத் தழுவிக் […]

எழுத்து

சில காதல் கவிதைகள்

போகன் சங்கர் · 18.03.19

1 கடலை ஒன்றும் செய்யமுடியவில்லை அது கரையில் தனித்துவிடப்பட்ட காதலன் போல பேசிக்கொண்டே செல்கிறது. 2 நிலவொளியின் கீழே யாராலும் தொடப்படாமல் ஒரு வைரக்கல் கிடக்கிறது நான் பார்த்ததும் ஒரு நண்டு அதன் மேல் ஏறிப் போனது மவுனம். வைரத்தை அது சுரண்டும் ஒலி மட்டும். 3 நீங்கள் அவளிடம் இதைத் தெரிவித்துவிடக் கூடாது பின்னப்படாத ஒரு ஆடையென இது அவள் வாழ்வில் கிடக்கட்டும் அவள் யாரென அறியா ஊரிலே இந்த ஆடை பின்னப்பட்டு அவள் கையில் […]