அறையில் பூரண அமைதி நிலவியது. இராமநாதன் சன்னலருகே அமர்ந்திருந்தார். வேட்டி மட்டுமே உடுத்தியிருந்தார். மெலிந்த அவரது உடம்பில் பூணூல் நிலையான ஓர் உறுப்பைப் போன்று ஒட்டிக் கிடந்தது. அவர் எதையோ ஆலோசனை செய்து கொண்டிருந்தார். ஆலோசனைக்கு நடுவே மெதுவாக ஏதோ முணுமுணுத்தவாறு நடுங்குகின்ற தனது கை விரல்
இராமநாதனுக்கு முன் அமர்ந்திருந்த இளைஞரும் மௌனமாகவே இருந்தார். ஆனால் அவரது மௌனம் அதிகம் பேசப்படுவதாகவே அமைந்திருந்தது. இராமநாதன் கூறப்போகும் பதிலுக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். ஒரு வார்த்தை- அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதாக ஒரு வார்த்தை- அதற்காக அவர் காத்திருந்தார்- ஒரு திவலை நீருக்காகக் காத்திருப்பதைப் போல.
ஆனால் இராமநாதன் ஒன்றும் பேசவில்லை.
இளைஞர் ஆவலுடன் இராமநாதனின் முகத்தைப் பார்த்தார். ஆனால் குனிந்து உட்கார்ந்திருந்த இராமநாதனின் முகம் அவரது பார்வைக்கு முழுவதுமாகத் தெரிய
இளைஞரின் கையில் அப்போதும் அவரது கம்பெனியின் பெயரும் முத்திரையும் பொறிக்கப்பட்ட கவர் இருந்தது. அந்தக் கவரை இரண்டு கைகளிலும் ஏந்தித் தட்சிணை கொடுப்பதைப் போல இராமநாதனுக்கு முன் பவ்விய
இன்னொரு முறை வேண்டுகோள் விடுப்பதற்கான மனத்துணிவு அந்த இளைஞரிடம் இல்லை.
இராமநாதனைப் பற்றி அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.
அதனால் தான் இரண்டு மாதங்
அதைக் கேட்டு மேனேஜிங் டைரக்டர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த போது அவர் மேலும் கூறினார்:
“அவர் இங்கிருந்து சென்றதற்கான காரண காரியங்களையும் எண்ணிப் பாருங்கள்”
டெக்னிகல் டைரக்டர் புதிதாக வந்தவர். ஒன்றும் புரியாமல் மேனேஜிங் டைரக்டரின் முகத்தைப் பார்த்தார்.
மேனேஜிங் டைரக்டர் முதலில் எதுவும் பேசவில்லை. பின்னர் திடீரென்று அவர் டெக்னிகல் டைரக்டரிடம் கேட்டார்:
“நீங்கள் இராமநாதனுடன் பழகியிருக்கிறீர்களா?”
“இல்லை- ஒருமுறை நான் அவரைப் பார்த்திருக்
“அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கெல்லாம் வாய்த்தது.” கடந்த காலத்தை நினைவுகூர்ந்து சேர்மன் கூறினார்: “இராமநாதனைப் பொறுத்தவரை சம்பளம் ஒரு பொருட்டே இல்லை. வேலை தான் முக்கியம். இங்கிருந்த போது இரண்டு முறை ‘வேல்டுபாங்கி’லிருந்து அவருக்கு ஆஃபர் வந்திருந்தது. வரியில்லாத உயர்ந்த சம்பளம்; மற்றும் பல சலுகைகள். ஆனால் இரண்டு முறையும் இராமநாதன் அதை நிராகரித்து விட்டார். ஒருமுறை மறுபரிசீலனை செய்வதற்குக் கூட இடங்கொடாமல் அவர் கூறினார்: ‘ஒன்றிற்குப் பலமுறை வெளிநாடு சென்றிருக்
மேனேஜிங் டைரக்டர் சட்டென்று நிறுத்தினார்.
அவர் அப்போது அங்கே அந்த அறையில் இராமநாதன் அருகில் அமர்ந்திருப்பதைப் போலவே உணர்ந்தார்.
அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் டெக்னிகல் டைரக்டர் கூறினார்: “இராமநாதன் இங்கிருந்து சென்றதற்கான காரணத்தை நீங்கள் சொல்ல
கனவு கண்டு திடுக்கிட்டுத் திடீரென்று விழித்து எழுவது போல மேனேஜிங் டைரக்டர் அவர்களைப் பார்த்தார். அவரது முகத்தில் தன்னைத் தானே நிந்திக்கின்ற ஒரு புன்னகை படர்ந்திருந்தது. அவர் கூறினார்:
“இராமநாதன் இங்கு வந்த சந்தர்ப்ப சூழலையும் நான் உங்களுக்குச் சொல்ல
டெக்னிகல் டைரக்டர் கூறினார்: “எனக்கொன்றும் தெரியாது…”
மேனேஜிங் டைரக்டர் கூறினார்:
“எனக்குத் தெரியும்… அன்றைக்கு நான் தான் டெக்னிகல் டைரக்டர்… அன்றைய மேனேஜிங் டைரக்டர்… அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வேண்டாம்… இப்போது நம்மிடையே இல்லாத ஒருவரைப் பற்றி பேசுவது சரியல்ல. இந்த நிறுவனம் இன்றைய நிலையை அடைவதற்கு அவரும் பங்காற்றியிருக்
மேனேஜிங் டைரக்டர் நிறுத்தினார். சற்று நேரம் பழைய நினைவுகளிலூடே தனியாகச் சஞ்சரித்த பின் மனதிலிருந்து ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைப்பவரைப் போன்று மீண்டும் தொடர்ந்தார்:
“இராமநாதன் ஒரு சிறந்த பொறியாளர். நல்ல மனிதர். ஒருவேளை அதையெல்லாம் என்னை விட இதோ உட்கார்ந்திருக்கிற குமாரால் மிகவும் நன்றாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் குமாரும் அவரது நண்பர்களும் தான் ஆரம்பம் முதல் அவருடன் பணியாற்றியவர்கள், பழகியவர்கள்…”
தான் கூறியது சரிதானே என்பதைப் போல் அவர் முன்னால் அமர்ந்திருந்த இளைஞரைப் பார்த்தார்.
இளைஞரான குமார் ஒன்றும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினார்.
மேனேஜிங் டைரக்டர் மீண்டும் கூறினார்:
“இராமநாதன் இந்நிறுவனத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றிப் பலரும் பேசுவார்கள். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் திட்டப் பணிகளைக் குறித்த காலத்திற்கு முன்னரே முடித்து சாதனை நிகழ்த்தியது, அதுவரையிலும் இறக்குமதி செய்து கொண்டிருந்த உதிரி பாகங்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்
மேனேஜிங் டைரக்டர் மீண்டும் நிறுத்தினார். பின்னர் தான் கூறியது சரிதானே என்பதைப் போல் இளைஞனைப் பார்த்தார். முதலில் ஒன்றும் பேசாமலிருந்த இளைஞரிடம் திடீரென்று உற்சாகம் புகுந்து கொண்டது. அவர் கூறினார்:
“சார் நீங்கள் கூறியது ரொம்பவும் சரி. எனது அனுபவத்தைச் சொல்கிறேனே… அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய நான்…”
அவரிடமிருந்து வார்த்தைகள் பிரவகித்தன. தன்முன் அமர்ந்திருப்பவர்கள் தன்னை விட அனுபவம் மிக்க பொறியாளர்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் கலங்கிய மனத்துடன் பழைய கதைகளையெல்லாம் கூறத் தொடங்கிய அவரது பேச்சிற்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் இடையிடையே கேள்விகள் கேட்காமல் டெக்னிகல் டைரக்டர் அவரையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேனேஜிங் டைரக்டரும் குமார் கூறுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
குமார் பேசி முடித்த போது பெருமழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி.
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு டெக்னிகல் டைரக்டர் கேட்டார்:
“இராமநாதன் இங்கிருந்து சென்றதற்கான காரணத்தை நீங்கள் சொல்ல
மேனேஜிங் டைரக்டர் கூறினார்:
“சரிதான். ஆனால் அதைப்பற்றி எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரிய
அவர் திடீரென்று நிறுத்தினார். பின்னர் சிறிது நேரம் ஆலோசித்து விட்டுச் சொன்னார்:
“இராமநாதனைப் பற்றிய எனது கருத்தை நான் முதலிலேயே தெளிவாகச் சொல்லி விட்டேனல்லவா. ஒரு நீதிபதியாக இருந்து தீர்ப்பு கூற விரும்ப
…இராமநாதன் மற்றவர்
அவர் பேசுவதை நிறுத்தி விட்டு இளைஞரைப் பார்த்தார்.
“குமார் என்ன சொல்கிறீர்கள்?”
குமார் தலையை மட்டுமே ஆட்டினார்.
அவர் தொடர்ந்தார்:
“குமார்தானே இராமநாதனுடன் மிக நெருக்கமாகப் பழகினீர்கள், அதனால் தான் நான் உங்களிடம் கேட்டேன். சரி அது போகட்டும்- மேனேஜிங் டைரக்டருடன் ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு தானே ராஜினாமாவில் போய் முடிந்தது. ஒருவேளை அதற்கு முன்பே ஏதாவது உரசல் இருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது… அன்றைக்கு அந்தச் சம்பவம் நடக்கும் போது மேனேஜரின் அறையில் இராமநாதன் மட்டுமல்லாமல் நானும் பெர்சனல் மேனேஜரும் இருந்தோம். இராமநாதனுக்குக் கீழ் பணிபுரிகின்ற ஒரு பொறியாளருக்குப் பதவி உயர்வு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தை. இராமநாதன் எவ்வித விகாரத்தையும் வெளிக்காட்ட
அப்போது மேனேஜிங் டைரக்டர் இராமநாதனிடம் கூறினார்:
“இராமநாதன் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்கிற பிரச்சனையே எழவில்லையே. நீங்கள் சிபாரிசு செய்யலாம். ஆனால் யாருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று மேனேஜ்மெண்டு தான் முடிவெடுக்கும். இதுபோன்ற விஷயங்
இராமநாதனுடைய வார்த்தைகள் அப்போது அறையில் முழங்கின. வார்த்தை
“நீங்களும் உங்கள் ஆலோசனையும்… அது எனக்குத் தேவையில்லை.”
அவ்வாறு கூறிய அவர் மேசை மேல் இருந்த பேடிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தெடுத்து அதில் நான்கு வாக்கியங்
… நாங்கள் அனை
இராமநாதனின் ஒப்பந்த காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டிற்கும் மேலாக உள்ளது. அப்போது
அந்தக் கசப்பான நினைவு
அப்போது டெக்னிகல் டைரக்டர் கூறினார்:
“இராமநாதன் செய்தது சரியென்று நான் சொல்ல மாட்டேன். அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது…”

இளைஞர் என்னவோ சொல்வதற்கு முனைந்த போது அதற்கு இடங்கொடுக்காமல் மேனேஜிங் டைரக்டர் கூறினார்:
“சரியும் தவறும் ஒருபுறம் இருக்கட்டும். இனி நாம் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இப்போது நாம் செய்ய வேண்டியது இந்தக் கம்ப்ரஸரை உடனே தயார் செய்து உலையை மீண்டும் இயக்க முடியுமா என்று பார்ப்பது தான். புதிய கம்ப்ரஸர் வருவதற்குக் குறைந்தது எட்டு மாதங்களாவது ஆகும். அதுவரை தொழிற்சாலையை இழுத்து மூடுவதென்பது எண்ணிக் கூடப் பார்க்க முடியாத காரியம். அதனால் தான் உடைந்த சிலிண்டரை வெல்டிங் செய்து கம்ப்ரஸரை இயக்க வேண்டுமென்று சொல்கிறேன். அதிலுள்ள சிரமங்
இளைஞர் என்னவோ சொல்ல முன்வந்த போது மேனேஜர் மீண்டும் தொடர்ந்தார்:
“குமார், உங்களது சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் கடந்த சில நாட்களாக இரவுபகல் பாராமல் முயற்சித்து வருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இடுக்கியிலிருந்து வந்த கனடியன் வல்லுனராலும் லெய்லண்டிலிருந்து வந்த பிரிட்டீஷ் வல்லுனராலும் நமக்கு உதவ முடிய
அவர் நிறுத்தினார்.
அதன்பின் அறையில் அமைதி நிலவியது.
இறுதியில் அவர் தனக்குத் தானே கூறுவதைப் போல் சொல்லிக் கொண்டார்:
“இப்படியொரு மனிதர்- இப்போது எங்கிருக்
அப்போது
“சார் நான் முயற்சி செய்கிறேன், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது…”
அவ்வாறு சொன்ன போதிலும் அவரது மனம் அமைதியற்றதாகவே இருந்தது. அப்போது அவரது மனதில் சிலிண்டர் உடைந்த மூவாயிரம் குதிரைசக்தி கொண்ட கம்ப்ரஸரோ குழப்பம் நிறைந்த அதன் வெல்டிங் பகுதி
அவர் சில ஆண்டு
காலை நேரம். பம்பாய்க்குச் செல்லும் முதல் விமானத்தில் இராமநாதனை வழி அனுப்புவதற்காகக் குமாரும் நண்பர்கள் சிலரும் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். அனை
பிரிவதற்கான நேரம் வந்த போது அவர்
விடைபெறுகின்ற இறுதி நிமிடம்…
இராமநாதன் கூறினார்: “என்னால் உங்களுக்குக் கடிதம் எழுத முடியுமென்று தோன்ற
அந்த வார்த்தை
இந்த முயற்சி தான் ஒருசில நாட்களில் அவரை மெட்ராஸில் கொண்டு போய்ச் சேர்த்தது. மெட்ராஸ் பாரிஸ் கார்னரில். பாரிஸ் கார்னருக்கு சென்று சேர்ந்ததோ பெங்களூர் எம்.ஜி.ரோடு வழியாக. ஆம் கெஸ்ட்கவுஸில் வேலை செய்திருந்த சிங்காரத்தை பெங்களூர் எம்.ஜி.ரோட்டில் தற்செயலாகச் சந்தித்தார் குமார். கிளப்புக்கும் கெஸ்ட் ஹவுஸுக்கும் எப்போதாவது மட்டுமே செல்கின்ற இராமநாதனைப் பற்றிய செய்தி சிங்காரத்திடமிருந்து கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு குமாருக்கு இல்லை. ஆனால் சிங்காரம் கூறினார்:
“அந்த வெல்டிங் செய்வாரே சாமி, அவர்தானே?- அவர் இப்போ மெட்ராஸில தம்புசெட்டி தெருவிலோ பாரிஸ் கார்னரிலோ எங்கேயோ கடை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் சரியாத் தெரியாது.”
அவரால் அதை நம்ப முடிய
இராமநாதன்- பொறியாளர் இராமநாதன்- மெட்ராஸ் பாரிஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் ஒரு ‘கடை’ நடத்துகிறாரா?
கடை..?
ஆனால் சிங்காரத்திடமிருந்து அதிக
இருந்தாலும் சந்தேகித்துத் தயங்கி நிற்க
ஒருமுறை சென்று தேடியிருந்தார்.
மீண்டும் குமார் மெட்ராஸ் சென்றார்.
பல மணிநேரம் அலைந்து நடந்த பின்னரும் இராமநாதனைப் பற்றிய எந்த விவரமும் கிடைக்க
இறுதியில் ஊருக்குத் திரும்பலாம் என்று முடிவெடுத்த நிலையில் இராமநாதன் தானாகவே அவர்முன் தோன்றினார்!
கடவுளே அனுப்பியது போல!
பாரிஸ் கார்னரிலிருந்து கேத்தலிக் செண்டருக்குச் செல்கின்ற குறுக்கு வழியின் முனையில் இனி என்ன செய்வதென்ற சிந்தனையோடு நின்றிருந்த போதுதான் அந்தக் கேள்வி காதில் விழுந்தது:
“குமார் நீ இங்கே என்ன செய்கிறாய்?”
ஒரு நிமிடம் அவர் ஸ்தம்பித்துப் போனார்.
பின்னர் எல்லாவற்றையும் சரியாகப் பார்த்தார்: இரண்டு பெரிய கட்டிடங்
அங்கே இராமநாதன் புன்னகையுடன் அவரைப் பார்த்தவாறு நிற்கிறார்.
தான் காண்பது கனவா என்று சந்தேகப்
“நீ என்ன இங்கே…”
அவர் பதற்றத்துடன் கேட்டார்:
“சார் இங்கே…?”
“நான் இப்போது ஓய்வில். வேலையெல்லாம் விட்டு
இராமநாதன் அதற்குமேல் ஒன்றும் சொல்ல
குமார் எதையோ ஆலோசித்தவாறு நின்றார்.
இராமநாதனுக்கு முன்னர் கேள்வி கேட்பதற்கான ஆற்றலை இழந்த ஒரு பள்ளி மாணவனைப் போல் நின்றார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் தான் வந்த விஷயத்தைக் கூறத் தொடங்கினார். மிகக்கவன
வீடு நகரத்திற்கு வெளியே இருந்தது.
அவர்கள் செய்த வேலையைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டாரேயன்றி வீடு செல்லும் வரையில் இராமநாதன் அதிகம் பேசவில்லை, ஆலோசித்தவாறே இருந்தார்.
வீட்டுக்கு வந்தவுடன் இராமநாதன் கூறினார்:
“முதலில் நீ வந்த விஷயத்தைக் கூறு- அதன்பிறகு குளித்து விட்டுச் சாப்பிடலாம்.”
அவர் பிரீப்கேசைத் திறந்து வரைபடங்களையும் புகைப்படங்களையும் எடுத்து இராமநாதனுக்கு முன் பரப்பினார். அதன்பின் தாங்கள் அதுவரைச் செய்த வேலையைப் பற்றி விளக்கினார். இராமநாதன் இடையிடையே அவரிடம் கேள்விகள் கேட்டார்; அவ்வப்போது ஆலோசனையில் ஆழ்ந்து அறையில் அங்குமிங்கு
இறுதியில் குமார் எல்லாம் சொல்லி முடித்தவுடன் ஒரு பரிகாரம் கண்டாற்போல் இராமநாதன் கூறினார்:
“குமார் நீங்கள் சரியாகத் தான் செய்திருக்
அதைக் கேட்டவுடன் அவர் வியப்படைந்தார்.
நாங்கள் செய்தது சரிதானா?
இவர் என்ன சொல்கிறார்?
இராமநாதன் கூறினார்: “முழுவதும் சரியல்ல. சரியாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே எழுந்திருக்காதே. இருந்தாலும் ஓரளவு சரிதான். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தாலும் முதலில் நானும் இதைத் தான் செய்திருப்பேன். பரவாயில்லை, நாம் அதைச் சரியாக்கி விடலாம்…”
இராமநாதன் புன்னகைத்தார்.
குமார் ஆச்சரியத்துடன் தனது மேலதிகாரியைப் பார்த்தார்.
அவர் நினைத்தார்: ‘உடம்பு தளர்ந்தாலும் இவருடைய மனது இப்போதும் பழைய…’
இராமநாதன் ஒரு காகிதத்தை எடுத்து அதில் வரைந்து கொண்டு கூறினார்:
“…கீழ்பகுதியில் சிறிய எலக்ரோடினால் வெல்டிங் செய்ய வேண்டும். மேலே சற்றுப் பெரியது… அவ்வாறு ப்ரீன் செய்கின்ற போது கவனிக்க வேண்டியது… ஸ்ட்ரெஸ் ரிலீவ் செய்யும் போது ஒன்றை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்- அதாவது…”
இராமநாதன் சொல்லி முடிக்கவும் குமார் ஒரு புதிய வெளிச்சத்தைக் கண்டடைந்தது போல் உணர்ந்தார்.
இராமநாதன் மீண்டும் கூறினார்: “நான் உறுதியாக நம்புகிறேன், இந்த முறை நீங்கள் சரியாகச் செய்வீர்கள். எந்தப் பதற்றமும் வேண்டாம்…”
அது போலவே நடந்தது.
இன்று. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இராமநாதனுடைய வீட்டிற்கு வந்திருக்
அறை அவ்வளவு பெரியதொன்றும் இல்லை. அறையில் அதிகம் பொருட்களும் இல்லை. அங்கே அதிக
இவற்றைத் தவிர அவர் ஏற்கனவே பார்த்திருந்த இரண்டு பொருட்களும் அறையில் இருந்தன. க்ராண்டிங்கின் ஒரு ஸ்பூல்டைப் டேப்ரிகார்டரும், கறாடின் ரிக்காடு பிளேயரும் இரண்டும் மிகவும் பழையவை.
இராமநாதன் எதையோ ஆலோசித்தவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் ஏதாவது சொல்வாரென்று குமார் ஆவலுடன் காத்திருந்தார்.
குமார் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டார். இனியும் சொல்வதற்கான தைரியம் அவருக்கு இல்லை.
சேர்மேன் கொடுத்தனுப்பிய கடிதமும் காசோலையும் அடங்கிய கவர் அவரது கையிலேயே இருக்
மூச்சு முட்டுகின்ற மௌனத்திலிருந்து அவருக்கு விடுதலை வழங்கி இராமநாதன் மெதுவாகக் கூறினார்:
“குமார், நீ என்னை ஓரளவிற்குப் புரிந்து வைத்திருப்பாய் அல்லவா? நான் ஒருபோதும் பணத்திற்காக வேலை செய்ததில்லை. செய்த வேலைக்குப் பணம் வாங்கியிருக்
அவர் ஆச்சரியத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இராமநாதன் மீண்டும் கூறினார்:
“பழைய வேலையை நான் விட்டு
என்னவோ நினைத்துக் கொண்டதைப் போல அவர் நிறுத்தினார்.
ஏதாவது பேசுவதற்கு அவருக்கு வார்த்தைகள் இல்லை.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் இராமநாதனின் வாழ்க்கை பயனற்று சூனியமாகி விட்டதென்று அவர் கேள்விப்
அதன்பிறகு இராமநாதன் தனக்குத் தானே கூறிக் கொண்டார்:
“எல்லாவற்றுக்கும் கால நேரம் உண்டல்லவா…”
இராமநாதனின் குரலில் துயரத்தின் சாயல்கூட அப்போது வெளிப்பட
அவர் புறப்படுவதற்கான நேரம் வந்தது.
இராமநாதன் கூறினார்:
“நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம். நான் இங்கு தான் இருப்பேன்…”
அவர் சாலைக்கு நடந்தார். அவரது மனதில் அநேக நினைவுகள் சுழன்றன. சிறிது தூரம் நடந்த பிறகு திரும்பிப் பார்த்தார். இராமநாதன் வராந்தாவில் இல்லை.
அவருக்குப் பிடிபடாத ஏதோவொரு கர்நாடக இராகத்தின் மதுர
